என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pv sindhu"

    • காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து முழுமையாக குணமடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
    • 2025-ம் ஆண்டின் மீதமுள்ள அனைத்து சுற்றுப்பயண போட்டிகளிலிருந்து சிந்து விலகியுள்ளார்.

    இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து. இவர் 2025-ம் ஆண்டின் மீதமுள்ள அனைத்து BWF (Badminton World Federation) சுற்றுப்பயண போட்டிகளிலிருந்தும் விலகியுள்ளார். அவரது காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து முழுமையாக குணமடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

    அவர் ஐரோப்பிய சுற்றுப்பயணத்திற்கு முன்பு காலில் காயம் அடைந்தார். இது முழுமையாக குணமடையாததால், மீதமுள்ள 2025 போட்டிகளிலிருந்து விலக முடிவு செய்தார்.

    இந்த விலகல் 2025 ஆண்டின் இறுதி வரை பொருந்தும், மேலும் அவர் மறுவாழ்வு மற்றும் உடற்தகுதியில் கவனம் செலுத்த உள்ளார். இந்த முடிவு எளிதானது அல்ல, ஆனால் நீண்டகால உடற்தகுதிக்கு அவசியமானது" என்று சிந்து தெரிவித்துள்ளார்.

    • சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது.
    • இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தென் கொரிய வீராங்கனை செ யங் ஆகியோர் மோதினர் .

    ஷென்சென்:

    சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தென் கொரிய வீராங்கனை செ யங் ஆகியோர் மோதினர் .

    இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய செ யங் 21-14 , 21-13 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதனால் பிவி சிந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் எளிதில் வெற்றி பெற்றார்.
    • இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் எளிதில் வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டி வரும் 21-ம் தேதி வரை நடக்கிறது.

    இதில் இந்தியா சார்பில் லக்ஷயா சென், ஆயுஷ் ஷெட்டி, பி.வி.சிந்து, சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி உள்ளிட்டோர் களம் காணுகிறார்கள்.

    இந்நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, டென்மார்க் வீராங்கனை ஜூலி டாவால் ஜாகோப்சென் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய பி.வி.சிந்து 21-4, 21-10 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்தப் போட்டி 27 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

    • ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.

    ஹாங்காங்:

    ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, டானிஷ் வீராங்கனை கிறிஸ்டோபர் சென் உடன் மோதினார்.

    இதில் பி.வி.சிந்து முதல் செட்டை 21-15 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக ஆடிய கிறிஸ்டோபர் சென் அடுத்த இரு செட்களை 21-16, 21-19 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

    • 2ஆவது கேம்-ஐ 21-13 எனக் கைப்பற்றினார்.
    • ஆனால், முதல் மற்றும் 3ஆவது கேம்- இழந்தார் ஏமாற்றம் அடைந்தார்.

    உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் காலிறுதியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, உலகத் தரவரிசையில் 9ஆவது இடத்தில் இருக்கும் இந்தோனேசியாவின் புத்ரி வர்தானியை எதிர்கொண்டார். முதல் கேம்-ஐ 14-21 என பிவி சிந்து இழந்தார்.

    என்றாலும் 2ஆவது கேமில் சுதாரித்துக் கொண்டு அபாரமான விளைாடினார். இதனால் 2ஆவது கேம்-ஐ 21-13 என எளிதாக வென்றார். வெற்றியை தீர்மானிக்கும் 3ஆவது கேமில் இந்தோனோசியா வீராங்கனை அபாரமாக விளையாடினார். இதனால் பிவி சிந்து 16-21 என இழந்து, தொடரில் இருந்து வெளியேறினார்.

    • சீனா வீராங்கனையுடன் இதுவரை 5 முறை மோதி 3-ல் வெற்றி பெற்றுள்ளார்.
    • காலிறுதியில் இந்தோனேசியா வீராங்கனையை எதிர்கொள்கிறார்.

    உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பி.வி. சிந்து (தரவரிசையில் 15ஆவது இடம்) உலகத் தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ள சீனாவின் வாங் ஜி யி-யை எதிர்கொண்டார்.

    இதில் பி.வி. சிந்து 21-19, 21-15 என எளிதாக வெற்றி பெற்றார். இருவரும் நேருக்குநேர் மோதியதில் பி.வி. சிந்து 3-2 என வெற்றி பெற்றுள்ளார்.

    30 வயதான பி.வி. சிந்து காலிறுதியில் இந்தோனேசியாவைச் சேர்ந்த உலகத் தரவரிசையில் 9ஆவது இடத்தில் இருக்கும் புத்ரி குசுமா வர்தானியை எதிர்கொள்கிறார். இதில் வெற்றி பெற்றால் உலக சாம்பியன்ஷிப்பில் 6 பதக்கம் வென்றவர் என்ற சாதனையை சமன் செய்வார்.

    இந்தியாவின் துருவ் கபிலா- தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-11, 21-16 என அயர்லாந்து ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    பெண்களுக்கான ஒற்றையர் சுற்று ஆட்டத்தில் பிவி சிந்து- கலோயானா நல்பந்தோவாவுடன் மோதினார்.

    பாரீஸ்:

    29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் 21-வது இடம் வகிக்கும் லக்ஷயா சென், எச்.எஸ். பிரனாய், ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்றவரும், 2019-ம் ஆண்டு உலக சாம்பியனுமான பி.வி.சிந்து ஆகிய இந்தியர்கள் களம் இறங்குகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளாக பார்மின்றி தடுமாறும் சிந்து தடுமாறி வருகிறார்.

    இந்நிலையில் இன்று பெண்களுக்கான ஒற்றையர் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து பல்கேரியாவை சேர்ந்த கலோயானா நல்பந்தோவாவுடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் பிவி சிந்து 23-21, 21-6 என்ற செட் கணக்கில் கலோயானாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி விளையாடுகிறது.
    • கலப்பு அணிகள் பிரிவில் துருவ் கபிலா- தனிஷா கிரஸ்டோ ஜோடிகள் விளையாடுகிறது.

    பாரீஸ்:

    29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று தொடங்கி 31-ந்தேதி வரை நடக்கிறது. இதில் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் 21-வது இடம் வகிக்கும் லக்ஷயா சென், எச்.எஸ். பிரனாய், ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்றவரும், 2019-ம் ஆண்டு உலக சாம்பியனுமான பி.வி.சிந்து ஆகிய இந்தியர்கள் களம் இறங்குகிறார்கள். ஆனால் இவர்கள் தொடக்க சுற்றுகளை தாண்டுவதே சிக்கல் தான். அந்த அளவுக்கு போட்டி அட்டவணை கடினமாக அமைந்துள்ளது.

    2021-ம் ஆண்டு உலக பேட்மிண்டனில் வெண்கலம் வென்றவரான லக்ஷயா சென் தனது முதல் சுற்றில் 'நம்பர் ஒன்' வீரரான சீனாவின் ஷி யூ கியுடன் கோதாவில் குதிக்கிறார். அவருக்கு எதிராக இதுவரை 4 முறை மோதியிருக்கும் லக்ஷயா சென் அதில் ஒன்றில் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டுள்ளார். பிரனாய் தனது முதல் சுற்றில் பின்லாந்தின் ஜோகிம் ஓல்டோர்ப்பை எதிர்கொள்கிறார். இதில் அவர் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றில் 2-ம் நிலை வீரரான டென்மார்க்கின் ஆண்டர்ஸ் அன்டோன்சனுடன் மோத வேண்டி இருக்கும்.

    கடந்த 2 ஆண்டுகளாக பார்மின்றி தடுமாறும் சிந்து, கலோயானா நல்பந்தோவாவுடன் (பல்கேரியா) தனது சவாலை தொடங்குகிறார். இந்திய ஓபனில் கால்இறுதிவரை முன்னேறியதே இந்த சீசனில் அவரது சிறந்த செயல்பாடாக இருப்பது கவனிக்கத்தக்கது. பெண்கள் ஒற்றையரில் ஒலிம்பிக் சாம்பியனான அன்சே யங் (தென்கொரியா), சீனாவின் வாங் ஷி யி, சென் யூ பே ஜப்பானின் அகானே யமாகுச்சி ஆகியோரில் ஒருவர் பட்டம் வெல்லவே அதிக வாய்ப்புள்ளது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் இணையான இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி, கலப்பு அணிகள் பிரிவில் துருவ் கபிலா- தனிஷா கிரஸ்டோ ஜோடிகள் நேரடியாக 2-வது சுற்றில் ஆடுகிறது.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து, சக நாட்டு வீராங்கனை உன்னதி ஹூடா உடன் மோதினார்.
    • இதில் முதல் செட்டை ஹூடாவும் 2 செட்டை பிவி சிந்துவும் கைப்பற்றினர்.

    பீஜிங்:

    சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது. இந்தத் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களம் காண்கின்றனர்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து, சக நாட்டு வீராங்கனை உன்னதி ஹூடா உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை ஹூடாவும் 2 செட்டை பிவி சிந்துவும் கைப்பற்றினர். வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட்டை ஹூடா கைப்பற்றினார்.

    இதனால் ஹூடா 21-16, 19-21, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது.
    • இதில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது. இந்தத் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களம் காண்கின்றனர்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் டொமோகா மியாசகி உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 21-15 என பி.வி.சிந்து கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக ஆடிய ஜப்பான் வீராங்கனை 21-8 என 2வது செட்டை வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 21-17 என பி.வி.சிந்து வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • முதல் செட்டை சிந்து 22-20 என கைப்பற்றினார்.
    • அடுத்த 2 செட்டுகளை 10-21, 18-21 என்ற கணக்கில் சிந்து இழந்தார்.

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக்ரங்கி ரெட்டி ஜோடி, டென்மார்க்கின் ராஸ்மஸ் க்ஜோர்-ஃபிரடெரிக் சோகார்ட் ஜோடியுடன் மோதியது.

    இந்த போட்டியில் முதல் செட்டை இழந்த இந்திய ஜோடி அடுத்த இரண்டு செட்டை கைப்பற்றியது. இதனால் 16-21, 21-18, 22-20 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து, உலகின் 8-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் போர்ன்பவீ சோச்சுவோங்குடம் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் முதல் செட்டை சிந்து கைப்பற்றிய நிலையில் அடுத்த 2 சுற்றுகளை அவர் இழந்தார். இதனால் 22-20, 10-21, 18-21 என்ற செட் கணக்கில் சிந்து தோல்வியடைந்தார்.

    • சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி இன்று முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பி.வி.சிந்து, வென் யு ஜாங்குடன் மோதினார்.

    மொத்தம் ரூ.8½ கோடி பரிசுத் தொகைக்கான சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் இன்று முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது.

    உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்தியா சார்பில் பிரனாய், லக்ஷயா சென், பி.வி.சிந்து, சாத்விக்- சிராக் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிலையில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, கனடாவின் வென் யு ஜாங்குடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் 21-14, 21-9 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்து சுற்றுக்கு பிவி சிந்து முன்னேறினார்.

    ×