என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Social Meida"

    • சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
    • ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது.

    கோபன்ஹேகன்:

    குழந்தைகளின் மனநலனைக் காக்கும் வகையில் டென்மார்க் அரசு 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.

    உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது. சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

    இந்நிலையில், டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரெட்ரிக்சன், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், சமூக ஊடகங்களும், செல்போன்களும் குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைத் திருடுகின்றன. இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் சமூகத் தனிமை போன்றவற்றைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    சமீபத்தில் ஆஸ்திரேலிய அரசு 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

    • நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
    • இதையடுத்து, சமூக ஊடகங்களுக்கான தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது.

    காத்மண்டு:

    நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யத் தவறிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது.

    நேபாளத்தில் விதிக்கப்பட்ட இந்த தடையை எதிர்த்து நேற்று போராட்டம் வெடித்தது. இதன் எதிரொலியாக, நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, சமூக ஊடகங்களுக்கான தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது.

    இதற்கிடையே, நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகக் கோரி இளைஞர்கள் 2 ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், நேபாள நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்தனர். இதயடுட்து, பாராளுமன்றம் முழுவதும் கரும் புகை சூழ்ந்தது.

    இதேபோல், விமான நிலையம் அருகிலும் தீ வைத்ததால், விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.

    • நான் சைவ உணவு மட்டும் சாப்பிடுபவன். இது என் மனதை பாதித்தது என பதிவிட்டிருந்தார்.
    • புகார்தாரரின் பில், போன் நம்பர் போன்றவற்றை சரிபார்க்க விரும்புகிறோம் என ஜொமோட்டோ கேட்டுக்கொண்டது.

    ஆன்-லைன் மூலம் வினியோகம் செய்யப்படும் பொருட்களில் சில நேரங்களில் பொருட்கள் மாற்றி வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

    இந்நிலையில் புனேவை சேர்ந்த பங்கஜ் சுக்லா என்பவர் ஆன்-லைன் மூலம் ஜொமோட்டோவில் சைவ உணவு ஆர்டர் செய்த நிலையில் அவருக்கு சிக்கன் பிரியாணி வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பங்கஜ் சுக்லா தனது பதிவில் கூறி இருப்பதாவது:-

    புனேவின் கார்வே நகரில் உள்ள ஒரு கடையில் பன்னீர் பிரியாணி ஆர்டர் செய்தேன். ஆனால் எனக்கு வினியோகம் செய்யப்பட்ட அந்த பிரியாணியில் சிக்கன் துண்டு இருந்தது. நான் சைவ உணவு மட்டும் சாப்பிடுபவன். இது என் மனதை பாதித்தது என பதிவிட்டிருந்தார். அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில், அவரது பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து ஜொமோட்டோவுக்கு எதிராக விமர்சனங்களை பதிவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து ஜொமோட்டோ அவரது பதிவுக்கு பதில் அளித்தது. அதில், புகார்தாரரின் பில், போன் நம்பர் போன்றவற்றை சரிபார்க்க விரும்புகிறோம் என கேட்டுக்கொண்டது. இந்த விவகாரம் இணையதளத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

    ×