என் மலர்
நீங்கள் தேடியது "மாணவிகள் படுகாயம்"
- கல்லூரி பஸ் இன்று காலை 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுடன் சோளிங்கர்-வாலாஜா சாலையில் வந்தது.
- தகவல் அறிந்த கொண்டபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
புலிவலம்:
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி பஸ் இன்று காலை 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுடன் சோளிங்கர்-வாலாஜா சாலையில் வந்தது.
பெருங்காஞ்சி ஏரிக்கரை பகுதியில் வந்தபோது எதிரே வந்த தனியார் நிறுவனத்தின் லாரி கட்டுப்பாட்டை இழந்து கல்லூரி பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் கல்லூரி பஸ்சில் வந்த மாணவிகள், 2 டிரைவர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கொண்டபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பூந்தமல்லி:
குன்றத்தூரில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இன்று காலை குன்றத்தூரை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து மாணவ- மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளி வேன் வந்தது. சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் வேனில் இருந்தனர்.
தரைப்பாக்கம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் திடீரென தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் வேனில் இருந்த பெண் பணியாளர் குன்றத்தூரை சேர்ந்த சித்ரா, மற்றும் 15 மாணவ - மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.
அப்பகுதி மக்கள் வேனில் சிக்கியவர்களை மீட்டனர். பின்னர் படுகாயம் அடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பள்ளி வேனை ஒட்டிய டிரைவர் மது போதையில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரை மடக்கி பிடித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசில் ஒப்படைத்தனர்.
டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பு.புளியம்பட்டி:
சத்தியமங்கலம் பகுதியில் செயல்படும் ஒரு தனியார் பள்ளி பஸ் புஞ்சைபுளியம் பட்டிக்கு வந்தது. அங்கு மாணவிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. பஸ்சில் 45 மாணவிகள் இருந்தனர். பஸ்சை சத்திய மங்கலம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் ஓட்டி சென்றார்.
புங்கம்பள்ளி தனியார் மில் அருகே வந்தபோது பஸ்சின் பின் பக்கத்தின் வலது ஓரத்தில் அந்த வழியாக வந்த லாரி மோதியது.
இதில் பஸ்சின் ஜன்னலுக்கு மேல் இருக்கும் கண்ணாடிகள் உடைந்தன. இந்த விபத்தில் பஸ்சின் பின் பக்கத்தில் இருந்த சுருதி (வயது 11), யஷ்வந்திகா, அவந்திஸ்ரீ, சம்ரிகா உள்பட 5 மாணவிகள் காயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் சுருதியின் கன்னத்தில் உடைந்த கண்ணாடியால் காயம் ஏற்பட்டது.
எனவே அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






