என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drone"

    • இந்த ஃபைட்டர் ஜெட், விமானி இல்லாமல் இயங்கும் தன்மை கொண்டது.
    • இந்த விமானத்தை இயக்க ரன்வே கூட தேவையில்லை

    உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய போர் விமானத்தை அமெரிக்காவின் KRATOS Defense & Security Solutions நிறுவனம் உருவாக்கியுள்ளது

    X-BAT எனப்படும் இந்த ஃபைட்டர் ஜெட், விமானி இல்லாமல் இயங்கும் தன்மை கொண்டது.

    இந்த விமானத்தை இயக்க ரன்வே கூட தேவையில்லை, நிலத்திலிருந்து நேரடியாக புறப்படும் என கூறப்படுகிறது.

    • தோனி, தனிப்பட்ட முறையில் பயிற்சியை மேற்கொண்டு பைலட்டாக சான்றிதழ் பெற்றது எங்களுக்கு ஒரு மகத்தான மைல்கல்.
    • அவர் மிகுந்த கவனம் செலுத்தி மிக விரைவாக அதைக் கற்றுக்கொண்டார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிகாரப்பூர்வமாக டிரோன் பைலட் உரிமம் பெற்று அசத்தியுள்ளார். தோனி தனது சமூக வலைதள பதிவில் இதை அறிவித்துள்ளார்.

    சென்னையிலுள்ள, கருடா ஏரோஸ்பேஸ் என்ற  சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் (DGCA) அங்கீகரிக்கப்பட்ட  ரிமோட் பைலட் பயிற்சி நிறுவனத்தில் தோனி பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

    அவர் இந்த நிறுவனத்தில் முதலீட்டாளர் மற்றும் பிராண்ட் அம்பாசிடரும் ஆவார்.

    கருடா ஏரோஸ்பேஸ், உற்பத்தி மற்றும் பயிற்சி ஆகிய இரண்டிற்குமே DGCA சான்றிதழ்களைப் பெற்ற இந்தியாவின் முதல் டிரோன் ஸ்டார்ட்அப் ஆகும்.

    தோனி பயிற்சி மேற்கொண்டது குறித்து கருடா ஏரோஸ்பேஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அக்னிஸ்வர் ஜெயப்பிரகாஷ் கூறுகையில், "எங்கள் பிராண்ட் அம்பாசிடரும் முதலீட்டாளருமான எம்.எஸ். தோனி, தனிப்பட்ட முறையில் பயிற்சியை மேற்கொண்டு பைலட்டாக சான்றிதழ் பெற்றது எங்களுக்கு ஒரு மகத்தான மைல்கல்.

    அவர் மிகுந்த கவனம் செலுத்தி மிக விரைவாக அதைக் கற்றுக்கொண்டார். டிரோன் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் எங்கள் நோக்கத்தில் அவர் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை, எங்கள் முழு அணிக்கும் ஒரு பெரிய ஊக்கமளிக்கிறது. தோனி பாய் ஒரு உத்வேகம்" என்று தெரிவித்தார். 

    • ரோந்து மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
    • இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைகளில் மீண்டும் ஒரு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) அருகே 6 பாகிஸ்தானிய டிரோன்கள் நடமாட்டத்தை அடுத்து ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

    அதிகாரப்பூர்வ வட்டாரங்களின்படி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு ரஜோரி மாவட்டத்தின் சுந்தர்பானி, கனுயன் மற்றும் பால்ஜரோய் பகுதிகளில் இந்த டிரோன்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டது.

    பாகிஸ்தானில் இருந்து வந்த இந்த டிரோன்கள், கட்டுப்பாட்டுக் கோடு அருகே சிறிது நேரம் காற்றில் வட்டமிட்டு பின்னர் பாகிஸ்தானுக்குத் திரும்பியதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தால் எச்சரிக்கப்பட்ட இந்திய ராணுவமும் எல்லைப் பாதுகாப்புப் படையும் (பிஎஸ்எஃப்) எல்லையில் ரோந்து மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

    கடந்த காலங்களில் பாகிஸ்தானில் இருந்து இதேபோன்ற டிரோன் ஊடுருவல் சம்பவங்கள் நடந்துள்ளன.

    எல்லையில் இந்திய ராணுவ தளங்களின் இருப்பிடம் குறித்த தகவல்களைப் பெற பாகிஸ்தான் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

    இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைகளில் மீண்டும் ஒரு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    • இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்தப்படுகிறது.
    • இதை கண்காணிக்க டிரோன் எதிர்ப்பு சிஸ்டத்தை பஞ்சாப் அரசு தொடங்கியுள்ளது.

    இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் 553 கி.மீ. தூரம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது. இந்த எல்லை வழியாக ஆயுதங்கள், போதைப்பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக டிரோன் மூலம் போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறது.

    பாகிஸ்தானில் இருந்து பறக்கவிடப்படும் டிரோன், இந்திய எல்லைக்குள் போதைப்பொருட்களை போட்டுவிடும். அதை ஏஜென்ட்கள் எடுத்து மற்ற இடத்திற்கு கடத்துவது வழக்கமாகி வருகிறது.

    இதை தடுக்க பஞ்சாப் மாநில அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் டிரோன் எதிர்ப்பு சிஸ்டத்தை (Baaz Akh) பஞ்சாப் அரசு தொடங்கியுள்ளது.

    எல்லை பாதுகாப்பு படையு ஒத்துழைப்புடன் இந்த சிஸ்டம் செயல்படும். பாகிஸ்தான் எல்லையில் இருந்து டிரோன்கள் பறந்து வந்தாலு, இந்த சிஸ்டம் அவற்றை தாக்கி அழிக்கும்.

    இந்த சிஸ்டத்தை பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் சிங் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    • அமிர்தசரஸில் உள்ள மோதே எல்லையில் 5 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
    • ஒரு கிலோ ஹெராயின் போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தானைச் சேர்ந்த 6 டிரோன்களை இடைமறித்து எல்லை பாதுகாப்புப்படையினர் சுட்டு வீழ்த்தினர். அமிர்தசரஸில் உள்ள மோதே கிராமத்தில் ஐந்து டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

    அட்டாரி கிராமத்தில் ஒரு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. அத்துடன் துப்பாக்கிகள், குண்டுகளை நிரப்பும் மூன்று மெகஜின்ஸ் (magazines), 1.070 கி.கி. ஹெராயின் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

    • உக்ரைன் - ரஷியா இடையே அமைத்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
    • ரஷியா நடத்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் 3 வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் எல்லையில் உள்ள சுமி பிராந்தியத்தின் அருகே உள்ள குர்ஸ்க் பகுதியில் சண்டை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், உக்ரைன் மீது இதுவரை இல்லாத அளவிற்கு, 550 ட்ரோன்கள், 11 ஏவுகணைகள் பயன்படுத்தி ரஷியா ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

    கீவ், சுமி, கார்கிவ், நிப்ரோபெட்ரோவ்ஸ்க், செர்னிகிவப் ஆகிய நகரங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

    • 440 டிரோன்கள் மற்றும் 32 ஏவுகணைகள் மூலம் தாக்குதல்.
    • கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் மிகவும் மோசமானதாக பார்க்கப்படுகிறது.

    உக்ரைன் தலைநகர் கீவ் மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ரஷியா சரமாரி தாக்குதல் நடத்தியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 116 பேர் காயம் அடைந்துள்ளனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ரஷியா மீது உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

    கீவ் நகர் மீது இரவு முழுவதும் நடத்தப்பட்ட தாக்குதலில் 9 மாடி கட்டிடம், 25-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் சேதம் அடைந்ததாக கீவ் நகர ராணுவ நிர்வாகத்தின் தலைவர் தெரிவித்து்ளளார். கீவ் மீது கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

    ரஷியா- உக்ரைன் இடையிலான போர் 3 வருடங்களை தாண்டி நடைபெற்று வருகிறது. இரண்டு முறை ரஷியாவும் உக்ரைனும் நேருக்குநேர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.

    கீவ் நகரை தவிர்த்து தெற்கு துறைமுக நகரான ஒடேசா மீதும் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழக்க, 17 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    கீவ் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், மிகவும் மோசமான தாக்குதலில் ஒன்று என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    ரஷியா 440 டிரோன்கள் மற்றும் 32 ஏவுகணைகள் மூலம் இரவு முழுவதும் தாக்குதல் நடத்தியுள்ளது.

    • கொல்கத்தாவில் முக்கிய இடங்களில் மீது 8 முதல் 10 டிரோன் போன்ற மர்ம பொருள் பறந்ததால் பரபரப்பு.
    • உளவு பார்க்க அனுப்பப்பட்டதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள முக்கியமான இடங்களில் 8 முதல் 10 டிரோன் போன்ற மர்ம பொருள் பறந்ததால், உளவு பார்ப்பதற்கான அனுப்பப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.

    தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் மகேஷ்தலாவில் இருந்து டிரோன் போன்ற மர்மப் பொருட்கள் பறந்து வந்ததாக கூறப்படுகிறது. வித்யாசாகர் கடலில் உள்ள 2-ஆவது ஹூக்ளி பாலம், ராணுவத்தின் கிழக்கு கமாண்ட் தலைமையகம், ஹேஸ்டிங்ஸ் போன்ற இடங்களில் இந்த மர்மபொருள் பறந்துள்ளது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. உளவு பார்க்க அனுப்பப்பட்டதா? உள்ளிட்ட அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இது தொடர்பாக மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியபோது, இந்தியாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் உள்ளிட்ட பலர் பாகிஸ்தானுக்காக உளவு பணியில ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • எல்லையோர மாநில பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த வாய்ப்பு.
    • குஜராத், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுளளது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் பாகிஸ்தான் எல்லையில் உள்ள மாநிலங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இன்று பிரதமர் மோடி பாகிஸ்தான் எல்லையில் உள்ள மாநில முதல்வர்களை போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    குஜராத் பாகிஸ்தான் எல்லையில் உள்ள மாநிலங்களில் ஒன்று. இதனால் இந்த மாநிலத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று இங்குள்ள நகரங்களிலும் மின்சாரம் (BlackOut) அணைக்கப்பட்டது.

    இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் எந்தவொரு நிகழ்ச்சியின்போதும் பட்டாசு வெடிக்கவும், டிரோன்கள் பறக்க விடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவுக்கு ஒத்துழைப்பு வழங்கி, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார்.

    • காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
    • மனிதாபிமான உதவிப்பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதித்துள்ளது.

    2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேல் நாட்டு எல்லைக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் அங்குள்ள மக்களை கண்மூடித்தனமாக சுட்டுக்கொலை செய்தனர். மேலும் 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதனால் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. பின்னர் நவம்பர் மாதம் இறுதியில் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. டிசம்பர் மாதம் தொடக்கத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியது. சுமார் 13 மாதமாக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது.

    கடந்த ஜனவரி 20ஆம் தேதி டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இருந்த நிலையில் 19ஆம் தேதி இஸ்ரேல்- ஹமாஸ் இடையே 7 வார போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது பிணைக்கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர். அத்துடன் மனிதாபிமான உதவிப்பொருட்கள் காசாவிற்கு எடுத்துச்செல்ல இஸ்ரேல் அனுமதி அளித்தது.

    ஏழு வார போர் நிறுத்தம் நிறைவடைந்ததும் மேற்கொண்டு போர் நிறுத்தம் நீட்டிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதனால் இஸ்ரேல் மீண்டும் காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. தங்களது பாதுகாப்பு வளையத்தை விரிவுப்படுத்த உறுதி பூண்டுள்ளோம் எனத் தெரிவித்தது. மேலும் காசா மக்களுக்கு உதவிப்பொருட்கள் செல்லும் அனைத்து பாதைகளையும் அடைத்தது. மேலும் உதவிப்பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதித்தது. இதனால் காசா மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர்.

    இந்த நிலையில் காசாவுக்கு உதவிப்பொருட்கள் ஏற்றிச்சென்ற கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக மால்டா அரசு தெரிவித்துள்ளது. மால்டா அருகே தாக்குதல் நடத்தப்பட்ட அந்த கப்பலில் 12 ஊழியர்கள் மற்றும் நான்கு பொதுமக்கள் இருந்தனர். அவர்கள் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை என மால்டா அரசு தெரிவித்துள்ளது. ஆனால் கப்பல் செல்ல முடியாமல் அதே இடத்தில் நிற்பதாகவும், மூழ்குவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த 2010-ஆம் ஆண்டு இதேபோன்று காசாவுக்கு உதவிப் பொருட்கள் கொண்டு சென்ற துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக இஸ்ரேல்- துருக்கி இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மதுரை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
    • ஆளில்லா விமானங்கள் பறக்க விடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுரை:

    மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலம் திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடி வருகிற 6-ந்தேதி வருகிறார். அன்றைய தினம் அவர் மதுரைக்கு வான்வழியாக வருகை தருகிறார். மதுரை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

    பிரதமர் வருகையையொட்டி மதுரை விமான நிலையம், அதனை சுற்றியுள்ள பகுதிகள் உள்பட மதுரை மாவட்ட பகுதிகளில் 6-ந்தேதி டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.

    இந்த தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா விமானங்கள் பறக்க விடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாகிஸ்தான் பயங்கரவாதிகள் டிரோன் மூலம் ஆயுதங்களை இந்தியாவுக்குள் அனுப்புவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
    • டிரோனில் பயங்கர ஆயுதங்கள் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

    பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி பெறும் பயங்கரவாதிகள் காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ இயலாதபடி எல்லையில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் டிரோன் மூலம் ஆயுதங்களையும், போதை பொருட்களையும் இந்தியாவுக்குள் அனுப்புவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    எல்லையில் அத்துமீறி நுழையும் டிரோன்களை கண்காணிக்க ராணுவ வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரம் மட்டும் ஊடுருவ முயன்ற 3 பாகிஸ்தான் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

    இந்த நிலையில் நேற்று இரவு பஞ்சாப் மாநில எல்லையில் பாகிஸ்தானில் இருந்து டிரோன் ஒன்று ஊடுருவியது. இதை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கண்டுபிடித்து உஷாரானார்கள்.

    அந்த டிரோனை நோக்கி சரமாரியாக சுட்டனர். அந்த டிரோன் பாகிஸ்தானுக்குள் திரும்பி செல்ல முயன்றது. என்றாலும் இந்திய ராணுவ வீரர்கள் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினார்கள்.

    அமிர்தசரஸ் அருகே ராஜாதல் என்ற இடத்தில் அந்த டிரோன் நொறுங்கி கிடந்தது. அந்த டிரோனில் பயங்கர ஆயுதங்கள் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

    ×