என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீரா ஜாஸ்மின்"

    • காதல், ஆக்ஷனில் உருவான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
    • வித்யாசாகர் இசையில் உருவான பாடல்களும் ஹிட் ஆனது.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜயின் 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    அந்த வரிசையில், மாதவன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற 'ரன்' திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ளது.

    கடந்த 2002-ம் ஆண்டில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் இணைந்து நடித்து வெளியான படம் 'ரன்'. காதல், ஆக்ஷனில் உருவான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தில் வித்யாசாகர் இசையில் உருவான பாடல்களும் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், 23 ஆண்டுகளுக்கு பிறகு 'ரன்' திரைப்படம் புத்தம் புது பொலிவுடன் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் விரைவில் வெளியாகும் என இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

    • நம் நாட்டில் கிரிக்கெட் என்பது வாழ்க்கை.
    • டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடிப்பது எளிது கிடையாது.

    மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் இணைந்து சஷிகாந்த் இயக்கிய 'டெஸ்ட்' படத்தில் நடித்துள்ளனர். இதில் சித்தார்த் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

    இதுகுறித்து சித்தார்த் கூறும்போது, "நம் நாட்டில் கிரிக்கெட் என்பது வாழ்க்கை. யாரைக் கேட்டாலும் கிரிக்கெட் பிடிக்கும் என்பார்கள். நானும் அதில் ஒருவன். தினமும் பல மணி நேரம் கிரிக்கெட் பார்த்து, விளையாடி பலரும் அந்த விளையாட்டுடன் பழக்கமாகி இருப்பார்கள். அதனால், கிரிக்கெட் வீரராக வெறுமனே நடித்து ஒப்பேத்த முடியாது.

    டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடிப்பது எளிது கிடையாது. நிறைய பேரிடம் இருந்து இன்ஸ்பையர் ஆகித்தான் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கிரிக்கெட் பார்க்கும்போது வரும் பதற்றம் இந்தப் படம் பார்க்கும்போதும் உங்களுக்கு வந்தால் அதுவே எங்களுக்கு வெற்றிதான். எனக்கு கிரிக்கெட் வீரர்களில் ராகுல் டிராவிட் பிடிக்கும்'' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகை மீரா ஜாஸ்மின் 2014-இல் வெளிவந்த விஞ்ஞானி என்ற படத்தில் நடித்தார்.
    • இவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் ரன் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து புதிய கீதை, ஜி, சண்டகோழி, ஆயுத எழுத்து போன்ற பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் தமிழில் கடைசியாக 2014-இல் வெளிவந்த விஞ்ஞானி என்ற படத்தில் நடித்தார்.


    மீரா ஜாஸ்மின்

    மலையாளத்தில் சில படங்கள் நடித்து வந்தாலும் தமிழில் இதுவே அவர் கடைசியாக நடித்த திரைப்படம். இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீரா ஜாஸ்மின் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், இன்று பிறந்த நாள் கொண்டாடும் இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    விமானம் போஸ்டர்

    அந்த வகையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக 'விமானம்' படக்குழு மீரா ஜாஸ்மினுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் இப்படம் மூலம் ரசிகர்களை சந்திக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.



    • நடிகை நயன்தாரா ’டெஸ்ட்’ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்திற்கு பின்னணி பாடகி சக்தி ஸ்ரீ கோபாலான் இசையமைக்கிறார்.

    தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.


    'டெஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்திருந்தது. சமீபத்தில் இப்படத்திற்கு பிரபல பின்னணி பாடகி சக்தி ஸ்ரீ கோபாலான் இசையமைக்க உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.



    இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'டெஸ்ட்' திரைப்படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மின்.
    • இவர் தற்போது ‘டெஸ்ட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் ரன் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து புதிய கீதை, ஜி, சண்டகோழி, ஆயுத எழுத்து போன்ற பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

    இவர் தற்போது தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகியுள்ள 'டெஸ்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.


    இந்நிலையில், எந்த தனிப்பட்ட காரணங்களுக்காக சில காலம் நடிக்கவில்லை என்று மீரா ஜாஸ்மின் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். அவர் பேசியதாவது, மாதவனுடன் 'ரன்', 'ஆய்த எழுத்து' படங்களில் நடித்திருக்கிறேன். சித்தார்த்தும் 'ஆய்த எழுத்து' படத்தில் நடித்திருந்தார். அவர்களுடன் 'டெஸ்ட்' படத்தில் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி.

    நயன்தாராவுடனும் இந்தப் படத்தில் நடிப்பது உற்சாகமாக இருக்கிறது. இடையில் சில காலம் என் தனிப்பட்ட காரணங்களுக்காக நடிக்கவில்லை. இப்போது மீண்டும் நடிப்பைத் தொடங்கி இருக்கிறேன். எனது சமூகவலைதளப் படங்களுக்கு ரசிகர்களிடம் இருந்து நேர்மறையான கருத்துகள் வருகின்றன. என்னைப் பின்தொடர்பவர்களுக்கு இதையெல்லாம் பகிர்வதற்கு சமூக வலைதளம் உதவுகிறது என்று பேசினார்.

    • மோகன்லால் L360, லூசிஃபர் 2, எம்புரான் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
    • இந்நிலையில் மோகன்லால் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இது இவர் இயக்கும் முதல் படமாகும்.

    மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மோகன்லால். கடந்த ஜனவரி மாதம் லிஜொ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் நடித்தார் மோகன்லால். படம் வெளிவந்து மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத் தொடர்ந்து மோகன்லால் L360, லூசிஃபர் 2, எம்புரான் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் மோகன்லால் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இது இவர் இயக்கும் முதல் படமாகும். இப்படத்திற்கு 'பரோஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கிறார்.

    குழந்தைகளைக் கவரும் விதமாக உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசை அமைக்கிறார். 3டி-யில் உருவாகும் இந்தப் படம், பான் இந்தியா முறையில் வெளியாக இருக்கிறது.

    வாஸ்கோட காமாவின் மதிப்புமிக்க பொக்கிஷங்களைப் பாதுகாத்த, பாதுகாவலரான பரோஸ் என்பவரின் வாழ்க்கை கதைதான் இந்தப் படம் என்கிறார்கள். இந்நிலையில், இப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டெஸ்ட் கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது.
    • சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும், மாதவன் பயிற்சியாளராகவும் நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    'விக்ரம் வேதா', 'இறுதிச்சுற்று', 'மண்டேலா' போன்ற படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரிக்கும் படம் 'TEST. இப்படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இதற்கு முன் சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின் ஆகியோர் மணிரத்னத்தின் ஆய்த எழுத்து, ரங் தே பசந்தி ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

    டெஸ்ட் கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும், மாதவன் பயிற்சியாளராகவும் நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், படம் வெளியீடு குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.



    இந்த நிலையில், 'TEST' படம் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் நேரடியாக ஓடிடி தளமான நெட்பிளிக்சில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×