இந்நேரம் சிவகார்த்திகேயன் மாதிரி வந்திருக்க வேண்டியவர் விமல்- இயக்குனர் லிங்குசாமி

பசங்க, களவானி, மஞ்சப்பை, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் நடித்து பிரபலமடைந்த விமல், தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் 'துடிக்கும் கரங்கள்'.இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
லிங்குசாமி
லிங்குசாமி
Published on

பசங்க, களவானி, மஞ்சப்பை, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் நடித்து பிரபலமடைந்த விமல், தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் 'துடிக்கும் கரங்கள்'. இந்தப்படத்தை வேலுதாஸ் இயக்க, ஒடியன் டாக்கீஸ் சார்பில் கே.அண்ணாதுரை, வேலுதாஸ் மற்றும் காளிதாஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் மிஷா நரங் கதாநாயகியாக நடித்துள்ளார்.

துடிக்கும் கரங்கள்
துடிக்கும் கரங்கள்

துடிக்கும் கரங்கள்

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பிற பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இதில் பேசிய இயக்குனர் லிங்குசாமி, "சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த படத்தின் டைட்டிலை இந்தப் படத்திற்கு வைத்துள்ளார்கள். அவரது படங்களில் கொஞ்சம் சுமாராக ஓடிய படங்களின் டைட்டிலை மீண்டும் பயன்படுத்தும் போது சென்டிமென்டாக அந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. நான் மகான் அல்ல திரைப்படம் அதற்கு ஒரு உதாரணம், அதுபோன்ற ஒரு வெற்றியை இந்தப்படம் நிச்சயம் பெறும்.

நடிகர் விமல் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை என நல்ல படங்களில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் மாதிரி ஒரு இடத்திற்கு அவர் இந்நேரம் வந்திருக்க வேண்டியது. இடையில் ஏதோ சில தவறுகளால் அதில் கொஞ்சம் தடை ஏற்பட்டு விட்டது. இப்போது சின்னப்படங்கள் என்று சொல்லப்படக்கூடிய லவ்டுடே போன்றவை ரிலீசுக்குப்பின் ரசிகர்கள் ஆதரவுடன் வெற்றிபெற்று பெரிய படமாக மாறுகின்றன. இந்த படத்தின் டீசரை பார்த்தபோது எதுவுமே தப்பாக தெரியவில்லை. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும்.

லிங்குசாமி
லிங்குசாமி

லிங்குசாமி

தற்போது ஆந்திராவில் பண்டிகை காலங்களில் தமிழ் படங்களை திரையிடக்கூடாது என தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருப்பது தவறானது. இப்போது வெளியாகும் படங்கள் எல்லாம் நன்றாக ஓடுகின்றன. இது சினிமாவிற்கு ஒரு பொற்காலம். இந்த சமயத்தில் இப்படி ஒரு பிரச்சனை வரவே கூடாது. வாரிசு ரிலீஸ் விஷயத்தில் சரியான ஆட்கள் பேசி இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். குறுகிய எண்ணத்தோடு யாராவது இப்படி ஒரு முடிவெடுத்து இருந்தால், நிச்சயமாக வாரிசுக்கு முன், வாரிசுக்கு பின் என சினிமாவும் மாறிவிடும். அதனால் இப்போது ஏற்பட்டிருப்பது ஒரு சின்ன சலசலப்பு தான். இது விரைவில் சரியாகிவிடும் என நம்புகிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com