search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "javelin throw"

    • புடாபெஸ்ட் நகர போட்டியில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார்
    • தற்போது 12-நாள் பயிற்சி முகாமிற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்

    ஈட்டி எறிதல் விளையாட்டில், ஒலிம்பிக் போட்டிகள், உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் டயமண்ட் லீக் போட்டிகள் ஆகியவற்றில் முதலிடம் பிடித்து பல கோப்பைகளையும், பதக்கங்களையும் குவித்தவர் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா.

    சமீபத்தில் ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட் நகரில் ஈட்டி எறிதல் போட்டியில் 88.17 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்து சாதனை படைத்தார். அவருக்கு 2022-ம் ஆண்டு, ஐரோப்பாவில் உள்ள முக்கிய சுற்றுலா மையமான சுவிட்சர்லாந்து நாட்டில் அந்நாட்டிற்கான 'நட்பு தூதர்' அந்தஸ்து வழங்கப்பட்டது.

    நட்பு தூதராக, தனது அனுபவங்களை அந்நாட்டின் விளையாட்டு ஆர்வலர்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் அந்நாட்டில் உள்ள தனித்துவம் வாய்ந்த பனிச்சறுக்கு விளையாட்டுகளை உலகிற்கு அறிமுகப்படுத்தி விளையாட்டு சுற்றுலாவிற்கான முக்கிய நாடாக சுவிட்சர்லாந்து நாட்டை விளம்பரப்படுத்தி வருகிறார்.

    தற்போது, சுவிட்சர்லாந்து நாட்டில் 12-நாள் பயிற்சி முகாமிற்காக அங்குள்ள மேக்லிங்கன் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பும், சிறப்பான உபசரிப்பும் வழங்கப்பட்டது.

    இது குறித்து சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலாத்துறையில் உலகளாவிய கூட்டமைப்பின் தலைவர் பாஸ்கல் ப்ரின்ஸ் கூறும் போது, "இந்திய விளையாட்டு துறையின் சாதனையாளரான நீரஜ் சோப்ராவை எங்கள் நாட்டின் சார்பாக கொண்டாடுவதில் பெருமை அடைகிறோம். நீரஜ் ஒரு தலைமுறையையே ஊக்கப்படுத்தும் சக்தி படைத்தவர். இளம் தலைமுறையினருக்கு அவர் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக திகழ்கிறார். அவரது உலக சாதனைகளுக்காக அவரை பாராட்டுகிறோம். அவரது எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள்," என்று தெரிவித்தார்.

    சுவிட்சர்லாந்து சென்றுள்ள நீரஜ் சோப்ரா, அங்குள்ள பனி மலைகளில் பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வமுடன் பங்கேற்று அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள கணக்குகளில் பதிவிட்டு வருகிறார்.

    • நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
    • 2022ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சோப்ரா வெள்ளி வென்றார்.

    கத்தாரில் தோஹா டையமண்ட் லீக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.

    2022ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சோப்ரா வெள்ளி வென்றார். அதனால், இந்த முறையும் அவர் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். செக் குடியரசு வீரர் ஜேக்கப் வேட்லக்(88.63 மீட்டர்) இரண்டாவது இடத்தையும், கிரெனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ்(85.88 மீட்டர்) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

    • நீரஜ் சோப்ராவின் முந்தைய சாதனையை தற்போது அவரே முறியடித்துள்ளார்.
    • ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார்.

    ஸ்டாக்ஹோம்:

    ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார். இதன் மூலம் இந்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.31 மீட்டர் தூரம் எறிந்து முதல் இடத்தைப் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

    பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் 89.30 மீட்டர் தூரம் எறிந்து தேசிய சாதனை படைத்திருந்தார். நீரஜ் சோப்ராவின் முந்தைய சாதனையை தற்போது அவரே முறியடித்துள்ளார்.

    • பின்லாந்து விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார்
    • டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றிருந்தார்.

    பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 89.30 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார். இதன் மூலம் அவர் இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த போட்டியில் 89.83 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து பின்லாந்தின் ஆலிவர் ஹெலாண்டருக்க தங்கப் பதக்கம் கிடைத்தது.

    நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக்கில் 87.58 மீ தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றிருந்தார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார்.

    முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாட்டியாலாவில் நடைபெற்ற போட்டியில் 88.07 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தேசிய சாதனை படைந்திருந்தார். பின்லாந்தில் நடைபெற்ற போட்டியின் மூலம் பழைய சாதனையை முறியடித்து புதிய தேசிய சாதனையை அவர் படைத்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு நீரஜ் சோப்ரா தற்போதுதான் பின்லாந்து போட்டியில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஆசிய விளையாட்டில் முதல் முறையாக பங்கேற்கும் நீரஜ்சோப்ரா ஈட்டு எறிதலில் தங்கம் வெல்வாரா? என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. #Asiangames #NeerajChopra
    ஜகார்தா:

    18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் உள்ள ஜகார்தா மற்றும் பாலெம்பேங் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    தடகளத்தில் இந்தியாவுக்கு நேற்று 3 வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 100 மீட்டர் ஓட்டத்தில் டூட்டி சந்தும், 400 மீட்டர் ஓட்டத்தில் ஹிமாதாஸ் மற்றும் முகமது அனஸ்யக்யா ஆகியோரும் வெள்ளிப்பதக்கம் பெற்றனர்.

    9-வது நாளாக இன்றும் தடகளத்தில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஈட்டி எறியும் பந்தயத்தில் நீரஜ்சோப்ரா மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

    24 வயதான அவர் உலக ஜூனியர், ஆசிய சாம்பியன் ஷிப், தெற்காசிய விளையாட்டு மற்றும் காமன் வெல்த்தில் தங்கம் வென்று இருக்கிறார். இதனால் முதல் முறையாக பங்கேற்கும் ஆசிய விளையாட்டிலும் நீரஜ்சோப்ரா தங்கம் வெல்வாரா? என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அவர் 87.43 மீட்டர் தூரம் எறிந்ததே தேசிய சாதனையாக உள்ளது.

    நீரஜ்குமார் பங்கேற்கும் ஈட்டி எறிதல் போட்டி இந்திய நேரப்படி மாலை 5.15 மணிக்கு தொடங்குகிறது. மற்றொரு இந்திய வீரரான சிவபால்சிங்கும் இந்தப் பந்தயத்தில் கலந்து கொள்ளலாம்.

    மேலும் இன்று நடைபெறும் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பங்கேற்க இந்திய வீரர்கள் தருண் அய்யாசாமி, சந்தோஷ்குமார் தகுதி பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த தருண் அய்யாசாமி மீது எதிர்பார்ப்பு இருக்கிறது.

    இதேபோல் பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அனு ராகவன், ஜானா முர்மு ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

    இது தவிர 3 ஆயிரம் மீட்டர் ஸ்டிபிள்சேசில் சுதாசிங், சங்கர்லால் சுவாமி ஆகியோரும் நீளம் தாண்டுதலில் நீனா, ஜேம்ஸ் நயனா ஆகியோரும், உயரம் தாண்டுதலில் சேட்டனும் கலந்து கொள்கிறார்கள்.

    800 மீட்டர் தகுதி சுற்றில் இந்திய வீரர்கள் ஜின்சன் ஜான்சன், மனஜித்சிங் ஆகியோர் பங்கேற்கிறார்கள். #Asiangames #NeerajChopra
    பிரான்சில் நடந்துவரும் தடகளம் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நிரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
    பிரான்சில் சோட்டேவில்லே- லெஸ்- ரோ‌ஷன் தடகள போட்டி நடந்து வருகிறது. இதில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நிரஜ் சோப்ரா தங்கம் வென்றார். அவர் 85-17 மீட்டர் எறிந்து முதலிடத்தை பிடித்தார்.

    மால்டோவா வீரர் ஆன்ரிஸ் மர்டாரோ (81.48) வெள்ளி பதக்கமும், லுதுவேனியன் வீரர் மடுசெவியஸ் (79.31) வெண்கல பதக்கமும் வென்றனர்.
    ×