என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்"

    • ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் சாத்விக் - சிராக் செட்டி ஜோடி வெற்றி பெற்றது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் இன்று தொடங்கியது. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான சிந்து, மாளவிகா, பிரணாய், லக்ஷயா சென் உட்பட பலர் இதில் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த முதல் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் செட்டி ஜோடி, சீன தைபே அணியின் சென் ஸி ரே-லின் யூ சீஹ் ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-16, 21-15 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

    • ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி நடந்துவருகிறது.
    • இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென் வெற்றி பெற்றார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான சிந்து, மாளவிகா, பிரணாய், லக்ஷயா சென் உட்பட பலர் இதில் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், ஜப்பானின் டகுமா ஒபயாஷி உடன் மோதினார்.

    இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-9, 21-14 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், ஜப்பானின் கே. நிஷிமோட்டோ ஆகியோர் மோதினார்.
    • முதல் செட்டை நிஷிமோட்டோவும் 2-வது செட்டை லக்ஷயா சென்னும் வென்றனர்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், ஜப்பானின் கே. நிஷிமோட்டோ ஆகியோர் மோதினார்.

    இதில் முதல் செட்டை நிஷிமோட்டோவும் 2-வது செட்டை லக்ஷயா சென்னும் வென்றனர். தொடர்ந்து 3-வது செட் பரபரப்பாக சென்றது. இறுதியில் 3-வது செட்டில் லக்ஷயா சென் 21-23 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

    இதனால் 2-வது சுற்று ஆட்டத்தில் 16-21, 21-12, 21-23 என்ற கணக்கில் லக்ஷயா சென் தோல்வியடைந்து இந்த தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா ஜோடி தோல்வி அடைந்தது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த லீக் போட்டியில் இன்று நடைபெற்ற பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர் பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியாவின் தனிஷா க்ராஸ்டோ-அஷ்வினி பொன்னப்பா ஜோடி, மலேசியா ஜோடியுடன் மோதியது.

    இதில் அஷ்வினி பொன்னப்பா ஜோடி முதல் செட்டை 21-13 என வென்றது. இதனால் அதிரடியாக ஆடிய மலேசிய ஜோடி அடுத்த இரு செட்களை 24-22, 21-18 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    இதன்மூலம் அஷ்வினி பொன்னப்பா ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

    • ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது.
    • கலப்பு இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்திய தோல்வி அடைந்தது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.

    இந்நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த இரண்டாவது சுற்று போட்டியில் இந்தியாவின் தனிஷா க்ராஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, மலேசியா ஜோடியுடன் மோதியது.

    இதில் இந்திய ஜோடி முதல் செட்டை 21-18 என வென்றது. இதனால் அதிரடியாக ஆடிய மலேசிய ஜோடி அடுத்த இரு செட்களை 21-15, 21-19 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    இதன்மூலம் கலப்பு இரட்டையரிலும் தோல்வி அடைந்த இந்திய ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

    இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார். #SainaNehwal
    இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்பெயினின் கரோலினா மரின் ஆகியோர் முன்னேறினர்.

    இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. சாய்னா 3-10 என பின்தங்கிய நிலையில் இருந்தபோது, கரோலினா மரினுக்கு தொடைப்பகுதியில் (hamstring injury) காயம் ஏற்பட்டது. இதனால் போட்டியில் இருந்து விலகினார். ஆகவே, சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார்.
    இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முன்னேறினார். #SainaNehwal
    இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டமொன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் சீனாவின் ஹே பிங்ஜியாவோவை எதிர்கொண்டார்.

    இதில் சாய்னா நேவால் 18-21, 21-12, 21-18 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். #SainaNehwal
    இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் சாய்னா நேவால், 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்தார். பிரனீத், சுபாங்கர் தோல்வியடைந்தனர்.
    இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால், இந்தோனேசியாவின் தினார் தியா ஆயுஸ்டைன்-ஐ எதிர்கொண்டார். 8-ம் நிலை வீராங்கனையான சாய்னா நேவால், 50-ம் நிலை வீராங்கனையான தினாரிடம் முதல் செட்டை 7-21 என அதிர்ச்சிகரமாக இழந்தார். பின்னர் சுதாரித்துக்கொண்ட சாய்னா 2-வது செட்டை 21-16 எனவும், 3-வது செட்டை 21-11 எனவும் கைப்பற்றி வெற்றி பெற்றார்.

    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பிரனீதர் 12-21, 16-21 என சீனாவின் சென் லாங்கிடம் தோல்வியடைந்து வெளியேறினார். சுபாங்கர் டென்மார்க்கின் விக்டர் அலெக்சனிடம் 14-21, 21-19, 15-21 என தோல்வியடைந்தார்.
    ×