சிலி நாட்டில் எரிவாயு ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து வெடித்தது - 4 பேர் பலி

திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. அந்த பகுதி முழுவதும் மிகப்பெரிய புகை மண்டலம் எழும்பியது.
சிலி நாட்டில் எரிவாயு ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து வெடித்தது - 4 பேர் பலி
Published on

சிலி நாட்டு தலைநகர் சாண்டியாகோவில் ரென்கா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் திரவ எரிவாயு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இதில் லாரி வெடித்து சிதறியது. இதனால் நெடுஞ்சாலையில் பெரிய தீப்பிழம்பு ஏற்பட்டது. அந்த பகுதி முழுவதும் மிகப்பெரிய புகை மண்டலம் எழும்பியது.

இந்த விபத்தில் லாரி டிரைவர் உள்பட 4 பேர் பலியானார்கள். 5 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. சில இடிபாடுகள் அங்குள்ள கட்டிடங்கள் மீது விழுந்தன. தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com