குறுக்கே வந்த மூதாட்டி... சாலையில் கவிழ்ந்த லாரியில் இருந்து டீசலை அள்ளிச் சென்ற பொதுமக்கள்

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மூதாட்டி மீது மோதி கவிழ்ந்தது.இந்த விபத்தால் திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குறுக்கே வந்த மூதாட்டி... சாலையில் கவிழ்ந்த லாரியில் இருந்து டீசலை அள்ளிச் சென்ற பொதுமக்கள்
Published on

திருவண்ணாமலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பியபோது, அதே லாரி மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலையாகும். இந்த நிலையில், சென்னையில் இருந்து கர்நாடகாவிற்கு 16ஆயிரம் லிட்டர் கொள்ளவு டீசல் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது, திருவண்ணாமலை அடுத்த அரசம்பட்டில் லாரி வருவதை கவனிக்காத மூதாட்டி கனகாம்பரம் (70) என்பவர் சாலையை கடக்க முயன்றார்.

மூதாட்டி மீது லாரியை மோதாமல் இருக்க திருப்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மூதாட்டி மீது மோதி கவிழ்ந்தது. இதில் மூதாட்டி கனகாம்பரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் லாரி கவிழ்ந்து டீசர் ஆறாக ஓடியதால், கிராம மக்கள் கேன், குடம் உள்ளிட்டவற்றில் டீசலை நிரப்பிச் சென்றனர். இந்த விபத்தால் திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com