search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saina Nehwal"

    • பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் அஸ்வினி-சிக்கி ரெட்டி ஜோடி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை மால்விகா பான்சோத் தோல்வியடைந்தார்.

    டோக்கியோ:

    27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது. அதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-19, 21-9 என்ற நேர்செட்டில் ஹாங்காங்கின் சியுங் நாகன் யியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மேலும், பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் அஸ்வினி-சிக்கி ரெட்டி ஜோடி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தது. அதேபோல கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் இஷான் பத்நாகர்-தனிஷா கிரஸ்டோ இணை வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.

    மறுபுறம் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை மால்விகா பான்சோத் தோல்வியடைந்தார்.

    • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து வியட்நாம் வீராங்கனையை தோற்கடித்தார்.
    • இதேபோல், இந்தியாவின் சாய்னா நேவால் சீன வீராங்கனையை வென்றார்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாய்னா நேவால், சீனாவின் ஹூ பிங் ஜியாவோவுடன் மோதினார். இதில் சாய்னா 21-19, 11-21, 21-17 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, வியட்நாமின் துய் லின் நுயெனுடன் மோதினார். இதில் பி.வி.சிந்து 19-21, 21-19, 21-18 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் ஸ்ரீகாந்த், காஷ்யப் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.
    • இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் சக நாட்டவரான மாளவிகா பான்சோத்தை வீழ்த்தி இந்திய ஓபன் போட்டியில் அவரிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தார்.

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-15, 21-11 என்ற நேர்செட்டில் பெல்ஜியத்தின் லியானி டானை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 21-18, 21-14 என்ற நேர் செட்டில் சக நாட்டவரான மாளவிகா பான்சோத்தை வீழ்த்தி இந்திய ஓபன் போட்டியில் அவரிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தார். இன்னொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 66-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிஹா 21-16, 21-11 என்ற நேர்செட்டில் 12-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் பூசனன் ஓங்பாம்ருங்பானுக்கு அதிர்ச்சி அளித்தார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 21-13, 21-16 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் சித்திகோம் தம்மாசினை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 77-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் மிதுன் மஞ்சுநாத் 21-17, 15-21, 21-18 என்ற செட் கணக்கில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், தரவரிசையில் 11-வது இடத்தில் இருப்பவருமான சக நாட்டு வீரர் ஸ்ரீகாந்தை போராடி வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் நீடித்தது. ஸ்ரீகாந்தை போல் மற்ற இந்திய வீரர்கள் காஷ்யப், சமீர் வர்மா ஆகியோரும் முதல் சுற்றுடன் நடையை கட்டினர்.

    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் காலிறுதியில் பிவி சிந்து, சாய்னா நேவால், சமீர் வர்மா ஆகியோர் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தனர். #AsianBadmintonChampionship
    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான பிவி சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் முன்னேறியிருந்தனர்.

    இன்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. பிவி சிந்து காய் யன்யன்-ஐ எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 19-21, 9-21 நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றமடைந்தார்.



    சாய்னா நேவால் ஜப்பானின் அகானே யமகுச்சியை எதிர்கொண்டார். இதில் சாய்னா முதல் செட்டை 13-21 என இழந்தார். ஆனால் 2-வது செட்டை கடும் போராட்டத்திற்குப் பிறகு 23-21 எனக் கைப்பற்றினார். ஆனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது சுற்றில் 16-21 இழந்து வெளியேறினார். யமகுச்சிக்கு எதிராக 9 ஆட்டத்தில் 8 முறை சாய்னா தோல்வியடைந்துள்ளார்.



    ஆண்களுக்கான காலிறுதி ஒன்றில் சமீர் வர்மா ஷி யுகியை எதிர்கொண்டார். இதில் 10-21, 12-21 என எளிதாக தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார்.
    39-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சாய்னா நேவால் வெற்றி பெற்றனர். #AsiaBadminton #PVSindhu #SainaNehwal
    யுஹான்:

    39-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-14, 21-7 என்ற நேர்செட்டில் ஜப்பானின் சயாகா தகாஹஷியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற சிந்துவுக்கு 28 நிமிடமே தேவைப்பட்டது. மற்றொரு ஆட்டத்தில் சாய்னா நேவால் (இந்தியா) 12-21, 21-11, 21-17 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹான் யுவை வீழ்த்தினார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-13, 17-21, 21-18 என்ற செட் கணக்கில் ஜப்பானின் சகாய் கஜூமசாவை சாய்த்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். அதேசமயம் இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 16-21, 20-22 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியாவின் ஷிசர் ஹிரெனிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.  #AsiaBadminton #PVSindhu #SainaNehwal

    பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கைக்கதை படத்திற்காக பரினீதி, தீவிரமாகப் பயிற்சி செய்து வருகிறார். #SainaNehwal #Parineeti
    பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கைக்கதை திரைப்படமாகிறது. இதில் சாய்னாவாக பரினீதி சோப்ரா நடிக்க இருக்கிறார். இதற்காக தினமும் இரண்டு மணி நேரம் சாய்னாவின் ஆட்டங்களைப் பார்த்து தயாராகி வருவதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருக்கிறார்.

    அமோல் குப்தா இயக்கும் இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ’நான் காட்சிகளின் வழியே கற்றுகொள்வேன். அதனால், சாய்னாவின் பேட்மிண்டன் ஆட்டங்களைப் பார்த்து, அவர் எப்படி விளையாடுகிறாரோ, அப்படியே விளையாடுவதற்குத் தயாராகி வருகிறேன்.



    இதுவரையில் இவ்வளவு பேட்மிண்டன் ஆட்டங்களை நான் பார்த்ததில்லை. சாய்னாவின் உடல்மொழியைத் திரையில் கொண்டு வருவதற்காகத் தீவிரமாகப் பயிற்சி செய்து வருகிறேன்” என்று கூறி இருக்கிறார்.
    இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முன்னேறினார். #SainaNehwal
    இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டமொன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் சீனாவின் ஹே பிங்ஜியாவோவை எதிர்கொண்டார்.

    இதில் சாய்னா நேவால் 18-21, 21-12, 21-18 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். #SainaNehwal
    இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால், பாருபள்ளி காஷ்யப்பை திருமணம் செய்து கொண்டார். திருமண பேட்டோவை சாய்னா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். #Saina
    இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையாக திகழ்ந்து வருபவர் சாய்னா நேவால். அதேபோல் சிறந்த வீரர் பாருபள்ளி காஷ்யப். இருவரும் காதலித்து வருவதாகவும், திருணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளிவந்தன.

    கடந்த செப்டம்பர் மாதம் நாங்கள் இருவரும் காதலித்து வருவது உண்மைதான், டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம் என்று சாய்னா தெரிவித்தார்.

    இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட போட்டோவை சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
    சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் இந்திய வீரர் சமீர் வர்மா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். #SyedModiInternational #SainaNehwal #SameerVerma
    லக்னோ:

    சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற மகளிர் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலும், இந்தோனேசிய வீராங்கனை ருசெல்லி ஹர்தவானும் மோதினர். இதில் 12 - 21, 21 - 7, 21 - 6 என்ற செட்களில் சாய்னா நேவால் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இதேபோல், ஆண்கள் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் சமீர் வர்மாவும், இந்தோனேசிய வீரர் ட்வி வார்டோயோவும் மோதினர். இதில் 21 -13, 17 - 21, 21 - 8 என்ற செட்களில் சமீர் வர்மா வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இறுதிப்போட்டியில், சாய்னா நேவால் சீன வீராங்கனை ஹான் யூஹியுடனும், சமீர் வர்மா சீன வீரர் ஹீ லு குவாங்ஜுவுடன் மோதுகின்றனர். #SyedModiInternational #SainaNehwal #SameerVerma
    பிரெஞ்ச் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் சாய்னா நெவால் தோல்வி அடைந்து வெளியேறினார். #SainaNehwal
    பாரீஸ்:

    பிரெஞ்ச் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில், தரவரிசையில் 9-வது இடம் வகிக்கும் இந்தியாவின் சாய்னா நேவால், ‘நம்பர் ஒன்’ வீராங்கனை தாய் ஜூ யிங்குடன் (சீனதைபே) பலப்பரீட்சை நடத்தினார். முதலாவது செட்டில் 20-16 என்ற கணக்கில் முன்னிலை பெற்று வெல்வது போல் நெருங்கிய சாய்னா கடைசி கட்டத்தில் கோட்டை விட்டார். இதன் பிறகு 2-வது செட்டில், தாய் ஜூ யிங்கின் ஷாட்டுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சாய்னா ‘சரண்’ அடைந்தார். முடிவில் தாய் ஜூ யிங் 22-20, 21-11 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார். தாய் ஜூ யிங்கை அடக்க முடியாமல் திணறி வரும் சாய்னா அவருக்கு எதிராக கடைசியாக ஆடிய 12 ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வி அடைந்துள்ளார். இதில் கடந்த வாரம் டென்மார்க் ஓபன் இறுதி ஆட்டத்தில் தோற்றதும் அடங்கும். #SainaNehwal
    டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தாய் ஜூ யிங், சாய்னாவை வீழ்த்தி மகுடம் சூடினார். #DenmarkOpen #SainaNehwal #TaiTzuYing
    ஒடென்சி:

    டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 10-வது இடம் வகிக்கும் சாய்னா நேவால் (இந்தியா), ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் தாய் ஜூ யிங்குடன் (சீனதைபே) மல்லுகட்டினார். முதல் செட்டை தாய் ஜூ யிங் வசப்படுத்த, 2-வது செட்டில் சாய்னாவின் கை ஓங்கியது.



    இந்த செட்டில் ஒரு கேம் 41 ஷாட்டுகள் வரை நீடித்தது. 2-வது செட்டை சாய்னா கைப்பற்றியதால், கடைசி செட்டில் விறுவிறுப்பு மேலும் எகிறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி செட்டில் தாய் ஜூ யிங் சாதுர்யமான ஷாட்டுகளால் சாய்னாவை மிரள வைத்தார். இந்த செட்டில் சாய்னாவினால் கொஞ்சம் கூட ஈடுகொடுத்து ஆட முடியவில்லை. 52 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் தாய் ஜூ யிங் 21-13, 13-21, 21-6 என்ற செட் கணக்கில் சாய்னாவை வீழ்த்தி மகுடம் சூடினார். 83 ஆண்டு கால டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் வரலாற்றில் சீனதைபே நாட்டை சேர்ந்த ஒருவர் பட்டம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.

    தாய் ஜூ யிங்குக்கு எதிராக இதுவரை 18 முறை மோதியுள்ள சாய்னா அதில் சந்தித்த 13-வது தோல்வி இதுவாகும். 2014-ம் ஆண்டில் இருந்து ஜூ யிங்குக்கு எதிராக மோதிய 11 ஆட்டங்களிலும் சாய்னாவுக்கு தோல்வியே மிஞ்சியிருக்கிறது. வாகை சூடிய ஜூ யிங்குக்கு ரூ.40 லட்சமும், சாய்னாவுக்கு ரூ.20 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 
    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் கிரிகோரியாவை வீழ்த்தி சாய்னா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். #DenmarkOpen #SainaNehwal
    ஓடென்ஸ்:

    டென்மார்க் நாட்டின் ஓடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாய்னா நேவால் உலக தரவரிசையில் 19வது இடம் வகிக்கும் கிரிகோரியா மரீஸ்கா துன்ஜங்க் உடன் அரை இறுதியில் விளையாடினார்.

    இந்த போட்டியில் 21-11, 21-12 என்ற செட் கணக்கில் கிரிகோரியாவை வீழ்த்தி சாய்னா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இப்போட்டி 30 நிமிடங்கள் நீடித்தது.

    அவர் இறுதி போட்டியில் உலக தரவரிசையில் முதல் இடம் வகிக்கும் தாய் சூ யிங் உடன் விளையாட இருக்கிறார். #DenmarkOpen #SainaNehwal 
    ×