என் மலர்
நீங்கள் தேடியது "பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்"
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
- அரையிறுதி சுற்றில் செர்பிய வீரர் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் ஜானிக் சின்னர் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-4, 7-5, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சின்னர், அல்காரசுடன் மோதுகிறார்.
- ஜோகோவிச் 4-6, 6-3, 6-2 , 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
- இன்று மாலை பெண்கள் ஒற்றையர் அரைஇறுதி போட்டிகள் நடைபெறும்.
பாரீஸ்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
24 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், உலகின் 6-ம் நிலை வீரருமான ஜோகோவிச் (செர்பியா) கால் இறுதியில் 3-வது வரிசையில் உள்ள ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் சுவரேவை எதிர் கொண்டார். இதில் ஜோகோவிச் 4-6, 6-3, 6-2 , 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 3 மணி 17 நிமிட நேரம் தேவைப்பட்டது.
ஜோகோவிச் அரை இறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ஜானிக் சின்னரை (இத்தாலி) சந்திக்கிறார். அவர் கால்இறுதி ஆட்டத்தில் 6-1, 7-5, 6-0 என்ற நேர் செட் கணக்கில் கஜகஸ்தானை சேர்ந்த அலெக்சாண்டர் பப்ளிக்கை எளிதில் தோற்கடித்தார். மற்றொரு அரையிறுதியில் 2-ம் நிலை வீரரான அல்காரஸ் (ஸ்பெயின்)-எட்டாம் நிலை வீரர் லாரென்சோ முசெட்டி (இத்தாலி) மோதுகிறார்கள்.
இன்று மாலை பெண்கள் ஒற்றையர் அரைஇறுதி போட்டிகளில் சபலென்கா (பெலாரஸ்)-ஸ்வியாடெக் (போலந்து) , கோகோ காப் (அமெரிக்கா)-பாய்சன் (பிரான்ஸ்) மோதுகிறார்கள்.
- காலிறுதி ஆட்டம் ஒன்றில் எலினா ஸ்விடோலினா மற்றும் இகா ஸ்வியாடெக் ஆகியோர் மோதினர்.
- முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் எலினா கைப்பற்றினார்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்களுக்கான காலிறுதி ஆட்டம் ஒன்றில் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்)மற்றும் இகா ஸ்வியாடெக் (போலந்து) ஆகியோர் மோதினர்.
இதில் முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் எலினா கைப்பற்றினார். அடுத்த 2 செட்டையும் ஸ்வியாடெக் கைப்பற்றினார். இதன் மூலம் ஸ்வியாடெக் 1-6, 6-3, 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- காலிறுதி ஆட்டம் ஒன்றில் அரினா சபலென்கா (பெலருசியா) மற்றும் ஜெங் கின்வென் (சீனா) ஆகியோ மோதினர்.
- இதில் சபலென்கா 7-3, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்களுக்கான காலிறுதி ஆட்டம் ஒன்றில் அரினா சபலென்கா (பெலருசியா) மற்றும் ஜெங் கின்வென் (சீனா) ஆகியோ மோதினர்.
இதில் சபலென்கா 7-3, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- சின்னர் 6-1, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
- இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி நேரம் தேவைப்பட்டது.
பாரீஸ்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் முதல் நிலை வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) 4-வது சுற்று ஆட்டத்தில் 17-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ரூப்லெவை (ரஷியா) எதிர் கொண்டார்.
இதில் சின்னர் 6-1, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி நேரம் தேவைப்பட்டது. சின்னர் கால் இறுதியில் கஜகஸ்தானை சேர்ந்த அலெக் சாண்டர் பப்ளிக்கை சந்திக்கிறார். அவர் 4-வது சுற்றில் 5-வது வரிசையில் உள்ள ஜேக் டிராபரை (இங்கிலாந்து) 5-7, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில் 3-வது வரிசையில் உள்ள அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி) 4-வது சுற்றில் கிரிக்ஸ்பூரை (நெதர்லாந்து) எதிர்கொண்டார். இதில் சுவரேவ் 6-4, 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது கிரிக்ஸ்பூர் காயத்தால் விலகினார். இதனால் சுவரேவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட் டது. ஜோகோவிச்-சுவரேவ் கால் இறுதியில் மோதுகிறார்கள்.
24 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், 6-ம் நிலை வீரருமான ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் இங்கிலாந்து வீரர் கேமரூன் நாரியை 6-2, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்றார்.
- ஆண்களுக்கான 4-வது சுற்று ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் வெற்றி பெற்றார்.
- பெண்களுக்கான 4-வது சுற்றில் மேடிசன் கீஸ், கோகோ காப், மிர்ரா ஆண்ட்ரீவா ஆகிய வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
பாரீஸ்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான 4-வது சுற்று ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மன்) டாலன் கிரீஸ்பூர் (டச்சு) ஆகியோர் மோதினர்.
இதில் அலெக்சாண்டர் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். 2-வது செட் 3-0 என்ற செட் கணக்கில் இருக்கும் போது டாலன் காயம் காரணமாக வெளியேறினார். இதனால் அலெக்சாண்டர் கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), லோயிஸ் போய்சன் (பிரெஞ்சு) ஆகியோர் மோதினர். இதில் முதல் செட்டை பெகுலா கைப்பற்றினார். அடுத்த இரண்டு செட்டுகளை போய்சன் வென்று பெகுலாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
மற்றொரு ஆட்டங்களில் மேடிசன் கீஸ் (அமெரிக்கா), கோகோ காப் (அமெரிக்கா), மிர்ரா ஆண்ட்ரீவா (ரஷ்யா) ஆகிய வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
- சின்னர் 6-0, 6-1 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
- மற்ற ஆட்டங்களில் ஜாக் டிராப்பர் (பிரிட்டிஷ்), டாலன் கிரீஸ்பூர் (டச்சு), ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், செக் நாட்டின் ஜிரி லெஹெக்கா உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சின்னர் 6-0, 6-1 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இவர் 4-வது சுற்றில் ரூப்லெவ் உடன் மோத உள்ளார்.
மற்ற ஆட்டங்களில் ஜாக் டிராப்பர் (பிரிட்டிஷ்), டாலன் கிரீஸ்பூர் (டச்சு), ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா, செக் வீராங்கனை மார்கெட்டா வோண்ட்ரூசோவாவுடன் மோதினார். இதில் முதல் செட்டை இழந்த பெகுலா அடுத்த இரண்டு செட்டை கைப்பற்றினார். இதனால் 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் பெகுலா வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டிகளில் அலெக்ஸாண்ட்ரோவா (ரஷ்யா), மிர்ரா ஆண்ட்ரீவா (ரஷ்யா), டாரியா கசட்கினா (ரஷ்யா), லோயிஸ் போய்சன் (பிரெஞ்சு) ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
- 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் சபலென்கா, டானிலோவிச் ஆகியோர் மோதினர்.
- சபலென்கா 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
பாரீஸ்:
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, செர்பியா வீராங்கனை டானிலோவிச் ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சபலென்கா 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- 2-வது சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஜில் டீச்மேனை சந்தித்தார்.
- சபலென்கா 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
பாரீஸ்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை வீராங்கனையான சபலென்கா (பெலாரஸ்) 2-வது சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஜில் டீச்மேனை சந்தித்தார்.
இதில் சபலென்கா 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 19 நிமிட நேரம் தேவைப்பட்டது.
- காஸ்பர் ரூட், போர்ச்சுகீசிய வீரர் நுனோ போர்ஜஸ் உடன் மோதினார்.
- இந்த ஆட்டத்தில் நுனோ போர்ஜஸ் 2-6, 6-4, 6-1, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் மற்றும் ஹங்கேரிய வீரர் ஃபேபியன் மரோஸ்ஸன் மோதினர். இந்த ஆட்டத்தில் 6-1, 4-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் அல்காரஸ் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் நார்வேஜியன் வீரர் காஸ்பர் ரூட், போர்ச்சுகீசிய வீரர் நுனோ போர்ஜஸ் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் நுனோ போர்ஜஸ் 2-6, 6-4, 6-1, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
- ஜானிக் சின்னர் 6-4, 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஆர்தர் ரிண்டர்க்னெக்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- அசரென்கா 6-0, 6-0 என்ற கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் மற்றும் பிரெஞ்சு வீரர் ஆர்தர் ரிண்டர்க்னெக் ஆகியோர் மோதினர்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சின்னர் 6-4, 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஆர்தர் ரிண்டர்க்னெக்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பெலரசைச் சேர்ந்த விக்டோரியா அசரென்கா மற்றும் பெல்ஜிய வீராங்கனை யானினா விக்மேயர் மோதினர். இந்த ஆட்டத்தில் அசரென்கா 6-0, 6-0 என்ற கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- கேஸ்பர் ரூட், ஆல்பர்ட் ராமோஸ் வினோலாஸ் உடன் மோதினார்.
- கேஸ்பர் ரூட் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வினோலாஸை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே), ஸ்பெயினின் ஆல்பர்ட் ராமோஸ்-வினோலாஸ் உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கேஸ்பர் ரூட் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஆல்பர்ட் ராமோஸ்-வினோலாஸை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் ஸ்பானிஷ் வீரர் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலி வீரர் கியுலியோ செப்பியேரியுடன் மோதினர். இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.






