என் மலர்
நீங்கள் தேடியது "அந்தமான் நிகோபார் தீவுகள்"
- ரூ.2,72,000 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுவரும் வரும் இந்தத் திட்டம், பழங்குடியினருக்கும், அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.
- 32 லட்சம் முதல் 58 லட்சம் வரையிலான எண்ணிக்கையில் மரங்கள் வெட்டப்படும்.
மத்திய அரசின் கிரேட் நிக்கோபார் தீவுத் திட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாகக் கண்டித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ் அந்தமான் நிக்கோபாரில் ஒரு டிரான்ஸ்-ஷிப்மென்ட் சரக்கு துறைமுகம், ஒரு சர்வதேச விமான நிலையம், ஒரு டவுன்ஷிப் மற்றும் ஒரு மின் உற்பத்தி நிலையம் கட்டப்பட உள்ளது.
இந்நிலையில் இந்தத் திட்டம் பழங்குடியினரின் உரிமைகளை மீறுவது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் அமைப்பை சீர்குழைக்கும் பேராபத்தான திட்டம் என்று முன்னணி நாளிதழ் ஒன்றில் சோனியா காந்தி விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஷோம்பென் மற்றும் நிக்கோபாரிஸ் போன்ற பழங்குடியினரின் உயிர்வாழ்வு ஆபத்தில் இருக்கும்போது நாட்டு மக்களின் மனசாட்சி அமைதியாக இருக்கக்கூடாது. ரூ.2,72,000 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுவரும் வரும் இந்தத் திட்டம், பழங்குடியினருக்கும், அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.
இந்த தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. இந்த அநீதிக்கு எதிராக நாம் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்.

இந்தத் திட்டத்தை நிர்மாணிப்பதில் மத்திய அரசு அரசியலமைப்பு மற்றும் சட்ட விதிகளை முற்றிலுமாக புறக்கணித்துள்ளது. தேசிய பட்டியல் பழங்குடியினர் ஆணையத்திடம் ஆலோசிக்காமல், கிரேட் நிக்கோபார் பழங்குடி கவுன்சிலின் முறையீடுகள் புறக்கணித்து திட்டம் தன்னிச்சையாக செயல்படுத்தப்படுவது கேலிக்கூத்தாகும்.
அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி, இந்த திட்டத்திற்காக 8.5 லட்சம் மரங்கள் வெட்டப்பட வேண்டியிருக்கும், ஆனால் சுயாதீன மதிப்பீடுகளின்படி, இந்த எண்ணிக்கை 32 லட்சம் முதல் 58 லட்சம் வரை இருக்கலாம்.
ஆமைகள் முட்டையிடும் ஒரு சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த கடலோரப் பகுதியில் துறைமுகம் காட்டப்படுகிறது.
அந்தப் பகுதி பூகம்ப அபாயகரமான மண்டலத்தில் இருக்கும் நிலையில், அங்கு இவ்வளவு பெரிய திட்டத்தைக் மேற்கொள்வது முதலீடு, உள்கட்டமைப்பு, மக்கள் மற்றும் சுற்றுச்சூழலை மோசமான ஆபத்தில் ஆழ்த்தும்" என்று எச்சரித்துள்ளார்.
பழங்குடியினர் உரிமைகளை பறித்து சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான பணியில் மத்திய அரசு ஈடுபடுவதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
- அந்தமான் நிக்கோபர் தீவுகளில் தொடங்கும் பருவமழை படிப்படியாக குமரிமுனை, கேரளா என வட மாநிலங்களுக்கும் பரவும்.
- மே 4-வது வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு சற்று முன்னதாகவே தொடங்கி உள்ளது.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த தென்மேற்கு பருவமழை காலத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கும் மழை பொழிவு கிடைக்கும்.
அந்தமான் நிக்கோபர் தீவுகளில் தொடங்கும் பருவமழை படிப்படியாக குமரிமுனை, கேரளா என வட மாநிலங்களுக்கும் பரவும். கொளுத்தும் கோடைகாலத்தை தொடர்ந்து தொடங்கும் பருவமழை என்பதால் இந்த தென்மேற்கு பருவமழை மீதான எதிர்பார்ப்பு எப்போதுமே அதிகம்.
கேரளாவில் 27-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கியது.
அந்தமான் நிகோபார் தீவு, தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 4-வது வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு சற்று முன்னதாகவே தொடங்கி உள்ளது.
வங்காள விரிகுடா கடலில் அமைந்துள்ள அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நிலையில் அதிகாலை 03.57 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதனால் பீதி அடைந்த மக்கள் தூக்க கலக்கத்தில் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
எனினும் நிலநடுக்கம் காரணமாக பொது மக்களுக்கோ அல்லது சொத்துகளுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. #Earthquake






