காமெடி நடிகர் விவேக்கிற்கு பதில் யார்? இந்தியன்-2 படத்தின் புதிய தகவல்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள படம் 'இந்தியன்-2'.'இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பு நேற்று மீண்டும் பூஜையுடன் தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
விவேக்
விவேக்
Published on

கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்-2' படம் இயக்கப் போவதாக சங்கர் அறிவித்து, அதன்பின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கியது. பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் சங்கரும், கமல்ஹாசனும் வெவ்வேறு படங்களில் தங்களின் கவனத்தை செலுத்தினர்.

இந்தியன்-2
இந்தியன்-2

இந்தியன்-2

'விக்ரம்' பட வெற்றிக்குப் பிறகு, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், இந்தியன்-2 நிச்சயம் தொடங்கும்' என தெரிவித்திருந்தார். இந்த படத்துக்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட காஜல் அகர்வால் விலகி விட்டதாக கூறப்பட்டது. இதனை காஜல் அகர்வால் மறுத்து, படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்தியன்-2
இந்தியன்-2

இந்தியன்-2

அதன்பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 'இந்தியன்-2' படப்பிடிப்பு மீண்டும் பூஜையுடன் நேற்று தொடங்கியது. இதனிடையே இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த விவேக்கின் மறைவிற்கு பிறகு அந்த கதாப்பாத்திரத்தில் யார் நடிக்கப்போவது என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

குரு சோமசுந்தரம்
குரு சோமசுந்தரம்

குரு சோமசுந்தரம்

இந்நிலையில் விவேக்கின் கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 'இந்தியன்-2' படத்தில் நடிக்க ஆரண்ய காண்டம், ஜிகர்தண்டா, ஜோக்கர், பேட்ட, மின்னல் முரளி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் குரு சோமசுந்தரம் இதில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com