என் மலர்
நீங்கள் தேடியது "Earthquake"
- அந்தமான் நிகோபார் தீவுகளில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மற்றும் பூஞ்ச் பகுதிகளிலும், டெல்லி என்.சி.ஆர். பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
கவுகாத்தி:
அசாம் மாநிலம் சோனித்பூர் பகுதியில் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4 அக பதிவானது. இன்று காலை 8 மணியளவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. 15 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இதேபோல் அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று காலை 7.48 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது. டிக்லிபூருக்கு கிழக்கே 137 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மற்றும் பூஞ்ச் பகுதிகளிலும், டெல்லி என்.சி.ஆர். பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறினார்கள்.
- டோக்கியோவில் இன்று மதியம் 3.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் சுமார் 6.1 ரிக்டர் அளவில் பதிவானது.
டோக்கியோ:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று மதியம் 3.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் சுமார் 6.1 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை.
- மணிப்பூரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானது.
இம்பால்:
நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் இந்திய மாநிலங்களில் மணிப்பூர் மாநிலமும் ஒன்று. மாநில தலைநகர் இம்பாலில் தொடர்ந்து லேசான நில அதிர்வுகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில், ஷிருய் பகுதியில் இன்று இரவு 7.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 அலகாக பதிவாகியிருந்தது.
கடல் மட்டத்திலிருந்து 31 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
- ரிக்டர் அளவு கோலில் 7.7 ஆக பதிவானது.
- நில நடுக்கத்தையடுத்து நியூ கலிடோனியா மற்றும் பிஜூ தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பிஜூ:
பசிபிக் பெருங்கடலில் உள்ள நியூ கலிடோனியா தீவை இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.7 புள்ளிகளாக இது பதிவானதாக அமெரிக்க நிலநடுக்கவியல் துறை தெரிவித்து உள்ளது.
நிலநடுக்கத்தையடுத்து நியூ கலிடோனியா மற்றும் பிஜூ தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரம் உடனடியாக தெரியவில்லை.
- கலிபோர்னியா மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கிழக்குப் பகுதியின் தென்மேற்கே 4 கி.மீ. தொலைவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது. கடல்மட்டத்தில் இருந்து 1.5 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்க பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
- அதிகாலை 4.16 மணிக்கு பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- தலைநகர் டோக்கியோவிலும் அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
ஜப்பான் நாட்டின் தெற்கு சிபா மாகாணத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4ஆகப் பதிவாகியுள்ளது.
அதிகாலை 4.16 மணிக்கு பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் டோக்கியோவிலும் அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நிலநடுக்கம் எதிரொலியால் டோக்கியோவில் உள்ள உயரமான கட்டிடங்களில் சில லிஃப்ட்கள் ஐந்து மணி நேரம் வரை நிறுத்தப்பட்டன.
சிபா மற்றும் கனகாவா மாகாணங்களில் ஏழு பேர் லேசான காயம் அடைந்ததாக தீயணைப்புத் துறைகள் மற்றும் நகராட்சிகளின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் சிலர் வீட்டிலேயே விழுந்து காயமடைந்துள்ளனர். மேலும், ஒருவரின் தலையில் மின் விளக்கு விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
- ஜப்பானில் இன்று மதியம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானது.
டோக்கியோ:
ஜப்பானின் மத்திய பகுதியில் இஷிகவா நகரின் ஹோன்ஷு தீபகற்பத்தில் இன்று மதியம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் லேசாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தில் சிக்கி ஒருவர் பலியானார். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
- நிலநடுக்கத்தின்போது சில வினாடிகளுக்கு குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கியுள்ளன.
- நிலநடுக்கத்தால் 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுன்னான் மாகாணம் பவோஷான் நகரில் நேற்று முன்தினம் இரவு 11.27 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கத்தின்போது சில வினாடிகளுக்கு குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி அலறியடித்துக் கொண்டு வீதிகளில்தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் அல்லது பொருட் சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- சுமத்ரா தீவில் இன்று அதிகாலை கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கத்தால் வீடுகள், ஆஸ்பத்திரி கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கெப்புலவுன் படு நகரில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் உண்டானது.
இந்த நிலையில் இந்தோனோசியாவில் இன்று மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் மேற்கு சுமத்ரா தீவில் இன்று அதிகாலை கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானது.
இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனால் பீதியடைந்த மக்கள், வீடுகளில் இருந்து வெளியேறி உயரமான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
மேற்கு சுமத்ரா, வடக்கு சுமத்ரா, மென்டலாய் தீவு உள்ளிட்ட இடங்களில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரத்துக்கு பிறகு சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், ஆஸ்பத்திரி கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முழுமையான சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. அதிகாலையில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் இந்தோனேசியாவில் பெரும் பரபரப்பு நிலவியது.
- நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆகப் பதிவாகி உள்ளது.
- நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கெர்மடெக்:
நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆகப் பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை. இருந்த போதிலும் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
- இந்தோனேசியாவில் இன்று இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் இன்று இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கெபுலாவான் பதுவில் இன்று அதிகாலை நில நடுக்கம் உண்டானது. இது ரிக்டர் அளவில் 6.1 புள்ளிகளாக பதிவானது.
நிலநடுக்கத்தால் வீடு, கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்துபடி வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
அதன் பின் சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. இதனால் மக்கள் பெரும் பீதி அடைந்தனர்.
முதல் நிலநடுக்கம் 43 கி.மீ. ஆழத்திலும் 2-வது நிலநடுக்கம் 40.கி.மீ. ஆழத்திலும் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.