search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Quarterfinals"

    • ஆடவர் அணிகளுக்கான தகுதி சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றது.
    • இதில் இந்திய அணியில் தீரஜ் , தருந்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோர் இடம் பெற்றனர்.

    பாரீஸ்:

    33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. இதன் தொடக்க விழா சென் நதியில் இந்திய நேரப்படி நாளை இரவு 11 மணிக்கு அரங்கேறுகிறது. ஒலிம்பிக் திருவிழா அதிகாரபூர்வமாக தொடங்கும் முன்பே சில போட்டிகள் நடைபெறுவது வழக்கமாகும்.

    அந்த வகையில் வில்வித்தை தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் அணிகளுக்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்திய அணியில் தீரஜ் , தருந்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோர் இடம் பெற்றனர்.

    12 அணிகள் கலந்துகொண்ட இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணி 2013 புள்ளிகளைப் பெற்றது. இதனால் 3-வது இடத்தை பிடித்த இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. தென் கொரியா அணி 2049 புள்ளிகளுடன் முதலிடத்தையும் , பிரான்ஸ் 2025 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் , சீனா 1998 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும் பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றன.

    மகளிர் அணிகளுக்கான தகுதி சுற்று போட்டிகளில் இந்திய அணியில் அங்கிதா பகத், பஜன் கவுர் தீபிகா குமாரி ஆகியோர் இடம் பெற்றனர். 12 அணிகள் கலந்துகொண்ட இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணி 1983 புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தை பிடித்த இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் ரைபகினா கைப்பற்றினார்.
    • வரும் 10-ம் தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் எலினா ரைபகினா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடன் மோத உள்ளார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரைபகினா, ரஷியாவின் அன்னா கலின்ஸ்காயாவை எதிர்கொண்டார்.

    இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் ரைபகினா கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற 2-வது செட்டில் ரைபகினா 3-0 என முன்னிலையில் இருந்த போது அன்னா கலின்ஸ்காயா காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார்.

    இதன் காரணமாக கஜகஸ்தானின் எலினா ரைபகினா காலிறுதிக்கு முன்னேறினார். வரும் 10-ம் தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் எலினா ரைபகினா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடன் மோத உள்ளார்.

    பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் சோனியா சாஹல், பிங்கி ராணி, சிம்ரன்ஜித் கவுர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள். சவீட்டி பூரா தோல்வி கண்டு வெளியேறினார். #WorldBoxing #Championship #Sonia #Pinki #Simranjeet
    புதுடெல்லி:

    10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 57 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை சோனியா சாஹல், 2014-ம் ஆண்டு உலக போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பல்கேரியா வீராங்கனை ஸ்டானிமிரா பெட்ரோவாவை எதிர்கொண்டார்.

    விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த போட்டியில் நடுவர்கள் முடிவின் படி 3-2 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை சோனியா சாஹல் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த போட்டியின் முடிவில் சர்ச்சை ஏற்பட்டது. தோல்வி கண்ட ஸ்டானிமிரா பெட்ரோவா கருத்து தெரிவிக்கையில், ‘நடுவர்கள் ஊழல் செய்து விட்டனர். இது நியாயமான முடிவு அல்ல’ என்று குற்றம்சாட்டினார். முன்னதாக போட்டி நடுவர் சோனியா சாஹல் வெற்றி பெற்றதாக அறிவித்த போது ஸ்டானிமிரா பெட்ரோவா சிரித்தபடி ஆள்காட்டி விரலை உயர்த்தி அதிருப்தி தெரிவித்தார். ‘நான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நியாயமான முடிவு தான்’ என்று சோனியா சாஹல் தெரிவித்தார்.

    51 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை பிங்கி ராணி 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்து வீராங்கனை அலிசி எபோனி ஜோன்சை எளிதில் தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். இதேபோல் 64 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர் 5-0 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தின் மெகன் ரிட்டை வீழ்த்தி கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

    75 கிலோ எடைப்பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சவீட்டி பூரா 0-5 என்ற கணக்கில் போலந்து வீராங்கனை எல்சிபெடா வோஜ்சிக்கிடம் தோல்வி கண்டு வெளியேறினார். சரிதா தேவிக்கு (60 கிலோ) அடுத்து தோல்வி கண்டு வெளியேறிய 2-வது இந்திய வீராங்கனை சவீட்டி பூரா ஆவார். 
    சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் காலிறுதியில் தோல்வியடைந்து பரிதாபமாக வெளியேறினார். #ChinaOpen
    புஜோவ்:

    சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி புஜோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 14-21, 14-21 என்ற நேர்செட்டில் சீன தைபே வீரர் ஷோ டியான் சென்னிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் கால்இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி தோல்வி கண்டு வெளியேறியது. இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

    அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் சிலிச் 7-6, 8-6, 6-2, 6-4 என்ற கணக்கில் டேவிட் கோபினை வீழத்தி கால் இறுதிக்கு முன்னேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஷரபோவா அதிர்ச்சிகரமாக தோற்றார். #USOpen
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    7-வது வரிசையில் இருக்கும் சிலிச் (குரோஷியா) 7-6, (8-6), 6-2, 6-4 என்ற கணக்கில் 10-வது வரிசையில் இருக்கும் டேவிட் கோபினை (பெல்ஜியம்) வீழத்தினார். அவர் கால் இறுதியில் நிஷி கோரியை (ஜப்பான்) சந்திக்கிறார். நிஷிகோரி 6-3, 6-2, 7-5 என்ற கணக்கில் ஜெர்மனி வீரர் பிலிப்பை தோற்கடித்தவர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் சாம்பியனும், தர வரிசையில் 22-வது இடத்தில் இருப்பவருமான ‌ஷரபோவா (ரஷியா) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.



    ஸ்பெயினைச் சேர்ந்த கர்லா சுராஸ் 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் அவரை வீழ்த்தினார்.

    மற்ற ஆட்டங்களில் மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) 6-1, 6-3 என்ற கணக்கில் சிபுல்கோவாவையும் (சுலோவாக்கியா), நவ்மி ஒசாகா (ஜப்பான்) 6-3, 2-6, 6-4 என்ற கணக்கில் ‌ஷப்லென்காவையும் (பெலாரஸ்), லெசியா சுரென்கோ (உக்ரைன்) 6-7 (3-7), 7-5, 6-2 என்ற கணக்கில் வான்ட்ரோ கோவாவையும் (செக்குடியரசு) தோற்கடித்து கால் இறுதியில் நுழைந்தனர்.

    கால் இறுதி ஆட்டங்களில் சுராஸ்-கெய்ஸ், ஒசாகா- சுரென்கோ மோதுகிறார்கள். #USOpen
    ×