என் மலர்tooltip icon

    இந்தியா

    அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது
    X

    அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது

    • அந்தமான் நிக்கோபர் தீவுகளில் தொடங்கும் பருவமழை படிப்படியாக குமரிமுனை, கேரளா என வட மாநிலங்களுக்கும் பரவும்.
    • மே 4-வது வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு சற்று முன்னதாகவே தொடங்கி உள்ளது.

    இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த தென்மேற்கு பருவமழை காலத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கும் மழை பொழிவு கிடைக்கும்.

    அந்தமான் நிக்கோபர் தீவுகளில் தொடங்கும் பருவமழை படிப்படியாக குமரிமுனை, கேரளா என வட மாநிலங்களுக்கும் பரவும். கொளுத்தும் கோடைகாலத்தை தொடர்ந்து தொடங்கும் பருவமழை என்பதால் இந்த தென்மேற்கு பருவமழை மீதான எதிர்பார்ப்பு எப்போதுமே அதிகம்.

    கேரளாவில் 27-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்தநிலையில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கியது.

    அந்தமான் நிகோபார் தீவு, தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 4-வது வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு சற்று முன்னதாகவே தொடங்கி உள்ளது.

    Next Story
    ×