என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
அந்தமான் நிகோபார்
- அந்தமான் கடல் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது.
போர்ட்பிளேர்:
அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே அந்தமான் கடல் பகுதியில் இன்று அதிகாலை 3.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.
- இன்று அதிகாலை 3.39 மணியளவில் நில அதிர்வு.
- ரிக்டர் அளவில் 4.4 பதிவாகி உள்ளது.
அந்தமான் & நிக்கோபார் கடல் பகுதியில் இன்று அதிகாலை 3.39 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இதன் ரிக்டர் அளவில் 4.4 பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
- அந்தமான் நிக்கோபார் தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகாலை 2.56 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், நிலநடுக்கத்தின் ஆழம் 10 கி.மீட்டர் என்றும் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
- தீவில் இன்று அதிகாலை 4.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- உயிர் சேதம் அல்லது பொருட்சேதம் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகாலை 4.17 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், நிலநடுக்கத்தின் ஆழம் 61 கி.மீட்டர் என்றும் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், உயிர் சேதம் அல்லது பொருட்சேதம் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி நள்ளிரவு 12.53 மணிக்கு அந்தமான்- நிகோபார் போர்ட் பிளேயரில் இருந்து 126 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தென் மேற்கு பகுதியில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- நிலநடுக்கத்தின் போது வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியது.
- நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ, பொருட் சேதமோ எதுவும் ஏற்படவில்லை.
போர்ட்பிளேயர்:
அந்தமான்-நிகோபார் போர்ட் பிளேயரில் இருந்து 126 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தென் மேற்கு பகுதியில் நேற்று நள்ளிரவு 12.53 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 5.9 புள்ளிகளாக பதிவானதாக தேசிய நிலநடுக்க வியல் மையம் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கத்தின் போது வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ, பொருட் சேதமோ எதுவும் ஏற்படவில்லை.
- நேற்று இரவு 7.39 மணியளவில் கேம்பல் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறினர்.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள காம்ப்பெல் விரிகுடாவின் தென்கிழக்கில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு 7.39 மணியளவில் கேம்பல் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
தேசிய நில அதிர்வு மையம் அறிவிப்பின்படி, கேம்ப்பெல் விரிகுடாவில் இருந்து 162 கி.மீ தொலைவில் தென்கிழக்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறினர்.
மேலும், உயிர்சேதம் அல்லது பொருட் சேதங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
- ரிக்டர் அளவுகோலில் இது 3.9 ஆக பதிவானது.
- அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.
போர்ட் பிளேயர்:
அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள திக்லப்பூர் அருகே இன்று திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 3.9 ஆக பதிவாகி இருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் லேசாக குலுங்கியது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.
பல இடங்களில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. அந்தமான் நிகோபார் தீவுகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நில நடுக்கம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
- அந்தமான் நிகோபர் தீவில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது.
- இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகி உள்ளது.
திக்லிபூர்:
அந்தமான் நிகோபர் தீவில் இன்று மதியம் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
- அந்தமான் நிகோபர் தீவில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது.
- இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது.
திக்லிபூர்:
அந்தமான் நிகோபர் தீவின் வடகிழக்கே போர்ட்பிளேர் பகுதியில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
- அந்தமான் நிகோபர் தீவில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது.
- இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகி உள்ளது.
போர்ட்பிளேர்:
அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை 5.07 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.