என் மலர்

  நீங்கள் தேடியது "Guru Somasundaram"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள படம் 'இந்தியன்-2'.
  • 'இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பு நேற்று மீண்டும் பூஜையுடன் தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

  கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்-2' படம் இயக்கப் போவதாக சங்கர் அறிவித்து, அதன்பின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கியது. பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் சங்கரும், கமல்ஹாசனும் வெவ்வேறு படங்களில் தங்களின் கவனத்தை செலுத்தினர்.

   

  இந்தியன்-2

  இந்தியன்-2

  'விக்ரம்' பட வெற்றிக்குப் பிறகு, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், இந்தியன்-2 நிச்சயம் தொடங்கும்' என தெரிவித்திருந்தார். இந்த படத்துக்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட காஜல் அகர்வால் விலகி விட்டதாக கூறப்பட்டது. இதனை காஜல் அகர்வால் மறுத்து, படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது என்றும் தெரிவித்தார்.

   

  இந்தியன்-2

  இந்தியன்-2

  அதன்பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 'இந்தியன்-2' படப்பிடிப்பு மீண்டும் பூஜையுடன் நேற்று தொடங்கியது. இதனிடையே இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த விவேக்கின் மறைவிற்கு பிறகு அந்த கதாப்பாத்திரத்தில் யார் நடிக்கப்போவது என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

   

  குரு சோமசுந்தரம்

  குரு சோமசுந்தரம்

  இந்நிலையில் விவேக்கின் கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 'இந்தியன்-2' படத்தில் நடிக்க ஆரண்ய காண்டம், ஜிகர்தண்டா, ஜோக்கர், பேட்ட, மின்னல் முரளி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் குரு சோமசுந்தரம் இதில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பேட்ட படத்திற்கு பிறகு தனது அடுத்தடுத்த படங்களில் பிசியாகியிருக்கும் சசிகுமார், அடுத்ததாக ஜி.என்.கிருஷ்ணகுமார் இயக்கத்தில் திரில்லர் படமொன்றில் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  பேட்ட படத்திற்கு பிறகு சசிகுமார் நாடோடிகள் 2, கொம்பு வச்ச சிங்கம்டா மற்றும் கென்னடி கிளப் ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். தற்போது ராஜவம்சம் என்ற படத்தில் நடித்து வருகிறார். என்.வி.நிர்மல்குமார் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

  இந்த நிலையில், சசிகுமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை மலையாளத்தில் காலேஜ் டேஸ், காஞ்சி, டியான் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜி.என்.கிருஷ்ணகுமார் இயக்குகிறார்.

  இந்த படத்தில் கதாநாயகியாக மானஷா ராதா கிருஷ்ணன் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில், குருசோமசுந்தரம், இளங்கோ குமரவேல், மாரிமுத்து, அப்புக்குட்டி, ஜார்ஜ் மரியான், பசங்க சிவக்குமரன், சுஜாதா, வித்யா ப்ரதீப், மஞ்சுபெத்து ரோஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


  ஜெபக் மூவிஸ் சார்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் இந்த படம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பாணியில் உருவாகிறது. படத்தில் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸாக நடிக்கிறார். பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

  தயாரிப்பாளர் ஹித்தேஷ் ஜெபக்கின் 14-வது தயாரிப்பாக உருவாகும் இந்த படத்திற்கு ரோனி ராப்பில் இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவையும், வெங்கட் ரமணன் படத்தொகுப்பையும், சிவகுமார் யாதவ் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்தில், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹாவை தொடர்ந்து மேலும் ஒரு பிரபலம் இணைந்திருக்கிறார். #Rajini #Rainikanth
  ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். வடஇந்தியாவில் படமாகி வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

  இந்நிலையில், ‘ஜிகர்தண்டா’, ‘ஜோக்கர்’ படத்தின் மூலம் புகழ் பெற்ற குரு சோமசுந்தரம், ரஜினி படத்தில் இணைந்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை டார்ஜிலிங் மற்றும் டேராடூனில் நடைபெற்று வந்தது. முக்கிய காட்சிகள் சென்னை பின்னி மில் அரங்கில் படமானது.   இந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பை லடாக் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படமாக்க கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. #Rajinikanth165 #Rajinikanth #KarthikSubbaraj
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குரு சோமசுந்தரம், லட்சுமி பிரியா நடிப்பில் ஜதின் மற்றும் நிஷாந்த் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘ஓடு ராஜா ஓடு’ படத்தின் விமர்சனம். #OduRajaOdu
  சென்னையில் கதாசிரியராக இருக்கிறார் நாயகன் குருசோம சுந்தரம். இவரது மனைவி லட்சுமி பிரியா மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டில் செட்-அப் பாக்ஸ் வாங்கி படம் பார்க்க ஆசைப்படுகிறார். இதற்காக குருசோம சுந்தரத்திடம் பணம் கொடுத்து வாங்க சொல்லுகிறார்.

  அந்த பகுதியில் கஞ்சா விற்று வரும் தனது நண்பருடன் சேர்ந்து செட்-அப் பாக்ஸ் வாங்க செல்லுகிறார் குரு சோமசுந்தரம். அங்கு எதிர்பாராத விதமாக பணத்தை இழக்கிறார். மேலும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.

  அந்த பகுதியில் பெரிய தாதாவாக இருக்கும் சாருஹாசன், கவலைக்கிடமான நிலையில், இனிமேல் ரவுடி தொழில் செய்யக் கூடாது என்று அவரது மகன் நாசரிடம் சத்தியம் வாங்கி விடுகிறார். ஆனால், இவரது தம்பியோ நாசரை கொன்று விட்டு, தாதாவாக முயற்சி செய்கிறார்.

  நாசரால் ஏமாற்றப்பட்ட ஒருவர் 5 வருடம் சிறை தண்டனை பெற்று வெளியில் வருகிறார். நாசரை கடத்தி அவரிடம் பணம் பறிக்க முயற்சி செய்கிறார்.  அதே பகுதியில் ஆதரவற்ற சிறுவர்கள் சிறு சிறு திருட்டு தொழில்கள் செய்து வருகிறார்கள். இவர்கள் நான்கு பேரும் ஒரு பிரச்சனையில் சந்திக்கிறார்கள். இறுதியில் என்ன ஆனது? குருசோம சுந்தரம் செட்-அப் பாக்ஸ் வாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

  படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கும் குருசோம சுந்தரம் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். கதாசிரியராக கிளைமாக்ஸ் கிடைக்காமல் தவிப்பது, நண்பருடன் சேர்ந்து செட்-அப் பாக்ஸ் பணத்தை இழந்து தவிப்பது. அதை மீட்க போராடுவது, மனைவிக்கு பயப்படுவது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

  இவருக்கு மனைவியாக வரும் லட்சுமி பிரியா, கோபப்படும் மனைவியாக நடித்திருக்கிறார். நண்பராக வருபவர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். தன்னுடைய அனுபவ நடிப்பால் மனதில் பதிகிறார் நாசர். மற்ற கதாபாத்திரங்கள் அவரவர் வேலையை செவ்வனே செய்திருக்கிறார்கள்.  டார்க் காமெடி பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார்கள் ஜதின் மற்றும் நிஷாந்த். படம் ஆரம்பத்தில் வெவ்வேறு கதைகள் அங்கும் இங்குமாக திரைக்கதை அமைந்தாலும், பிற்பாதியில் சரியாக ஒன்று சேர்த்திருக்கிறார்கள். பல இடங்களில் டார்க் காமெடி ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஒரு செட்-அப் பாக்சில் ஆரம்பித்து அதை வாங்குவதற்கு இடையே நடக்கும் பல சிக்கல்களை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்கள்.

  தோஷ் நந்தாவின் இசையில் பாடல்கள் பின்னணி இசையும் சிறப்பாக அமைந்துள்ளது. ஜதின் சங்கர் ராஜ் மற்றும் சுனில் சி.கே.வின் ஒளிப்பதிவு ரசிக்க வைத்திருக்கிறது.

  மொத்தத்தில் ‘ஓடு ராஜா ஓடு’ தேவையில்லாத ஓட்டத்தை குறைத்திருக்கலாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜதின் மற்றும் நிஷாந்த் இயக்கத்தில் குரு சேமசுந்தரம் நடிப்பில் காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் `ஓடு ராஜா ஓடு' படத்தின் முன்னோட்டம். #OduRajaOdu, Guru Somasundaram
  கேண்டிள் லைட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் மூலன் வழங்கும் படம் `ஓடு ராஜா ஓடு'.

  ஜோக்கர் படத்தின் மூலம் பிரபலமான குரு சோமசுந்தரம் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில், நாசர், லட்சுமி பிரியா, ஆனந்த் சாமி, ஆஷிகா சால்வன், வினோத், ரவீந்திர விஜய், வெங்கடேஷ் ஹரிநாதன், கே.எஸ்.அபிஷேக், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மற்றும் தீபக் பாகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

  படத்தொகுப்பு - நிஷாந்த் ரவிந்திரன், இசை - தோஷ் நந்தா, ஒளிப்பதிவு - ஜதின் சங்கர் ராஜ் & சுனில் சி.கே., தயாரிப்பு - விஜய் மூலன், இயக்கம் - நிஷாந்த் ரவிந்திரன் & ஜதின் ஷங்கர் ராஜ்.   படத்தின் இசை வெளியீட்டு விழாவில் குரு சோமசுந்தரம் பேசும் போது, ஒரு சிறிய சம்பவத்தை மையப்படுத்தி, அடுத்தடுத்து காட்சிகள் என்ன என்ற விறுவிறுப்பை கூட்டும் காமெடி படமாக இருக்கும், மெரினாவில் குதிரை சவாரி செய்தால் எப்படி இருக்குமோ, படம் பார்க்கும் போதும் அந்த அனுபவத்தை உணர்வீர்கள் என்றார். 

  டார்க் காமெடி ஜானரில், காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #OduRajaOdu #GuruSomasundaram

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜதின் மற்றும் நிஷாந்த் இயக்கத்தில் குரு சேமசுந்தரம் நடிப்பில் காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் ஓடு ராஜா ஓடு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #OduRajaOdu
  ஜோக்கர் படத்தின் மூலம் பிரபலமான குரு சோமசுந்தரம் தற்போது ஜதின் மற்றும் நிஷாந்த் இயக்கத்தில் ஓடு ராஜா ஓடு என்ற காமெடி திரில்லர் படத்தில் நடித்திருக்கிறார். 

  விஜய் மூலன் தயாரிக்கும் இந்த படத்தில் நாசர், லட்சுமி பிரியா, ஆனந்த் சாமி, ஆஷிகா சால்வன், வினோத், ரவீந்திர விஜய், வெங்கடேஷ் ஹரிநாதன், கே.எஸ்.அபிஷேக், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மற்றும் தீபக் பாகா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

  மேலும் இது டார்க் காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படம் ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தோஷ் நந்தா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஜதின் சங்கர் ராஜ் (இயக்குனர்), சுனில் சி.கே ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கின்றனர். நிஷாந்த் ரவீந்திரன் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். #OduRajaOdu
  ×