என் மலர்
ராணிப்பேட்டை
- கலெக்டர் உத்தரவு
- காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடவடிக்கை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சி களிலும் காந்தி ஜெயந்தி முன்னிட்டு வருகிற 2-ந் தேதி அன்று காலை 11 மணிக்கு கிராம சபைக்கூ ட்டங்கள் தவறாமல் நடத்தப்பட வேண்டுமென அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கிராம சபைக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செல வினம் குறித்து விவாதித்தல் வடகிழக்கு பருவமழை முன்னெச்ச ரிக்கை நடவ டிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம் உள்பட பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை கண்கா ணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு ள்ளார்கள்.
மேற்கண்ட தகவலை ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளார்.
- மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது
- 127 பேர் கலந்துகொண்டனர்
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள வட்டார வளமைய அலுவலக வளாகத்தில் நேற்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலம் மற்றும் கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் லதா நரசிம்மன், பள்ளிக்கல்வி துறை உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் மொத்தம் 127 பேர் கலந்துகொண்டனர். இதில் மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை 79 பேருக்கு வழங்கப்பட்டது.
மேலும் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைக்கோரி 57 பேரும், மருத்துவ காப்பீடுக்கோரி 36 பேரும், பராமரிப்பு நிதியுதவி வழங்கக்கோரி 35 பேரும், பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கக்கோரி 17 பேரும் பதிவு செய்தனர்.
இதில் வட்டார கல்வி அலுவலர் பவானந்தன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகாந்த், மேற்பார்வையாளர் அப்பாஸ் அலி, ஆசிரியர் பயிற்றுனர்கள் நிஷாந்த், ஸ்ரீதர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
- மிலாடி நபி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடவடிக்கை
- கலெக்டர் அறிக்கை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூ டங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஒட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் நாளை 28-ந்தேதி (வியாழக்கிழமை) மிலாடி நபி மற்றும் வருகிற அக்டோபர் 2-ம் தேதி (திங்கள் கிழமை) காந்தி ஜெயந்தி நாட்களில் மதுபான கடைகளை மூடி வைக்க வேண்டும். அந்த நாட்களில் மதுபானங்களை விற்பனை செய்ய கூடாது.
விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால் மதுக்கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், உரிமங்களை ரத்து செய்தல், மதுக்கூட உரிமை தாரர்கள் மீது நடவடிக்கை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.
- அமைச்சர் ஆர்.காந்தி குத்து விளக்கேற்றி ெதாடங்கி வைத்தார்
- முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சிமூலம் திறந்து வைத்தார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9 அரசுப் பள்ளிகளில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.3கோடியே 67 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்களை முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று காணொளி காட்சிமூலம் திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து ராணிப்பேட்டை அடுத்த வி.சி. மோட்டுர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 6 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.
கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதல் அமைச்சர் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இணையாக முன்னேற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளையும், பழுதடைந்த பழைய பள்ளிக் கட்டிடங்களை அகற்றி பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளையும் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழுத் தலைவர் சேஷாவெங்கட், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் கடப்பேரி சண்முகம்,ஊராட்சி மன்றத் தலைவர் முனுசாமி, ஒன்றிய கவுன்சிலர் வசந்தி கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கடன்பிரச்னை காரணமா?
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த புதிய அக்ராவரம் பகுதியை சேர்ந்தவர் மணி இவரது மனைவி கீதா (வயது 45). இவர் சிப்காட் மலைமேடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கீதா தனியார் நிறுவனம் ஒன்றில் கடன் பெற்றிருந்ததாகவும், மேலும் கடனை கட்ட முடியாததால் மன வேதனையில் இருந்துள்ளார்.
இதனால் நேற்று வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த கீதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவலறிந்த சிப்காட் போலீசார் கீதா கடன்பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3 குழந்தைகளின் தந்தை போக்சோவில் கைது
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 38). இவர் வேலூரில் உள்ள சுவீட் கடை ஒன்றில் சரக்கு மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவரது மனைவி உஷா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இறந்து விட்டார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை ஆசை வார்த்தைக்கூறி தனது வீட்டிற்கு வரவழைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் சிறுமியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகமடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர்.
அப்போது நடந்ததை கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதைதொடர்ந்து போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மோகன்தாசை கைது செய்தனர்.
- சோளிங்கர் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
- பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட உளியநல்லூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகமும், ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா சதாசிவம் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள், ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக சோளிங்கர் எம்.எல்.ஏ. முனிரத்தினம் கலந்துகொண்டு புதிய கட்டிடம் கட்டும் பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி,பிரபாகரன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பொன்னுரங்கம், ஒன்றிய கவுன்சிலர் கவுரி வேலாயுதம், மாவட்ட பிரதிநிதி சம்பத், கிளை செயலாளர்கள் ரவிச்சந்திரன், மணி, ஜெயக்குமார், காங்கிரஸ் நெமிலி ஒன்றிய தலைவர் நந்தகுமார், துணைத்தலைவர் கீழ்வீதி பாலாஜி, வேலு உட்பட கலந்து கொண்டனர்.
- அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன வளாகத்தில் ரூ.1 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட அரசு மாதிரி உண்டு உறைவிட பள்ளி திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி , திறந்து வைத்து குத்து விளக்கேற்றி வைத்து பேசினார்.
விழாவில் ஆற்காடு ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, பள்ளி தலைமை ஆசிரியர் பிச்சைக்காரன், நகரமன்ற வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. கவுன்சிலர் குற்றச்சாட்டு
- அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் நடந்தது
அரக்கோணம்:
அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் நிர்மலா சவுந்தர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அன்வதிர்க்கான் பேட்டை ஊராட்சி ஒன்றிய தி.மு.க கவுன்சிலர் குமார் பேசுகையில்:-
100 நாள் வேலையில் பல முறைகேடுகள் நடப்பதாக ஆவேசமாக கூறினார்.
ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சவுந்தர் இந்த முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கூட்டத்தில் ஒன்றிய குழு துணை தலைவர் புருஷோத்தமன், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ரவிச்சந்திரன், சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
- மின் கட்டணத்திற்கான 430 சதவீத நிலை கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்
- மாவட்ட பொதுச்செயலாளர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை எம்மரிங் லெதர் தொழில்கள் சங்கம் , பெருந்தலைவர் காமராஜர் குறுந்தொழில்கள் சங்கம், பெல் சப்ளையர்ஸ் அசோசியேஷன், பெல் ஆன்சிலரி அசோசியேசன் அரக்கோணம் சிட்கோ மேனுஃபேக்சரர்ஸ் அசோசியேசன், ராணிப்பேட்டை சாமில் ஓனர் அசோசியேஷன், அம்மூர் நெல் அரிசி வியாபாரிகள் சங்கம் ஆகிய சங்கங்களின் சார்பில் தொழிற்சாலைகளுக்கு மின் கட்டண உயர்வு செய்துள்ள நிலை கட்டணம், பரபரப்பு நேர கட்டணம் ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும், சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி சிறு, குறு தொழிற்சாலைகள் சங்கம் சார்பில் அனைத்து கடைகளும் மூடப்பட்டது.
முழு அடைப்பு போராட்டத்தை தொடர்ந்து ராணிப்பேட்டை சிப்காட் , சோளிங்கர் அரக்கோணம் திமிரி மற்றும் மாவட்டம் முழுவதிலும் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன எனவும், மின் கட்டணத்திற்கான 430 சதவீத நிலை கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே உண்ணாவிரதம், கோரிக்கை , மின்னஞ்சல், ஸ்பீட் போஸ்ட் மனுக்கள் அனுப்புதல் ஆகிய போராட்டங்களில் ஈடுப்பட்டனர்.
இருப்பினும் இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை நடத்துவதாக ராணிப்பேட்டை மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் முரளி தெரிவித்தார்.
- 100 கிலோ சிக்கியது
- வேலூர் டிரைவர் கைது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில் வாலாஜா போலீசார் நேற்று வாலாஜா- பாலாறு அணைக்கட்டு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மினிவேன் ஒன்று போலீசாரை பார்த்ததும் நிற்காமல் சென்றது. இதை பார்த்த போலீசார் வாகனத்தை விரட்டி சென்று மடக்கி பிடித்து நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் 6 அட்டை பெட்டிகளில் சுமார் 100 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் இருந்தது. வேலூரில் இருந்து எடுத்து வந்து கிராமப்புறங்களில் உள்ள பங்கடைகளில் விநியோகம் செய்ய வந்ததும் தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் மினிவேனுடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். வேன் டிரைவர் வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த ஜெய்கணேஷ் (வயது 45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.