என் மலர்
டென்னிஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: சின்னர், விக்டோரியா அசரென்கா 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
- ஜானிக் சின்னர் 6-4, 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஆர்தர் ரிண்டர்க்னெக்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- அசரென்கா 6-0, 6-0 என்ற கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் மற்றும் பிரெஞ்சு வீரர் ஆர்தர் ரிண்டர்க்னெக் ஆகியோர் மோதினர்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சின்னர் 6-4, 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஆர்தர் ரிண்டர்க்னெக்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பெலரசைச் சேர்ந்த விக்டோரியா அசரென்கா மற்றும் பெல்ஜிய வீராங்கனை யானினா விக்மேயர் மோதினர். இந்த ஆட்டத்தில் அசரென்கா 6-0, 6-0 என்ற கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
Next Story






