என் மலர்
நீங்கள் தேடியது "லாரி விபத்து"
- ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மூதாட்டி மீது மோதி கவிழ்ந்தது.
- இந்த விபத்தால் திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பியபோது, அதே லாரி மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலையாகும். இந்த நிலையில், சென்னையில் இருந்து கர்நாடகாவிற்கு 16ஆயிரம் லிட்டர் கொள்ளவு டீசல் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது, திருவண்ணாமலை அடுத்த அரசம்பட்டில் லாரி வருவதை கவனிக்காத மூதாட்டி கனகாம்பரம் (70) என்பவர் சாலையை கடக்க முயன்றார்.
மூதாட்டி மீது லாரியை மோதாமல் இருக்க திருப்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மூதாட்டி மீது மோதி கவிழ்ந்தது. இதில் மூதாட்டி கனகாம்பரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் லாரி கவிழ்ந்து டீசர் ஆறாக ஓடியதால், கிராம மக்கள் கேன், குடம் உள்ளிட்டவற்றில் டீசலை நிரப்பிச் சென்றனர். இந்த விபத்தால் திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- ஒரு கார் லாரிக்கும், முன்னால் சென்ற கண்டெய்னர் லாரிக்கும் இடையில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று மாலை நவாலே பாலத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
பாலத்தில் 8 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து காவல்துறை கூறுகையில், சத்தாராவில் இருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, பிரேக் செயலிழந்ததால் நவாலே பாலத்தின் சரிவில் மாலை 5.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்தது.
அந்த லாரி வழியில் பல வாகனங்களை மோதியது. இதில் ஒரு கார் லாரிக்கும், முன்னால் சென்ற கண்டெய்னர் லாரிக்கும் இடையில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது
இதனையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை அணைத்து, சேதமடைந்த கார் மற்றும் கண்டெய்னரில் இருந்து சடலங்களை மீட்டனர்.
உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இதே பகுதியில் பிரேக் பிடிக்காத லாரி ஒன்று 48 வாகனங்களை இடித்து விபத்தை ஏற்படுத்திய விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
- சிலிண்டர்கள் வெடித்து சிதறுவதால் தீயை கட்டுப்பட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
- வளைவில் திரும்பும் போது சிலிண்டர் லாரி விபத்தில் சிக்கியுள்ளது.
அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி விபத்தில் சிக்கியதால் பலத்த சத்தத்துடன் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சிலிண்டர்கள் வெடித்து சிதறுவதால் தீயை கட்டுப்பட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையை முற்றிலுமாக மூடி வாகனங்கள் வேறு சாலைக்கு மாற்றி விடப்பட்டுள்ளது.
வளைவில் திரும்பும் போது சிலிண்டர் லாரி விபத்தில் சிக்கியுள்ளது. இன்று காலை ஏற்பட்ட விபத்தால் லாரியில் இருந்த சிலிண்டர்கள் வெடித்ததால் பல கிலோ மீட்டருக்கு கேட்ட சத்தத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
சிலிண்டர் லாரி எங்கிருந்து வந்தது, லாரியில் யாரெல்லாம் இருந்தார்கள், அவர்களின் நிலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீப்பிழம்புகளும் வெடிப்பு சத்தமும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு எதிரொலித்தன.
- இதே நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த இதேபோன்ற விபத்தில், எண்ணெய் டேங்கர் வெடித்து 19 பேர் பலியாகினர்.
ராஜஸ்தானில் இன்று இரவு எல்.பி.ஜி சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரியுடன் மற்றொரு லாரி மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
டுடு பகுதியில் ஜெய்ப்பூர் - அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்த உடனே சிலிண்டர்கள் வெடிக்கத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அருகில் இருந்த வாகனங்களும் சேதமடைந்தன. தீப்பிழம்புகளும் வெடிப்பு சத்தமும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு எதிரொலித்தன.
தகவல் அறிந்ததும் காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து நெடுஞ்சாலையில் போக்குவரத்தை நிறுத்தினர்.
சம்பவம் குறித்து பேசிய துணை முதலமைச்சர் பிரேம் சந்த் பைரவா, லாரிகளின் ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்களைக் காணவில்லை என்றும் அவர்களைத் தேடும் பணி நடைபெறுவதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுவரை உயிரிழப்பு குறித்த தகவல் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
இதே நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த இதேபோன்ற விபத்தில், எண்ணெய் டேங்கர் வெடித்து 19 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
- விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லாரி சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை பூந்தமல்லி அருகே தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி மோதி 2 பேர் பலியாகினர்.
சென்னீர்குப்பத்தில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு சென்னை நோக்கி சென்ற தண்ணீர் லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் நடந்து சென்ற இளைஞர் மற்றும் ஒரு பெண் மீது மோதியது.
இந்த விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த தேவி என்ற பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
தண்ணீர் லாரி ஓட்டுநரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள், ஓட்டுநர் போதையில் இருந்ததே விபத்திற்கு காரணம் என குற்றம்சாட்டினர்.
விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லாரி சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி என தகவல் வெளியாகி உள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திறந்திருந்த ரெயில்வே கேட் வழியாக கண்டைனர் லாரி கிராசிங்கை கடக்கும்போது அதன் மீது ரெயில் மோதியது.
- சரக்கு ரெயிலின் முன் புறமும் கடுமையாக சேதமடைந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரெயிலும் கண்டைனர் லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் அயோத்தியா - ராய்பரேலி ரெயில்வே கிராஸிங் அருகே இன்று அதிகாலை இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது.
அதிகாலை 2.30 மணியளவில் அந்த தடத்தில் சரக்கு ரெயிலானது வந்துகொண்டிருந்தது. அப்போது திறந்திருந்த ரெயில்வே கேட் வழியாக கண்டைனர் லாரி கிராசிங்கை கடக்கும்போது அதன் மீது ரெயில் மோதியது.
இதில் படுகாயமடைந்த லாரியின் ஓட்டுநர் சோனு சவுத்ரி (28), மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக போலீசார் கூறினார்.
மேலும் சம்பவத்தின்போது கேட் மேன் அங்கு இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்தில் லாரி முற்றிலுமாக சேதமடைந்தது. சரக்கு ரெயிலின் முன் புறமும் கடுமையாக சேதமடைந்துள்ளது.
மேலும் ரெயில் பாதை மற்றும் மின்சார கட்டமைப்புகள் சேதமடைந்ததால் அவ்வழியாக ரெயில் இயக்கம் தடைபட்டுள்ளது. ரெயில் பாதையை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் போக்குவரத்து சீரமைக்கப்படும் என்றும் வடக்கு ரெயில்வேவின் லக்னோ பிரிவின் ரயில்வே கோட்ட மேலாளர் சச்சீந்தர் மோகன் சர்மா தெரிவித்தார்.
- மும்பை சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் இருந்து அமராவதி நோக்கி மும்பை-அமராவதி எக்ஸ்பிரஸ் வந்துகொண்டிருந்தது.
- ரெயிலின் வேகம் குறைவாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மகாராஷ்டிராவின் மும்பை சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் இருந்து அமராவதி நோக்கி மும்பை-அமராவதி எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை பயணித்துக்கொண்டிருந்தது.
ஜல்கான் மாவட்டத்தில் உள்ள போட்வாட் ரெயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் ரெயில் வந்துகொண்டிருந்தபோது கோதுமை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று ரெயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றது.
அப்போது ரெயில் லாரி மீது மோதி சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு அதை இழுத்துச் சென்றது. இதில் லாரி இரண்டாக உடைந்தது. ரெயிலின் வேகம் குறைவாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
விபத்துக்குப் பிறகு லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை காவல்துறையினரும் ரெயில்வே நிர்வாகமும் தேடி வருகின்றனர்.
லாரி ரெயில்வே தடுப்பை உடைத்து சட்டவிரோதமாக ரெயில் பாதையில் வந்தது தெரியவந்தது. இந்த திடீர் விபத்தால் ரெயிலில் பயணித்த பயணிகள் பீதியடைந்தனர். மேலும் இந்த விபத்தால் சில மணி நேரங்களாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டன. தாண்டவத்தை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- மங்களாபுரம் மஸ்தான் பள்ளிவாசல் வளைவில் கார் வந்தபோது எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் வந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
- தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடையநல்லூர்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் யாதவர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்தான நல்ல ஜெகன் சிவா (வயது 33).
இவரது மனைவி பிரியா(27). இவர்களது மகன்கள் ராகவன் என்ற முகிலன்(4), வெற்றிவேல் நவீன் பாரதி(4). இவர்கள் 4 பேரும் சொக்கநாதன்புத்தூரில் இருந்து தென்காசி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தென்காசியில் இருந்து ராஜபாளையம் நோக்கி பால் ஏற்றும் டேங்கர் லாரி எதிரே வந்து கொண்டிருந்தது.
கடையநல்லூரை அடுத்த மங்களாபுரம் மஸ்தான் பள்ளிவாசல் வளைவில் கார் வந்தபோது எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் வந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பிரியா பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த சந்தான நல்ல ஜெகன் சிவா மற்றும் 2 குழந்தைகளும் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டேங்கர் லாரியை ஓட்டி வந்த வேம்பநல்லூர் அண்ணா காலனி 1-வது தெருவை சேர்ந்த குமார் (39) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்சி திருவாசி அருகே உள்ள மான்பிடி மங்கலம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் பிரசன்னா (வயது 27)
- இவர் தனது தங்கை மோனிகாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
திருச்சி
திருச்சி திருவாசி அருகே உள்ள மான்பிடி மங்கலம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் பிரசன்னா (வயது 27) தங்கை மோனிகா (25).இரண்டு பேரும் வேலை விஷயமாக இரு சக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டு திருச்சி ஓயாமரி சுடுகாட்டு சாலையில் வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது அவர்களின் பின்புறம் வந்த டிப்பர் லாரி எதிர்பாரத விதமாக இரு சக்கர வாகனத்தின் பின் பக்கம் மீது மோதியது.
இதில் பிரசன்னா தலையில் பலத்த காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பிரசன்னா பரிதாபமாக இறந்தார். மோனிகா லேசான காயத்துடன் உயிர்த்தபினார்.
இந்த விபத்து சம்பவம் குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரி, டிரைவரை தேடி வருகின்றனர்.
- எதிரே வேகமாக வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது.
- மோதிய வேகத்தில் டிராக்டரை லாரி 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், சூர்யா பேட்டை அடுத்த முனுகளா பகுதியே சேர்ந்த 38 பேர் அருகில் உள்ள அய்யப்பன் கோவிலில் நடைபெற்ற படி பூஜையில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை டிராக்டரில் சென்றனர்.
நள்ளிரவு பூஜை முடிந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் அதிகாலை 3 மணிக்கு டிராக்டரில் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
நெடுஞ்சாலை வழியாக சென்றால் சுமார் 2 கி.மீ தூரம் சுற்றிக்கொண்டு வரவேண்டும்.
எனவே நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் டிராக்டரை டிரைவர் ஓட்டிக்கொண்டு வந்தார்.
அப்போது எதிரே வேகமாக வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் டிராக்டரை லாரி 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது
டிராக்டரில் சென்றவர்கள் நாலாபுறமும் சிதறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து அபய குரல் எழுப்பினர்.
இதில் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தனர். அவர்கள் விவரம் வருமாறு, கோட்டைய்யா (வயது 45), ஜோதி (38), பிரமிளா (35), சிந்த காய் பிரமிளா (32), லோகேஷ் (10). மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சூர்யா பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பைக் நொறுங்கியது
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் சாவடி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 43). இவர் வாகனங்கள் பழுதுபார்க்கும் மெக்கானிக் கடை நடத்தி வந்தார்.
இந்தநிலையில் நேற்றிரவு வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆலாங்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது ராஜ்குமார் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக லாரி மோதியது. இதில் ராஜ்குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிேரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போக்குவரத்து பாதிக்கப்பட்டது
- போலீசார் விசாரணை
வேலூர்:
பெங்களூரில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு லோடு ஆட்டோ ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.
வேலூர் அடுத்த பெருமுகை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தபோது லோடு ஆட்டோவின் டயர் பஞ்சராகி நடுரோட்டில் நின்றது. லோடு ஆட்டோவை சாலையோரம் கொண்டு செல்ல டிரைவர் முயற்சி செய்து கொண்டு இருந்தார்.
அப்போது பின்னால் வேகமாக லாரி வருவதைக் கண்ட டிரைவர் சாலையோரத்திற்கு ஓடினார். லாரி எதிர்பாராத விதமாக லோடு ஆட்டோ மீது மோதியது. லாரி மோதியதில் லோடு ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன் மூலம் லோடு ஆட்டோவை சாலையோரம் கொண்டு சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






