என் மலர்

  நீங்கள் தேடியது "Karthik Subbaraj"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் ஜிகர்தண்டா.
  • இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருந்தார்.

  கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.

   

  ஜிகர்தண்டா

  ஜிகர்தண்டா

  பலரின் பாராட்டுக்களையும் பெற்று நல்ல வரவேற்பை பெற்ற ஜிகர்தண்டா திரைப்படம் வெளியாகி 8 வருடங்கள் நிறைவு செய்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு இதனை நினைவு கூர்ந்து ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டிருந்தார். அதன்படி இப்படம் விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

   

  இறைவி

  இறைவி

  இந்நிலையில் ஜிகர்தண்டா-2 படத்தில் நடிக்கவுள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  இதற்குமுன்பு இந்த கூட்டணியில் வெளியான இறைவி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'.
  • இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

  பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

  இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்பிரபலங்கள் பலர் இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.

   ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்

   இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "வாவ்...மிகவும் அருமை. முழு மனதுடன் இப்படத்தை எடுத்ததற்காக நடிகர் மாதவன் மற்றும் படக்குழுவினருக்கு ஹாட்ஸ் ஆஃப். இப்படம் அனைத்து உண்மையான தேசபக்தர்களுக்கும் சமர்ப்பணம். சிம்ரன் அவர்கள் சூப்பர் மற்றும் நம்பி நாராயணன் அவர்களுக்கு பெரிய சல்யூட். இப்படத்தில் சூர்யா சார் கடைசியில் சொல்வது போல் எங்களை மன்னித்துவிடுங்கள்" என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை தனது இணையப்பக்கத்தில் பகிர்ந்துள்ள மாதவன், கார்த்தி சுப்பராஜிற்கு நன்றி கூறியுள்ளார்.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ஜிகர்தண்டா.
  • இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருந்தார்.

  கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். அந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.

   

  பலரின் பாராட்டுக்களையும் பெற்று நல்ல வரவேற்பை பெற்ற ஜிகர்தண்டா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 8 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இதனை நினைவு கூறும் வகையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

   

  அதன்படி பல ஆண்டுகளாக எதிர்ப்பார்த்து முணுமுணுத்துக் கொண்டிருந்த ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ளார்.

   

  இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளதாக அந்த வீடியோ பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் `தர்பார்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக மும்பை செல்லும் ரஜினிகாந்தை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்த இயக்குநர் சிறுத்தை சிவா அவரிடம் கதை கூறியிருப்பதாக கூறப்படுகிறது.
  `பேட்ட' படத்தில் ரஜினிகாந்தின் துள்ளலான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் `தர்பார்' படத்தில் போலீஸ் அதிகாரியாக அதிரடி வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ரஜினிக்கு இரண்டு வேடங்கள் என்றும் கூறப்படுகிறது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு மே 29-ந் தேதி துவங்குகிறது.

  இதற்காக ரஜினிகாந்த் இன்று மும்பை புறப்படுகிறார். இந்த நிலையில், விஸ்வாசம் படத்தின் இயக்குநர் சிவா, போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை சந்தித்து பேசியுள்ளார். இவர்களது சந்திப்பு சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக நடந்துள்ளது. எனவே ரஜினி - சிவா கூட்டணி விரைவில் இணைய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.  முன்னதாக ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் சந்திப்பு நிகழ்ந்தது. தர்பார் படத்திற்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என்றும் கூறுகிறார்கள். மேலும் பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், எச்.வினோத்திடமும் கதை கேட்டு வைத்திருக்கிறாராம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் `தர்பார்' படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்ததாக 3 படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth #Darbar
  `பேட்ட' படத்தில் ரஜினிகாந்தின் துள்ளலான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் `தர்பார்' படத்தில் போலீஸ் அதிகாரியாக அதிரடி வேடத்தில் நடிக்கிறார். மும்பையில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது.

  மும்பை புறப்படுவதற்கு முன்பாக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் ரஜினிகாந்தை அவசரமாக சந்தித்தார். ஏற்கனவே படையப்பா, முத்து, லிங்கா படங்களை ரஜினியை வைத்து இயக்கியுள்ள ரவிகுமார் மீண்டும் அவருக்காக புது கதை எழுதி இருக்கிறார். முருகதாஸ் படத்துக்கு பிறகு கேஎஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டிலேயே தொடங்கப்பட உள்ளது என்கிறார்கள். இதையடுத்து எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க இருக்கிறார்.  மேலும் பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக செய்தி வருகிறது. எனவே 2019, 2020 என 2 ஆண்டுகால கால்ஷீட்டை இப்போதே ரஜினி கமிட் செய்து வைத்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. #Rajinikanth #Darbar #KSRavikumar #HVinoth #KarthikSubbaraj

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தற்போது 100 படத்தில் நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். #Atharvaa
  கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், கருணாகரன், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா.

  இந்த படத்தில் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி அந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணனின் இசை பக்கபலமாக அமைந்தது.  இந்நிலையில் இந்த படம் தெலுங்கில் ரீமேக்காக இருக்கிறது. இதில் சித்தார்த் வேடத்தில் அதர்வாவும், பாபி சிம்ஹா கதாபாத்திரத்தில் வருண் தேஜும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் மிருணாலினி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் துவங்கவிருக்கும் நிலையில், படம் பெரும்பாலும் அமெரிக்காவில் உருவாகுவதாக கூறப்படுகிறது. #Dhanush #KarthikSubbaraj
  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வட சென்னை, மாரி 2 படங்களுக்கு பிறகு அசுரன் படப்பிடிப்பில் தனுஷ் பிசியாக இருக்கிறார்.

  கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இழுபறியில் இருந்த எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படமும் ஒருவழியாக தணிக்கை சான்றிதழ் பெற்று திரைக்கு வர காத்திருக்கிறது.  சில மாதங்களுக்கு முன்பு, தனுசை வைத்து கார்த்திக் சுப்புராஜ் ஒரு படத்தை இயக்கப்போவதாக திட்டமிடப்பட்டது. ஆனால் இருவருமே வேறு படங்களில் பிசியாகிவிட்டனர். இதனால் அவர்கள் இருவரும் இணைய வேண்டிய படம் கைவிடப்பட்டதாக சில செய்திகள் வெளியாகின. ஆனால் அப்படம் கைவிடப்படவில்லை. தனுஷ் படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் தற்போது முழுவீச்சில் கதை எழுதி வருகிறார்.

  விரைவில் எழுத்துப் பணிகள் நிறைவுபெற்று ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் படப்பிடிப்பு பணிகள் தொடங்க இருக்கிறது. படத்தின் பெரும்பாலான பகுதிகள் நியூயார்க் நகரில் படமாக்கப்பட உள்ளது. இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிக்க இருக்கிறது. #Dhanush #KarthikSubbaraj

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கமல், விஜய், அஜித் ஆகியோரை வைத்து, என்னவிதமான படங்களை இயக்குவீர்கள்? என்ற கேள்விக்கு கார்த்திக் சுப்புராஜ் பதிலளித்துள்ளார். #KarthikSubbaraj
  ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா போன்றவர்கள் தங்களுக்கென ஒரு இமேஜ் வளர்த்திருக்கின்றனர். அவர்களை இயக்கும் இயக்குனர்களும் அந்தந்த ஹீரோக்களுக்கு ஏற்பவே கதை தயார் செய்கின்றனர்.

  விஜய்சேதுபதி நடித்த பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி என மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தனது பாணியிலிருந்து முற்றிலும் மாறி முழுக்க ரசிகர்கள் ரசனைக்கு ஏற்ப ரஜினியின் ‘பேட்ட’ படம் இயக்கினார்.  பொங்கலையொட்டி வெளியான இந்த படம் ஹிட்டானது. இந்நிலையில் கமல், விஜய், அஜித் ஆகியோரை வைத்து, ‘என்னவிதமான படங்களை இயக்குவீர்கள்?’ என்றதற்கு பதில் அளித்தார்.

  இதுபற்றி அவர் கூறும்போது, ’கமலை வைத்து வரலாற்று சிறப்பம்சம் கொண்ட படத்தை இயக்குவேன். விஜய்யை வைத்து கேங்க்ஸ்டர் படமும், அஜித்தை வைத்து காமெடி படமும் இயக்குவேன்’ என்றார். கார்த்திக் சுப்புராஜின் இந்த பதில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சினிமா படங்களின் மூலம் வசூலாகும் தொகையை கணக்கிட்டு சிலர் பிழைப்பு நடத்துகிறார்கள், வசூலை பற்றி பேசுவது தேவயில்லாதது என்று கார்த்திக் சுப்புராஜ் காட்டமாக தெரிவித்துள்ளார். #Petta #Viswasam #KarthikSubbaraj
  பொங்கலுக்கு ‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்‘ படங்கள் வெளியாகின. இரண்டு படங்களுமே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, வெற்றி படங்கள் என அறிவிக்கப்பட்டாலும் எந்தப் படத்தின் வசூல் அதிகம் என ரசிகர்களிடையே போட்டி நிலவியது. ஒரு கட்டத்தில் இரண்டு படத்தின் தயாரிப்பு தரப்புமே வசூல் விவரங்களை வைத்து போட்டி போட ஆரம்பித்துவிட்டன.

  தற்போது இது குறித்து ‘பேட்ட’ படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கருத்து தெரிவித்துள்ளார். “எந்த ஓட்டலிலாவது வெளியே இன்று ஆயிரம் இட்லி விற்கப்பட்டது என்று அறிவிப்புப் பலகை வைத்துள் ளார்களா? இல்லையே. உணவு நன்றாக இருக்கிறதா, இல்லையா அது போதும்.  அதே போலத்தான் திரைப்படங்களும். படம் பிடித்திருக்கிறதா இல்லையா, நன்றாக இருக்கிறதா, சென்று பார்ப்போம். இப்படி வசூலை வைத்துப் பேசுவது தேவையில்லாத வணிகமயமாக்கல். இப்படி வசூல் நிலவரங் களை பற்றிப் பேசுவதெல்லாம் சில பேருக்கு தொழில். இப்படியான தகவல்களைப் போட்டு ட்ராக்கர்ஸ் என்பவர்கள் சம்பாதிக்கிறார்கள். இதை வைத்து பிழைப்பு நடத்துபவர்களே இருக்கின்றனர்” என்று கூறியுள்ளார். #Petta #Viswasam #KarthikSubbaraj

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தை 100 தடவைக்கும் மேலாக பார்த்திருப்பதாக பிரபல இசையமைப்பாளர் கூறியிருக்கிறார். #Petta
  ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, சசிகுமார், நவாசுதீன், சிம்ரன், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

  இந்நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் ‘பேட்ட’ படத்தை எத்தனை முறை பார்த்திருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டிருந்தார்கள். இதற்கு இசையமைப்பாளர் அனிருத், பின்னணி இசையமைக்க தொடங்கியதில் இருந்து தற்போது வரை 100 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன்’ என்று பதிவு செய்திருக்கிறார்.   மேலும் ரசிகர்கள் பலர் தாங்கள் எத்தனை முறை படத்தை பார்த்தார்கள் என்பதையும் பதிவு செய்து வருகிறார்கள். #Petta #Rajini #Rajinikanth
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ‘பேட்ட’ படத்தை அரசுப் பேருந்தில் திரையிட்டதற்கு ரஜினி ரசிகர்கள் புகார் தெரிவித்த நிலையில், நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார். #Petta #Rajinikanth #Vishal
  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா நடித்த பேட்ட படம் கடந்த 10-ந் தேதி வெளியானது. படம் ரிலீசான சில மணி நேரங்களில் இணையதளத்திலும் வெளியானது.

  இந்த நிலையில் கரூரில் இருந்து சென்னை சென்ற தமிழக அரசு பேருந்து ஒன்றில் பேட்ட படம் திருட்டுத்தனமாக ஒளிபரப்பானது. இதைப்பார்த்த ரஜினி ரசிகர்கள் அது குறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.ரஜினி ரசிகர்களின் புகார் டுவீட்டை பார்த்த விஷால் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:-


  ‘பைரசி தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். அரசு பேருந்துகளில் திருட்டு டிவிடிகள் மூலம் படம் காண்பிக்கப்படுவதற்கான ஆதாரம் இதோ உள்ளது’ என்று தெரிவித்துள்ளார். பேட்ட படத்தை திருட்டுத்தனமாக ஒளிபரப்பிய அரசு பேருந்தை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். #Petta #Rajinikanth #PettaPiracy #Vishal

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print