உத்தமவில்லன் படத்தால் நஷ்டம்- இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் நடிக்க கமல் முடிவு

இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த உத்தமவில்லன் படம் 2015-ல் வெளியாகி வருமான ரீதியாக சரிவை சந்தித்தது.இப்படத்தின் சரிவை சந்திப்பதற்காக தற்போது கமல் நடித்து உதவுள்ளதாக லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
கமல் - லிங்குசாமி
கமல் - லிங்குசாமி
Published on

இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த உத்தமவில்லன் படம் 2015-ல் வெளியாகி வருமான ரீதியாக சரிவை சந்தித்தது. இப்படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட மீண்டும் லிங்குசாமி தயாரிக்கும் படத்தில் கமல்ஹாசன் நடித்து உதவ இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

உத்தமவில்லன்
உத்தமவில்லன்

உத்தமவில்லன்

இதுகுறித்து லிங்குசாமி கூறும்போது, ''உத்தமவில்லன் படத்தை திறமையாக, கடின உழைப்போடுதான் எடுத்தார்கள். ஆனால், அப்படத்தினால் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை சந்தித்தது உண்மைதான். முதலில் நாங்கள் 'பாபநாசம்' படத்தை தயாரிக்கத்தான் முடிவு எடுத்தோம். ஆனால், கமல்ஹாசன் ஆசைப்பட்டதால் 'உத்தமவில்லன்' படத்தை எடுத்தோம். அது அவருக்கும் தெரியும். உத்தமவில்லன் படத்தின் நஷ்டத்தை ஈடுசெய்ய கமல்ஹாசன் ஒரு படத்தில் நடித்து தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

கமல்
கமல்

கமல்

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெகன் விஜயா இயக்கியுள்ள 'பிகினிங்' படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 'பிகினிங்' படம் புதிய அனுபவத்தை கொடுக்கும். இனிமேல் திரைப்பட பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவோம். புதிய திரைக்கதை தயார் செய்துள்ளேன். இரண்டு மூன்று மாதங்களில் அந்த படத்தை இயக்குவேன்'' என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com