என் மலர்
நீங்கள் தேடியது "கார்த்திக் சுப்புராஜ்"
- ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட், முதன்முறையாக கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறது.
- பல ஆண்டுகளாக புதுமையான மற்றும் விருதுகளுக்கு தகுதியான கதை சொல்லலுக்கு பெயர் பெற்றது சீக்யா என்டர்டெயின்மென்ட்.
ஆஸ்கார் விருது பெற்ற இந்திய தயாரிப்பு நிறுவனம் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குநருடன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்குகிறது.
குனீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோரின் ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட், முதன்முறையாக புகழ்பெற்ற இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறது. எளிமையான பூஜைக்கு பிறகு மதுரையில் படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
பல ஆண்டுகளாக புதுமையான மற்றும் விருதுகளுக்கு தகுதியான கதை சொல்லலுக்கு பெயர் பெற்றது சீக்யா என்டர்டெயின்மென்ட். இந்தியாவின் முதல் ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படமான 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்', 'தி லஞ்ச்பாக்ஸ்', 'மசான்', 'பாக்லைட்' மற்றும் சமீபத்தில் தேசிய விருது பெற்ற 'காதல்' போன்ற உலகளவில் பாராட்டப்பட்ட பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளது இந்நிறுவனம். தனித்துவமான கண்ணோட்டத்துடன், புதிய திறமையாளர்களை வளர்த்து உலகளவில் உள்ள பார்வையாளர்கள் மத்தியில் நற்பெயரை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் சமகால இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருகிறார். இது அவருடைய பத்தாவது திரைப்படமாகும். கடந்த பத்தாண்டுகளில் 'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'பேட்ட', 'இறைவி', 'மெர்குரி', 'ஜகமே தந்திரம்', 'மகான்', 'ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்' மற்றும் 'ரெட்ரோ' என விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பாராட்டப்பட்ட பல படைப்புகளை அவர் கொடுத்திருக்கிறார்.
இந்தப் படம் குறித்து சீக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் குனீத் மோங்கா கபூர் பகிர்ந்து கொண்டதாவது, "பல்வேறு கலாச்சாரங்களை கடந்து பார்வையாளர்களை சென்றடையும் மண்சார்ந்த கதைகளை சொல்வதில்தான் நாங்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். அந்த நம்பிக்கையை நிச்சயம் கார்த்திக் சுப்பராஜ் காப்பாற்றுவார். அவரது கதைகள் புதுமையாகவும் உலகளவில் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாகவும் அமையும். கார்த்திக்குடன் இந்தப் பயணத்தில் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டதாவது, "சீக்யா தயாரித்திருக்கும் படங்கள் அனைத்தையும் நான் ரசித்திருக்கிறேன். நான் திரைக்கு கொண்டு வர வேண்டும் என விரும்பும் கலையுடன் சீக்யாவின் ரசனையும் ஒத்துப்போகிறது. விருதுகளுக்கு அர்த்தமுள்ள, தகுதியான படங்களைத் தயாரித்த குனீத் மற்றும் அச்சினுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. நான் எழுதியிருக்கும் இந்தக் கதை என் மனதுக்கு நெருக்கமானது. அந்தக் கதைக்கான சரியான தயாரிப்பாளர்கள் கிடைத்துள்ளனர்" என்றார்.
சீக்யா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் அச்சின் ஜெயின் பகிர்ந்து கொண்டதாவது, "கல்ட் மற்றும் கமர்ஷியல் என்ற இரண்டு விஷயங்களையும் சரியாகக் கையாளத் தெரிந்தவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். அவரது கதைகள் எதிர்பாராத திருப்பங்களையும் அதே சமயம் ஆழமான உணர்வுகளையும் கொண்டிருக்கும். பார்வையாளர்களின் எதிர்பார்ப்பையும் சரியான கதை சொல்லல் திறமையும் கொண்ட இயக்குநருடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம். கார்த்திக் சுப்பராஜூடன் இணைந்திருப்பது சக்திவாய்ந்த வேரூன்றிய கதைகளை, உலகளாவிய சினிமா மொழி மூலம் வெளிப்படுத்தும் சீக்கியாவின் நோக்கத்தை பிரதிபலிக்கிறது" என்றார்.
- ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.
- இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
நடிகர் சூர்யா நடிக்கும் 44-வது திரைப்படம் 'ரெட்ரோ.' இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்திற்கான டப்பிங் பணிகளை சூர்யா முழுவதுமாக முடித்துள்ளார். இது குறித்து படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எக்ஸ் தளத்தில் சூர்யாவுடன் இருக்கும் வீடியோ ஒன்றை பதிவு செய்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
- தமிழ், மலையாளம் என இருதரப்பு ரசிகர்களிடமும் பாராட்டு.
- மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் பாராட்டு.
மலையாளத்தில் கடந்த 22ம் தேதி அன்று மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியானது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாஸி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் வெளியாகி தமிழ், மலையாளம் என இருதரப்பு ரசிகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மேலும், வசூல் ரீதியாகவும் "மஞ்சும்மல் பாய்ஸ்" வெற்றி பெற்றுள்ளது.
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
மஞ்சும்மல் பாய்ஸ் சூப்பர்... அருமையான... அற்புதமான படம்.
சிறந்த ஃபிலிம்மேக்கிங்.. ஹேட்ஸ் ஆஃப்.
இந்த அற்புதமான திரை அனுபவத்தை தவறவிடாதீர்கள்.
சிதம்பரம், சௌபின்ஷாஹிர், விவேக்ஹர்ஷன், பர்வாபிலிம்ஸ், சுஷின்ஷியாம், ஷைஜூகாலித் மற்றும் அனைத்து நடிகர்கள் மற்றும் குழுவுக்கும் வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அந்தமானில் வைத்து சூர்யா - பூஜா ஹெக்டேவின் இரண்டு டூயட் பாடல்கள் படமாக்கபட உள்ளன
- இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தை நடித்து முடித்துள்ள சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை சூர்யாவின் 2D நிறுவனமும் , கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்தின் கதாநாயகியாக பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே இணைத்துள்ளார்.

இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ஷ்ரேயாஷ் கிருஷ்ணா, சண்டைப் பயிற்சியாளராக கேச்சா கம்பக், கலை இயக்குநராக ஜாக்கி, எடிட்டராக ஷபீக் முகமது அலி, ஆகியோர் இணைத்துள்ளனர். படத்தின் ரிலீஸுக்கு பின்னர் வரும் லாபத்தில் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இருவருக்கும் பங்கு இருப்பதனால் சம்பளமே வாங்காமல் சூர்யா நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியானது.

தற்போது சூர்யா 44 படப்பிடிப்பு அந்தமானில் துவங்கி நடைபெற்று வருகிறது. அங்குவைத்து சூர்யா - பூஜா ஹெக்டேவின் இரண்டு டூயட் பாடல்கள் படமாக்கபட உள்ளன அடுத்தாக ஊட்டியில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது வரும் ஜூலை 23 சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் போஸ்டரும் பர்ஸ்ட் லுக்கும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- காதல்.. சிரிப்பு.. யுத்தம் உள்ளிட்ட வாசகங்களுடன் தொடங்கும் இந்த வீடியோவில் கழுத்தில் ரத்தத்துடன் சூர்யா
- இந்த கிலிம்ஸ் வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிரச் செய்துள்ளது
இன்று [ஜூலை 23] நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், 'சூர்யா 44' படத்தின் அப்டேட் நேற்று நள்ளிரவு 12.12 மணிக்கு வெளியாகும் என இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார் .
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் துவங்கியது.
இந்நிலையில் நேற்று கார்த்திக் சுப்புராஜ் அறிவித்திருந்தபடி சூர்யா 44 படத்தின் அதிரடியான கிலிம்ஸ் வீடியோ நாளிரவு 12.12 மணிக்கு வெளியாகியுள்ளது. காதல்.. சிரிப்பு.. யுத்தம் உள்ளிட்ட வாசகங்களுடன் தொடங்கும் INTHவீடியோவில் ரத்தத்துடன் கேங்ஸ்டர் தோற்றத்தில் துப்பாக்கியேந்தி மாஸ் காட்டும் லுக்கில் சூர்யா நடந்துவருவது விக்ரம் படத்தில் வரும் ரோலக்ஸ் கதாபாத்திரம் தந்த வைபை மீண்டும் தருவதாக உள்ளது. துப்பாக்கியை கேமராவின் முன் நீட்டி சூர்யாவின் சிக்நேச்சர் சிரிப்புடன் முடியும் இந்த கிலிம்ஸ் வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிரச் செய்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.
- இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது என படக்குழு கடந்த மாதம் அறிவித்தது. இப்படம் ஒரு காதல் திரைப்படம் அதில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் கூறீனார்.
இந்நிலையில் படத்தில் சிறப்பு நடனமாடியுள்ளார் நடிகை ஸ்ரேயா. இதை அவர் கோவாவில் தற்பொழுது நடைப்பெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துக் கொண்ட அவர் கூறியுள்ளார்.
இதுக்குறித்து அவர் பேசுகையில் " நான் இந்த திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு சூர்யா சாருடன் இணைந்து நடனம் ஆடியுள்ளேன். அப்பாடல் டிசம்பர் மாதம் வெளியாகும் என நினைக்கிறேன்" என்றார்.
படத்தின் இசையை சந்தோஷ் நாராயணன் மெற்கொண்டுள்ளார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- முன்பை விட இப்போது தமிழ் சினிமா அதிக வளர்ச்சி அடைந்துள்ளது.
- திறமையானவர்கள் சினிமாவிற்கு வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தந்தையும், நடிகருமான கஜராஜ் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ் சினிமா இன்று நல்ல நிலைமையில் உள்ளது. படித்தவர்கள் அதிகம் வருகிறார்கள். முன்பை விட இப்போது தமிழ் சினிமா அதிக வளர்ச்சி அடைந்துள்ளது.

சிறிய பட்ஜெட்டில் அதிகளவில் படங்கள் வெளியாகிறது. திறமையானவர்கள் சினிமாவிற்கு வருகிறார்கள். இதை பெரிய வாய்ப்பாக கருதுகிறேன்.
நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் இன்று கதைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். தமிழ் சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது பெரிய மாறுதலாக கருதுகிறேன்.

முன்பு கதாநாயகர்களின் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று நல்ல கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனக்கான வாய்ப்பு என் மகன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மூலம் வந்தது.
எனது தாய், தந்தை புண்ணியத்தில் 100 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். என் மகனை பற்றி நான் சொல்வதை காட்டிலும் மக்கள் அதிகம் பேசுகிறார்கள். இதுவே எனக்கு பெருமையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
- கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 'ரெட்ரோ' படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது.
சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் ஒரு காதல் திரைப்படம் அதில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறினார். திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 'ரெட்ரோ' படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது. கோடை விடுமுறையை ஒட்டி படம் வெளியாகும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் ரெட்ரோ படம் மே 1 அன்று தொழிலாளர் தினத்தன்று திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான கங்குவா படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்றாலும், ஆஸ்கர் பட்டியலில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதுமற்றுமின்றி அடுத்ததாக சூர்யா 45 படம் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதற்கு பேட்டைக்காரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






