என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Zomato"

    • ஸ்விக்கி, சொமேட்டோ ஆகியவை முன்னணி ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களான உள்ளன.
    • மழை பெய்யும் பொது உணவு டெலிவரி செய்தால் மழை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    ஜிஎஸ்டி 12%, 28% வரி அடுக்குகள் நீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி குறைப்பு ஆகியவை அமலுக்கு வந்துள்ளது.

    ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கையால் 375 பொருட்களின் விலை குறைந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இந்நிலையில், முன்னணி ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி, சொமேட்டோவில் மழை பெய்யும் பொது உணவு டெலிவரி செய்தால் தனியாக வசூலிக்கப்படும் கட்டணத்திற்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது நெட்டிசன்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

    இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் ஒருவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. அப்புகைப்படத்தில் ஸ்விக்கியில் மழை கட்டணம் ரூ.25 என்றும் அதற்கு ஜிஎஸ்டி என்று ரூ.4.50 கட்டணம் என மொத்தமாக ரூ.29.50 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    அந்த பதிவில், "மழை கடவுளான இந்திரனுக்கும் வரி போட ஆரம்பித்துள்ளார்கள். இனிமேல் வெயில் அடித்தால் அதற்கு ஒரு கட்டணம், ஆக்சிஜனுக்கு ஒரு கட்டணம், மூச்சு விடுவதர்க்கு ஒரு கட்டணம் என்று கூட வசூலிக்க வாய்ப்புள்ளது என்று அவர் கிண்டலடித்துள்ளார்.

    • 2 ஆண்டுகளில் 600 சதவீதம் அதிகரித்துள்ளது.
    • Zomato பிளாட்ஃபார்ம் கட்டணம் ரூ.10 ஆக உள்ளது.

    முன்னணி ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி (Swiggy), தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 17 சதவீதம் அதிகரித்து ரூ.12 இல் இருந்து ரூ.14 ஆக உயர்த்தியுள்ளது.

    அதிக தேவை உள்ள பகுதிகளில் இந்த அதிகரிப்பு சோதனை அடிப்படையில் இந்த பயன்பாட்டு கட்டண உயர்வு செயல்படுத்தப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பண்டிகைக் காலத்தில் ஆர்டர்கள் அதிகரித்ததால் இந்த தற்காலிக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்விகி தெரிவித்துள்ளது.

    2023 ஆம் ஆண்டில் வெறும் ரூ.2 ஆக இருந்த இந்த பிளாட்ஃபார்ம் கட்டணம், 2 ஆண்டுகளில் 600 சதவீதம் அதிகரித்துள்ளது. மறுபுறம், Zomato பிளாட்ஃபார்ம் கட்டணம் ரூ.10 ஆக உள்ளது.  

    • கமிஷன் தொகையை குறைப்பது மற்றும் மறைமுக கட்டணத்தை நிறுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
    • ஓட்டல் உரிமையாளர்கள் வைக்கும் கோரிக்கையை ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் ஏற்க மறுத்து விட்டன.

    நாமக்கல் மாநகரில் 100-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் ஒவ்வொரு உணவகத்திற்கும் ஏற்ப கமிஷனில் வேறுபாடு வைத்து உள்ளனர். மேலும் விளம்பர கட்டணம், மறைமுக கட்டணம் போன்றவற்றால் வருமானத்தில் 50 சதவீதம் பாதிப்பு ஏற்படுவதாக கூறி, ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் உணவு வழங்காமல் நிறுத்தி வைக்க இருப்பதாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.

    இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் நேற்று நாமக்கல் நகர ஓட்டல் மற்றும் பேக்கரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கமிஷன் தொகையை குறைப்பது மற்றும் மறைமுக கட்டணத்தை நிறுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

    ஆனால் ஓட்டல் உரிமையாளர்கள் வைக்கும் கோரிக்கையை ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் ஏற்க மறுத்து விட்டன. எனவே திட்டமிட்டபடி இன்று முதல் நாமக்கல் மாநகரில் கூடுதல் கமிஷன் வசூலிக்கும் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு உணவு வழங்கப்பட மாட்டாது எனவும், வாடிக்கையாளர்கள் தங்களது ஆதரவை வழங்க வேண்டும் எனவும் ஓட்டல் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    இதுதொடர்பாக சென்னையில் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாவிட்டால் சென்னையிலும், ஸ்விகி, ஜொமோட்டா மூலம் உணவு வழங்கப்படாது என தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் ரவி தெரிவித்துள்ளார். 

    • விராட் கோலி தனது புதிய தொலைபேசியை தொலைத்துவிட்டதாக தெரிவித்தார்.
    • ஜொமேட்டோவின் வேடிக்கையான பதில் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

    கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமீபத்தில் தனது புதிய தொலைபேசியை தொலைத்துவிட்டதாக ட்விட்டரில் பகிர்ந்தார். பாக்ஸை திறந்துகூட பார்க்காத நிலையில் தனது போன் தொலைத்துவிட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

    இதற்கு பதில் அளித்த ஜொமெட்டோ உங்கள் புதிய தொலைபேசி காணாமல் போன சோகம் மறக்க ஐஸ் கீரிம் ஆர்டர் செய்து பாருங்கள் என பதிவிட்டது. இந்த டுவிட் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது.


    இந்த டுவிட் பல எதிர்வினைகளைத் தூண்டியது. சிலர் அக்கறை காட்டினாலும், மற்றவர்கள் இது ஒரு விளம்பர வித்தையாக இருக்கலாம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

    • இந்தியாவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோகோரோ நிறுவனம் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்துள்ளது.
    • 2030 வாக்கில் டெலிவரி பணிகளில் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டும் பயன்படுத்த ஜொமாட்டோ திட்டம்.

    இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை டெலிவரி பணிகளில் பயன்படுத்த, ஜொமாட்டோ நிறுவனம் கோகோரோவுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. இந்த கூட்டணியின் கீழ் கோகோரோ நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஜொமாட்டோவுக்கு வழங்கும்.

    ஜொமேட்டோ நிறுவனம் 2023 இறுதிக்குள் 100 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த இலக்கு நிர்ணயம் செய்து இருந்தது. டெலிவரி ஏஜண்ட்களுக்கு உதவும் வதையில் கோடக் மஹிந்திரா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கடன் உதவி வழங்க இருக்கிறது.

    "எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் குறைந்த விலையில் கிடைப்பதோடு, நம்பத்தகுந்ததாகவும் இருக்கிறது. இவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் டெலிவரி ஊழியர்களுக்கு அதிக லாபம் ஈட்டிக் கொடுக்கும்," என ஜொமாட்டோ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மோகித் சர்தானா தெரிவித்தார். 

    • ஜொமாட்டோ டி-சர்ட் அணிந்த ஊழியர் ஒருவர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் மீது படுத்து கிடக்கிறார்.
    • ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பிறகு தங்களுக்கு வரும் டெலிவரி ஆர்டர்களில் 72 சதவீதம் பேர் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொடுப்பதாக ஜொமாட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்று முதல் வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், பொதுமக்கள் சிலர் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு பல்வேறு வகைகளை கையாண்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஜொமாட்டோவில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் கடந்த சில நாட்களாக தங்கள் உணவுக்குரிய பணத்தை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றுகிறார்கள்.

    இது தொடர்பாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் ஜொமாட்டோ டி-சர்ட் அணிந்த ஊழியர் ஒருவர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் மீது படுத்து கிடக்கிறார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இதற்கிடையே, ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பிறகு தங்களுக்கு வரும் டெலிவரி ஆர்டர்களில் 72 சதவீதம் பேர் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொடுப்பதாக ஜொமாட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • உணவு வினியோகம் செய்வதற்காக ஜொமோட்டோ ஊழியர் ஒருவர் சுயமாக ஒரு டிரோனை உருவாக்கி அசத்தி உள்ளார்.
    • வீடியோ 70 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், 12 லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்துள்ளது.

    சமீபகாலமாக ஆன்லைன் மூலம் ஓட்டல்களில் உணவு ஆர்டர் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன. உணவு வினியோகம் செய்யும் ஊழியர்கள் பெரும்பாலும் மோட்டார் சைக்கிளில் செல்வார்கள். ஆனால் உணவு வினியோகம் செய்வதற்காக ஜொமோட்டோ ஊழியர் ஒருவர் சுயமாக ஒரு டிரோனை உருவாக்கி அசத்தி உள்ளார்.

    சோஹன்ராய் என்ற அந்த ஊழியர் நீண்ட தூரம் பயணித்து உணவு வினியோகம் செய்ய வேண்டி இருந்ததால் அடிக்கடி போக்குவரத்தில் சிக்கி கொண்டதோடு, களைத்தும் போனார். இதனால் விரைவாக உணவு வினியோகம் செய்வதற்காக திட்டமிட்ட அவர் 'டிரோன்' உருவாக்கி உணவு வினியோகத்திற்கு பயன்படுத்த சோதனைகளை மேற்கொண்ட காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    இந்த வீடியோ 70 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், 12 லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்துள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சொமேட்டோ, ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்கள் இச்சேவையில் முன்னணியில் உள்ளன
    • இந்தியா-பாகிஸ்தான் உலக கோப்பை போட்டியின் போது மிக அதிகளவில் ஆர்டர்கள் செய்துள்ளனர்

    கடந்த சில வருடங்களாக உணவிற்காக வசிப்பிடத்தை விட்டு வெளியே சென்று உணவகங்களை தேடுவதற்கு பதிலாக இணையதளத்தில் உள்ள செயலிகளின் மூலம் விருப்பமான உணவகங்களிலிருந்து விலைகளை ஒப்பிட்டு பார்த்து தங்களுக்கு பிடித்தமான உணவுகளை இருக்கும் இடத்திற்கே தருவிப்பது இந்தியர்களிடையே பிரபலமாகி வருகிறது.

    சொமேட்டோ (Zomato), ஸ்விக்கி (Swiggy) உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த சேவையில் முன்னணியில் உள்ளன.

    ஆண்டுதோறும், ஸ்விக்கி நிறுவனம் தங்கள் செயலியின் மூலம் பெரும்பான்மையானோர் தருவிக்கும் உணவு வகைகளின் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.

    இதில் தொடர்ச்சியாக 8-வது ஆண்டாக முதலிடத்தை "பிரியாணி" பிடித்துள்ளது.


    இந்த தரவுகளின்படி ஒவ்வொரு 2.5 வினாடிகளில் இந்தியர்களால் ஒரு பிரியாணி ஆர்டர் செய்யப்படுகிறது. அதிலும் சைவ பிரியாணியோடு ஒப்பிட்டால் சிக்கன் பிரியாணியின் விகிதாசாரம் 1 : 5.5 எனும் அளவில் உள்ளது.

    ஸ்விக்கி செயலியின் தளத்தில் 40,30,827 முறை "பிரியாணி" அதிகம் தேடப்பட்ட சொல்லாக உள்ளது. ஐதராபாத் நகரில்தான் பிரியாணி ஆர்டர்கள் அதிகளவில் செய்யப்பட்டுள்ளது. அந்நகரத்தில் ஒரே நபர் இந்த ஒரே வருடத்தில் 1633 பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளார்.

    ஐசிசி 2023 ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது சண்டிகர் நகரில் ஒரு குடும்பம் ஒரே முறையில் 70 பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளது. விறுவிறுப்பான அப்போட்டி நடைபெற்ற தினத்தன்று ஒரு நிமிடத்திற்கு 250 ஆர்டர்கள் எனும் விகிதத்தில் மக்கள் ஸ்விக்கியில் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர்.

    ஸ்விக்கியின் தரவுகளின்படி கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரூ மக்கள்தான் அதிகளவில் கேக் ஆர்டர் செய்துள்ளனர். 8.5 மில்லியன் ஆர்டர்கள் செய்ததால் இந்நகர் "கேக் தலைநகரம்" (cake capital) என அழைக்கப்படுகிறது.

    பிப்ரவரி 14, வேலண்டைன் தினத்தன்று ஒரு நிமிடத்திற்கு 271 கேக்குகள் எனும் விகிதத்தில் ஆர்டர்கள் குவிந்தன. நாக்பூர் நகரில் ஒரு உணவு விரும்பி, ஒரே நாளில் 92 கேக்குகளை ஆர்டர் செய்துள்ளார்.


    பிரியாணியையும், கேக்குகளையும் தவிர, மும்பை நகரை சேர்ந்த ஒருவர் 42.3 லட்சம் பெருமான உணவு ஆர்டர்களை செய்திருந்தது இந்த தரவுகளில் உள்ள வியக்க வைக்கும் மற்றொரு தகவல்.

    அதே போல் ஒடிஸா மாநில தலைநகர் புபனேஸ்வரில் ஒரு வீட்டில் ஒரே நாளில் 207 பீஸாக்களை ஆர்டர் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முந்தைய மூன்று நாட்களின் விற்பனையைப் பொறுத்து பரிமாற்றங்கள் தினமும் தீர்க்கப்படும்.
    • தினசரியாக மாற்றுவது என்பதை சொமேட்டோ பிசினஸ் பார்ட்னர் ஆப் மூலம் நிறைவேற்றலாம்.

    உணவு விநியோக செயலியான சொமேட்டோ, தனது வலைத்தளத்தில், சிறிய உணவகங்களின் வணிகங்களுக்கான தினசரி கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.

    இந்த திட்டம் உணவகங்கள் தங்கள் வாராந்திர கட்டண திட்டத்தால் வரும் நிதி சிக்கல்களை சமாளிக்க மற்றும் வருவாயை அடிக்கடி பெற உதவி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் சிறிய அளவிலான உணவகங்களுக்கானது மற்றும் ஒரு உணவகத்திற்கு மாதத்திற்கு 100 ஆர்டர்கள் இருந்தால், அது தினசரி கட்டண திட்டத்துக்கு மாற்றப்படும். வாரந்தோறும் அல்லது தினசரியாக மாற்றுவது என்பதை சொமேட்டோ பிசினஸ் பார்ட்னர் ஆப் மூலம் நிறைவேற்றலாம். மாறுவதற்கு கூடுதல் கட்டணங்கள் எதுவும் இல்லை.

    முந்தைய மூன்று நாட்களின் விற்பனையைப் பொறுத்து பரிமாற்றங்கள் தினமும் தீர்க்கப்படும். உணவக உரிமையாளர்கள் தங்கள் செயல்பாடுகளை வளர்த்துக் கொள்ளும்போதும், பிரபலமான நிறுவனங்களைக் கையாளும் போதும் உணவு விநியோகத்தின் போட்டித் துறையில் பல தடைகளை எதிர்கொள்கின்றனர்.

    "செயல்திறன் மூலதனம் மற்றும் நிலையான பணப்புழக்கம் ஆகியவை அவர்களின் வெற்றிக்கான மிக முக்கியமான இரண்டு கூறுகள்" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • பல பெண்களுக்கு டீ சர்ட் அணிவது அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக எங்களிடம் தெரிவித்தனர்
    • சொமேட்டோவின் சுடிதார் சீருடையை அணிந்த பெண்களின் வீடியோவை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ, தனது பெண் ஊழியர்களுக்கு டீ சர்ட்டுக்கு பதிலாக, சுடிதாரை சீருடையாக மாற்றி அமைத்துள்ளது.

    சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பெண்களுக்கு இந்த புதிய சீருடையை சொமேட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

    எங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் பல பெண்களுக்கு டீ சர்ட் அணிவது அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக எங்களிடம் தெரிவித்தனர். ஆதலால் தான் நாங்கள் பெண்களுக்கான சீருடையை மாற்றுள்ளோம் என்று சொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சொமேட்டோவின் சுடிதார் சீருடையை அணிந்த பெண்களின் வீடியோவை அந்நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

    • வீடியோ 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், 1500-க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்துள்ளது.
    • சில பயனர்கள் தங்களது பதிவில், சாலைகளில் செல்லும்போது இதுபோன்ற செயல்கள் ஆபத்தை ஏற்படுத்தும் என பதிவிட்டுள்ளனர்.

    அரசு தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் பலரும் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் படிப்பதை காணமுடியும். அந்த வகையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய நேரத்திலும் ஜோமோட்டோ ஊழியர் ஒருவர் தேர்வுக்கு படிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    'எக்ஸ்' தளத்தில் ஆயுஸ் சங்கி என்ற பயனர் பகிர்ந்த அந்த வீடியோவில், பரபரப்பான சாலையில் போக்குவரத்து நெரிசலில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் நிற்கும் காட்சிகளுடன் தொடங்குகிறது. அப்போது அந்த வாலிபர் தனது செல்போனில் யூனைடெட் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ( யு.பி.எஸ்.சி.) விரிவுரைகளை பார்க்கும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பிறகு, கடினமாக படிக்க உங்களுக்கு வேறு உந்துதல் இருப்பதாக நான் நினைக்கவில்லை என்று ஆயுஸ் சங்கி பதிவிட்டுள்ளார்.

    இந்த வீடியோ 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், 1500-க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்துள்ளது. பயனர்கள் பலரும் ஜோமோட்டோ ஊழியரின் ஆர்வத்தை பாராட்டி பதிவிட்டனர். சிலர், இந்த வீடியோ மிகவும் ஊக்கமளிக்கிறது. இது முன்பை விட கடினமாக உழைக்க வேண்டும் என்ற உந்துதலை தருகிறது என பதிவிட்டுள்ளனர். அதேநேரம் சில பயனர்கள் தங்களது பதிவில், சாலைகளில் செல்லும்போது இதுபோன்ற செயல்கள் ஆபத்தை ஏற்படுத்தும் என பதிவிட்டுள்ளனர்.

    • வீடியோவில், ஜொமோட்டோ ஊழியர் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் பயணம் செய்வதை காண முடிகிறது.
    • உயர் ரக பைக்கில் விலை உயர்ந்த ஹெல்மெட் மற்றும் கையுறைகளை அணிந்து கொண்டு சவாரி செல்கிறார்.

    ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஜொமோட்டோ ஊழியர் ஒருவர் ஹார்லி டேவிட்சன் போன்ற உயர்ரக பைக்கில் சவாரி செய்யும் வீடியோ இணையத்தில் ஆச்சரியத்தை ஆழ்த்தி உள்ளது.

    இன்ஸ்டாகிராமில் அக்ஷய் ஷெட்டிஹர் என்ற பயனர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், ஜொமோட்டோ ஊழியர் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் பயணம் செய்வதை காண முடிகிறது. அவர் உயர் ரக பைக்கில் விலை உயர்ந்த ஹெல்மெட் மற்றும் கையுறைகளை அணிந்து கொண்டு சவாரி செல்கிறார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது. ரூ.2.4 லட்சம் விலை கொண்ட அந்த உயர் ரக பைக்கில் பயணம் செய்த ஊழியர் யார்? என்பது பற்றி பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். சில பயனர்கள், அது ஜொமோட்டோ நிறுவனர் பீபந்தர் கோயலாக இருக்கலாம் எனவும், சில பயனர்கள், அவர் உணவு வினியோக நிறுவனத்தை விளம்பரபடுத்துவதற்காக நியமிக்கப்பட்டவராக இருக்கலாம் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.


    ×