ஹிரித்திக் ரோஷனின் ஷேர் குல் கயே பாடல் வெளியானது

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஃபைட்டர் படம் உருவாகி இருக்கிறது.ஃபைட்டர் படத்தில் போர் விமானியாக ஹிரித்திக் நடித்துள்ளார்.
ஹிரித்திக் ரோஷனின் ஷேர் குல் கயே பாடல் வெளியானது
Published on

இந்தியாவின் நடன சூப்பர் ஸ்டார் என்று பலராலும் அழைக்கப்படுபவர் ஹிரித்திக் ரோஷன். இவர் நடிப்பில் தற்போது ஃபைட்டர் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் 'ஷேர் குல் கயே' என்ற பாடலை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் முழுக்க ஹிரித்திக் ரோஷனின் நடன அசைவுகள் இடம்பெற்று இருப்பதால் அதிவேகமாக வைரல் ஆகி வருகிறது.

நடன அசைவுகளில் தனக்கு நிகர் இல்லை என்ற அளவுக்கு ஆடும் திறன் கொண்ட ஹிரித்திக் ரோஷன், 'ஷேர் குல் கயே' பாடலிலும் தனக்கே உரிய பாணியில் நடனத்தை மிரட்டியுள்ளார். ஹிரித்திக் திரையுலகில் 'கஹோ நா ப்யார் ஹே' 'கபி குஷி கபீ கம்', 'தூம் 2' போன்ற படங்களில் ஆடியதை யாரும் இன்றளவும் மறக்க முடியாத வகையில் உள்ளது. இந்த வரிசையில் ஃபைட்டர் படமும் இணைந்து இருக்கிறது.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஃபைட்டர் படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் போர் விமானியாக ஹிரித்திக் நடித்துள்ளார். இவரது கதாபாத்திரத்திற்கு ஷாம் ஷெர் பதனியா என்கிற பேட்டி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஹிரித்திக் ரோஷனுடன் தீபிகா படுகோனே மற்றும் அனில் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஃபைட்டர் படத்தின் டீசர்- அதிரடி ஆக்ஷன் மூலம் ஏற்கனவே படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரிசையில் 'ஷேர் குல் கயே' பாடலில் ஹிரித்திக் நடனத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி ஃபைட்டர் படத்தை வெளியிடும் பணிகளில் படக்குழு இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com