என் மலர்tooltip icon

    டென்மார்க்

    • டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்தது.

    கோபன்ஹேகன்:

    டென்மார்க்கின் ஓடன்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

    இந்தத் தொடரில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, ஜப்பானின் யுகோ கொபயாஷி-டகுரோ ஹோகி ஜோடியுடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய ஜப்பான் ஜோடி 23-21, 18-21, 21-16 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

    • டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் லக்‌ஷயா சென் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.

    கோபன்ஹேகன்:

    டென்மார்க்கின் ஓடன்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

    இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், பிரான்சின் அலெக்ஸ் லானியர்

    உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அலெக்ஸ் லானியர் 21-9, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவின் லக்ஷயா சென் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றது.

    கோபன்ஹேகன்:

    டென்மார்க்கின் ஓடன்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

    இந்தத் தொடரில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, இந்தோனேசியாவின் ரியான் ஆர்டினோ-ரஹ்மத் ஹிதயத் ஜோடியுடன் மோதியது.

    இதில் அதிரடியாக ஆடிய சாத்விக் சிராக் ஜோடி 21-15, 18-21, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    கோபன்ஹேகன்:

    டென்மார்க்கின் ஓடன்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

    இந்தத் தொடரில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, தைவானின் யாங் போ ஹன்-ஜங் ஹு லி ஜோடியுடன் மோதியது.

    இதில் அதிரடியாக ஆடிய சாத்விக் சிராக் ஜோடி 21-19, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் லக்‌ஷயா சென் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    கோபன்ஹேகன்:

    டென்மார்க்கின் ஓடன்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

    இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆண்டன்சன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய லக்சயா சென் 21-13, 21-14 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

    கோபன்ஹேகன்:

    டென்மார்க்கின் ஓடன்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

    இந்தத் தொடரில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, ஸ்காட்லாந்தின் கிறிஸ்டோபர் கிரிம்லி, மேத்யூ கிரிம்லி ஜோடியுடன் மோதியது.

    முதல் செட்டை 17-21 என சாத்விக் ஜோடி இழந்தது. இதில் சுதாரித்துக் கொண்ட சாத்விக் சிராக் ஜோடி அடுத்த இரு செட்களை 21-11, 21-17 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

    • டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் லக்‌ஷயா சென் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    கோபன்ஹேகன்:

    டென்மார்க்கின் ஓடன்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

    இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், அயர்லாந்தின் நட் நியென் உடன் மோதினார்.

    முதல் செட்டை 10-21 என லக்ஷயா சென் இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட லக்ஷயா சென் அடுத்த இரு செட்களை 21-8, 21-18 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    • சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
    • ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது.

    கோபன்ஹேகன்:

    குழந்தைகளின் மனநலனைக் காக்கும் வகையில் டென்மார்க் அரசு 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.

    உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது. சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

    இந்நிலையில், டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரெட்ரிக்சன், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், சமூக ஊடகங்களும், செல்போன்களும் குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைத் திருடுகின்றன. இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் சமூகத் தனிமை போன்றவற்றைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    சமீபத்தில் ஆஸ்திரேலிய அரசு 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

    • ஆகஸ்ட் மாதம்- ரூ.1.86 லட்சம் கோடி வசூல்.
    • கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலான தொகையை விட 9.1 சதவீதம் அதிகமாகும்.

    ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. கடந்த மாதத்துடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் வெளியிடப்பட்டு வருகிறது.

    அதன்படி, நடப்பு ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரூ.1.89 லட்சம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலான தொகையை விட 9.1 சதவீதம் அதிகமாகும்.

    இதற்கிடையே, ஜிஎஸ்டியில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் அமலானது. ஜிஎஸ்டியில் இருந்த 4 வரி அடுக்குகள் தற்போது 2 அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்துள்ளது.

    ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் எதிரொலி அடுத்த மாத ஜிஎஸ்டி வசூலில் தெரியவரும். கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் மட்டும் ரூ.10.04 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இதுதொடர்பான மசோதா டென்மார்க் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
    • அப்போது மசோதாவுக்கு ஆதரவாக 81 பேரும், எதிர்ப்பு தெரிவித்து 21 பேரும் வாக்களித்தனர்.

    கோபன்கேஹன்:

    ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் பிரதமர் மெட் பிரடெரிக்சன் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 70-ஆக உயர்த்த அரசாங்கம் முடிவு செய்தது.

    இதுதொடர்பான மசோதா டென்மார்க் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மசோதாவுக்கு ஆதரவாக 81 பேரும், எதிர்ப்பு தெரிவித்து 21 பேரும் வாக்களித்தனர். இதனால் ஓய்வூதிய வயது அதிகரிப்பு சட்டம் பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் ஐரோப்பிய நாடுகளில் மிக அதிக ஓய்வு பெறும் வயது உடைய நாடாக டென்மார்க் மாறி உள்ளது.

    இந்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு மற்றும் எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது அங்கு ஓய்வு பெறும் வயது 67 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்கா கிரீன்லாந்தை பெறும் என ஜனாதிபதி டிரம்ப் கூறுகிறார்.
    • நமது எதிர்காலத்தை நாமே தீர்மானிக்கிறோம் என்றார் கிரீன்லாந்து பிரதமர்.

    நூக்:

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் அண்டை நாடுகளை வரியினாலும், கருத்தாலும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்.

    அந்த வகையில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் உலக சுதந்திரத்திற்காக கிரீன்லாந்து மீதான உரிமையும், கட்டுப்பாடும் அவசியம் எனக்கூறிய அதிபர் டிரம்ப், டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை வாங்கவேண்டும் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் கிரீன்லாந்தை விலைக்கு வாங்கப் போவதாக தொடர்ந்து கூறி வருகிறார். ஏராளமான கனிம வளங்கள் அங்கு குவிந்து கிடக்கின்றன என்பதால் சீனாவுக்குப் போட்டியாக இப்பகுதியைக் கைப்பற்ற உள்ளதாக டிரம்ப் தெரிவித்து வருகிறார்.

    இந்நிலையில், கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-பிரெட்ரிக் நீல்சன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்கா கிரீன்லாந்தை பெறும் என ஜனாதிபதி டிரம்ப் கூறுகிறார். நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன், அமெரிக்கா அதைப் பெறாது. நாம் வேறு யாருக்கும் சொந்தமானவர்கள் அல்ல. நமது எதிர்காலத்தை நாமே தீர்மானிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

    • கிரீன்லாந்து அமெரிக்க உரிமை, அதன் மீதான முழுமையான கட்டுப்பாடு தேவை
    • டென்மார்க் ராஜ்ஜியத்திற்குள் இருக்கும் பகுதியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான தனது விருப்பத்தை மன்னர் ஃபிரடெரிக் தெளிவாகக் காட்டியுள்ளார்.

    ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் கிரீன்லாந்து என்ற தீவு உள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய தீவு என்ற பெருமை கொண்டது. இது டென்மார்க்கில் தன்னாட்சி அதிகாரம் பெற்றது.

    22 லட்சம் (2.2 மில்லியன்) சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த தீவின் பெரும் பகுதி பனிபடர்ந்து இயற்கை எழிலுடன் காட்சியளிக்கும் வனமாக உள்ளது.

    இங்கு துலே என்ற இடத்தில் அமெரிக்காவின் விமான படை தளம் உள்ளது. ராணுவ வீரர்கள் தங்கியுள்ளனர். எனவே விமான படை தளத்துக்கு அமெரிக்கா வாடகை செலுத்தி வருகிறது.

    இந்த நிலையில் கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுக்காக விலைக்கு வாங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் 2019 இல் அவர் அதிபராக இருந்தபோதே விருப்பம் தெரிவித்தார்.

    அதற்கு டென்மார்க் கடும் கண்டனம் தெரிவித்தது. 2020 இல் நடந்த தேர்தலில் டிரம்ப் ஜோ பைடனுடன் ஆட்சியை பறிகொடுத்தார்.

    ஆனால் 2024 நவம்பரில் நடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். எனவே மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக கிரீன்லாந்து தீவை வாங்கும் பேச்சை கொளுத்தி போட்டுள்ளார்.

    கிரீன்லாந்து அமெரிக்க உரிமை, அதன் மீதான முழுமையான கட்டுப்பாடு தேவை என்று தனக்கு சொந்தமாக ட்ரூத் சமூக வலைதளத்தில் கடந்த மாதம் டிரம்ப் பதிவிட்டார்.

    இதற்கு கடும் கண்டம் தெரிவித்த டென்மார்க் பிரதமர் Múte Egede, கிரீன்லாந்து எங்களுடையது, நாங்கள் விற்பனைக்கு இல்லை, ஒருபோதும் விற்பனைக்கு வரமாட்டோம். சுதந்திரத்திற்கான நீண்ட போராட்டத்தை நாம் இழக்கக் கூடாது என்று தெரிவித்தார்

    இந்நிலையில் தற்போது டென்மார்க் மன்னர் ஃபிரடெரிக் நாட்டின் கோட் ஆஃப் ஆர்ம்ஸ் சின்னத்தை மாற்றியமைத்து டிரம்புக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். 

    கிரீன்லாந்து மற்றும் பரோயே தீவுகளை பிரதிநிதித்துவப்படுத்த அரச கோட் ஆஃப் ஆர்ம்ஸ் சின்னத்தில் அவற்றில் குறியீடுகள் இடம்பெற்றுள்ளன.

    புதிய சின்னத்தில் கிரீன்லாந்து மற்றும் பரோயே தீவுகளைக் குறிக்கும் ஒரு துருவ கரடி மற்றும் ஆடு [raam] குறியீடு இடம்பெற்றுள்ளது.

    முன்னதாக டென்மார்க், நார்வே மற்றும் ஸ்வீடன் இடையே உள்ள கல்மார் யூனியன் மரபை குறிக்கும் விதமாக முந்தைய அரச கோட்கள் ஆப் ஆர்ம்ஸ் சின்னம் இருந்தத நிலையில் தற்போது அதை மாற்றி டென்மார்க் ராஜ்ஜியத்திற்குள் இருக்கும் பகுதியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான தனது விருப்பத்தை மன்னர் ஃபிரடெரிக் தெளிவாகக் காட்டியுள்ளார்.

    முன்னதாக அட்லான்டிக் – பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் பனாமா கால்வாயைப் பயன்படுத்துவதற்கான கப்பல் கட்டணச் செலவைக் குறைக்காவிட்டால், பனாமா கால்வாய் மீதான உரிமையை மீண்டும் அமெரிக்காவே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    கனடாவை நாடு என்ற அந்தஸ்தில் இருந்து குறைத்து அமெரிக்காவின் மாகாணமாக மாற்றுவோம் என்றும் டிரம்ப் கூறி வருகிறார். இவ்வாறு வெளிநாடு அரசுகளில் டிரம்ப்பின் அதிக பிரசங்கித்தனம் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது. 

    ×