என் மலர்

    நீங்கள் தேடியது "Lingusamy"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பையா'.
    • இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்பட்டது.

    லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா ஆகியோர் நடித்து 2010-ல் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற பையா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது. பையா 2-ம் பாகத்தில் கார்த்தி நடிக்கவில்லை பதிலாக ஆர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர் என்றும் இதில் கதாநாயகியாக நடிக்க மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரிடம் பேசி வருவதாகவும் இணையத்தில் பேசப்பட்டது.

     

    ஜான்வி கபூர் - ஆர்யா

    ஜான்வி கபூர் - ஆர்யா


    ஏற்கனவே தமிழ் படத்தில் நடிக்க ஜான்வி கபூர் விருப்பம் தெரிவித்து வந்த நிலையில் பையா 2-ம் பாகத்தில் நடிக்க சம்மதிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் இதனை அவரது தந்தையும் தயாரிப்பாளருமான போனிக் கபூர் மறுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ஜான்வி கபூர் தமிழில் எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பையா’.
    • இந்த படத்தில் கார்த்தி மற்றும் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பையா'. லிங்குசாமி இயக்கத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் தற்போது வரை ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளது. கார்த்தியின் சினிமா பயணத்தில் இப்படம் ஒரு மைல்கல்லாக அமைந்தது.


    பையா

    'பையா' திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் அடுத்த பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பையா' படத்தின் இரண்டாவது பாகத்தை விரைவில் இயக்குனர் லிங்குசாமி இயக்கவுள்ளதாகவும் இதில் கார்த்தி பதில் ஆர்யாவும் தமன்னாவிற்கு பதிலாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரும் நடிக்கவுள்ளதாக செய்தி பரவி வருகிறது.


    ஜான்வி கபூர் - ஆர்யா

    எனினும் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகிவில்லை. இருப்பினும் இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் நேற்ற திரையரங்குகளில் வெளியானது.
    • இப்படத்தை திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட்டது.

     

    லிங்குசாமி

    லிங்குசாமி

    வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் துணிவு படத்தை ஆனந்தம், ரன், ஜி, சண்டக்கோழி போன்ற பல படங்களை இயக்கிய லிங்குசாமி பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், துணிவு திரைப்படம் அஜித் சாரின் மங்காத்தா மற்றும் வினோத்தின் சதுரங்கவேட்டையின் கலவையாகும். அது இறுக்கமாகவும் திடமாகவும் இருந்தது. வாழ்த்துக்கள் போனிகபூர் சார் மற்றும் படக்குழுவினருக்கு. இந்த பொங்கலுக்கு மாபெரும் வெற்றியடைகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த உத்தமவில்லன் படம் 2015-ல் வெளியாகி வருமான ரீதியாக சரிவை சந்தித்தது.
    • இப்படத்தின் சரிவை சந்திப்பதற்காக தற்போது கமல் நடித்து உதவுள்ளதாக லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

    இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த உத்தமவில்லன் படம் 2015-ல் வெளியாகி வருமான ரீதியாக சரிவை சந்தித்தது. இப்படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட மீண்டும் லிங்குசாமி தயாரிக்கும் படத்தில் கமல்ஹாசன் நடித்து உதவ இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

     

    உத்தமவில்லன்

    உத்தமவில்லன்

    இதுகுறித்து லிங்குசாமி கூறும்போது, ''உத்தமவில்லன் படத்தை திறமையாக, கடின உழைப்போடுதான் எடுத்தார்கள். ஆனால், அப்படத்தினால் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை சந்தித்தது உண்மைதான். முதலில் நாங்கள் 'பாபநாசம்' படத்தை தயாரிக்கத்தான் முடிவு எடுத்தோம். ஆனால், கமல்ஹாசன் ஆசைப்பட்டதால் 'உத்தமவில்லன்' படத்தை எடுத்தோம். அது அவருக்கும் தெரியும். உத்தமவில்லன் படத்தின் நஷ்டத்தை ஈடுசெய்ய கமல்ஹாசன் ஒரு படத்தில் நடித்து தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

     

    கமல்

    கமல்

    நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெகன் விஜயா இயக்கியுள்ள 'பிகினிங்' படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 'பிகினிங்' படம் புதிய அனுபவத்தை கொடுக்கும். இனிமேல் திரைப்பட பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவோம். புதிய திரைக்கதை தயார் செய்துள்ளேன். இரண்டு மூன்று மாதங்களில் அந்த படத்தை இயக்குவேன்'' என்றார்.




    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பசங்க, களவானி, மஞ்சப்பை, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் நடித்து பிரபலமடைந்த விமல், தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் 'துடிக்கும் கரங்கள்'.
    • இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    பசங்க, களவானி, மஞ்சப்பை, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் நடித்து பிரபலமடைந்த விமல், தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் 'துடிக்கும் கரங்கள்'. இந்தப்படத்தை வேலுதாஸ் இயக்க, ஒடியன் டாக்கீஸ் சார்பில் கே.அண்ணாதுரை, வேலுதாஸ் மற்றும் காளிதாஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் மிஷா நரங் கதாநாயகியாக நடித்துள்ளார்.

     

    துடிக்கும் கரங்கள்

    துடிக்கும் கரங்கள்

    இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பிற பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இதில் பேசிய இயக்குனர் லிங்குசாமி, "சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த படத்தின் டைட்டிலை இந்தப் படத்திற்கு வைத்துள்ளார்கள். அவரது படங்களில் கொஞ்சம் சுமாராக ஓடிய படங்களின் டைட்டிலை மீண்டும் பயன்படுத்தும் போது சென்டிமென்டாக அந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. நான் மகான் அல்ல திரைப்படம் அதற்கு ஒரு உதாரணம், அதுபோன்ற ஒரு வெற்றியை இந்தப்படம் நிச்சயம் பெறும்.

    நடிகர் விமல் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை என நல்ல படங்களில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் மாதிரி ஒரு இடத்திற்கு அவர் இந்நேரம் வந்திருக்க வேண்டியது. இடையில் ஏதோ சில தவறுகளால் அதில் கொஞ்சம் தடை ஏற்பட்டு விட்டது. இப்போது சின்னப்படங்கள் என்று சொல்லப்படக்கூடிய லவ்டுடே போன்றவை ரிலீசுக்குப்பின் ரசிகர்கள் ஆதரவுடன் வெற்றிபெற்று பெரிய படமாக மாறுகின்றன. இந்த படத்தின் டீசரை பார்த்தபோது எதுவுமே தப்பாக தெரியவில்லை. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும்.

    லிங்குசாமி

    லிங்குசாமி

     

    தற்போது ஆந்திராவில் பண்டிகை காலங்களில் தமிழ் படங்களை திரையிடக்கூடாது என தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருப்பது தவறானது. இப்போது வெளியாகும் படங்கள் எல்லாம் நன்றாக ஓடுகின்றன. இது சினிமாவிற்கு ஒரு பொற்காலம். இந்த சமயத்தில் இப்படி ஒரு பிரச்சனை வரவே கூடாது. வாரிசு ரிலீஸ் விஷயத்தில் சரியான ஆட்கள் பேசி இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். குறுகிய எண்ணத்தோடு யாராவது இப்படி ஒரு முடிவெடுத்து இருந்தால், நிச்சயமாக வாரிசுக்கு முன், வாரிசுக்கு பின் என சினிமாவும் மாறிவிடும். அதனால் இப்போது ஏற்பட்டிருப்பது ஒரு சின்ன சலசலப்பு தான். இது விரைவில் சரியாகிவிடும் என நம்புகிறேன்" என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆனந்தம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி.
    • காசோலை பணமில்லாமல் திரும்பிய வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    தமிழ் திரையுலகில் 'ஆனந்தம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. அதன்பிறகு ரன், ஜி, சண்டக்கோழி போன்ற பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். கடைசியாக லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 மற்றும் தி வாரியர். திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

     

    கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா ஆகியோரது நடிப்பில், 'எண்ணி ஏழு நாள்' என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக, இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் பெற்றிருந்தது. இந்த கடனை திருப்பிக் கொடுக்காமல் அடுத்தடுத்து அவர்கள் பல படங்களை தயாரித்ததையடுத்து, அந்த நிறுவனத்துக்கு எதிராக பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

     

    இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பிவிபி நிறுவனத்திடம் பெற்ற ரூ.1 கோடியே 3 லட்சம் கடனை திரும்பச் செலுத்த இயக்குனர் லிங்குசாமிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, இயக்குனர் லிங்குசாமி, ரூ.1 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுனத்திற்கு வழங்கினார். இந்த காசோலைகள் வங்கியில் போதிய பணம் இல்லாமல் திரும்பி வந்ததையடுத்து இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு எதிராக பிவிபி நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் செக் மோசடி வழக்கில், இயக்குனர் லிங்குசாமி உட்பட அவரது சகோதரர்களுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. அதே சமயம் மேல் முறையீடு செய்ய அவகாசம் அளித்து உத்தரவிட்டது. 

    லிங்குசாமி 

    லிங்குசாமி 

     

    அதன்பின்னர் இதுகுறித்து  அறிக்கை வெளியிட்டிருந்த லிங்குசாமி , மேல்முறையீடு செய்து சட்ட ரீதியாக பிரச்சனையை சந்திப்போம் எனத் தெரிவித்திருந்த நிலையில், இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரூ.10 ஆயிரம் அபராத தொகையை லிங்குசாமி செலுத்தியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காசோலை பணமில்லாமல் திரும்பிய வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
    • இதை எதிர்த்து மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திப்போம் என இயக்குனர் லிங்குசாமி தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா ஆகியோரது நடிப்பில், 'எண்ணி ஏழு நாள்' என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக, இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் பெற்றிருந்தது. இந்த கடனை திருப்பிக் கொடுக்காமல் அடுத்தடுத்து அவர்கள் பல படங்களை தயாரித்ததையடுத்து, அந்த நிறுவனத்துக்கு எதிராக பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

     

    இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பிவிபி நிறுவனத்திடம் பெற்ற ரூ.1 கோடியே 3 லட்சம் கடனை திரும்பச் செலுத்த இயக்குனர் லிங்குசாமிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, இயக்குனர் லிங்குசாமி, ரூ.1 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுனத்திற்கு வழங்கினார். இந்த காசோலைகள் வங்கியில் போதிய பணம் இல்லாமல் திரும்பி வந்ததையடுத்து இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு எதிராக பிவிபி நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் செக் மோசடி வழக்கில், இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

     

    லிங்குசாமி

    லிங்குசாமி

    இந்நிலையில் மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திப்போம் என இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது பல ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னைப் பற்றிய ஒரு செய்திக்குத் விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை. இந்த வழக்கு பிவிபி கேப்பிடல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் இடையிலானது. அவர்கள் தொடுத்த வழக்கின் மேல் நேற்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நாங்கள் நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக உடனடியாக மேல் முறையீடு செய்து சட்ட ரீதியாகச் சந்திக்க உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆனந்தம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி.
    • காசோலை பணமில்லாமல் திரும்பிய வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழ் திரையுலகில் 'ஆனந்தம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. அதன்பிறகு ரன், ஜி, சண்டக்கோழி போன்ற பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். கடைசியாக லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 மற்றும் தி வாரியர். திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

     

    லிங்குசாமி

    லிங்குசாமி

    இந்நிலையில் எண்ணி ஏழு நாள் என்ற படத்திற்காக பெற்ற கடனை இயக்குனர் லிங்குசாமி திரும்ப செலுத்தவில்லை என கூறி பிவிபி கேப்பிட்டல் நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. பிவிபி கேப்பிட்டல் நிறுவனத்திடமிருந்து பெற்ற ரூ.1.03 கோடி கடனுக்காக அவர் வழங்கிய காசோலை பணமில்லாமல் திரும்பியதாக மனுவில் கூறப்பட்டிருந்தது. இவ்வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தி வாரியர்.
    • இந்த படத்தில் ராம் பொத்னேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் 'ஆனந்தம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. பிறகு ரன், ஜி, சண்டக்கோழி போன்ற பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

    கடைசியாக லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து தற்போது லிங்குசாமி இயக்கியிருக்கும் படம் தி வாரியர்.

    இந்தப் படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான 'ராம் பொத்னேனி' கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், கீர்த்தி ஷெட்டி, ஆதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    தி வாரியர்

    தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்திலிருந்து சிம்பு பாடிய புல்லட் மற்றும் விசில் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தி வாரியர் படத்திற்கு இயக்குனர் அட்லீ வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் “தி வாரியர்” உருவாகி வருகிறது.
    • இப்படத்தில் முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக ராம் பொத்தினேனி நடித்து வருகிறார்.

    இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் திரைப்படம் "தி வாரியர்". தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நடிகரான ராம் பொத்தினேனி முதன்முறையாக தமிழ் இயக்குனருடன் இணைந்துள்ளார்.

    இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும், அக்ஷரா கவுடா ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும், ஆதி பினிசெட்டி வில்லனாகவும் நடிக்கின்றனர். ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரின் பேனர் சார்பில் ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்கும் தி வாரியர் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பவன்குமார் இப்படத்தை வழங்கவுள்ளார்.

    தி வாரியர் - விசில்

    தி வாரியர் - விசில்


    ராம் பொத்தினேனி முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. தி வாரியர் திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் சிலம்பரசன் பாடிய புல்லட் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள விசில் பாடலை நடிகர் சூர்யா அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆந்தோனி தாசன் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன் இணைந்து பாடியுள்ள இப்பாடல் தற்போது வைரலாகி வருகிறது.


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo