என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "injured"
- காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- தாக்குதல் நடத்திய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் துப்பாக்கிச்சூடுஅமெரிக்காவின் கென்டக்கி மாகாணம் லெக்சிங்டனுக்கு தெற்கே கிராமப்புற பகுதியில் உள்ள இன்டர்ஸ்டேட் 75 நெடுஞ்சாலையில் வாலிபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அவர் சரமாரியாக சுட்டதில் 7 பேர் காயம் அடைந்தனர். பின்னர் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதல் நடத்திய நபரை போலீசார் தேடி வருகிறார்கள். இதையடுத்து சாலையின் இருபுறமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. துப்பாக்கி சூடு நடத்திய நபர் 32 வயதான ஜோசப் ஏ. கூச் என்பது தெரியவந்துள்ளது.
- ரஷியாவின் பெல்கோரோட் நகர் மீது உக்ரைன் ராணுவம் சரமாரியாக குண்டுகளை வீசி தாக்கியது.
- தாக்குதலில் உயிரிழப்புகள் மற்றும் பெரிய அளவில் பொருள் சேதங்கள் ஏற்பட்டதாக பெல்கோரோட் பிராந்திய கவர்னர் தெரிவித்தார்.
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 2½ ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இரு தரப்பும் அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்வராமல் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
குறிப்பாக ரஷியா மீதான தாக்குதலை உக்ரைன் அண்மை காலமாக தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஷிய தலைநகர் மாஸ்கோவின் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலை உக்ரைன் நடத்தியது.
இந்த நிலையில் உக்ரைன் எல்லையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ரஷியாவின் பெல்கோரோட் நகர் மீது உக்ரைன் ராணுவம் சரமாரியாக குண்டுகளை வீசி தாக்கியது.
பெல்கோரோட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் மற்றும் பெரிய அளவில் பொருள் சேதங்கள் ஏற்பட்டதாக பெல்கோரோட் பிராந்திய கவர்னர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்தார்.
இதுப்பற்றி அவர் கூறுகையில், "உக்ரைனின் குண்டு வீச்சில் ஒரு பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 6 சிறுவர்கள் உள்பட 37 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது" என்றார்.
- காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- விபத்து குறித்து தகவல் அறிந்த உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத், மீட்பு பணிக்காக உயர் அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் இன்று அதிகாலையில் டபுள் டக்கர் பேருந்து ஒன்று பால் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.
லக்னோ- ஆக்ரா விரைவுச் சாலையில் பீகாரில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த டபுள் டக்கர் பேருந்து, பால் கண்டெய்னர் லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட தகவலின்படி, விபத்தில் 18 பேர் இறந்திருக்கலாம் என்றும் 19 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத், மீட்பு பணிக்காக உயர் அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
- படுகாயமடைந்த மூன்று பயணிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது பேருந்து விபத்துக்குள்ளானது.
குஜராத்தின் டாங் மாவட்டத்தில் இன்று 64 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து நெடுஞ்சாலையில் பாதுகாப்புச் சுவரை இடித்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
சொகுசுப் பேருந்து சூரத்தில் இருந்து சபுதாராவுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது, இன்று மாலை 5 மணியளவில், மலை நகரமான சபுதாராவிலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்து பாதுகாப்புச் சுவரை இடித்து கவிழ்ந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில், படுகாயமடைந்த மூன்று பயணிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காயமடைந்த மற்ற நபர்கள் சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
நெடுஞ்சாலையில் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது பேருந்து பாதுகாப்புச் சுவரை இடித்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக தெரியவந்துள்ளது.
- குரங்குக்கு வாழை இலையில் தடல் புடல் சாப்பாடு விருந்து வழங்கப்பட்டது.
- வயிறு நிறைந்ததும் அது தனக்குரிய வேலையை காட்ட தொடங்கியது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் ஹிரிசாவே நுகேஹள்ளி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று திருமண விழா நடைபெற்றது. விழாவில் மணமகன் வீட்டார், மணமகள் வீட்டார் ஏராளமானோர் குவிந்தனர்.
திருமணம் முடிந்ததும் மண்டபத்தில் விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் சுட சுட சுவையான உணவு விருந்து பரிமாறப்பட்டது. அப்போது குரங்கு ஒன்று மண்டபத்திற்குள் புகுந்து மாப்பிள்ளையின் அருகில் அமர்ந்தது.
அந்த குரங்குக்கு வாழை இலையில் தடல் புடல் சாப்பாடு விருந்து வழங்கப்பட்டது. அது ஹாயாக பந்தியில் உட்கார்ந்து ருசிக்க, ருசிக்க சாப்பிட்டது. வயிறு நிறைந்ததும் அது தனக்குரிய வேலையை காட்ட தொடங்கியது.
பந்தியில் சாப்பிட்டு கொண்டிருந்த மற்றவர்களின் வாழை இழைகளை பிடித்து இழுத்தும், அதில் இருந்த உணவுகளை கீழே இழுத்து போட்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டது.
மேலும் நாற்காலியிலும், மேஜையிலும் தாவி, தாவி குதித்து இலையில் இருந்த உணவுகளை தூக்கி வீசியது.
மேலும் திருமண விழாவிற்கு வந்திருந்த சுசீலாம்மா, லீலாவதி, நிங்ககவுடா, கவுரம்மா, கிரிஜாம்மா மற்றும் மஞ்சுஸ்ரீ என்ற 7 வயது சிறுமி ஆகியோரை துரத்தி துரத்தி கடித்து குதறி காயப்படுத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த திருமணத்திற்கு வந்த 2 வீட்டார் உறவினர்களும் அங்கும், இங்குமாக ஓடினர்.
பின்னர் அங்கிருந்து வெளியே வந்த குரங்கு அதே சாலையில் உள்ள மாவு ஆலைக்குள் புகுந்து ஹொன்ன ஹள்ளியை சேர்ந்த கிரிகவுடா, திம்மே கவுடா ஆகியோைரயும் கடித்து குதறியது. இவர்கள் அனைவரும் ஹிரிசாவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 4 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதால் மேல்சிகிச்சைக்காக ஹாசன் மற்றும் ஆதிசுஞ்சனகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமண நிகழ்ச்சியில் குரங்கு புகுந்து அட்டகாசம் செய்த சம்பவம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
- 9 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது.
- விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தகவல்.
ரஷியாவின் வடகிழக்கு பகுதியான கோமியில் உள்ள வோர்குடா நகரில் இருந்து கருங்கடல் துறைமுக பகுதியான நோவோரோசிஸ்க் நகருக்கு பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது.
அதில் 500-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இன்டா நகர் அருகே சென்றபோது ரெயில் தடம் புரண்டது.
9 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது. இந்த விபத்தில் 70 பேர் காயம் அடைந்தனர். விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கனமழை காரணமாக விபத்து ஏற்பட்டதாக ரஷிய ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. விபத்து நடந்த பகுதிக்கு இரண்டு மீட்பு ரெயில்களுடன் மீட்புப் படையினர் சென்றுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவசர சேவை மற்றும் மருத்துவ குழுக்கள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். கனமழையே விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
500-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ரெயில் ஆர்க்டிக் வட்டத்திற்கு அருகிலுள்ள சுரங்க நகரமான வோர்குடாவிலிருந்து நோவோரோசிஸ்க் கருங்கடல் துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வகுப்பு ஆசிரியர் மாணவியை தூக்கிக்கொண்டு முதல் உதவி சிகிச்சை அளித்தார்.
- மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள சீலையம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டி மகள் ரித்திகா (வயது8) என்பவர் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவி தனது வகுப்பறையில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தார். அப்போது இந்த வகுப்பறையில் பழுதான மேற்கூரை கட்டிடம் இடிந்து மாணவியின் தலை மீது விழுந்தது. இதில் மாணவிக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதை பார்த்ததும் அருகில் இருந்த மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
உடனே வகுப்பு ஆசிரியர் மாணவியை தூக்கிக்கொண்டு முதல் உதவி சிகிச்சை அளித்தார். பின்னர் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அலறியடித்துக் கொண்டு பள்ளிக்கு ஓடி வந்தனர். பின்னர் நடந்த விபரத்தை கேட்டு அழுதபடியே மாணவியை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் பள்ளியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளிகள் திறப்புக்கு முன்பு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிமாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தயாராக செய்து கொடுக்க வேண்டும். பழுதடைந்த கட்டிடங்கள், சுவர்கள் ஆகியவற்றை இடித்து பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டும் பெரும்பாலான பள்ளிகள் இதனை பின்பற்றுவதில்லை. எனவே இனிமேலாவது அதிகாரிகள் பள்ளிகளில் பாதுகாப்பு வசதிகள் சரியான முறையில் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- எத்தனை நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் போலீசார் தரப்பில் இருந்து கூறப்படவில்லை.
- அடுத்தடுத்து நிகழும் துப்பாக்கி சூடு சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவின் தெற்கு ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள போர்டைஸ் என்ற பகுதியில் சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்த நிலையில், தாக்குதலை நடத்தியவர் யார், துப்பாக்கி சூடு கடைக்கு வெளியே நடந்ததா அல்லது உள்ளே நடந்ததா உள்ளிட்ட விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.
சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு நடந்த ஒரு நாள் கழித்து கென்டக்கி லூயிஸ்வில்லியில் உள்ள நைட் கிளப்பிற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 7 பேர் காயமடைந்தனர்.
சனிக்கிழமை நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயங்களுடன் இருவர் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. மேலும் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
மேலும் எத்தனை நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் போலீசார் தரப்பில் இருந்து கூறப்படவில்லை.
அடுத்தடுத்து நிகழும் துப்பாக்கி சூடு சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
- பொதுவான குழாயில் இருந்து தண்ணீர் நிரப்புவதில் தகராறு.
- சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
தேசிய தலைநகர் டெல்லி நகரில் கடுமையான வெப்பம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பொது மக்கள் குடிநீர் பெறுவதற்கு படாத பாடுபட்டு வருகின்றனர்.
தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த சூழலுக்கு மத்தியில், துவாரகாவில் பொதுவான குழாயில் இருந்து தண்ணீர் நிரப்புவதில் ஏற்பட்ட தகராறில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
டெல்லி செக்டார் 23, துவாரகாவில் நடந்த சண்டை தொடர்பாக இரண்டு காவல் துறைக்கு அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், " விசாரணையில் தகராறு காரணமாக மூன்று பேர் காயமடைந்துள்ளது தெரியவந்துள்ளது. சிகிச்சைக்காக இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதி.
இரு தரப்பினரின் வாக்குமூலத்தின் பேரில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கை விசாரிக்க குழுக்கள் அமைக்கப்பட்டன," என்றார்.
- சாலையில் சென்றுக் கொண்டிருந்தவர்கள் மீது ஆட்டோ மோதி விபத்தை ஏற்படுத்தியது.
- விபத்தில், 5 பேர் காயமடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் ஆட்டோ மீது பைக் ஒன்று வேகமாக மோதியது. இதில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் சுழன்றடித்தது.
இதனால், சாலையில் சென்றுக் கொண்டிருந்தவர்கள் மீது ஆட்டோ மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில், 5 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்," ஆட்டோ ஒன்று யு டர்ன் எடுக்க முயல்கிறது. அப்போது அந்த வழியாக வந்த பைக் ஆட்டோ மீது மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார்.
அப்போது, ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து ஓட்டுனர் இல்லாமலேயே வேகமாக சுற்றி தாறுமாறாக ஓடியது. இதில், பொது மக்கள் மீது மோதி கீழே விழுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
- கோவில் வளாகத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர்.
- பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்த சிறுவர்கள் தீக்காயமடைந்தனர்.
மயிலம்:
மயிலம் அருகே செண்டூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு கர்ண மோட்சம் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, அதற்காக கோவில் வளாகத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர்.
இதில் அங்கிருந்த அவுட்டு மற்றும் சரவெடிகள் மீது எதிர்பாரத விதமாக தீப்பொறி விழுந்தது. இதனால் அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்த சிறுவர்கள் தீக்காயமடைந்தனர்.
அங்கிருந்தவர்கள் தீக்காயமடைந்த சக்திவேல் மகன்கள் கவியழகன் (வயது 7), தமிழழகன் (5) சுப்பிரமணியன் மகன் கவுஷிக் (7), காளி மகன் அன்பு (10), சிவமூர்த்தி மகன் உதயா (7), எடையப்பட்டு நாடக ஆசிரியர் சீனுவாசன் (47) ஆகியோரை மீட்டு திண்டிவனம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதில் சிறுவன் உதயாவை மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
- உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கெடிலம் மேம்பாலம் அருகேயுள்ள கிராசிங் ரோட்டை வேன் கடந்த போது, தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது.
- சாலை அருகே கவிழ்ந்த வேனை அப்புறப்படுத்திய போலீசார், போக்குவரத்தை சீர்செய்து, விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 15 பேர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஊட்டிக்கு ஒரு வேனில் சுற்றுலா சென்றனர். இந்த வேனை கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மோகன் (வயது 45) என்பவர் ஓட்டிச் சென்றார்.
ஊட்டியில் பல்வேறு சுற்றுலா தளங்களை கண்டு மகிழ்ந்த அவர்கள் பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு சுற்றுலாவை முடித்து கொண்டு நேற்று இரவு வீட்டிற்கு புறப்பட்டனர்.
இன்று அதிகாலை 5.30 மணிக்கு இந்த வேன், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கெடிலம் மேம்பாலம் அருகேயுள்ள கிராசிங் ரோட்டை கடந்த போது, தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது. இதில் வேனுக்குள் சிக்கியிருந்தவர்கள் அலறல் சத்தம் போட்டனர். இதனை கேட்டு அவ்வழியே சென்றவர்கள் வேனில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அஷ்டலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் படுகாயமடைந்த வேன் டிரைவர் மோகன், அதில் பயணம் செய்த கவிதா (35), பிரபாகரன் (40), லட்சுமி (35), புகழேந்தி (50), ஆன்டிரியா (40) ஆகியோர் படுகாயமடைந்தனர். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மாற்று வாகனம் மூலம் கும்மிடிப்பூண்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து சாலை அருகே கவிழ்ந்த வேனை அப்புறப்படுத்திய போலீசார், போக்குவரத்தை சீர்செய்து, விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்