என் மலர்
இந்தியா

திருட போன இடத்தில் தூங்கிய நபர்: போதையில் சிக்கிய சுவாரசியம்
- காரைத் திருட வந்த நபர் போதையில் காருக்குள்ளேயே தூங்கினார்.
- அவரிடம் இருந்து போதைப் பொருள்கள் மீட்கப்பட்டதாக போலீசார் கூறினர்.
பரிதாபாத்:
அரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத்தில் வசிக்கும் ரவி என்பவர் நேற்று முன்தினம் இரவு தனது ஈகோ மாடல் காரை பார்க்கிங் செய்துவிட்டு தூங்கச் சென்றார்.
இந்நிலையில், நேற்று காலை காரை சுத்தம் செய்வதற்காக வந்த அவர் காரின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். காருக்குள் ஒரு நபர் தூங்கிக் கொண்டிருப்பதையும் கண்டார்.
இதுகுறித்து ரவி போலீசாருக்கு தகவல் அளித்தார். அங்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து போதைப்பொருள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
விசாரணையில், அந்த நபர் காரைத் திருட வந்ததும், போதையில் காருக்குள் தூங்கியதும் தெரிய வந்தது.
Next Story






