search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sindhu"

    • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க்கில் நடைபெறுகிறது.
    • செப்டம்பர் 27-ம் தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது.

    கோபன்ஹேகன்:

    28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் பி.வி.சிந்து, ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார். இதில் 14-21, 14-21 என்ற நேர் செட்டில் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.

    இந்தத் தொடரில் பி.வி.சிந்து நேரடியாக 2-வது சுற்றில் களம் கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகை சிந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • இவர் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

    இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான 'அங்காடிதெரு' திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் சிந்து. இவர் நாடோடிகள், தெனாவெட்டு, நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் குறையவே தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.


    சிந்து

    நடிகை சிந்து மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததையடுத்து புற்று நோயின் தீவிரம் அதிகமானதால் அவரது ஒரு பக்கம் மார்பகம் எடுக்கப்பட்டது. இதனால் அவரால் 10 முதல் 20 நிமிடங்கள் வரைகூட தொடர்ந்து உட்கார முடியாத நிலை ஏற்பட்டு இரவு நேரத்தில் படுக்க முடியாதவாறு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக பல நேர்காணல்களில் கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் நடிகை சிந்து இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இவரது மறைவு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நேற்று தொடங்கியது.
    • பிரனோய் 21-18, 16-21, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஓற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் முன்னனி வீரரான பிரனோய் ஹாங்காங்கை சேர்ந்த லீ செயுக் யியூ-வுடன் மோதினார்.

    இதில் பிரனோய் 21-18, 16-21, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல ஸ்ரீகாந்த் ஜப்பான் வீரரான நிஷிமோட்டோவை 21-18, 21-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்து சுற்றுக்கு முன்னேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து தனது முதல் சுற்றில் 21-18, 21-13 என்ற கணக்கில் சகநாட்டவரான அஷ்மிதா சாலிஹாவை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியடைந்து வெளியேறினார். #SingaporeOpenBadminton #Sindhu
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில், மகளிருக்கான ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில், ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையும், ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான பி.வி.சிந்து, முன்னாள் உலக சாம்பியன் நஜோமி ஒகுஹாரா (ஜப்பான்) ஆகியோர் மோதினர்.

    போட்டியின் ஆரம்பத்தில் சிந்து தொடர்ந்து தவறுகளை செய்ததால் பின்தங்கினார். குறிப்பாக நெட்டில் பந்தை அடிப்பது, அவுட்லைனுக்கு வெளியே அடிப்பது போன்ற தவறுகளால் புள்ளிகளை இழந்தார். சில சமயம் பொறுமையிழந்து அவசரப்பட்டு ஆடுவது போல் தெரிந்தது. இதனால் முதல் செட்டை 7-21 என இழந்தார்.

    2வது செட் ஆட்டத்தில் சிந்து சற்று நிதானமாக ஆடி, ஒகுஹாராவுக்கு நெருக்கடி கொடுக்க முயன்றார். ஆனாலும், ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒகுஹாரா, அடுத்தடுத்து 6 புள்ளிகளைப் பெற்று முன்னேறினார். இறுதியில் அந்த செட்டையும் 11-21 என்ற கணக்கில் சிந்து இழந்தார். வெற்றி பெற்ற ஒகுஹாரா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    பி.வி.சிந்துவும், ஒகுஹாராவும் இதுவரை 13 போட்டிகளில் மோதி உள்ளனர். இதில் 7 போட்டிகளில் சிந்துவும், 6 போட்டிகளில் ஒகுஹாராவும் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக கடைசியாக மோதிய இரண்டு போட்டிகளில் சிந்து வெற்றி பெற்றார். அதற்கு பழிதீர்க்கும் வகையில் ஒகுஹாராவின் இன்றைய ஆட்டம் அமைந்திருந்தது.



    மற்றொரு அரையிறுதியில் சீன தைபேய் வீராங்கனை தாய் சு யிங், 15-21, 24-22, 21-19 என்ற செட்கணக்கில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் ஒகுஹாரா, திய் சூ யிங் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். #SingaporeOpenBadminton #Sindhu
    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். #SingaporeOpenBadminton #PVSindhu
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் ஒரு ஆட்டத்தில், ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற சீன வீராங்கனை காய் யான்யானை எதிர்கொண்டார்.

    விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் கடுமையாக போராடிய சிந்து, 21-13, 17-21, 21-14 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம், இந்த சீசனில் இரண்டு போட்டிகளில் சிந்து அரையிறுதி வரை முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.



    மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் சாய்னா நேவால், ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார். இப்போட்டியில் துவக்கம் முதலே தடுமாறிய சாய்னா முதல் செட்டை விரைவில் இழந்தார். அடுத்த செட்டில் சற்று போராடினார். ஆனாலும் அவரால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. இந்த ஆட்டத்தில், 21-8, 21-13 என்ற செட்கணக்கில் ஜப்பான் வீராங்கனை வெற்றி பெற்று அரையிறுதியை உறுதி செய்தார். அரையிறுதியில், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒகுஹரா- பி.வி.சிந்து பலப்பரீட்சை நடத்த உள்ளனர். #SingaporeOpenBadminton #PVSindhu
    சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் சிந்து தனது முதல் சுற்றில் லையனி அலெஸ்சாண்ட்டோ மைனகியையும், சாய்னா நேவால் இந்தோனேஷியாவின் சுசான்டோவுடனும் மோதுகிறார்கள். #SingaporeOpenBadminton
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் நடந்த தகுதி சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் காஷ்யப், முக்தா ஆகியோர் வெற்றி பெற்று பிரதான சுற்றை எட்டினர்.

    இன்றைய தினம் இந்திய நட்சத்திர மங்கைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து களம் இறங்குகிறார்கள்.

    சிந்து தனது முதல் சுற்றில் லையனி அலெஸ்சாண்ட்டோ மைனகியையும் (இந்தோனேஷியா), சாய்னா நேவால், இந்தோனேஷியாவின் சுசான்டோவுடனும் மோதுகிறார்கள். இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்தும் முதல் சுற்றில் இன்று ஆடுகிறார். #SingaporeOpenBadminton

    இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். #IndianOpenBadminton #PVSindhu #Srikanth
    புதுடெல்லி:

    இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 16-21, 21-14, 21-19 என்ற செட் கணக்கில் ஹூவாங் யுஜியாங்கை (சீனா) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் காஷ்யப் 11-21, 17-21 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் விக்டர் ஆக்சல்செனிடம் (டென்மார்க்) வீழ்ந்தார்.



    பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து 21-23, 18-21 என்ற நேர்செட்டில் சீன வீராங்கனை ஹீ பிங்ஜாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.  #IndianOpenBadminton #PVSindhu #Srikanth 
    இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் காஷ்யப் அரையிறுதிக்கு முன்னேறினர். #IndianOpenBadminton #PVSindhu
    புதுடெல்லி:

    இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் காஷ்யப் 21-16, 21-11 என்ற நேர்செட்டில் சீன தைபே வீரர் வாங் சு வெய்யை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-23, 21-11, 21-19 என்ற செட் கணக்கில் சக வீரர் சாய் பிரனீத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய் 10-21, 16-21 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் விக்டோர் ஆக்சல்செனிடம் (டென்மார்க்) தோல்வி கண்டு வெளியேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்யிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-19, 22-20 என்ற நேர்செட்டில் மியா பிச்பெல்ட்டை (டென்மார்க்) சாய்த்து அரையிறுதிக்கு முன்னேறினார். #IndianOpenBadminton #PVSindhu
    இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்துவும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சாய் பிரனீத்தும் காலிறுதிக்கு முன்னேறினர். #IndianOpenBadminton #PVSindhu
    புதுடெல்லி:

    இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சாய் பிரனீத் 18-21, 21-16, 21-15 என்ற செட் கணக்கில் சக வீரர் சமீர் வர்மாவை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் காஷ்யப் 21-11, 21-13 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் தனோன்சாக்கை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் இந்திய வீரர்கள் பிரனாய், ஸ்ரீகாந்த் ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-11, 21-13 என்ற நேர்செட்டில் ஹாங்காங் வீராங்கனை டெங் ஜாய் சுவானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். #IndianOpenBadminton #PVSindhu


    ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டனில் இந்திய வீராங்கனைகள் சிந்து, சாய்னா ஆகியோர் கடினமான சுற்றில் இடம் பிடித்துள்ளனர். #AllEnglandBadminton #Sindhu #Saina
    பர்மிங்காம்:

    மொத்தம் ரூ.7 கோடி பரிசுத்தொகைக்கான ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காமில் அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் (டிரா) நிர்ணயிக்கப்பட்டு போட்டி அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன்படி இந்திய முன்னணி வீரர், வீராங்கனைகள் அனைவரும் கடினமான பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.

    ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மங்கையான இந்தியாவின் பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் தென்கொரியாவின் சங் ஜி ஹயூனை எதிர்கொள்கிறார். சங் ஜி ஹயூன், கடந்த ஆண்டு ஹாங்காங் ஓபனில் சிந்துவை வீழ்த்தியவர். அதனால் சிந்து மிகவும் எச்சரிக்கையாக ஆட வேண்டியது முக்கியம். முதல் இரண்டு சுற்றுகளில் சிந்து வெற்றி கண்டால், கால்இறுதியில் பலம் வாய்ந்த 4-ம் நிலை வீராங்கனையான சென் யூபெயுடன் (சீனா) மோத வேண்டி இருக்கும்.

    மற்றொரு இந்திய நட்சத்திரம் சாய்னா நேவால் முதல் சுற்றில் ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மோருடன் மோதுகிறார். முதல் இரண்டு தடையை சாய்னா வெற்றிகரமாக கடந்தால், கால்இறுதியில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள தாய் ஜூ யிங்குடன் (சீனதைபே) மல்லுக்கட்ட வேண்டி வரும். தாய் ஜூ யிங்குடன் கடைசியாக மோதிய 12 ஆட்டங்களில் சாய்னா தொடர்ச்சியாக தோல்வி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது கவுகாத்தியில் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடி வரும் சிந்துவும், சாய்னாவும் இந்த போட்டியை முடித்துக் கொண்டு இங்கிலாந்துக்கு புறப்படுவார்கள்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில், 8-ம் நிலை வீரரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த், முதல் ரவுண்டில் பிரைஸ் லெவர்டெசை (பிரான்ஸ்) சந்திக்கிறார். அனேகமாக அவர் கால்இறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரர் கென்டோ மோமோட்டாவை (ஜப்பான்) சந்திக்க வேண்டியது இருக்கும். மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் பிரனாய், சாய் பிரனீத் நேருக்கு நேர் சந்திக்க இருக்கிறார்கள். அதே சமயம் சமீர் வர்மா தனது சவாலை முன்னாள் முதல் நிலை வீரர் விக்டர் ஆக்சல்சென்னுடன் (டென்மார்க்) தொடங்குகிறார். பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி-சிக்கி ரெட்டி ஜோடியாக இறங்குகிறார்கள்.

    நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த கவுரவமிக்க இந்த போட்டியில் பிரகாஷ் படுகோனே (1980-ம் ஆண்டு), கோபிசந்த் (2001-ம் ஆண்டு) ஆகியோர் தவிர வேறு எந்த இந்தியரும் மகுடம் சூடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, வீரர் பிரனாய் ஆகியோர் வெற்றி பெற்றனர். #JapanOpen2018 #Sindhu #Prannoy
    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நேற்று தொடங்கியது. 16-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் முன்னணி வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை.

    தொடக்க நாளான நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 13-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் சயகா தகஹாஷியை சந்தித்தார். 53 நிமிடம் அரங்கேறிய இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-17, 7-21, 21-13 என்ற செட் கணக்கில் சயகா தகஹாஷியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் சிந்து, சீன வீராங்கனை பான்ஜிவ் காவை எதிர்கொள்கிறார்.



    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் பிரனாய் 21-18, 21-17 என்ற நேர்செட்டில் அண்மையில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தோனேஷியா வீரர் ஜோனதன் கிறிஸ்டியை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த வெற்றியை பெற பிரனாய்க்கு 45 நிமிடமே தேவைப்பட்டது.

    மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-13, 21-15 என்ற நேர்செட்டில் சீன வீரர் யுஜியாங் ஹூயாங்கை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா 18-21, 22-20, 10-21 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் லீ டாங் குன்னிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இந்த ஆட்டம் 1 மணி 23 நிமிடம் நீடித்தது.

    கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிரனாவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. இதேபிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-அஸ்வினி பொன்னப்பா ஜோடி முதல் சுற்றுடன் நடையை கட்டியது. #JapanOpen2018 #Sindhu #Prannoy 
    24-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் சாய்னா , பி.வி.சிந்து ஆகியோர் கடினமான பிரிவில் இடம் பிடித்துள்ளனர். #WorldBadminton #saina #sindhu
    நன்ஜிங்:

    24-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்காக அட்டவணை நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்கும் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் கடினமான பிரிவில் இடம் பிடித்துள்ளனர். 

    இருவருக்கும் நேரடியாக 2-வது சுற்றில் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிந்து 3-வது சுற்றுக்கு முன்னேறினால் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள சுங் ஜி ஹூனை (தென்கொரியா) சந்திக்க நேரிடலாம். அவர் கால்இறுதிக்கு தகுதி பெற்றால் நடப்பு சாம்பியன் நஜோமி ஒகுஹராவை (ஜப்பான்) எதிர்கொள்ள வேண்டியது வரலாம்.

    இதேபோல் சாய்னா 3-வது சுற்றுக்குள் நுழைந்தால் 4-ம் நிலை வீராங்கனை ராட்சனோக் இன்டானோனை (தாய்லாந்து) எதிர்கொள்ள வேண்டியது வரலாம். அதில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கரோலினா மரினை (ஸ்பெயின்) சந்திக்க வேண்டிய நிலை வரக்கூடும். #WorldBadminton #saina #sindhu
    ×