search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Singapore Open"

    • ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய அணியின் ஸ்ரீகாந்த் 21-15 21-19 என்ற கணக்கில் தாய்லாந்தின் காண்டபோன் வாங்சரோயனை வீழ்த்தினார்.
    • பெண்கள் பிரிவில் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள சிந்து, 'நம்பர் ஒன்' வீராங்கனையும், உலக சாம்பியனுமான அகானே யமாகுச்சியும் மோதினர்.

    சிங்கப்பூர்:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கியது. வருகிற 11-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.7 கோடியாகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்வோருக்கு ரூ.49 லட்சம் பரிசாக கிடைக்கும்.

    இந்நிலையில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய அணியின் ஸ்ரீகாந்த் 21-15 21-19 என்ற கணக்கில் தாய்லாந்தின் காண்டபோன் வாங்சரோயனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் பிரனோய் 15-21 19-21 என்ற கணக்கில் ஜப்பான் வீரரான நரோகாவிடம் தோல்வியடைந்தார்.

    பெண்கள் பிரிவில் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள சிந்து, 'நம்பர் ஒன்' வீராங்கனையும், உலக சாம்பியனுமான அகானே யமாகுச்சியும் மோதினர். இதில் 21-18 19-21 17-21 என்ற கணக்கில் அவர் தோல்வியடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் சாய்னா நேவால் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ராட்சனோக் இன்டோனனை எதிர்கொண்டார். இதில் 21-15 21-19 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

    • இறுதிப்போட்டியில் சீனாவின் வாங் ஜி யி- பி.வி.சிந்து மோதினர்
    • பதிலடி கொடுத்த சீன வீராங்கனை 2ம் செட்டை வசமாக்கினார்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் வாங் ஜி யி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

    போட்டியின் துவக்கத்தில் முதல் இரண்டு புள்ளிகளை இழந்த பி.வி.சிந்து, அதன்பின்னர் சிறப்பான சில ஷாட்களை அடித்து ஆட்டத்தை தன் வசமாக்கினார். அடுத்தடுத்து 11 புள்ளிகள் பெற்ற அவர் 11-2 என முன்னிலை பெற்றார். அதன்பின்னரும் தனது நிலையை தக்க வைத்த சிந்து, முதல் செட்டை எளிதில் வென்றார். இரண்டாம் செட் ஆட்டத்தில் பதிலடி கொடுத்த சீன வீராங்கனை அந்த செட்டை வசமாக்கினார்.

    அதன்பின் சுதாரித்து ஆடிய சிந்து, கடுமையான போராட்டத்திற்கு பிறகு 3ம் செட்டை வென்றார். இப்போட்டியில் 21-9, 11-21, 21-15 என்ற செட்கணக்கில் சிந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்றுள்ள பி.வி.சிந்து, இந்த ஆண்டு மூன்றாவது கோப்பையை வென்றிருக்கிறார். இதற்கு முன்பு சையத் மோடி இன்டர்நேஷனல் மற்றும் சுவிஸ் ஓபன் என இரண்டு சூப்பர் 300 பட்டங்களை வென்றிருந்தார்.

    • அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் சயனா கவாகாமி ஆகியோர் மோதினர்.
    • பி.வி.சிந்து 21-15, 21-7 என்ற செட் கணக்கில் சயனா கவாகாமியை வீழ்த்தினார்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் சயனா கவாகாமி ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து 21-15, 21-7 என்ற செட் கணக்கில் சயனா கவாகமியை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் வாங் ஜி யி, 21-14, 21-14 என்ற செட்கணக்கில் ஜப்பானின் அயா ஒஹோரியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப் போட்டியில் வாங் ஜி யி- பி.வி.சிந்து பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

    ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்றுள்ள பி.வி.சிந்து, இந்த ஆண்டு சையத் மோடி இன்டர்நேஷனல் மற்றும் சுவிஸ் ஓபன் என இரண்டு சூப்பர் 300 பட்டங்களை வென்றுள்ளார். சிங்கப்பூர் ஓபனில் இன்னும் ஒரு போட்டியில் (இறுதிப்போட்டி) வெற்றி பெற்றால் இந்த சீசனில் முதல் சூப்பர் 500 பட்டத்தை வெல்வார்.

    • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து வியட்நாம் வீராங்கனையை தோற்கடித்தார்.
    • இதேபோல், இந்தியாவின் சாய்னா நேவால் சீன வீராங்கனையை வென்றார்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாய்னா நேவால், சீனாவின் ஹூ பிங் ஜியாவோவுடன் மோதினார். இதில் சாய்னா 21-19, 11-21, 21-17 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, வியட்நாமின் துய் லின் நுயெனுடன் மோதினார். இதில் பி.வி.சிந்து 19-21, 21-19, 21-18 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். #SingaporeOpenBadminton #PVSindhu
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் ஒரு ஆட்டத்தில், ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற சீன வீராங்கனை காய் யான்யானை எதிர்கொண்டார்.

    விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் கடுமையாக போராடிய சிந்து, 21-13, 17-21, 21-14 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம், இந்த சீசனில் இரண்டு போட்டிகளில் சிந்து அரையிறுதி வரை முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.



    மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் சாய்னா நேவால், ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார். இப்போட்டியில் துவக்கம் முதலே தடுமாறிய சாய்னா முதல் செட்டை விரைவில் இழந்தார். அடுத்த செட்டில் சற்று போராடினார். ஆனாலும் அவரால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. இந்த ஆட்டத்தில், 21-8, 21-13 என்ற செட்கணக்கில் ஜப்பான் வீராங்கனை வெற்றி பெற்று அரையிறுதியை உறுதி செய்தார். அரையிறுதியில், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒகுஹரா- பி.வி.சிந்து பலப்பரீட்சை நடத்த உள்ளனர். #SingaporeOpenBadminton #PVSindhu
    ×