குரு சோமசுந்தரம் நடித்த `பாட்டல் ராதா' படத்தின் டிரெய்லர் வெளியீடு

இயக்குநர் பா. ரஞ்சித்-இன் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் "பாட்டல் ராதா.திரைப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
குரு சோமசுந்தரம் நடித்த `பாட்டல் ராதா' படத்தின் டிரெய்லர் வெளியீடு
Published on

இயக்குநர் பா. ரஞ்சித்-இன் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் "பாட்டல் ராதா." பா. ரஞ்சித்-இன் உதவி இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள பாட்டல் ராதா திரைப்படத்தில் சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்துள்ள பாட்டல் ராதா திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியிடப்பட்டன. திரைப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. குடிக்கு அடிமையாக இருக்கும் குரு சோமசுந்தரம் மறு வாழ்வு மையத்தில் சேர்ந்த பிறகு அவரது வாழ்க்கை எப்படி மாறியது. இதனால் இவர் படும் கஷ்டங்கள் என்ன என்பதை டிரெய்லர் காட்சிகளில் அமைந்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com