தவறான நிர்வாகமே காரணம்- கொதித்தெழுந்த சந்தோஷ் நாராயணன்

வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.சந்தோஷ் நாராயணன் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவறான நிர்வாகமே காரணம்- கொதித்தெழுந்த சந்தோஷ் நாராயணன்
Published on

மிச்சாங் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மக்களை மீட்கும் முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், "10 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் பகுதியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு, முழங்கால் அளவு தண்ணீர், குறைந்தது 100 மணிநேரம் மின்வெட்டு என்பது முகத்தில் அறையும் உண்மை. இது ஒரு ஏரியோ அல்லது தாழ்வான பகுதியோ அல்ல. சென்னையின் மற்ற பகுதிகளை விட எங்களிடம் ஏராளமான திறந்தவெளி நிலங்களும், குளங்களும் உள்ளன. வெறும் அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை ஆகியவையே மழை நீர் மற்றும் கழிவுநீர் ஒரே ஒரு பாசனக் கால்வாயில் சென்று சேர்வதற்கு வழிவகுத்துள்ளது. அது ஒவ்வொரு முறையும் ஆறு போல் பெருக்கெடுத்து எங்கள் குடியிருப்புகளை தாக்குகிறது.

இந்த நேரத்தில் ஏதேனும் நோய் அல்லது மருத்துவ அவசரநிலை ஆகியவை மரணத்தில் முடிகிறது. எங்கள் பகுதி மக்களைச் சென்றடையவும், அவர்களுக்கு ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் தொட்டிகளை நிரப்பவும், மீட்பு மற்றும் பிற முக்கியமான தேவைகளுக்கு உதவவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறேன். மீட்புப் பணிகளுக்காக என்னிடம் ஒரு படகு மற்றும் பல பம்புகள் நிரந்தரமாக உள்ளன.

சென்னைவாசிகளின் நம்பிக்கைக்கு பாராட்டுகள், நான் செல்லும் இடங்களில் எல்லாம் மிகவும் நெகிழ்ச்சியும் நேர்மறை எண்ணங்களும் நிலவுகின்றன. தீர்வுக்கான முயற்சி இருக்கும் என நம்புகிறேன். பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com