என் மலர்tooltip icon

    சிலி

    • திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.
    • அந்த பகுதி முழுவதும் மிகப்பெரிய புகை மண்டலம் எழும்பியது.

    சிலி நாட்டு தலைநகர் சாண்டியாகோவில் ரென்கா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் திரவ எரிவாயு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இதில் லாரி வெடித்து சிதறியது. இதனால் நெடுஞ்சாலையில் பெரிய தீப்பிழம்பு ஏற்பட்டது. அந்த பகுதி முழுவதும் மிகப்பெரிய புகை மண்டலம் எழும்பியது.

    இந்த விபத்தில் லாரி டிரைவர் உள்பட 4 பேர் பலியானார்கள். 5 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. சில இடிபாடுகள் அங்குள்ள கட்டிடங்கள் மீது விழுந்தன. தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.

    • ஒன்பது குழந்தைகளின் தந்தையான 59 வயதான காஸ்ட், முன்பு இரண்டு முறை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
    • லத்தீன் அமெரிக்காவில் வலதுசாரிக்கு இது முக்கிய வெற்றியாக அமைந்துள்ளது.

    தென் அமெரிக்க நாடான சிலியில் வலதுசாரி வேட்பாளர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

    தீவிர வலதுசாரியான கன்சர்வேடிவ் கட்சியின் ஜோஸ் அன்டோனியோ காஸ்டிலோ கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜீனெட் ஜாராவை தோற்கடித்து 58 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

    புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவது, வடக்கு எல்லையை மூடுவது, குற்ற விகிதங்களைக் குறைப்பது மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது போன்ற வாக்குறுதிகளுடன் காஸ்ட் பிரச்சாரம் செய்தார்.

    ஒன்பது குழந்தைகளின் தந்தையான 59 வயதான காஸ்ட், முன்பு இரண்டு முறை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் தற்போது அவர் வெற்றி பெற்ற நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தென்மேற்கு அமெரிக்காவின் நிலையான நாடுகளில் ஒன்றாக இருந்த சிலி, கோவிட்-க்குப் பிறகு பொருளாதார சரிவை கண்டது.

    அர்ஜென்டினா, பொலிவியா, ஹோண்டுராஸ், எல் சால்வடார் மற்றும் ஈக்வடார் தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு லத்தீன் அமெரிக்காவில் வலதுசாரிக்கு இது முக்கிய வெற்றியாக அமைந்துள்ளது.   

    • ரியோ டி லாஸ் சைனாஸ் பள்ளத்தாக்கில் விஞ்ஞானிகள் புதைபடிவத்தைக் கண்டுபிடித்தனர்.
    • இந்த விலங்குகள் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போயிருக்கலாம்

    74 மில்லியன் (7.4 கோடி) ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களுடன் சேர்ந்து வாழ்ந்த மிகச்சிறிய பாலூட்டியின் புதைபடிவத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

    தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் 40 கிராமுக்கும் குறைவான எடையுள்ள ஒரு சிறிய பாலூட்டி (mammal) உயிரினத்தின் உடல் பாகம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு கடைவாய்ப்பல் உட்பட தாடை எலும்பின் ஒரு பகுதியாக இருக்கும் புதைப்படிவம் கிடைத்துள்ளது. 

    சிலியின் மாகெல்லன் பகுதியில் உள்ள ரியோ டி லாஸ் சைனாஸ் பள்ளத்தாக்கில் விஞ்ஞானிகள் புதைபடிவத்தைக் கண்டுபிடித்தனர்.

     சிலி பல்கலைக்கழகம் மற்றும் சிலியில் உள்ள மில்லினியம் நியூக்ளியஸ் ஆராய்ச்சி மையம் நடத்திய இந்த ஆராய்ச்சி பிரிட்டிஷ் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    டைனோசர்களுடன் சேர்ந்து வாழ்ந்த இந்த விலங்குகள் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது எலியை விட சிறிய பாலூட்டியாகும்.

    இது பிளாட்டிபஸைப் போன்ற முட்டையிடும் உயிரினம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

    அல்லது கங்காருவைப் போல அதன் குஞ்சுகளை அதன் உடலின் ஒரு பை போன்ற பகுதியில் வைத்திருக்கும் ஒரு விலங்காக இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

    அதன் பற்களிலிருந்து, இது கடினமான காய்கறிகள் அல்லது நண்டுகளை உண்ணும் ஒரு விலங்கு என்பதை அறிய முடிகிறது.

    • தென் அமெரிக்காவின் மேற்கில் சிலி நாடு அமைந்துள்ளது.
    • நிலநடுக்கம் பூமியில் இருந்து 104 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது.

    சாண்டியாகோ:

    தென் அமெரிக்காவின் மேற்கில் அமைந்துள்ள சிலி நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. ஆனாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

    நிலநடுக்கமானது பூமியில் இருந்து 104 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக பொருள் சேதமோ அல்லது உயிரிழப்புகள் குறித்தோ இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

    சிலியில் கடந்த 2010-ல் 8.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

    • தென் அமெரிக்காவின் மேற்கில் சிலி நாடு அமைந்துள்ளது.
    • நிலநடுக்கம் பூமியில் இருந்து 104 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது.

    தென் அமெரிக்காவின் மேற்கில் அமைந்துள்ள சிலி நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் ஏற்பட்டதை ஐரோப்பிய நிலநடுக்கவியல் துறை உறுதிப்படுத்தி இருக்கிறது.

    நிலநடுக்கமானது பூமியில் இருந்து 104 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக பொருள் சேதமோ அல்லது உயிரிழப்புகள் குறித்தோ இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை. 

    • அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தி இருக்கிறது.
    • பூமியில் இருந்து 128 கிலோமீட்டர்கள் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    தென் அமெரிக்க நாடான சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அந்நாட்டின் ஆன்டோஃபகஸ்தாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 7.3 ஆக பதிவாகி இருக்கிறது.

    நிலநடுக்கம் ஏற்பட்டதை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தி இருக்கிறது. சான் பெட்ரோ அடகாமா நகரின் தென்கிழக்கே பூமியில் இருந்து 128 கிலோமீட்டர்கள் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    • சோதனைக்காக இயக்கப்பட்ட ரெயிலில் 10 ஊழியர்கள் பயணித்தனர்.
    • பயணிகள் ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன.

    சாண்டியாகோ:

    தென் அமெரிக்க நாடான சிலியின் தலைநகர் சாண்டியாகோவில் இருந்து பயணிகள் புதிய ரெயில் ஒன்று புறப்பட்டது. வேக சோதனைக்காக இயக்கப்பட்ட இந்த ரெயிலில் 10 ஊழியர்கள் பயணித்தனர்.

    அதேசமயம் 1,500 டன் தாமிர பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு ரெயிலும் அந்த வழித்தடத்தில் சென்று கொண்டிருந்தது. புறநகர் பகுதியான சான் பெர்னார்டோ அருகே சென்றபோது அந்த இரு ரெயில்களும் நேருக்குநேர் மோதின.

    இதில் பயணிகள் ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன. மேலும் நேருக்குநேர் மோதியதில் பயணிகள் ரெயிலின் ஒரு பெட்டி சரக்கு ரெயிலின் மீது ஏறியது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 4 சீனர்கள் உள்பட 9 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் அங்கு சென்று ரெயிலின் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    மற்றொருபுறம் ரெயில் பெட்டிகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியும் துரிதமாக நடைபெற்றது. அதன்படி படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அங்கு பல மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதற்கிடையே ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு அதிபர் கேபிரியேல் போரிக் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டார்.

    • மெட்டல் டிடெக்டர் மூலம் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் இருந்து நாணயங்களை கண்டெடுத்துள்ளார்.
    • மகளுக்காக டி.வி. வாங்க வேண்டியிருந்தது என்றார்.

    சிலி நாட்டில் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நாணயங்களை கொண்டு ஒருவர் டி.வி. வாங்கியுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

    டிக்டாக் பிரபலம் லூயிஸ் அல்வெரெஸ் என்பவர் மெட்டல் டிடெக்டர் மூலம் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் இருந்து நாணயங்களை கண்டெடுத்துள்ளார்.

    ஒரு வாரத்திற்குள் கண்டெடுக்கப்பட்டுள்ள நாணயங்களை கொண்டு இந்திய மதிப்பில் ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள டி.வி.யை வாங்கியுள்ளார். இது தொடர்பாக லூயில் அல்வெரெஸ் கூறும் போதும், ஒவ்வொரு வாரமும் 210 அமெரிக்க டாலர் முதல் 263 டாலர் வரை கிடைக்கும். என்னுடைய மகளுக்காக டி.வி. வாங்க வேண்டியிருந்தது. சேகரித்த நாணயங்களை இரவு முழுவதும் சுத்தம் செய்தேன். வெகுநேரமாகியதால் வங்கிக்கு செல்ல முடியவில்லை. அதனால் மறுநாள் நாணயங்களை சிறிய பையில் வைத்து எடுத்துச் சென்றேன் என்றார். 

    • தீயில் 2 நகரங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தது.
    • காட்டுத்தீயையொட்டி அங்கு வெப்பம் அதிகரிப்பதற்கான சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

    சாண்டியாகோ:

    தென் அமெரிக்கா நாடான சிலியில் உள்ள கடற்கரை நகரமான வினாடெல்மர் மற்றும் வாலடரைகோ மலைபகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. தீ மளமளவென வனப்பகுதிக்குள் வேகமாக பரவியது.

    பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்ததால் ஏராளமானோர் சிக்கி தீயில் கருகி இறந்தனர். பலியானவர்கள் உடல்கள் ரோட்டில் கருகிய நிலையில் கிடந்தது. பலர் தீக்காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.

    இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர்கள் மூலமும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. ஆனாலும் தீ கட்டுக்குள் வரவில்லை. தெடர்ந்து தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.

    காட்டுத்தீயில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    காட்டுத்தீயில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. அவர்கள் கதி என்ன வென்று தெரியவில்லை. தீயில் 2 நகரங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தது. ரோட்டில் நிறுத்தப்பட்டு இருந்த ஏராளமான வாகனங்கள் தீக்கிரையானது. தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு மிகப்பெரிய சோகத்தை எதிர்கொண்டுள்ளது என சிலி அதிபர் கேப்ரியல் போரிஸ் தெரிவித்துள்ளார்.

    சிலிநாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு கடுமையான பூகம்பம் ஏற்பட்டு 500 பேர் இறந்தனர். அதற்கு பிறகு நடந்த மோசமான சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. காட்டுத்தீயையொட்டி அங்கு வெப்பம் அதிகரிப்பதற்கான சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

    • அதே போல் நாட்டின் தெற்கு பகுதியிலும் காட்டுத் தீ பரவியுள்ளது.
    • வெப்பநிலை 104 டிகிரி வரை உள்ளதால் வரும் நாட்களில் காட்டுத்தீ இன்னும் மோசமடைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    சாண்டியாகோ:

    தென் அமெரிக்கா நாடான சிலியில் மத்திய பகுதியில் பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது.

    கடலோர நகரமான வினாடெல்மாரை சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டது. தீ வேகமாக மற்ற இடங்களிலும் பரவியது.

    எஸ்ட்ரெல்லா, நவிடாப் உள்ளிட்ட நகரங்களில் காட்டுத்தீயால் ஏராளமான வீடுகள் எரிந்து நாசமானது. அதே போல் நாட்டின் தெற்கு பகுதியிலும் காட்டுத் தீ பரவியுள்ளது.

    கொளுந்து விட்டு எரியும் காட்டுத் தீயால் அங்கு கரும் புகை மண்டலம் ஏற்பட்டு உள்ளது. அப்பகுதிகளில் இருளில் சூழ்ந்தது போல் புகை மண்டலம் பரவி உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படுகிறார்கள்.

    காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். விமானங்கள் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. ஆனாலும் காட்டுத்தீ பயங்கரமாக எரிந்து வருகிறது. இதனால் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள்.

    இந்நிலையில் காட்டுத் தீயில் சிக்கியும், புகை மூட்டத்தால் மூச்சு திணறியும் 46 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் பலரது உடல்கள் சாலைகளில் சிதறி கிடந்தன.

    தொடர்ந்து காட்டுத்தீ பரவி வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் வெப்பநிலை 104 டிகிரி வரை உள்ளதால் வரும் நாட்களில் காட்டுத்தீ இன்னும் மோசமடைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து சிலியில் அவசர நிலையை அந்நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் காட்டுத் தீ பேரழிவு காரணமாக 40-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    லால்பரைசோ பிராந்தியத்தில் நான்கு இடங்களில் காட்டுத்தீ பயங்கரமாக எரிந்து வருகிறது. தீயை அணைக்க வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். மீட்புப் பணியாளர்களுக்கு ஒத்துழைக்குமாறு மக்களை கேட்டுக் கொள்கிறேன். தீ வேகமாக முன்னேறி வருகிறது. கால நிலை, காரணமாக தீயை கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது என்றார்.

    இந்த காட்டுத்தீயில் 19 ஆயிரத்து 770 ஏககர் வனப்பகுதி எரிந்து நாசமாகிஉள்ளது. 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் முற்றிலும் எரிந்தன.

    • சிலியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் அங்கிருந்த 1,000 வீடுகள் சேதமடைந்துள்ளன.
    • இந்த தீவிபத்தில் சிக்கி 46 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கொரோனல்:

    அமெரிக்காவில் உள்ள சிலி மற்றும் மத்திய சிலி ஆகிய பகுதிகளில் இருக்கும் வனப்பகுதிகள் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கின. இதனால் அப்பகுதி முழுவதும் கரும் புகையால் சூழ்ந்துள்ளது.

    திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் அங்கிருந்த 1,000 வீடுகளுக்கு மேல் எரிந்து சேதமடைந்தன. இந்த தீவிபத்தில் சிக்கி 46 பேர் பலியாகினர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விமானங்களின் உதவியுடனும் தண்ணீர் எடுத்துவரப்பட்டு தீ அணைக்கப்பட்டு வருகிறது.

    தீ பரவ வாய்ப்புள்ள இடங்களில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறனர்.

    • கோகிம்போவில் இருந்து தென்-தென்மேற்கே 41 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை.

    சாண்டியாகோ:

    தென் அமெரிக்க நாடான சிலியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கோகிம்போவில் இருந்து தென்-தென்மேற்கே 41 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இது ரிக்டர் அளவில் 6.2 புள்ளிகளாக பதிவானது. பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை.

    கடந்த 2010-ம் ஆண்டு 8.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதைத்தொடர்ந்து உண்டான சுனாமியில் 526 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×