என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாதவன்"
- ஆதித்யா தார் அடுத்து ரன்வீர் சிங் நடிப்பில் ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தை இயக்கவுள்ளார்.
- இப்படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் பி62 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.
2019 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனரான ஆதித்யா தார் இயக்கத்தில் விக்கி கௌஷல், யாமி கவுதம் , கிருத்தி குல்ஹாரி மற்றும் பலர் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் URI: தி சர்ஜிகல் ஸ்டிரைக்.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஆதித்யா தார் அடுத்து ரன்வீர் சிங் நடிப்பில் ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் பி62 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. தற்பொழுது இப்படத்தில் நடிக்க போகும் நடிகர்களின் பட்டியலை ரன்வீர் சிங் அவரது இன்ஸ்டாகிராமின் பதிவிட்டுள்ளார்.
இப்படத்தில் ரன்வீர் சிங்குடன் சஞ்சய் தத், அக்ஷய் கன்னா, மாதவன், அர்ஜூன் ராம்பல் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர். இப்படம் மிகப்பெரிய பொருட் செலவில் எடுக்கப்படவுள்ளது. இப்படம் இந்தியன் இண்டலிஜன்ஸ் ஆஜென்சியின் பணிபுரியும் ஆபிசர்களை மையப்படுத்தின கதைக்களமாகும்.
இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2016 ஆம் ஆண்டு மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த ’இறுதி சுற்று’ படத்தை இயக்கினார்
- சூர்யாவை நடிப்பில் ’புறநானூறு’ படத்தை இயக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுதா கொங்கரா. ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த 'துரோகி' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.
2016 ஆம் ஆண்டு மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த 'இறுதி சுற்று' படத்தை இயக்கினார் . இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மாதவனுக்கு ஒரு கம் பேக் ஆக அமைந்த திரைப்படமாகும். ரித்திகா சிங் மிக சிறப்பான நடிப்பில் மக்கள் மனதை கவர்ந்தார். இதுவே ரித்திகா சிங் நடித்த முதல் படமாகும் .
அதைத்தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப் போற்று படத்தை இயக்கினார். மிகப் பெரிய திருப்பு முனையாக சுதா கொங்கராவுக்கு அமைந்தது இத்திரைப்படம். அப்படத்தை இந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் ரீமேக் செய்து வருகிறார். அதற்கு 'சர்ஃபிரா' என்ற தலைப்பை வைத்துள்ளனர்.
அதற்கு அடுத்து சூர்யாவை வைத்து 'புறநானூறு' படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் சுதா கொங்கரா அடுத்தாக துருவ் விக்ரமிற்கு கதையை கூறியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. . இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்க வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப் படுகிறது. துருவ் விக்ரம் மகான் திரைப்படத்திற்கு அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கபடி வீரராக நடித்துள்ளார். அத்திரைப்படத்தை பா.ரஞ்சித் தயாரிதுள்ளார். அதீகாரப் பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இது ஒரு உளவியல் த்ரில்லர் படம். இப்படத்தை 'ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்' தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது
- இந்த புதிய படத்தில் பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது
'லைக்கா புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் அருண் விஜய், எமி ஜாக்சன் நடித்த 'மிஷன் சாப்டர் 1' ஆக்ஷன் படம் இயக்கத்துக்குப்பின் இயக்குனர் ஏ.எல். விஜய் தற்போது புதிய படம் இயக்கும் பணியை தொடங்குகிறார்.
இந்த படத்தில் நடிகர் மாதவன்- கங்கனா ரணாவத் நடிக்கின்றனர்.இது ஒரு உளவியல் த்ரில்லர் படம். இப்படத்தை 'ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்' தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்துக்கு இன்னும் பெயரிடப்பட வில்லை.
இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.
ஏ.எல்.விஜய் பெரும்பாலும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து தெய்வத்திருமகள், சைவம், மதராசப்பட்டினம் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். ஆனால், தற்போது இந்த புதிய படத்தில் பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
- சிறந்த இயக்குனருக்கான விருதை சுதா கொங்கராவுக்கு வழங்கப்பட்டது.
- இவர் மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர்.
2016 ஆண்டு வெளியாகிய இறுதிச்சுற்று படம் குத்துச் சண்டையை மையமாக எடுக்கபட்ட படம். இப்படத்தில் மாதவன்,ரித்திக்கா சிங் நடித்தனர். சுதா கொங்கரா இயக்கினார். இவர் மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர்.
இறுதிச்சுற்று படம் தமிழ் மற்றும் இந்தி மொழியில் வெளியானது. ரித்திக்கா சிங்கை தமிழ் சினிமாவிற்கு அறிமுக படுத்தியவர் சுதா கொங்கரா. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்தார்.மாதவனின் சிறந்த நடிப்பும், ரிதிக்கா சிங்கின் நடிப்பும் மக்களிடையே பேசப்பட்டது. இறுதி சுற்று அமேசான் மற்றும் சோனி லைவ் ஓடிடி தளத்தில் இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்திற்கு 2015 தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதில் சிறந்த இயக்குனருக்கான விருதை சுதா கொங்கராவுக்கு வழங்கப்பட்டது. இன்று முத்தமிழ் மன்றத்தில் நடக்கும் விழாவில் மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் எம்.பி.சுவாமிநாதன் மற்றும் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விருது வழங்கி கவுரவித்தனர்..
- சிறந்த படம் முதல் பரிசு- தனி ஒருவன், 2-வது பரிசு- பசங்க-2, 3-வது பரிசு- பிரபா.
- சிறந்த நடிகர்- ஆர்.மாதவன் (இறுதிச்சுற்று), சிறந்த நடிகை- ஜோதிகா (36 வயதினிலே).
தமிழ்நாடு அரசின் 2015-ம் ஆண்டு திரைப்பட விருது பெறும் நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியல் வருமாறு:-
சிறந்த படம் முதல் பரிசு- தனி ஒருவன், 2-வது பரிசு- பசங்க-2, 3-வது பரிசு- பிரபா, சிறப்பு பரிசு- இறுதிச்சுற்று, பெண்களை பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் (சிறப்பு பரிசு) - 36 வயதினிலே.
சிறந்த நடிகர்- ஆர்.மாதவன் (இறுதிச்சுற்று), சிறந்த நடிகை- ஜோதிகா (36 வயதினிலே), சிறந்த நடிகர் சிறப்பு பரிசு- கவுதம் கார்த்திக் (வை ராஜா வை), சிறந்த நடிகை சிறப்பு பரிசு- ரித்திகா சிங் (இறுதிச்சுற்று), வில்லன் நடிகர்- அரவிந்த்சாமி (தனி ஒருவன்), நகைச்சுவை நடிகர்- சிங்கம்புலி (அஞ்சுக்கு ஒண்ணு), நகைச்சுவை நடிகை- தேவதர்ஷினி (திருட்டு கல்யாணம், 36 வயதினிலே),
சிறந்த குணச்சித்திர நடிகர்- தலைவாசல் விஜய் (ஆபூர்வ மகான்), குணச்சித்திர நடிகை- கவுதமி (பாபநாசம்), சிறந்த இயக்குனர்- சுதா கொங்கரா (இறுதிச்சுற்று), சிறந்த கதையாசிரியர்- மோகன் ராஜா (தனி ஒருவன்), சிறந்த இசையமைப்பாளர்- ஜிப்ரான் (உத்தம வில்லன், பாபநாசம்), சிறந்த பாடலாசிரியர்- விவேக் (36 வயதினிலே), சிறந்த பின்னணி பாடகர்- கானா பாலா (வை ராஜா வை), பின்னணி பாடகி- கல்பனா ராகவேந்தர் (36 வயதினிலே), சிறந்த ஒளிப்பதிவாளர்- ராம்ஜி (தனி ஒருவன்).
சிறந்த ஒலிப்பதிவாளர்- ஏ.எல்.துக்காராம், ஜெ.மகேஸ்வரன் (தாக்க, தாக்க), சிறந்த எடிட்டர்- கோபி கிருஷ்ணா (தனி ஒருவன்), சண்டை பயிற்சியாளர்- ரமேஷ் (உத்தம வில்லன்), நடன ஆசிரியர்- பிருந்தா (தனி ஒருவன்), ஒப்பனை கலைஞர்- சபரி கிரீஷன் (36 வயதினிலே, இறுதிச்சுற்று), தையல் கலைஞர்- வாசுகி பாஸ்கர் (மாயா),
சிறந்த குழந்தை நட்சத்திரம்- நிஷேஸ், வைஷ்ணவி (பசங்க-2), சிறந்த பின்னணி குரல் (ஆண்) - கவுதம் குமார் (36 வயதினிலே), (பெண்)- ஆர்.உமா மகேஸ்வரி (இறுதிச்சுற்று). இதே போன்று தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான 2014-15-ம் ஆண்டுக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் பேரவை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நாளை (புதன்கிழமை) மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில் நடைபெறும் விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் விருதுகளை வழங்க உள்ளனர். விழாவில் 39 விருதாளர்களுக்கு காசோலை, அவர்கள் பெயர் பொறித்த தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட உள்ளது. 9 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- படத்தின் டிரெய்லர் காட்சிகள் 2 நிமிடங்கள் மற்றும் 30 வினாடிகள் ஓடியது.
- சைத்தான் வரும் மார்ச் 8-ந்தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.
அஜய்தேவ்கன், ஆர்.மாதவன், ஜோதிகா நடித்த இந்தி படம் 'சைத்தான்'. இது ஒரு திரில்லர் படம் ஆகும். இந்த படத்தில் ஆர்.மாதவன் 'சைத்தான்' வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் டிரெய்லர் காட்சி வெளியீட்டு விழா மும்பையில் இன்று நடந்தது. இதில் நடிகர்கள் அஜய்தேவ்கன், மாதவன், நடிகை ஜோதிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவுக்கு வந்த அஜய்தேவ்கன் கருப்பு நிற சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்தார். மாதவன் பழுப்பு நிற ஓவர்கோட் அணிந்திருந்தார். ஜோதிகா வழக்கம் போல் பேன்ட்சூட் அணிந்து இருந்தார்.
படத்தின் டிரெய்லர் காட்சிகள் 2 நிமிடங்கள் மற்றும் 30 வினாடிகள் ஓடியது. பிரமிக்கும் வகையில் இக்காட்சிகள் அமைந்து இருந்தது.
'ரோலர்கோஸ்டர்' சவாரிக்கு அழைத்துச்செல்வது போலவும் இருந்தது. முன்னெப்போதும் இல்லாத ஒரு த்ரில்லான அனுபவத்தை டிரெய்லர் அளித்தது. இப்படம் வருகிற மார்ச் 8-ந்தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.
- சஷிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் ‘டெஸ்ட்’.
- இப்படத்தில் பிரபலங்கள் பலர் நடிக்கின்றனர்.
தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் மாதவன், சித்தார்த் மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
'டெஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்திருந்தது. சமீபத்தில் இப்படத்திற்கு பிரபல பின்னணி பாடகி சக்தி ஸ்ரீ கோபாலான் இசையமைக்க உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'டெஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- குழந்தைகளின் படிப்பு மற்றும் பெற்றோர் நலனுக்காக மும்பையில் தங்கியுள்ள ஜோதிகா, பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
- 26 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்தி படத்தில் ஜோதிகா நடிக்கிறார்.
தமிழில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்த ஜோதிகா, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் மலையாளத்தில் மம்முட்டியுடன் ஜோதிகா நடித்த 'காதல் தி கோர்' படம் திரைக்கு வந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
தற்போது குழந்தைகளின் படிப்பு மற்றும் பெற்றோர் நலனுக்காக மும்பையில் தங்கியுள்ள ஜோதிகா, பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி இருக்கும் 'சைத்தான்' படத்தில் ஜோதிகா நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாகவே, இந்தி சினிமாவில் ஜோதிகா நடித்திருந்தார். அந்த வகையில் 26 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்தி படத்தில் ஜோதிகா நடிக்கிறார். 'சைத்தான்' படத்தில் நடிகர் மாதவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜோதிகா-மாதவன் நடிப்பில் வெளியான 'டும்... டும்... டும்...', 'பிரியமான தோழி' ஆகிய படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன.
அந்தவகையில் மாதவனும், ஜோதிகாவும் இந்தி படத்தில் இணைந்து நடிப்பது ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது.
- இயக்குனர் ஏ.எல்.விஜய் 'அச்சம் என்பது இல்லையே- மிஷன் சாப்டர் 1' என்ற படத்தை இயக்கினார்.
- இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்தார். தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் 'அச்சம் என்பது இல்லையே- மிஷன் சாப்டர் 1' என்ற படத்தை இயக்கினார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
இதைத்தொடர்ந்து ஏ.எல்.விஜய் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். மாதவன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடிக்கிறார். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.
இயக்குனர் ஏ.எல்.விஜய் சென்னை தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் படப்பிடிப்பு தளம் பார்ப்பதற்காக தனது காரில் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், இயக்குனர் விஜயின் காரை உரசி, மோதுவது போல் சென்றதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அந்த இளைஞர், இயக்குனர் விஜய் மற்றும் உதவி இயக்குனர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து சென்னை, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இயக்குனர் விஜய்யின் மேலாளர் மணிவர்மா புகார் அளித்தார். தேனாம்பேட்டை போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்.
- இவர் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்தார். தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் 'அச்சம் என்பது இல்லையே- மிஷன் சாப்டர் 1' என்ற படத்தை இயக்கினார்.
இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். மாதவன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடிக்கிறார். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் திடீர் விசிட் அடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகை கங்கனா, "முதல் நாள் படப்பிடிப்பின் போது இந்திய சினிமாவின் கடவுள் தலைவர் ரஜினி திடீரென படப்பிடிப்பு தளத்திற்கு வந்தார். என்ன ஒரு அழகான நாள். மாதவன் உங்களை மிஸ் செய்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
On our first day of the shoot God of Indian cinema Thalaivar himself thrilled us with a surprise visit on our set.
— Kangana Ranaut (@KanganaTeam) November 18, 2023
What a lovely day!! Missing Maddy @ActorMadhavan as he joins us soon ❤️ @Tridentartsoffc @rajinikanth @sanjayragh pic.twitter.com/DNE87M9Uru
- பிரதமர் மோடி சமீபத்தில் பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார்.
- இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வழங்கினார்.
பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14-ஆம் தேதி தேசிய தினம் 'பாஸ்டில் டே' கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, அவர் இரண்டு நாள் சுற்றுப்பயணமான பிரான்ஸ் சென்றிருந்தார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இறங்கிய பிரதமர் மோடியை அந்நாட்டின் பிரதமர் எலிசபெத் போர்ன் நேரில் வறவேற்றார். தொடர்ந்து பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், பாஸ்டில் தின அணிவகுப்பில் பிரதமர் நரேந்திர மோடி மற்ற முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வழங்கினார். மேலும், பிரதமர் மோடிக்கு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இரவு விருந்து வழங்கியிருந்தார்.
இந்நிலையில் இந்த இரவு விருந்தில் நடிகர் மாதவன் கலந்து கொண்டுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள அவர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் மோடியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
- நடிகர் மாதவன் இயக்கி நடித்த திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'.
- இப்படத்தில் ஷாருக்கான் மற்றும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர்.
பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் மாதவன் நடித்திருந்தார்.
இப்படம் கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை ஈட்டியது. மேலும், இந்த படத்தில் ஷாருக்கான் மற்றும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆனதையடுத்து படத்தில் பணியாற்றியவர்களுக்கு விலையுயர்ந்த வாட்ச் ஒன்றை மாதவன் பரிசாக வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்