என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமந்தா"

    • இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.
    • படம் மே 15 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது

    சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'மா இன்டி பங்காரம்' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்டநாட்களுக்கு பின் சமந்தா தெலுங்கில் நடித்துள்ளப் படம் மா இன்டி பங்காரம்.'ஓ பேபி' இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்க, சமந்தாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

    இயக்குநரும், சமந்தாவின் கணவருமான ராஜ் நிடிமொரு இப்படத்திற்கு கதை எழுதியுள்ள நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் குல்ஷன் தேவையா, திகந்த், கௌதமி மற்றும் ஸ்ரீமுகி போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

     இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றநிலையில் கோடை விடுமுறையில், மே.15ஆம் தேதி படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

    • தற்போது யாஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
    • இந்திய அளவில் பிரபலமான அனுஷ்கா சொத்து மதிப்பு ரூ.135 கோடியை தாண்டியுள்ளது.

    திரை உலகில் ஹீரோக்கள் மட்டுமே அதிக சம்பளம் வாங்கி வந்தனர். சமீபகாலமாக ஹீரோயின்களின் சம்பளமும் அதிகரிக்க தொடங்கி வருகிறது. கதாநாயகர்களை போல கதாநாயகிகளின் சம்பளமும் கோடிகளை தாண்டி உள்ளது.

    சினிமா மட்டுமின்றி விளம்பரங்கள் மற்றும் சொந்தமான தொழிலில் ஈடுபடுவது மூலம் கதாநாயகிகளின் வருமானம் உச்சத்தை அடைந்து வருகிறது.

    இந்நிலையில் 2026-ம் ஆண்டு தென்னிந்திய திரை உலகில் டாப் 10 கதாநாயகிகளின் பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    நயன்தாரா: தென்னிந்திய திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் நயன்தாரா சினிமா நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, விளம்பர படங்கள், சொந்தமாக அழகு சாதன பொருட்கள் விற்பனை போன்றவை செய்து வருகிறார்.

    தற்போது யாஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது சொத்து மதிப்பு ரூ.200 கோடி என தகவல் வெளியாகி இருக்கிறது.

    அனுஷ்கா: பாகுபலி, அருந்ததி போன்ற படங்கள் மூலம் இந்திய அளவில் பிரபலமான அனுஷ்கா சொத்து மதிப்பு ரூ.135 கோடியை தாண்டியுள்ளது.

    தமன்னா: தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடிப்பது, தனி பாடலுக்கு நடனம் ஆடுவது என திரை உலக ரசிகர்களை கவர்ந்து வரும் தமன்னா சொத்து மதிப்பு ரூ.110 முதல் ரூ.120 கோடி என கூறப்பட்டுள்ளது.

    சமந்தா: ரூ.110 முதல் ரூ.120 கோடி, திரிஷா-ரூ.85 முதல் ரூ.100 கோடி, காஜல் அகர்வால்-சுமார் ரூ.85 கோடி, ராஷ்மிகா மந்தனா-ரூ.66 கோடி, பூஜா ஹெக்டே-ரூ.50 கோடி, சாய்பல்லவி-ரூ.47 கோடி, சுருதிஹாசன்-ரூ.45 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • ராஜ் நிடிமோரு இயக்கத்தில் ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்து இப்படத்தை தயாரித்துள்ளார் சமந்தா.
    • டீசரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்த சமந்தா, பல்வேறு பிரச்சனைகளால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் கடந்து தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளார்.

    தெலுங்கில் சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள படம் 'மா இண்டி பங்காரம்'. தி 'ஃபேமிலி மேன் 2' வெப் தொடரின் இயக்குநரிகள் ஒருவரான ராஜ் நிடிமோரு இயக்கத்தில் ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்து இப்படத்தை தயாரித்துள்ளார் சமந்தா.

     

    இந்த நிலையில், 'மா இண்டி பங்காரம்' படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. டீசரில் புதிதாக திருமணமான ஒரு பெண் தன் கணவரின் ஊருக்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்திப்பது, அவள் ஒரு வழக்கமான மருமகள் போல் இல்லாமல் அதிரடி ஆக்ஷனில் சமந்தா நடித்துள்ளார். இந்த டீசரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். 



    • 3 ஆண்டுகள் கழித்து வெளிவரும் அவரது படத்தின் அறிவிப்பு ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.
    • ‘சுபம்' என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் தலைகாட்டியிருந்தார்.

    தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்த சமந்தா, பல்வேறு பிரச்சனைகளால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் கடந்து தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். பட தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். கடந்த மாதம் இயக்குனர் ராஜ் நிடிமொருவை, கோவையில் ரகசிய திருமணம் செய்துகொண்டார் சமந்தா. அதன்பிறகு தேனிலவு கொண்டாட்டங்கள் முடிந்தநிலையில் மீண்டும் படப்பிடிப்பில் பிசியாகி இருக்கிறார்.

    இதற்கிடையில் ரசிகர்களுக்கு அவர் குட் நியூஸ் கொடுத்துள்ளார். அதாவது அவரது நடிப்பில் உருவாகியுள்ள 'மா இண்டி பங்காரம்' என்ற தெலுங்கு படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாக போகிறது என்பது தானாம் அது. 3 ஆண்டுகள் கழித்து வெளிவரும் அவரது படத்தின் அறிவிப்பு ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது. அதேவேளை பலரும் 'நாங்க வேற குட் நியூஸ் எதிர்பார்த்தோமே...' என்றும் சமூக வலைத்தளங்களில் 'கமெண்ட்' அடித்து வருகிறார்கள்.

     

    சமந்தா கடைசியாக 'குஷி' (2023) என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் 'சுபம்' என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் தலைகாட்டியிருந்தார்.

    • நடிகை சமந்தாவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ரசிகர் கூட்டம் அவரை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • அண்மையில் நடிகை நிதி அகர்வாலுக்கும் இதே போன்ற சம்பவம் நடந்தது

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடை திறப்பு விழாவின்போது நடிகை சமந்தாவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள பெரும் ரசிகர் கூட்டம் அவரை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    நடிகை சமந்தா கூட்ட நெரிசலில் இருந்து தப்பித்து வேகமாக தனது காருக்குள் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. நிதி அகர்வாலை தொடர்ந்து சமந்தாவும் சிகர்கள் கூட்டத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அண்மையில் ராஜாசாப் படத்தில் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள பிரபலமான மாலில் நடைபெற்றது. அதில் நடிகை நிதி அகர்வால் கலந்துகொண்டார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு நடிகை அங்கிருந்து வெளியே வரும்போது ரசிகர்கள் சூழ்ந்துவிட்டனர். சிலர் அவரிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி திணறிய நடிகை நிதி அகர்வால் பின்பு காரில் ஏறி புறப்பட்டு சென்றுவிட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலானது.

    இதனையடுத்து ரசிகர்களின் கட்டுப்பாடற்ற தன்மை மற்றும் சமூக பொறுப்பின்மை குறித்து கவலைகள் எழுப்புவதாக இணையத்தில் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

    • நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தார் சமந்தா
    • சோபிதா துலிபாலவை, நாகசைதன்யா 2-வது திருமணம் செய்தார்.

    தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்த சமந்தா, தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலவை, நாகசைதன்யா 2-வது திருமணம் செய்தார்.

    இந்த நிலையில் சமந்தாவுக்கும், தி பேமிலி மேன் 2 இயக்குநர் ராஜ் நிடிமொருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியானது.

    தி பேமிலி மேன் 2' மற்றும் 'சிட்டாடெல்: ஹனி பன்னி திரைப்படதில் நடித்த சமந்தா அந்த சமயத்தில் அந்த படங்களின் இயக்குநரான ராஜ் நிடிமொருவுடன் காதல் வயப்பட்டதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், நடிகை சமந்தாவும் இயக்குநர் ராஜ் நிடிமொருவும் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    • இப்படத்தில் சூர்யாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
    • சமந்தாவிற்கு திருப்புமுனையாக அமைந்த படம்.

    நடிகர் சூர்யாவின் 'அஞ்சான்' படத்தின் மறுவெளியீட்டு டிரெய்லர் வெளியானது.  லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் அஞ்சான். இதில் வித்யூத், சமந்தா, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் கலக்கியது. இப்படத்தில் சூர்யாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இப்படம் சமந்தாவிற்கு நல்ல திருப்புமுனையாகவும் அமைந்தது. 

    அஞ்சான் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நவ.28ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இதனையொட்டி படத்தின் ரீ-எடிட் செய்யப்பட்ட புதிய டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.  


    • யுவன் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
    • சூர்யாவின் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் உள்ளனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளியான படம் 'அஞ்சான்'. இப்படத்தில் சமந்தா, வித்யுத் ஜம்வால், சூரி, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலரும் நடித்து உள்ளனர். யுவன் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இப்படத்தில் வரும் வசனங்கள் தற்போதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

    இந்த நிலையில், 'அஞ்சான்' படம் வருகிற 28-ந்தேதி முதல் திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது. தற்போது ரீ எடிட் செய்து தயாராகி உள்ள 'அஞ்சான்' படத்தின் ப்ரிவ்யூ ஷோ நடந்தது. இந்த ப்ரிவ்யூ ஷோவில் சூர்யாவின் தந்தையும், நடிகருமான சிவகுமார் கலந்து கொண்டார். அவருடன் இயக்குநர் சரணும் ரீ எடிட் செய்த படத்தை பார்த்துள்ளார்.

    இதையடுத்து இயக்குநர் லிங்குசாமியை இருவரும் பாராட்டியுள்ளார். இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் உள்ளனர். 



    • சோபிதா துலிபாலவை, நாகசைதன்யா 2-வது திருமணம் செய்தார்.
    • சமந்தா தனது புதிய வாசனை திரவிய பிராண்டான சீக்ரெட் அல்கெமிஸ்ட்டை வெளியிட்டார்.

    தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்த சமந்தா, தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலவை, நாகசைதன்யா 2-வது திருமணம் செய்தார்.

    இந்த நிலையில் சமந்தாவுக்கும், தி பேமிலி மேன் 2 இயக்குநர் ராஜ் நிடிமொருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

    தி பேமிலி மேன் 2' மற்றும் 'சிட்டாடெல்: ஹனி பன்னி திரைப்படதில் நடித்த சமந்தா அந்த சமயத்தில் அந்த படங்களின் இயக்குநரான ராஜ் நிடிமொருவுடன் காதல் வயப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், சமந்தா தனது புதிய வாசனை திரவிய பிராண்டான 'சீக்ரெட் அல்கெமிஸ்ட்' வெளியீட்டு விழாவின் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    அதில், ராஜ் நிடிமொருவுடன் அவர் மிகவும் நெருக்கமாக, இருக்கும் புகைப்படத்தை சமந்தா பகிர்ந்துள்ளார்.

    இதன்மூலம் இயக்குநர் ராஜ் நிடிமொரு உடனான காதலை, நடிகை சமந்தா கிட்டத்திட்ட உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது. 

    • தி ஃபேமிலி மேன்' வெப் தொடர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
    • தி பேமிலி மேன் 2 தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ஆக்ஷன் இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர் தொடர்களை விரும்பிப் பார்க்கக் கூடியவர்கள் இடையே தி ஃபேமிலி மேன்' வெப் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.

    சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி வெளியான 'தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் ஈழத்தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ்நாட்டில் கண்டனக் குரல்கள் எழுந்தது.

    இந்நிலையில், தி பேமிலி மேன் வெப் தொடரின் 3 ஆம் பாகம் உருவாகியுள்ளது. இந்த தொடரில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த சீசனை ராஜ் & டிகே உடன் இணைந்து சுமன்குமார் மற்றும் துஷார் இயக்கியுள்ளனர்

    தி பேமிலி மேன் வெப் தொடரின் 3 ஆம் பாகம் நவம்பர் 21 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், 'தி ஃபேமிலி மேன்' வெப் தொடரின் சீசன் - 3 டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

    • இந்த தொடரில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
    • இந்த சீசனை ராஜ் & டிகே உடன் இணைந்து சுமன்குமார் மற்றும் துஷார் இயக்கியுள்ளனர்

    சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி வெளியான 'தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் ஈழத்தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ்நாட்டில் கண்டனக் குரல்கள் எழுந்தது.

    இந்நிலையில், தி பேமிலி மேன் வெப் தொடரின் 3 ஆம் பாகம் உருவாகியுள்ளது. இந்த தொடரில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த சீசனை ராஜ் & டிகே உடன் இணைந்து சுமன்குமார் மற்றும் துஷார் இயக்கியுள்ளனர்

    தி பேமிலி மேன் வெப் தொடரின் 3 ஆம் பாகம் நவம்பர் 21 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • இதற்கிடையே இந்தியா கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவி வருகிறது.
    • நாளை மறுநாள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகும்.

    பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது.

    ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி - காங்கிரஸ் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

    என்டிஏ கூட்டணி ஏற்கனேவே 3 வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே இந்தியா கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவி வருகிறது.

    இந்த சூழலில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி(ஜேஎம்எம்) கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

    அதன்படி பீகாரில் ஜேஎம்எம் ஆறு இடங்களில் தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜே.எம்.எம் பொதுச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான சுப்ரியோ பட்டாச்சார்யா, பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட கட்சி முடிவு செய்துள்ளது. சக்காய், தம்தாஹா, கடோரியா , மணிஹரி, ஜமுய் மற்றும் பிர்பைந்தி ஆகிய ஆகிய ஆறு இடங்களில் நாங்கள் வேட்பாளர்களை நிறுத்துவோம்" என்று தெரிவித்தார்.

    பீகாரில் சில இடங்களில் போட்டியிட ஆர்வமாக இருப்பதாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவிடம் ஜே.எம்.எம் தெரிவித்திருந்தது. ஆனால் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்த சூழ்நிலையில், கூட்டணியை விட்டு வெளியேறி தனியாகப் போட்டியிட கட்சி முடிவு செய்தது.

    நாளை மறுநாள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி என்றிருக்கும் சூழலில் இந்தியா கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது.  

    ×