என் மலர்

  நீங்கள் தேடியது "Santhosh Narayanan"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
  • இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ள நிலை ஏற்பட்டிருக்கிறது

  தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் சாலைகளிலும் வீடுகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும், வானிலை ஆய்வு மையம் சில தினங்களுக்கு மழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இதனிடையே பருவமழை காரணமாக சென்னை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் 2 அடி முதல் 3 அடிவரை சாலையோரம் தண்ணீர் தேங்கி நிற்கிறது.


  சந்தோஷ் நாராயணன்

  இந்நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? என சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எங்கள் வீட்டின் முன் 2 அடி அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும், எங்கள் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்களா" எனக் குறிப்பிட்டு ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சந்தோஷ் நாராயணன் இசையில் கடந்த ஆண்டு வெளியான பாடல் 'என்ஜாய் எஞ்சாமி'.
  • இந்த பாடலை தீ மற்றும் தெருக்குரல் அறிவு பாடியிருந்தனர்.

  சமீபத்தில் நடந்த சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் 'என்ஜாய் எஞ்சாமி' பாடலை தீ மற்றும் மாரியம்மாள் பாடியிருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் இப்பாடலை எழுதி, அதில் நடித்திருந்த தெருக்குரல் அறிவு இடம்பெறவில்லை.

  இதுதொடர்பாக ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் அறிவு ஏன் புறக்கணிக்கப்படுகிறார் என கேள்வி எழுப்பி வந்தனர். இதைத்தொடர்ந்து, அறிவு தான் புறக்கணிக்கப்படுவது குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த பதிவு வைரலானது. இதற்கு பதிலளிக்கும் விதமாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், பாடகி தீ சார்பில் விளக்கமளிக்கப்பட்ட பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.


  என்ஜாய் எஞ்சாமி

  அதில்,  "எஞ்சாயி எஞ்சாமி பாடலின் ஒவ்வொரு கட்டத்திலும் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவருக்கும் உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளேன். ஒவ்வொரு முறையும் எனக்கு கிடைத்த வாய்ப்புகளில் அவர்கள் இருவரையும் குறிப்பாக அறிவு குறித்து பெருமையுடனே பேசியுள்ளேன். அவர்கள் இருவரின் முக்கியத்துவத்தை எந்தக் கட்டத்திலும் நான் குறைத்து மதிப்பிட்டது கிடையாது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மேடையிலும் இருவரின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தியுள்ளேன்.

  இயக்குனர் மணிகண்டனும், அவரின் `கடைசி விவசாயி' திரைப்படமும் 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் உருவாக்கத்துக்கு பெரிய உந்து சக்தியாக அமைந்தது. 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் வரிகளும், அதன் உருவாக்கமும் எங்களது அணியால் விவாதிக்கப்பட்டே செம்மைப்படுத்தப்பட்டது. பாடல் வெளியாகும் வரை நாங்கள் அனைவரும் ஒரே பக்கத்தில்தான் இருந்தோம்.

  பாடலுக்கான அர்த்தங்கள் மற்றும் அதன் கதைகள் பெரும்பாலானவற்றை பாடல் வெளியான பின் அறிவின் ஒவ்வொரு இன்டெர்வியூ மூலமாக நான் தெரிந்துகொண்டேன். அறிவு சொன்னது மிகவும் முக்கியமானது மட்டுமல்ல முதன்மையானது என நம்பி, அறிவின் குரல் எப்போதும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என விரும்பினேன். பாடல் மூலம் கிடைத்த அனைத்து வருமானம் மற்றும் உரிமைகளும் எங்கள் மூவருக்கும் சமமாகப் பகிரப்பட்டன. 'எஞ்சாயி எஞ்சாமி' எட்டிய உயரங்களை அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து அனுபவிக்கவே ஆசைப்பட்டேன். ஏதேனும் ஒரு வாய்ப்பு அதில் சமத்துவமின்மையாக இருந்தால் ​​நிச்சயம் அதன் ஒரு பகுதியாக நான் இருக்கமாட்டேன்.


  என்ஜாய் எஞ்சாமி

  கடந்த ஆண்டு வெளியான "ரோலிங் ஸ்டோன் இந்தியா" இதழின் அட்டைப்படத்தில் நானும், ஷானும் இடம் பெற்றிருந்தோம். எங்கள் இணைப்பில் அடுத்து வரவுள்ள ஆல்பத்துக்கான அட்டைப்படமே அது. மற்றபடி, அது "எஞ்சாயி எஞ்சாமி" பாடலுக்கானதோ அல்லது "நீயே ஒலி" பாடலுக்கானதோ அல்ல. அந்த அட்டைப் படத்திலும் அந்த பாடல் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. அறிவு, சந்தோஷ் நாராயணன் மற்றும் மாஜா கலைஞர்கள் பற்றிய கட்டுரைகளை ரோலிங்ஸ்டோன் வெளியிட இருக்கிறது என்பது எனக்கு தெரிவிக்கப்பட்டது. எங்களின் அட்டைப்படம் வெளியாகும் முன்பே ரோலிங் ஸ்டோன் இதழ் ஒரு ட்வீட்டில் அறிவித்தது. அந்த அறிவிப்பை கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன்.

  செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் என்னுடன் அறிவையும் பங்கேற்பதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அணுகினர். அறிவு அமெரிக்காவில் இருந்ததன் காரணமாக அவரால் பங்கேற்க முடியாததை அடுத்து அவர் குரலை நிகழ்ச்சியில் பயன்படுத்திக் கொண்டோம். தனது குரலுக்காகவும், பாடலில் அவரின் பங்களிப்புக்காகவும் நிகழ்வில் அறிவு பேசப்பட்டார். 'எஞ்சாயி எஞ்சாமி' பாடலை உருவாக்கியதற்காக சந்தோஷ் நாராயணன், அறிவு, மாஜா உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவின் ஆதரவிற்கும் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

  இந்த பிரபஞ்சத்தின் மீதும் உயிர்கள் மீதும் கொண்டுள்ள அன்பு, மரியாதையின் பொருட்டால் சக கலைஞர்களால் 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் பிறந்தது. என்னைப் பொறுத்தவரை, அது எப்போதும் அப்படியே இருக்கும். உண்மை எப்போதும் வெல்லும்" என்று விளக்கம் கொடுத்துள்ளார்.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சந்தோஷ் நாராயணன் இசையில் கடந்த ஆண்டு வெளியான பாடல் 'என்ஜாய் எஞ்சாமி'.
  • இந்த பாடலை தீ மற்றும் தெருக்குரல் அறிவு பாடியிருந்தனர்.

  சமீபத்தில் நடந்த சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் 'என்ஜாய் எஞ்சாமி' பாடலை தீ மற்றும் மாரியம்மாள் பாடியிருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் இப்பாடலை எழுதி, அதில் நடித்திருந்த தெருக்குரல் அறிவு இடம்பெறவில்லை. இதுதொடர்பாக ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் அறிவு ஏன் நிராகரிக்கப்படுகிறார் என கேள்வி எழுப்பி வந்தனர்.


  என்ஜாய் எஞ்சாமி

  இதற்கு பதிலளிக்கும் விதமாக தெருக்குரல் அறிவு தனது சமூக வலைதளப்பக்கத்தில், " "என்ஜாய் எஞ்சாமி பாடலை நானே உருவாக்கி, எழுதி, பாடி, நடித்தேன். யாருமே இதற்கான மெட்டையோ, ஒரு சொல்லையோ தரவில்லை. அந்தப் பாடலை இப்போது இருப்பது போல உருவாக்குவதற்காக ஆறு மாதங்களாக உறக்கமில்லாத, மிகுந்த அழுத்தத்துடன் கூடிய இரவுகளைக் கடந்தேன்.

  இருப்பினும் இது அனைவரும் சேர்ந்து செய்த கூட்டு முயற்சிதான், அதில் சந்தேகமில்லை. இறுதியில் உண்மைதான் எப்போதும் வெல்லும்." என்று பதிவிட்டிருந்தார்.

  இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் 'என்ஜாயி என்ஜாமி' பாடல் உருவான விதம் பற்றி விரிவாக விளக்கம் அளித்து பதிவு ஒன்றை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

  அதில், "கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், நமது வரலாற்றையும் இயற்கையும் கொண்டாடும் விதமாக தமிழில் ஒரு பாடல் உருவாக்க வேண்டும் என்று தீ என்னிடம் கூறினார். அதன் பிறகு நான் `என்ஜாயி என்ஜாமி' பாடலை கம்போஸ், புரோகிராம் மற்றும் ரெக்கார்டிங் செய்து இணைந்து பாடினேன். மேலே கூறப்பட்ட என்னுடைய பணியானது உலகளவில் `தயாரிப்பாளர்' என்று குறிப்பிடப்படுகிறது.

  இதை இந்தத் துறை சார்ந்த பலரும் ஏற்கெனவே அறிவர். நான், தீ, அறிவு எங்களுக்குள் ஒருவர் மேல் மற்றொருவர் வைத்திருக்கும் நிறைந்த அன்பிற்காகவும், தனியிசை மேல் எங்களுக்கு உள்ள காதலாலும் ஒன்றாக இணைந்தோம்.

  தீ மற்றும் அறிவு பாடலைப் பாட ஒப்புக்கொண்ட நிலையில், இருவரும் சேர்ந்து பாடலுக்காக பணியாற்றினர். தீ-யின் பல வரிகளுக்கு அவரே இசையமைத்தார். அறிவு பாடல் வரிகள் எழுத ஒப்புக்கொண்டார். நான் மீதி இசையையும், அறிவு பகுதிக்கான ட்யூனையும் கம்போஸ் செய்தேன்.

  இந்தப் பாடலுக்கான அடித்தளத்தை மிக நுட்பமாகத் தேர்ந்தெடுத்து, பாடலுக்கான ஓட்டத்தையும், திரைக்கதையையும் உருவாக்கி, பல வாழ்க்கை கதைகளைக் கூறி அறிவுடன் பல மணி நேரம் செலவழித்த இயக்குனர் மணிகண்டனுக்கு எங்கள் குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது அற்புதமான திரைப்படமான 'கடைசி விவசாயி'தான் இந்தப் பாடலுக்கு இன்ஸ்பிரேசன்.

  பாடலில் உள்ள ஒப்பாரி வரிகள் அரக்கோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பாட்டிகள் மற்றும் தாத்தாக்களின் பங்களிப்பாகும். அவர்களின் பணியை கௌரவித்த அறிவுக்கு நன்றி. `பந்தலுல பாவக்கா' பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாரம்பரிய ஒப்பாரி பாடல்களில் ஒன்று.


  என்ஜாய் எஞ்சாமி

  ரகிட ரகிட, அம்மா நானா, என்னடி மாயாவி போன்ற எனது பல பாடல்களைப் போலவே, நான் இசையமைக்கும் பாடலில் நானே சில வார்த்தைகளைப் பயன்படுத்துவேன். இந்தப் பாடலில் 'என்ஜாயி என்ஜாமியும்' அப்படிப்பட்ட ஒன்றுதான். என்னுடைய இந்தப் பொருத்தமற்ற சொற்றொடரைச் சுற்றி அறிவு அற்புதமான வரிகளை உருவாக்கியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

  இப்பாடலின் முழு உருவாக்கம் 30 மணி நேரத்திற்குள் செய்யப்பட்டது. படப்பிடிப்பிற்கு முன்பு என்ஜாயி என்ஜாமியை பதிவு செய்ய சில மணிநேரங்களே இருந்ததால், எங்களின் பணி வேகமாகவும், வேடிக்கையாகவும் தன்னிச்சையாகவும் இருந்தது.

  இந்தப் பாடலின் அனைத்து வருமானத்தையும், உரிமைகளையும் தீ, அறிவு மற்றும் நானும் சமமாகப் பகிர்ந்து கொண்டோம். இதில் நான் வெளிப்படைத் தன்மையுடனே இருக்க விரும்புகிறேன். தீ, அறிவு இருவருக்கும் பக்கபலமாக நின்று எனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தளங்களிலும் பணியாற்றி, சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு எந்தவொரு பாரபட்சமின்றி கிரெடிட்ஸ் கொடுத்துள்ளேன்.

  என்ஜாயி என்ஜாமி ஆடியோ வெளியீட்டு விழாவில் அறிவு பற்றிய எனது பேச்சே அதற்கு சாட்சி. செஸ் ஒலிம்பியாட் 2022-ல் தீ மற்றும் கிடாக்குழி மாரியம்மாளின் என்ஜாயி என்ஜாமி நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, அறிவு அப்போது வெளிநாட்டில் இருந்ததால் அவரால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. மேலும் அவரது தற்போதைய அமெரிக்க பயணத்திட்டம் காரணமாக அவர் கலந்து கொள்ள முடியாது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடமும் தெரிவித்திருக்கிறார்.

  அறிவு ஒரு அற்புதமான கலைஞன் என்பதை நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அறிவின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்திருக்கும் 'அனல் மேலே பனித்துளி' திரைப்படத்தில் நான் இசையமைத்து விரைவில் வெளிவரவிருக்கும் "கீச்சே கீச்சே" பாடல் 'என்ஜாய் என்ஜாமி' பாடலுக்குக் கொடுத்த அதே அன்பை 'கீச்சே கீச்சே' பாடலுக்கும் கொடுத்தால் அது ஒரு கலைஞனாக அறிவுக்கு பொருத்தமாக இருக்கும்.

  ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுப்பதற்காக எனது தளத்தை நான் எப்போதும் பயன்படுத்தியிருக்கிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கலை இரண்டுமே அதற்குச் சான்றாகும். எனது வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் நாங்கள் பின்பற்றும் பணி நெறிமுறை, கலாசாரம் மற்றும் தோழமை ஆகியவை அனைவரும் அறிந்த ஒன்றே! கலையின் மீதும், நம் நாட்டில் உள்ள அனைத்து அற்புதமான கலைஞர்களின் மீதும் மட்டுமே அன்பு கொண்டிருங்கள், வரும் மாதங்களில் உலகளவில் பல புதிய தமிழ் குரல்களின் எழுச்சியைக் காண்போம்!

  இந்தப் பாடல் உருவாக உதவியாக இருந்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. இந்த சிறப்பு பாடலில் ஈடுபட்டுள்ள எவருடனும் பொது அல்லது தனிப்பட்ட விவாதத்திற்கு நான் முற்றிலும் தயாராக இருக்கிறேன். மேலும் கலைகளை உருவாக்கி மக்களை ஒன்றிணைப்பதே எனது குறிக்கோள்!

  வாங்கோ வாங்கோ ஒண்ணாகி!" என்று பதிவிட்டிருந்தார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜிப்ஸி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கரு.பழனியப்பன், ராஜு முருகன் அரசியல் பேசாமல் இருக்க மாட்டார், அதனால் அவரும் சட்டமன்றத்திற்குச் செல்ல வாழ்த்துவதாக தெரிவித்தார்.
  ஒலிம்பியா மூவிஸ் சார்பாக எஸ்.அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜு முருகன் எழுத்து, இயக்கத்தில் ஜீவா நாயகனாக நடித்துள்ள படம் ஜிப்ஸி. இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், படக்குழுவினர் உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியீட்டு விழாவோடு, நிருபமா தத் எழுதிய "துணிவின் பாடகன் பாந்த் சிங்" என்ற ஒரு புத்தகமும் வெளியிடப்பட்டது.

  விழாவில் இயக்குநர் கரு.பழனியப்பன் பேசியதாவது,

  ராஜு முருகன் யுகபாரதிக்கு எப்படி ஒரு தம்பியோ, அதுபோல் என்னைப் போல பலபேருக்கு அவர் தம்பி. ஜீவா, இசையமைப்பாளர் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த தயாரிப்பாளர் அம்பேத்குமார் பெரிதாக ஜெயிக்க வெண்டும். அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர். ஒரு பையனுக்கு ஒரு மருத்துவ உதவி தேவைப்பட்டது. நான் தயங்கி கேட்டேன். ஆனால் அவர் அதை செய்து கொடுத்தார். நான் மருத்துவமனை போகும் முன்பே அவர் அங்கிருந்தார்.  முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் இப்படியான உதவிகளால் தான் இன்னும் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். மக்கள் மீது எப்படி ஈடுபாட்டோடு இருப்பாரோ அப்படித்தான் அவர் படங்களும் இருக்கும். ராஜு முருகன் அரசியல் பேசாமல் இருக்க மாட்டார், அதனால் அவரும் சட்டமன்றத்திற்குச் செல்ல வாழ்த்துகிறேன்" என்றார்.`

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்திருக்கும் ஒத்த செருப்பு படத்தின் அறிமுக விழாவில் பேசிய இயக்குநர் பாக்யராஜ், பார்த்திபன் குருவை மிஞ்சிய சிஷ்யன் என்று பாராட்டினார்.
  பயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் இயக்குநர் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. உலக அளவில் ஒரே ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே இடம்பெறும்படியாக 12 படங்கள் உண்டு. இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், அதையும் தாண்டிய சிறப்பை இந்த படம் பெற்றிருக்கிறது. 

  சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தின் அறிமுக விழா மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், கமல்ஹாசன், ஷங்கர், பாக்யராஜ் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.  விழாவில் பாக்யராஜ் பேசியதாவது,

  இந்த விழாவை பொறுத்தவரை பார்த்திபனை விட எனக்கு தான் இரட்டிப்பு மகிழ்ச்சி. ஏனென்றால் பார்த்திபன் என் சிஷ்யன். சிஷ்யன் என்பதை தாண்டி அவர் குருவை மிஞ்சிய ஒரு சிஷ்யன். 16 வயதினிலே படத்தில் நான் உதவி இயக்குனராக வேலை செய்த போது ஒரு காட்சியில் நான் சொன்ன ஒரு விஷயத்தை ஏற்று, கமல் சார் அப்படியே செய்தார். 

  உதவி இயக்குனர்கள் என்பவர்கள் படத்தின் இயக்குனராக தன்னை நினைத்து வேலை செய்ய வேண்டும். கடமைக்கு வேலை செய்யக்கூடாது என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தில் நடித்தது பற்றி பேசிய ஜீவா, படத்தில் தன்னுடன் பயணிகும் குதிரையிடம் மிதிவாங்கியதாக கூறினார். #Gypsy #Jiiva #NatashaSingh
  ஜீவா, நடாஷா சிங் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஜிப்ஸி’. ஜோக்கர் பட இயக்குனர் ராஜூ முருகன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஜீவா கூறும் போது, ’கற்றது தமிழ், ஈ போன்ற கதைகளில் ஏன் நடிப்பதில்லை என கேட்டுகொண்டே இருந்தனர். அப்படி ஒரு கதைதான் ஜிப்ஸி.

  இந்த கதையை ராஜு முருகன் சொன்னபோதே அதன் முக்கியத்துவத்தை உணர முடிந்தது. நாகூர், வாரணாசி, ஜோத்புர், காஷ்மீர் என இந்தியா முழுவதும் படமாக்கி இருக்கிறோம். வெள்ளை குதிரையொன்றும் படம் முழுக்க என்னுடன் நடித்திருக்கிறது.  அதற்கு கடலைமிட்டாய் வழங்கி நட்பாக்கிக் கொண்டேன். நடனம் ஆடும் திறமை கொண்ட அந்த குதிரை பல முறை என் கால்களை மிதித்திருக்கிறது. குதிரை மிதித்தால் எப்படி வலிக்கும் என்ற அனுபவம் சிலருக்கு இருக்கும். எனக்கு அந்த அனுபவம் இப்படத்தில் ஏற்பட்டது’ என்றார்.

  இயக்குனர் கூறும்போது, ’ஜிப்ஸி என்றால் நாடோடிகள் என்று அர்த்தம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் உள்ள மக்களின் வாழ்க்கை, அதன் பின்னணியில் உள்ள அரசியல், அதிகாரம் எளிய மக்களை எப்படி வதைக்கிறது, மனித நேயத்தை நோக்கி நகர வேண்டியதன் கட்டாய சூழல் உள்ளிட்ட வி‌ஷயங்கள் பற்றி இப்படம் பேசுகிறது. இதில் பல மொழிகள் பேசி நடித்திருக்கிறார் ஜீவா. எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கிறார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு. மேலும் சன்னி வைய்யன், லால் ஜோஸ், பாடகி சுசீலா ராமன், விக்ரம் சிங், கருணா பிரசாத் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்’ என்றார். #Gypsy #Jiiva #NatashaSingh #RajuMurugan

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜீவா நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Gypsy #Jiiva
  குக்கூ, ஜோக்கர் படங்களைத் தொடர்ந்து இயக்குனர் ராஜு முருகன் இயக்கி ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜிப்ஸி. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

  அதன் தொடர்ச்சியாக படத்தின் முதல் சிங்கிள் டிராக் ‘வெரி வெரி பேட்’ என்ற பாடல் படக்குழுவினரால் யூடியூபில் வெளியிடப்பட்டது. ராஜு முருகனின் வழக்கமான சிந்தனையும், அதிகாரத்துக்கு எதிரான முழக்கமாகப் பாடலாசிரியர் யுகபாரதியால் எழுதப்பட்ட வரிகளும் இருக்கும் காரணத்தினால் இணையத்தில் வெளியான சில மணிநேரத்துக்குள்ளேயே இப்பாடல் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.  நிஜவாழ்வில் களப்போராளிகளாக இருக்கும் நல்லக்கண்ணு, திருமுருகன் காந்தி, வளர்மதி, முகிலன், பியூஷ் மனுஷ் உட்பட பலர் இந்த பாடலில் தோன்றுகின்றனர். அவர்களுடன் நடிகர் ஜீவா, ராஜு முருகன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் இணைந்து நடித்து இருக்கின்றனர். இந்த பாடலை ராஜவேல் நாகராஜன் இயக்கி உள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் - கயல் ஆனந்தி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘பரியேறும் பெருமாள்’ படத்தை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #PariyerumPerumal #Kathir
  நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் தயாரிப்பாளராக அறிமுகமான படம் ‘பரியேறும் பெருமாள்’. இயக்குநர் ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ் இயக்கிய இந்த படத்தில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடித்துள்ளார். 

  கதிர் ஜோடியாக கயல் ஆனந்தியும், முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நடித்துள்ளனர்.


  சாதியை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. படமும் 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. இந்த நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி வாங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #PariyerumPerumal #Kathir #KayalAnandhi
   
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உயரம் குறைந்த நலிந்த கலைஞர்களுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் நிதி உதவி வழங்கியுள்ளார்கள். #TMJA
  தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (TMJA) தீபாவளி மலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பிக்பாஸ் புகழ் ஆரவ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

  செயற்குழு உறுப்பினர் முபாஷர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து தலைவர் கவிதா பேசினார்.
  சங்க செயலாளர் கோடங்கி வரவேற்று பேசினார்.  பின்னர் தீபாவளி சிறப்பு மலரை ஆரவ் வெளியிட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பெற்றுக் கொண்டார். அதன்பின், மிகவும் சிரமத்தில் இருக்கும் உயரம் குறைந்த நடிகர்களுக்கு சங்கம் சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது. நிதியை பெற்றுக் கொண்ட அவர்கள் சங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `வடசென்னை' படத்தின் விமர்சனம். #VadaChennaiReview #Dhanush #AishwaryaRajesh
  படத்தின் தொடக்கத்திலேயே ஒரு கொலை நடக்கிறது. சமுத்திரக்கனி, கிஷோர், பவன் குமார், சாய் தீனா உள்ளிட்ட நான்கு பேரும் இணைந்து அந்த கொலையை செய்கின்றனர். வடசென்னையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அமீர். அவரின் விசுவாசிகளாக சமுத்திரக்கனி, கிஷோர், பவன் குமார், சாய் தீனா நான்கு பேரும் வருகின்றனர். 

  ஆண்ட்ரியாவை திருமணம் செய்து கொண்ட அமீர் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்துகிறார். இந்த நிலையில், வடசென்னை இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கேரம் விளையாட்டு கிளப் ஒன்றை ஆரம்பிக்கிறார். கேரம் விளையாட்டின் மீது அதீத ஈர்ப்பு கொண்ட சாதாரண வடசென்னை இளைஞன் தனுஷுக்கு (அன்பு) கேரம் விளையாட்டில் தான் சாதிக்க வேண்டும் என்ற வெறி இருக்கிறது. அமீர் அவரை ஊக்கப்படுத்துகிறார்.  இதற்கிடையே அதே பகுதியில் இருக்கும் வாயாடி ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் (பத்மா), தனுஷுக்கும் இடையே அடிக்கடி மோதல் வருகிறது. இருவருக்கும் இடையேயான மோதலே அவர்களுக்கு இடையே காதல் வர காரணமாகிறது.

  எம்.ஜி.ஆர். இறக்கும் காலத்தில் நடக்கும் இந்த கதையில், வடசென்னை பகுதியில் உள்ள சாலைகளை அகலப்படுத்த திட்டமிடப்படுகிறது. சாலைகள் அகலப்படுத்தப்பட்டால் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த அமீர் மக்களுக்கு ஆதரவாக களமிறங்குகிறார். 

  சமுத்திரக்கனியும், கிஷோரும் காசுக்கு ஆசைப்பட்டு, அமீர் விட்ட தொழிலை மீண்டும் கையில் எடுக்கின்றனர். இதனால் போலீசில் சிக்கும் அவர்களை அமீர் பொது இடத்தில் வைத்து அடித்துவிடுகிறார். தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு பழிதீர்க்க சமுத்திரக்கனியும், கிஷோரும் சேர்ந்து திட்டமிடுகின்றனர்.  இந்த நிலையில், சாய் தீனாவுக்கும், தனுஷுக்கும் இடையே பிரச்சனை வருகிறது. இந்த பிரச்சனைக்கு பிறகு தனுஷின் கை ஓங்குகிறது.

  கடைசியில், வடசென்னையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அமீரின் தலைமை என்ன ஆனது? தனுஷ் அந்த ஏரியாவையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாரா? படத்தின் தொடக்கத்தில் கொலை செய்யப்பட்டவர் யார்? சமுத்திரக்கனி, கிஷோர் என்ன ஆனார்கள்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.  ஒவ்வொரு படத்திலும் தனது திறமையை நிரூபித்து வரும் தனுஷ், இந்த படத்திலும் அனைவரும் ஆச்சரியப்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். புதுப்பேட்டை படத்திற்கு பிறகு அதே சாயலில் தனுஷை பார்க்க முடிகிறது. ஐஸ்வர்யா ராஜேஷிடம் அடியும், திட்டும் வாங்கும் தனுஷ், எதிரிகளிடம் சண்டை செய்யும் காட்சிகள் ரசிக்க முடிகிறது. தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே வடசென்னை கதாபாத்திரத்திற்கு அப்பட்டமாக பொருந்தி இருக்கிறார்கள்.

  காக்கா முட்டை படத்திற்கு பிறகு ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். வடசென்னையில் வசிக்கும் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. வாயை திறந்தாலே இந்த பொண்ணு உண்மையாவே வடசென்னையா தான் இருக்குமோ என்று யோசிக்கும் அளவுக்கு அவரது நடிப்பு இயல்பாக இருக்கிறது. அழுத்தமான கதாபாத்திரத்தில் தனது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார்.  அமீர் இதுவரை ஏற்றிராத ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கிறார். ஒரு டானாக படத்தை தூக்கி நிறுத்துகிறார். சமுத்திரக்கனி, கிஷோர் இருவரும் சமமான கதாபாத்திரத்தில் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். ஆண்ட்ரியா வித்தியாசமான பழிவாங்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மற்றபடி டேனியல் பாலாஜி, பவன்குமார், கருணாஸ், பாவல் நவகீதன் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராதா ரவி அரசியல்வாதியாக முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கருணாஸ், சீனு மோகன், சுப்ரமணியன் சிவா, டேனியல் அனி போப் என மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் ஓட்டத்திற்கு வலுசேர்த்திருக்கிறார்கள்.

  பொதுவாகவே தனது யதார்த்தமான காட்சிகளின் மூலம் திரைக்கதை நகர்த்துவதில் கைதேர்ந்தவர் இயக்குநர் வெற்றிமாறன். வடசென்னையில் வாழும் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும், அவர்களின் சூழல், பேச்சு, அடிதடி சண்டை, வார்த்தைகள் என அனைத்தும் இயல்பாக அமையும்படி படத்தை இயக்கியிருக்கிறார் வெற்றிமாறன். முதல் பாதி சற்றே மெதுவாக சென்றாலும் சிறிது நேரத்தில் காட்சிகள் வேகமெடுப்பது, திரைக்கதைக்கு பலமாகிறது. வசனங்கள் வடசென்னைக்கு சென்று வந்த அனுபவத்தை கொடுக்கிறது.  உண்மைக் கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தின் முதல் பாகத்தின் முடிவு, அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டுகிறது. எனினும் அடுத்தடுத்த இதன் இரண்டாம் பாகம் 2019-லும், மூன்றாம் பாகம் 2020-லும் வெளியாக இருக்கிறது.

  சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் செம ஹிட், பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். வேல்ராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.

  மொத்தத்தில் `வடசென்னை' அதகளம். #VadaChennaiReview #Dhanush #AishwaryaRajesh

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வடசென்னை படம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், திரையில் என்றுமே போட்டி தொடரும், வடசென்னை வெற்றி பெற வாழ்த்துக்கள் என சிம்பு குறிப்பிட்டுள்ளார். #VadaChennai #Dhanush
  வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்துள்ள படம் வடசென்னை. இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப், பவல் நவகீதன், சாய் தீனா, சரண் சக்தி, பவர்பாண்டி விக்கி, சோமு என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்த படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகி இருக்கிறது.

  வடசென்னை ரிலீசை ஒட்டி தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள சிம்பு அதில் கூறியிருப்பதாவது,  அருமை நண்பர் தனுஷ், வெற்றிமாறன் மற்றும் வடசென்னை படக்குழுவுக்கு எனது சார்பாகவும், எனது ரசிகர்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள். திரையில் நமக்கிடையே போட்டி தொடரும், சமூக வலைதளங்களில் அல்ல. ஒரு நல்ல தரமான படத்தை என்றுமே ஆதரிக்க வேண்டும் என்று எனது ரசிகர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

  இவ்வாறு சிம்பு குறிப்பிட்டுள்ளார். #VadaChennai #Dhanush #STR

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print