பிரதமர் பதவி விலகக் கோரி போராட்டம்: பாராளுமன்றத்துக்கு தீ வைப்பு

நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து, சமூக ஊடகங்களுக்கான தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது.
பிரதமர் பதவி விலகக் கோரி போராட்டம்: பாராளுமன்றத்துக்கு தீ வைப்பு
Published on

காத்மண்டு:

நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யத் தவறிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது.

நேபாளத்தில் விதிக்கப்பட்ட இந்த தடையை எதிர்த்து நேற்று போராட்டம் வெடித்தது. இதன் எதிரொலியாக, நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, சமூக ஊடகங்களுக்கான தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது.

இதற்கிடையே, நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகக் கோரி இளைஞர்கள் 2 ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேபாள நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்தனர். இதயடுட்து, பாராளுமன்றம் முழுவதும் கரும் புகை சூழ்ந்தது.

இதேபோல், விமான நிலையம் அருகிலும் தீ வைத்ததால், விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com