என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asian Badminton championships"

    • கலப்பு இரட்டையர் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா-தனிஷா கிரஸ்டோ ஜோடியுடன் காங்காங் ஜோடி மோதியது.
    • பரபரப்பாக சென்ற முதல் செட்டை 22-20 என்ற கணக்கில் காங்காங் ஜோடி வென்றது.

    ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா-தனிஷா கிரஸ்டோ ஜோடியுடன் காங்காங் ஜோடி மோதியது.

    இதில் பரபரப்பாக சென்ற முதல் செட்டை 22-20 என்ற கணக்கில் காங்காங் ஜோடி வென்றது. தொடர்ந்து ஆடிய 2-வது செட்டையும் அந்த ஜோடியே வென்றது. இதனால் 22-20, 21-13 என்ற செட் கணக்கில் காங்காங் ஜோடி வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    இந்த தொடரில் இந்திய வீரர் வீராங்கனைகள் யாரும் அரையிறுதிக்கு கூட தகுதிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது.
    • இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி உடன் மோதினார்.

    நிங்போ:

    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நிங்போ நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி உடன் மோதினார்.

    இதில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்று கணக்கில் வென்றனர். யார் வெற்றியாளர் என்ற கடைசி சுற்றில் பிவி சிந்து தோல்வியடைந்தார். இதனால் அகானே யமகுச்சி 21-11, 16-21, 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை வென்று, ஜப்பானைச் சேர்ந்த இளம் வீரரான அகானே யமகுச்சி சாதனைப் படைத்துள்ளார். #AsianBadmintonchampionships
    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்பானை சேர்ந்த அகானே யமகுச்சி சீனாவின் ஹி பிங்ஜியாவோவை எதிர்கொண்டார்.

    இதில் 21-19, 21-19 என நேர்செட் கணக்கில் யமகுச்சி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன்மூலம் ஆசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் ஜப்பான் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.



    கடந்த இரண்டு வருடத்திற்கு முன் இதே வீராங்கனையிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்ற யமகுச்சி, தற்போது அதற்கு பழீ தீர்த்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
    ×