search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fighter"

    • சித்தார்த் ஆனந்த் மற்றும் ஹிருத்திக் ரோஷன் இணைந்துள்ள திரைப்படம் 'ஃபைட்டர்'.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'பேங் பேங்', 'வார்' படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சித்தார்த் ஆனந்த் மற்றும் ஹிருத்திக் ரோஷன் இணைந்துள்ள திரைப்படம் 'ஃபைட்டர்'. இந்த படத்தில் ஷாம்ஷெர் பத்தானியா என்கிற கதாபாத்திரத்தில் இந்திய விமானப்படையின் சிறப்பு பணி குழுவின் படைத்தலைவராக ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் தீபிகா படுகோன், அனில் கபூர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இப்படம் நாளை (ஜனவரி 25) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வான்வழியில் ஆக்ஷன், திரில்லர் காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள 'ஃபைட்டர்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வளைகுடா நாடுகளில் 'ஃபைட்டர்' திரைப்படம் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைக்கான காரணம் இது வரை வெளியிடப்படவில்லை. ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்சில் மட்டும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


    இதைதொடர்ந்து இயக்குனர் சித்தார்த் கூறியதாவது:-

    'ஃபைட்டர்' லட்சியம் கொண்ட படம். 2024-ம் ஆண்டு மீண்டும் அதே பதட்டத்துடன் தொடங்குகிறது. பதான் மீது பொழிந்த அதே அன்பை ஃபைட்டருக்கும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

    • சித்தார்த் ஆனந்த் மற்றும் ஹிருத்திக் ரோஷன் இணைந்துள்ள திரைப்படம் 'ஃபைட்டர்’.
    • இப்படம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'பேங் பேங்', 'வார்' படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சித்தார்த் ஆனந்த் மற்றும் ஹிருத்திக் ரோஷன் இணைந்துள்ள திரைப்படம் 'ஃபைட்டர்'. இந்த படத்தில் ஷாம்ஷெர் பத்தானியா என்கிற கதாபாத்திரத்தில் இந்திய விமானப்படையின் சிறப்பு பணி குழுவின் படைத்தலைவராக ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் தீபிகா படுகோன், அனில் கபூர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இந்நிலையில், 'ஃபைட்டர்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்திய விமானப் படையை பிரதிநிதித்துவப்படுத்தும் சீருடையில் மிருதுவாக தெரியும் ஹிருத்திக் ரோஷன் போர் விமானங்களை பறக்க விட்டு சாகச செயல்களில் ஈடுபடும்போது பார்வையாளர்கள் மூச்சடைத்துப் போவார்கள் என்பது நிச்சயம். 'ஃபைட்டர்'படத்தின் டிரைலர் 2019-ல் புல்வாமா தாக்குதலின் பின்னணியை கதாபாத்திரத்தின் மூலம் காட்டுகிறது. இந்திய விமான படையின் தாக்குதலின் ஒரு பார்வையையும், அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட கடினமான நடவடிக்கைகளையும் வெளிப்படுத்துகிறது.


    'ஃபைட்டர்' திரைப்படம் இந்தியாவின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படம் ஹிருத்திக் ரோஷனின் முதல் 3டி படமாகும். அத்துடன் இது 3d imax வடிவத்திலும் வெளியாக உள்ளது.



    • சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஃபைட்டர் படம் உருவாகி இருக்கிறது.
    • ஃபைட்டர் படத்தில் போர் விமானியாக ஹிரித்திக் நடித்துள்ளார்.

    இந்தியாவின் நடன சூப்பர் ஸ்டார் என்று பலராலும் அழைக்கப்படுபவர் ஹிரித்திக் ரோஷன். இவர் நடிப்பில் தற்போது ஃபைட்டர் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் 'ஷேர் குல் கயே' என்ற பாடலை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் முழுக்க ஹிரித்திக் ரோஷனின் நடன அசைவுகள் இடம்பெற்று இருப்பதால் அதிவேகமாக வைரல் ஆகி வருகிறது.

    நடன அசைவுகளில் தனக்கு நிகர் இல்லை என்ற அளவுக்கு ஆடும் திறன் கொண்ட ஹிரித்திக் ரோஷன், 'ஷேர் குல் கயே' பாடலிலும் தனக்கே உரிய பாணியில் நடனத்தை மிரட்டியுள்ளார். ஹிரித்திக் திரையுலகில் 'கஹோ நா ப்யார் ஹே' 'கபி குஷி கபீ கம்', 'தூம் 2' போன்ற படங்களில் ஆடியதை யாரும் இன்றளவும் மறக்க முடியாத வகையில் உள்ளது. இந்த வரிசையில் ஃபைட்டர் படமும் இணைந்து இருக்கிறது.

     


    சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஃபைட்டர் படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் போர் விமானியாக ஹிரித்திக் நடித்துள்ளார். இவரது கதாபாத்திரத்திற்கு ஷாம் ஷெர் பதனியா என்கிற பேட்டி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஹிரித்திக் ரோஷனுடன் தீபிகா படுகோனே மற்றும் அனில் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.

    ஃபைட்டர் படத்தின் டீசர்- அதிரடி ஆக்ஷன் மூலம் ஏற்கனவே படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரிசையில் 'ஷேர் குல் கயே' பாடலில் ஹிரித்திக் நடனத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி ஃபைட்டர் படத்தை வெளியிடும் பணிகளில் படக்குழு இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது.



    • தனது காரில் வந்த தீபிகா படுகோனே திடீரென காரில் இருந்து இறங்கினார்.
    • தீபிகா படுகோனே நடை பாதையில் செல்வதை கண்ட பக்தர்கள் ஆரவாரம் செய்தனர்.

    இந்தி நடிகை தீபிகா படுகோனே பிரபல இந்தி நடிகர் ரித்திக் ரோஷனுடன் நடித்த பைட்டர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

    இந்த நிலையில் தீபிகா படுகோனே தனது தங்கை அனுஷா படுகோனவுடன் நேற்று திருப்பதிக்கு வந்தார். அலிபிரி நடைபாதை அருகே தனது காரில் வந்த தீபிகா படுகோனே திடீரென காரில் இருந்து இறங்கினார். பின்னர் தனது தங்கையுடன் நடைபாதையில் நடந்து சென்றார். தீபிகா படுகோனே நடை பாதையில் செல்வதை கண்ட பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


    இதையடுத்து போலீசார் மற்றும் விஜிலென்ஸ் போலீசார் தீபிகா படுகோனேவை பலத்த பாதுகாப்புடன் திருப்பதி மலைக்கு அழைத்து வந்தனர். மலைப்பாதையில் உள்ள கோவில்களில் கற்பூரம் ஏற்றி தரிசனம் செய்தார். 3 மணி நேரம் நடந்து திருப்பதி மலையை அடைந்தார். அவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். நேற்று இரவு திருப்பதி மலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார்.


    இன்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் தீபிகா படுகோனே அவரது தங்கை அனிஷா படுகோனே ஆகியோர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். திருப்பதியில் நேற்று 56,049 பேர் தரிசனம் செய்தனர். 26,748 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.97 உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • தைவானை மீண்டும் தன்னுடன் இணைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது.
    • சீனா தைவான் நாட்டு எல்லைக்கு போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்களை அனுப்பி மிரட்டலும் விடுத்து வருகிறது,

    சீனாவுக்கும், தைவானுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. 2-ம் உலக போரின் போது சீனாவில் இருந்து தைவான் தனியாக பிரிந்து ஆட்சி அமைத்தது. ஆனால் தைவானை மீண்டும் தன்னுடன் இணைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது.

    மற்ற நாடுகளுடன் தைவான் வைத்திருக்கும் நட்புறவையும் சீனா கண்டித்து வருகிறது.

    மேலும் தைவானை சுற்றி தனது ராணுவத்தினரை குவித்து சீனா போர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இதனால் தைவான் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அவ்வப்போது சீனா தைவான் நாட்டு எல்லைக்கு போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்களை அனுப்பி மிரட்டலும் விடுத்து வருகிறது,

    இந்நிலையில் நேற்று சீனாவின் ஜே-10, ஜே-11, ஜே-16 உள்ளிட்ட ரக விமானங்கள் மற்றும் குண்டு வீசும் விமானங்கள் உள்பட 24 போர் விமானங்கள் தைவான் எல்லைக்குள் அத்து மீறி பறந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. சீன விமானங்களை தைவான் தனது போர் கப்பல்கள் மற்றும் நிலத்தில் இருந்து ஏவக்கூடிய ஏவுகணைகள் மூலம் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    ×