search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Richter Scale"

    • நிலநடுக்கத்தால் 8 பேர் காயம் அடைந்துள்ளனர்.
    • இதுவரை சுனாமி எச்சரிக்கையோ, பொருட் சேதம் குறித்த அறிக்கை இல்லை.

    ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் நேற்று இரவு 6.3 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஜப்பானின் மேற்கே கியூஷூ மற்றும் ஷிகோகு தீவுகளை பிரிக்க கூடிய பகுதியில் நேற்றிரவு 11.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் 8 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இருப்பினும், இதுவரை சுனாமி எச்சரிக்கையோ, பொருட் சேதம் குறித்த அறிக்கையோ வெளியாகவில்லை.

    யுவாஜிமாவிற்கு மேற்கே சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கியூஷு மற்றும் ஷிகோகு தீவுகளை சுமார் 25 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

    • நிலநடுக்கம் 54 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
    • ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

    அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே இன்று அதிகாலை 4.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.

    இந்நிலநடுக்கம் 54 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்றும், அதனருகே சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

    இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

    இதேபோன்று, நேற்று நள்ளிரவில் 12.18 மணியளவில் உத்தரகாண்டின் தலைநகர் டேராடூன் நகரில் 2.8 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.

    முன்னதாக உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் நள்ளிரவு 12.18 மணியளவில் 2.8 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
    • அலைகள் 3 மீட்டர் உயரத்திற்கு கடலில் எழக்கூடும்.

    தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் கடந்த 3-ம் தேதி 7.2 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. நிலம் மற்றும் நீர் பரப்பை ஒட்டிய பகுதியில் உணரப்பட்ட இந்நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

    தைவானில், 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு, 9 பேர் உயிரிழந்தனர். 1,000-த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

    அலைகள் 3 மீட்டர் உயரத்திற்கு கடலில் எழக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டது.

    இந்நிலையில், ஜப்பானின் ஹோன்ஷு நகரில் இன்று 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . இது ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவாகி உள்ளது.

    • நிலப்பரப்பிலிருந்து 15 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணர்வு.
    • சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    ஆப்கானிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தானிம் மசார் இ சரீஃப் என்ற நகரத்தில் இன்று மாலை 4.50 மணியளவில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இதன் ரிக்டர் அளவ 5.1 ஆக பதிவாகியுள்ளது.

    இது தொடர்பாக பதிவு வெளியிட்டுள்ள இந்தியாவின் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம், நிலப்பரப்பிலிருந்து 15 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளது.

    இருப்பினும் இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்களால் பொது மக்கள் பீதியமடைந்துள்ளனர்.

    • 80 வருடங்களில் துருக்கியை தாக்கிய கடுமையான நிலநடுக்கம் என ஐ.நா. தெரிவித்தது
    • "ஆபரேஷன் தோஸ்த்" எனும் பெயரில் துருக்கி மற்றும் சிரியாவிற்கு இந்தியா உதவியது

    தென்கிழக்கு ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவிலும் எல்லைகளை கொண்ட நாடு, துருக்கி.

    துருக்கியில் பிப்ரவரி 6 அன்று, ரிக்டர் அளவுகோலில் 7.8 என பசார்சிக் (Pazarcik) மாவட்டத்தில் ஒரு நில நடுக்கம் தாக்கியது. அந்நாட்டில் 80 வருடங்களில் நிகழ்ந்த நில நடுக்கங்களில் இதுவே அதிகமானது என ஐ.நா. சபை தெரிவித்தது.

    மீண்டும் அதே தினம், எல்பிஸ்டான் (Elbistan) மாவட்டத்தில் 7.6 அளவில் மற்றுமொரு நில அதிர்வு தாக்கியது. இந்த நிலநடுக்கம் கடுமையாக இருந்ததால், இதன் தாக்கம் அண்டையில் சிரியா மற்றும் லெபனான் நாடுகளிலும் உணரப்பட்டது.

    மூன்றாவது முறையாக கோக்ஸன் (Goksun) மாவட்டத்தில் 6.0 எனும் அளவில் தாக்கியது.

    இந்த தொடர் நில நடுக்கங்களால் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

    இந்திய அரசு துருக்கிக்கு வேண்டிய உதவிகளை செய்வதாக உறுதியளித்தது. நிவாரண பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் 7 கோடி மதிப்புள்ள உபகரணங்கள் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களை "ஆபரேஷன் தோஸ்த்" எனும் நடவடிக்கையில் துருக்கிக்கும் சிரியாவிற்கும் இந்தியா அனுப்பி வைத்தது.

    • ஃபரிதாபாத் நகரிலிருந்து கிழக்கே 9 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது
    • ரிக்டர் அளவுகோளில் 3.1 என இந்த நில அதிர்வு பதிவாகியது

    இந்திய தலைநகர் புது டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள நகர்புற பகுதிகளில் இன்று மிதமான நில அதிர்வு உணரப்பட்டது.

    இன்று மாலை 04:08 மணியளவில் அரியானா மாநிலத்தின் ஃபரிதாபாத் நகரிலிருந்து கிழக்கே 9 கிலோமீட்டர் தொலைவில், டெல்லிக்கு தென்கிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த அதிர்வு மையம் கொண்டிருந்தது. இந்த அதிர்வு, ரிக்டர் அளவுகோளில் 3.1 என பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதையடுத்து, அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேறி சாலைகளில் கூடி விட்டனர்.

    இது குறித்து அவசர கால பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ள டெல்லி காவல்துறை, லிஃப்டை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும், கட்டிடங்கள், மரங்கள், சுவர்கள், தூண்கள் ஆகியவற்றின் அருகே நிற்காமல் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. டெல்லி காவல்துறை, அவசர உதவிக்கு 112 எனும் எண்ணை அழைக்குமாறு பொதுமக்களை கோரியுள்ளது. இத்துடன் நில அதிர்வு காலங்களில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை ஆகியவற்றை உள்ளடக்கிய அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது.

    புது டெல்லி மட்டுமின்றி வட இந்தியாவின் சில பகுதிகளிலும் இது உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தலைநகர் டெல்லியில் இம்மாதம் இது இரண்டாவது முறையாக நடைபெறும் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாத தொடக்கத்தில் டெல்லியை உள்ளடக்கிய வட இந்திய பகுதிகளில் அடுக்கடுக்காக ஏற்பட்ட நில அதிர்வுகள் அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 6.2 என பதிவானது குறிப்பிடத்தக்கது.

    இந்தோனேசியாவின் சும்பா தீவில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 6 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. #Indonesia #Earthquake
    சும்பா:

    இந்தோனேசியாவின் போகரவாட்டுவுக்கு தென்மேற்கு பகுதியில் இருக்கும் சும்பாவா கடல் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ரிக்டர் அளவுகோலில் 6.0 என பதிவான இந்த நிலநடுக்கத்தை சும்பாவின் வெயின்கபு நகரத்தில் வசிக்கும் மக்கள் உணர்ந்துள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த முதற்கட்ட தகவல்கள் ஏதும் இல்லை.



    முன்னதாக, கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலையில் சிக்கி 3000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Indonesia #Earthquake

    ×