search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Faridabad"

  • காரைத் திருட வந்த நபர் போதையில் காருக்குள்ளேயே தூங்கினார்.
  • அவரிடம் இருந்து போதைப் பொருள்கள் மீட்கப்பட்டதாக போலீசார் கூறினர்.

  பரிதாபாத்:

  அரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத்தில் வசிக்கும் ரவி என்பவர் நேற்று முன்தினம் இரவு தனது ஈகோ மாடல் காரை பார்க்கிங் செய்துவிட்டு தூங்கச் சென்றார்.

  இந்நிலையில், நேற்று காலை காரை சுத்தம் செய்வதற்காக வந்த அவர் காரின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். காருக்குள் ஒரு நபர் தூங்கிக் கொண்டிருப்பதையும் கண்டார்.

  இதுகுறித்து ரவி போலீசாருக்கு தகவல் அளித்தார். அங்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து போதைப்பொருள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

  விசாரணையில், அந்த நபர் காரைத் திருட வந்ததும், போதையில் காருக்குள் தூங்கியதும் தெரிய வந்தது.

  • செக்டார் 87 பகுதியில் பிரின்சஸ் பார்க் சொசைட்டி எனும் குடியிருப்பு உள்ளது
  • இரு இளைஞர்கள் அவர் மகளை தங்களுடன் ஆடுமாறு துன்புறுத்தினர்

  டெல்லி தலைநகர் பகுதிக்கு உட்பட்ட அரியானா மாநிலத்தை சேர்ந்த பகுதி, ஃபரிதாபாத் (Faridabad).

  இங்குள்ள செக்டார் 87 பகுதியில் பிரின்சஸ் பார்க் சொசைட்டி (Princess Park Society) எனும் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 52 வயதான பிரேம் மேத்தா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

  இந்த குடியிருப்பில் தசரா பண்டிகையை முன்னிட்டு வட இந்தியர்கள் கொண்டாடும் கார்பா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி அங்கு டாண்டியா ஆட்டம் நிகழ்ச்சி நடந்தது.

  இந்த கொண்டாட்டத்தில் பிரேம் மேத்தாவின் மகளும் பங்கேற்றார்.

  அப்போது அதே குடியிருப்பில் வசிக்கும் இரண்டு இளைஞர்கள் பிரேம் மேத்தாவின் மகளை நெருங்கி, தங்களுடனும் டாண்டியா ஆட்டம் ஆடுமாறு வற்புறுத்தினார்கள். மேலும், அவருடைய தொலைபேசி எண்ணையும் கேட்டு வற்புறுத்தினார்கள். இதனால் பிரேம் மேத்தாவின் மகள் செய்வதறியாது திகைத்தார்.

  இதை கண்ட பிரேம் மேத்தா, தகாத செயலில் ஈடுபட்ட அந்த இரண்டு இளைஞர்களிடம் சென்று கோபமாக பேசினார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல வாக்குவாதம் அதிகரித்து மோதலாக மாறியது.

  மோதல் முற்றியதில், அந்த இருவரும் பிரேம் மேத்தாவை கீழே தள்ளி விட்டனர். கீழே விழுந்த அவர் சுயநினைவை இழந்தார்.

  உடனடியாக அங்கிருப்பவர்கள் உதவியுடன் அவர் மகளும், குடும்பத்தினரும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

  இதையடுத்து மேத்தா குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் இது குறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  மகிழ்ச்சியாக பண்டிகை கொண்டாடி வந்த ஒரு குடும்பம், இரு இளைஞர்களின் அக்கிரமத்தால் சோகத்தில் மூழ்கிய செய்து அப்பகுதி மக்களை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

  • ஃபரிதாபாத் நகரிலிருந்து கிழக்கே 9 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது
  • ரிக்டர் அளவுகோளில் 3.1 என இந்த நில அதிர்வு பதிவாகியது

  இந்திய தலைநகர் புது டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள நகர்புற பகுதிகளில் இன்று மிதமான நில அதிர்வு உணரப்பட்டது.

  இன்று மாலை 04:08 மணியளவில் அரியானா மாநிலத்தின் ஃபரிதாபாத் நகரிலிருந்து கிழக்கே 9 கிலோமீட்டர் தொலைவில், டெல்லிக்கு தென்கிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த அதிர்வு மையம் கொண்டிருந்தது. இந்த அதிர்வு, ரிக்டர் அளவுகோளில் 3.1 என பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

  இதையடுத்து, அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேறி சாலைகளில் கூடி விட்டனர்.

  இது குறித்து அவசர கால பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ள டெல்லி காவல்துறை, லிஃப்டை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும், கட்டிடங்கள், மரங்கள், சுவர்கள், தூண்கள் ஆகியவற்றின் அருகே நிற்காமல் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. டெல்லி காவல்துறை, அவசர உதவிக்கு 112 எனும் எண்ணை அழைக்குமாறு பொதுமக்களை கோரியுள்ளது. இத்துடன் நில அதிர்வு காலங்களில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை ஆகியவற்றை உள்ளடக்கிய அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது.

  புது டெல்லி மட்டுமின்றி வட இந்தியாவின் சில பகுதிகளிலும் இது உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  தலைநகர் டெல்லியில் இம்மாதம் இது இரண்டாவது முறையாக நடைபெறும் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாத தொடக்கத்தில் டெல்லியை உள்ளடக்கிய வட இந்திய பகுதிகளில் அடுக்கடுக்காக ஏற்பட்ட நில அதிர்வுகள் அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 6.2 என பதிவானது குறிப்பிடத்தக்கது.

  ×