search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "olympics"

    • ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சாதனை படைத்ததற்கு கேலோ விளையாட்டு முக்கிய காரணம்.
    • பெரிய அளவிலான விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு மிக சிறப்பாக நடத்தி வருகிறது.

    கேலோ இந்தியா விளையாட்டு போட்டி துவக்க விழாவில் கலந்து கொண்ட மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மேடையில் உரையாற்றினார். அவர் கூறியதாவது, "இந்த தொடக்க விழாவில் பங்கேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் பிரதமரின் முக்கிய திட்டமாகும். தற்போது சர்வதேச அளவில் இந்தியா பதக்கங்களை பெற்று முன்னிலை பெற்று வருகிறது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சாதனை படைத்ததற்கு கேலோ விளையாட்டு முக்கிய காரணம் ஆகும். இப்போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்று இந்தியா சாதனை படைத்து வருகிறது.

    2030, 2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்காக பிரதமர் மோடி பல முயற்சிகளை செய்து வருகிறார். விஸ்வநாதன் ஆன்ந்த், பிரக்ஞானந்தா ஆகிய செஸ் ஜாம்பவான்கள் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கின்றனர். பெரிய விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு எப்போதெல்லாம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் மிக சிறப்பாக தமிழ்நாடு அந்த போட்டிகளை நடத்தி இருக்கின்றது. ஹாக்கி விளையாட்டு போட்டி, ஸ்குவாஸ் கோப்பைக்கான விளையாட்டு போட்டி, செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆகிய போட்டிகளை மிகவும் திறமையாக நடத்தி இருக்கிறது.

    கேலோ இந்தியா என்பது பதக்கங்களை வெற்றி பெறுவதற்காக நடத்தப்படும் விளையாட்டு அல்ல, உங்களின் பெருமையை, திறமையை மேலும் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பை தருகின்ற ஒரு விளையாட்டு போட்டி" எனக் கூறினார். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் கேலோ இந்தியாவின் கீழ் செலவழிக்கப்பட்ட பட்ஜெட்டை மூன்று மடங்கு உயர்த்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

    • புடாபெஸ்ட் நகர போட்டியில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார்
    • தற்போது 12-நாள் பயிற்சி முகாமிற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்

    ஈட்டி எறிதல் விளையாட்டில், ஒலிம்பிக் போட்டிகள், உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் டயமண்ட் லீக் போட்டிகள் ஆகியவற்றில் முதலிடம் பிடித்து பல கோப்பைகளையும், பதக்கங்களையும் குவித்தவர் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா.

    சமீபத்தில் ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட் நகரில் ஈட்டி எறிதல் போட்டியில் 88.17 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்து சாதனை படைத்தார். அவருக்கு 2022-ம் ஆண்டு, ஐரோப்பாவில் உள்ள முக்கிய சுற்றுலா மையமான சுவிட்சர்லாந்து நாட்டில் அந்நாட்டிற்கான 'நட்பு தூதர்' அந்தஸ்து வழங்கப்பட்டது.

    நட்பு தூதராக, தனது அனுபவங்களை அந்நாட்டின் விளையாட்டு ஆர்வலர்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் அந்நாட்டில் உள்ள தனித்துவம் வாய்ந்த பனிச்சறுக்கு விளையாட்டுகளை உலகிற்கு அறிமுகப்படுத்தி விளையாட்டு சுற்றுலாவிற்கான முக்கிய நாடாக சுவிட்சர்லாந்து நாட்டை விளம்பரப்படுத்தி வருகிறார்.

    தற்போது, சுவிட்சர்லாந்து நாட்டில் 12-நாள் பயிற்சி முகாமிற்காக அங்குள்ள மேக்லிங்கன் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பும், சிறப்பான உபசரிப்பும் வழங்கப்பட்டது.

    இது குறித்து சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலாத்துறையில் உலகளாவிய கூட்டமைப்பின் தலைவர் பாஸ்கல் ப்ரின்ஸ் கூறும் போது, "இந்திய விளையாட்டு துறையின் சாதனையாளரான நீரஜ் சோப்ராவை எங்கள் நாட்டின் சார்பாக கொண்டாடுவதில் பெருமை அடைகிறோம். நீரஜ் ஒரு தலைமுறையையே ஊக்கப்படுத்தும் சக்தி படைத்தவர். இளம் தலைமுறையினருக்கு அவர் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக திகழ்கிறார். அவரது உலக சாதனைகளுக்காக அவரை பாராட்டுகிறோம். அவரது எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள்," என்று தெரிவித்தார்.

    சுவிட்சர்லாந்து சென்றுள்ள நீரஜ் சோப்ரா, அங்குள்ள பனி மலைகளில் பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வமுடன் பங்கேற்று அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள கணக்குகளில் பதிவிட்டு வருகிறார்.

    • 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றிருந்தார்.
    • ஒலிம்பிக்கிலும், உலக தடகள போட்டியிலும் தங்கம் வென்ற 3-வது ஈட்டி எறிதல் சூப்பர் ஸ்டார் நீரஜ் சோப்ரா ஆவார்.

    2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தற்போது உலக தடகள போட்டியிலும், தங்கம் வென்று முத்திரை பதித்துள்ளார். ஒலிம்பிக்கிலும், உலக தடகள போட்டியிலும் தங்கம் வென்ற 3-வது ஈட்டி எறிதல் சூப்பர் ஸ்டார் நீரஜ் சோப்ரா ஆவார். செக் குடியரசை சேர்ந்த ஜான் ஜெலன்சி, நார்வேயை சேர்ந்த ஆண்ட்ரியாஸ் தார்கில்சென் ஆகியோர் ஒலிம்பிக் மற்றும் உலக தடகளத்தில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று இருந்தனர்.

    ஜெலன்சி 1992, 1996, 2000 ஒலிம்பிக்கிலும், 1993, 1995, 2001 உலக தடகள சாம்பியன்ஷிப்பிலும், தார்கில்சென் 2008 ஒலிம்பிக்கிலும், 2009 உலக தடகளத்திலும் தங்கம் வென்று இருந்தனர்.

    • உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களால் அலங்கரிக்கப்பட்ட பேருந்துகள் அமைச்சர் மதிவேந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • இ ப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

    நாமக்கல்:

    இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி சரித்திர புகழ் வாய்ந்த சுற்றுலா தளமான மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. இ ப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

    இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கலெக்டர் ஸ்ரேயாபிசிங் தலைமையில் அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.

    பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், நாமக்கல் எம்.பி. எ.கே.பி.சின்ராஜ் , நாமக்கல் எம்.எல்.ஏ. .ராமலிங்கம், சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. பொன்னுசாமி அவர்கள், காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் 44 - வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்க ர்களால் அலங்கரிக்கப்பட்ட பேருந்துகளையும், விழி ப்புணர்வு மினி மாராத்தான் ஓட்டத்தினையும் அமைச்சர் மதிவேந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மேலும், 44 - வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் மதிவேந்தன் செல்பி எடுத்துக்–கொண்டார். தொடர்ந்து அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் செல்பி எடுத்துக்கொண்டார்கள்.

    திரிபுரா மாநிலத்தில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி என்னை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளுக்குள் ஒலிம்பிக் போட்டி நடப்பதாக குறிப்பிட்டுள்ளார். #Olympicstoderide #derideModi
    அகர்தாலா:

    பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் இன்று சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும் வருகிறார்.

    அருணாச்சலப்பிரதேசம், அசாம் மாநிலங்களில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த மோடி, இன்று மாலை திரிபுரா மாநிலத்தின் தலநகரான அகர்தலா வந்தடைந்தார்.

    மகாராஜா பிர் பிக்ரம் கிஷோர் மானிக்யா பஹதூரின் முழு உருவச்சிலையை திறந்து வைத்த அவர், இங்கிருந்தவாறு கார்ஜீ-பெலோனியா இடையிலான புதிய ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.
     
    பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, எதிர்க்கட்சிகளின் கூட்டணியை மிகப்பெரிய ‘கள்ளத்தொடர்பு அணி’ என்று குறிப்பிட்டார். கைகளை கோர்த்தவாறு புகைப்படங்களுக்கு ‘போஸ்’ கொடுப்பதற்காக இந்த ‘கள்ளத்தொடர்பு அணி’ தலைவர்கள் கொல்கத்தாவிலும் டெல்லியிலும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

    தனக்கு எதிராக பொய் பிரசாரம் செய்வதும், தனிப்பட்ட முறையில் தன்னை தாக்கிப்பேசி வருவதும்தான் இந்த கூட்டணியில் இருப்பவர்களின் முக்கிய வேலையாக உள்ளது. 

    என்னை வீழ்த்துவதற்காக அவர்களுக்குள் ஒரு ஒலிம்பிக் போட்டியே நடப்பதாக தெரிகிறது. மக்களிடம் பொய் பிரசாரம் செய்பவர்களுக்கு என்ன கதி ஏற்படும்? என்பதை வரும் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு எல்லாம் உணர்த்தத்தான் போகிறது எனவும் மோடி தெரிவித்தார்.

    திரிபுராவில் கடந்த 11 மாதங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான எரிவாயு இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மக்களுக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. மேலும் 1.25 லட்சம் வீடுகளில் கழிப்பிட வசதியும் செய்து தரப்பட்டுள்ளது என்பதையும் தனது பேச்சினிடையே அவர் சுட்டிக்காட்டினார். #Olympicstoderide #derideModi
    கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தி உள்ளார். #DipaKarmakar #SachinTendulkar #Olympics
    ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகரின் சுயசரிதை புத்தக வெளியிட்டு விழாவில் கிரிக்கெட் சகாப்தம் டெண்டுல்கர் பேசியதாவது:-

    கிரிக்கெட் வீரர் என்ற முறையில் அந்த விளையாட்டு உலகம் முழுவதும் பிரபலம் அடைவது அவசியமாகும். இதனால் கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி, 10 ஓவர் போட்டி என்று எதாவது ஒரு வகையான கிரிக்கெட் ஒலிம்பிக்கில் இடம் பெற வேண்டும்.



    2016 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெற வேண்டும் என்ற நான் அப்போதைய ஒலிம்பிக் தலைவரிடம் பேசி இருந்தேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #DipaKarmakar #SachinTendulkar #Olympics
    ×