search icon
என் மலர்tooltip icon

    அரியானா

    • நண்பர்கள் புனித் மற்றும் குகால் ஆகிய இருவருடன் காரில் சென்று கொண்டிருந்தார்
    • ஹர்பிலாஸ் மற்றும் புனித் ஆகிய இருவரின் மீதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன.

    அரியானாவில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள நாராயண்கரில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகி ஹர்பிலாஸ் சிங் ராஜுமஜ்ரா (41 வயது) படுகொலை செய்யப்பட்டார்.

    நேற்று [வெள்ளிக்கிழமை] இரவு தனது நண்பர்கள் புனித் மற்றும் குகால் ஆகிய இருவருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஹர்பிலாஸ் மற்றும் புனித் ஆகிய இருவரின் மீதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன.

    உடனே அவர்கள் மீட்க்கப்பட்டு சண்டிகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் ஹர்பிலாஸ் சிகிச்சை பலனின்றி நேற்று இரவே உயிரிழந்தார். புனித் தற்போது நலமாகவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதவு செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

     

    • செல்போன் பேசியபடியே நடந்து செல்லும் பெண் பேனரை கவனிக்காமல் செல்கிறார்.
    • செல்போனுக்கு அடிமையானதன் விளைவு என பலரும் பதிவிட்டனர்.

    செல்போனை அனைவருமே பயன்படுத்தி வரும் நிலையில், சிலர் போனுக்கு அடிமையாகும் சம்பவங்களையும் காண முடிகிறது. நடக்கும் போது தொடங்கி வாகனம் ஓட்டும் போதும் கூட சிலர் செல்போன் பேசியபடியே செல்வதும், இதனால் அவர்கள் விபத்துக்குள்ளான சம்பவங்களும் நடந்துள்ளது.

    அது போன்ற ஒரு சம்பவம் அரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடந்துள்ளது. தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பெண் ஒருவர் தனது கைக்குழந்தையை கையில் வைத்து கொண்டு செல்போன் பேசியபடியே நடந்து செல்கிறார். அப்போது சாலையோரம் ஒரு பாதாள குழி உள்ளது. அதில் பொது மக்கள் விழுந்துவிடக் கூடாது என்பதற்காக பேனரும் வைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் செல்போன் பேசியபடியே நடந்து செல்லும் பெண் பேனரை கவனிக்காமல் செல்கிறார். திடீரென அவர் குழந்தையுடன் அந்த பாதாள குழிக்குள் விழுவது போன்று அதிர்ச்சியான காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த தாயை விமர்சித்தனர். செல்போனுக்கு அடிமையானதன் விளைவு என பலரும் பதிவிட்டனர்.



    • கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது கொள்ளையர்களின் கைவரிசை தெரியவந்தது.
    • புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி தலைமுடியை திருடி சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    ஆட்கள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டும் போது வீடுகளில் இருந்து நகை, பணத்தை கொள்ளையடித்து செல்வதை கேள்விபட்டிருப்போம். சில நேரங்களில் வீடுகளில் நகை, பணம் இல்லாவிட்டால் அங்கு இருக்கும் பொருட்களையாவது திருடி செல்வார்கள்.

    இந்நிலையில் அரியானா மாநிலம் பரிதாபாத்தில் ஒரு வீட்டில் நடந்த வினோத கொள்ளை சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்பகுதியை சேர்ந்த ரஞ்சித் மண்டல் என்பவர் விக் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இதற்காக அவர் தனது வீட்டில் அதிகளவில் பெண்களின் தலை முடியை மூலப்பொருளாக வாங்கி வைத்திருந்தார்.

    சம்பவத்தன்று அதிகாலை இவரது வீட்டிற்குள் புகுந்த 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் அங்கிருந்த 150 கிலோ எடை கொண்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள பெண்களின் தலைமுடி மற்றும் ரூ.2 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். வெளியில் சென்றிருந்த ரஞ்சித் மண்டல் வீடு திரும்பிய போது கொள்ளை நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் பக்கத்து அறையில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது கொள்ளையர்களின் கைவரிசை தெரியவந்தது. இதுகுறித்து அவர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி தலைமுடியை திருடி சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • இந்த விபத்தில் 3 பேர் சிறு காயங்களோடு உயிர் தப்பினார்கள்.
    • படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அரியானா மாநிலத்தின் கைதல் நகரின் மார்க்கெட் அருகில் சாலையோரம் அமர்ந்திருந்த 5 பேர் மீது வேகமாக வந்த கார் ஒன்று மோதியுள்ளது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இளைஞர் ஒருவர் கார் ஓட்ட கற்றுக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் காரை நிறுத்துவதற்கு பிரேக் அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அவர் தவறுதலாக அழுத்தியுள்ளார். இதனால் வேகமாக ஓடிய கார் சாலையோரம் சேர் போட்டு உட்கார்ந்திருந்த 5 பேர் மீது மோதியுள்ளது.

    இந்த விபத்தில் 3 பேர் சிறு காயங்களோடு உயிர் தப்பினார்கள். படுகாயமடைந்த மீதி 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது தொடர்பாக வழக்குப் பதிந்துள்ள போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 7 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்ந்துள்ளனர்.
    • ரசிகர்கள் சிம்ரன் சிங்சை ஜம்முவின் இதயத்துடிப்பு என அழைத்து வந்தனர்.

    சண்டிகர்:

    ஜம்மு காஷ்மீரின் ப்ரீலான்சர் ரேடியோ ஜாக்கியும், இன்ஸ்டாகிராமில் பிரபலமானவருமான சிம்ரன் சிங், அரியானா மாநிலத்தின் குருகிராமில் உள்ள அபார்ட்மென்டில் தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளார்.

    இவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 7 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்ந்துள்ளனர். இவர் கடைசியாக டிசம்பர் 13-ம் தேதி இன்ஸ்டாவில் ரீல் வெளியிட்டுள்ளா.

    25 வயதான சிம்ரன் சிங் குருகுராமில் வாடகைக்கு வசித்து வந்த செக்டார் 47 அபார்ட்மென்டில் தற்கொலை செய்துகொண்டார். அவருடன் தங்கியிருந்த நண்பர் போலீசுக்கு தகவல் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

    தகவலறிந்து வந்த போலீசார் சிம்ரன் சிங்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தற்கொலை தொடர்பாக எந்தக் கடிதமும் கிடைக்கவில்லை. அவருடைய குடும்பத்தினர் எந்தப் புகாரும் அளிக்கவில்லை.

    விசாரணையில், சில நேரங்களில் சிம்ரன் சிங் அப்செட்டாக இருந்தார். இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவித்தனர்.

    ரசிகர்கள் சிம்ரன் சிங்சை ஜம்முவின் இதயத்துடிப்பு என அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 48 தொகுதிகளைக் கைப்பற்றியது.
    • காங்கிரஸ் கட்சி அங்கு 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அங்கு பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன. லோக்தளம்-பகுஜன் சமாஜ் கட்சி, ஜனநாயக ஜனதா கட்சி-ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணியாக போட்டியிடுகின்றன.

    முதல் மந்திரி நயாப் சிங் சைனி, முன்னாள் முதல் மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா, வினேஷ் போகத், ஜேபிபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.


    காலை 7 மணி வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அரியானா மாநில தேர்தலில் 66 சதவீதம் வாக்குகள் பதிவானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்பட்டன.

    தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க 46 தொகுதிகளை கைப்பற்ற வேண்டிய நிலையில் பாஜக தலைமையிலான கூட்டணி 48 தொகுதிகளைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 37 இடங்களில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் அரியானாவில் பா.ஜ.க. தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை தக்கவைத்தது. அரியானா முதல் மந்திரியாக நயாப் சிங் சைனி பதவியேற்றார்.


    ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட வினேஷ் போகத் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வானார். 19 ஆண்டாக இந்தத் தொகுதியில் தோல்வியைப் பார்த்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு வினேஷ் போகத் வெற்றி தேடி தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறுமி ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
    • சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் எழுத்துப்பூர்வமாக எந்த புகாரும் அளிக்கவில்லை.

    அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டம் புடானா கிராமத்தில் தூங்கிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் செங்கல் சூளையின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர். மேலும் ஒரு சிறுமி படுகாயமடைந்தார்.

    உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் புடானாவில் உள்ள சூளையில் வேலை செய்து வருகின்றனர். செங்கல் தயாரித்து தூண்கள் அமைக்கும் பணி சூளையில் தற்போது நடந்து வருகிறது.

    இதனிடையே நேற்று இரவு செங்கல் சூளையின் சுவர் அருகே குழந்தைகள் மற்றும் சில தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென செங்கல் சூளையின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சூரஜ் (9), நந்தினி (5), விவேக் (9) மற்றும் 3 மாதங்களே ஆன நிஷா ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 5 வயது சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அச்சிறுமி ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் எழுத்துப்பூர்வமாக எந்த புகாரும் அளிக்கவில்லை. 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • குருகிராமில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • ஓம் பிரகாஷ் சௌதாலா மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்திய தேசிய லோக் தள தலைவரும் அரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 89.

    குருகிராமில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அரியானா மாநிலத்தின் முதல்வராக 1989-ம் ஆண்டு முதல் நான்கு முறை பதவி வகித்து ஓம் பிரகாஷ் சௌதாலா சாதனை படைத்துள்ளார். அவர் கடைசியாக மாநில முதல்வராக 1999-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஓம் பிரகாஷ் சௌதாலா மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    • இன்று காலை 6 மணி முதல் வருகிற 17-ந் தேதி வரை இணைய தள சேவை முடக்கப்பட்டுள்ளது
    • பாகிஸ்தான் எல்லையை போல ஷம்பு எல்லை நடத்தப்படுகிறது

    பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தரப் பிரதேச மற்றும் அரியானாவின் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    டிசம்பர் 6 ஆம் தேதி முதல் டெல்லி நோக்கி செல்ல முயன்ற விவசாயிகள் மீது போலீஸ் கண்ணீர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இருப்பினும் மத்திய அரசு செவி சாய்க்கும் வரை போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மீண்டும் விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி நடந்த முயன்றனர்.

    விவசாயிகள் குவிவதை தடுக்கும் வகையில் அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள 12 கிராமங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி முதல் வருகிற 17-ந் தேதி வரை இணைய தள சேவை முடக்கப்பட்டுள்ளது.

    இன்று நண்பகலில் 101 விவசாயிகள் அடங்கிய குழு டெல்லி நோக்கி பேரணியை தொடங்கிய நிலையில் [ஹரியானா-பஞ்சாப்] ஷம்பு எல்லையில் அவர்கள் கூடியபோது அரியானா போலீசார் அவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை கலைக்க முயன்றனர். இதில் 10 விவசாயிகள் வரை காயமடைந்தனர்.

     

    இன்றைய போராட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினரும் மல்யுத்த வீரருமான பஜ்ரங் புனியா, ஷம்பு எல்லையில் விவசாயிகளுடன் இணைந்தார்.

    இந்த தாக்குதல் குறித்து பேசிய அவர், விவசாயிகளை நாங்கள் தடுக்கவில்லை என்று ஒரு பக்கம் அரசு சொல்லிக் கொண்டிருந்தாலும், மறுபுறம் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்துகிறது. பாகிஸ்தான் எல்லையை போல ஷம்பு எல்லை நடத்தப்படுகிறது. அரசியல் தலைவர்கள் டெல்லி சென்று போராட்டம் நடத்தும் போது அனுமதி வாங்கிதான் செல்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். 

     

    • வீடியோ 35 லட்சத்திற்கும் அதிகமாக பார்வைகளை பெற்றுள்ளது.
    • ஆபத்தான சாகசங்கள் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டனர்.

    அரியானாவில் ஒரு சிறுவன் காரின் மேற்கூரையில் அமர்ந்து சாலையில் சென்ற வீடியோ இன்ஸ்டாகிராமில் பரவியது. வீடியோவில் சாலையில் வேகமாக செல்லும் கார் மீது அமர்ந்து சவாரி செய்யும் அந்த சிறுவன், எனது தந்தை போலீஸ்காரர், அவர் என்னை பாதுகாப்பார் என்று கூறும் காட்சிகளும் உள்ளது.

    இந்த வீடியோ 35 லட்சத்திற்கும் அதிகமாக பார்வைகளை பெற்றுள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் விமர்சனங்களை பதிவிட்டனர். வலைதள புகழுக்காக இது போன்ற ஆபத்தான சாகசங்கள் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டனர்.



    • மாணவர்கள் தயாரித்த வெடிகுண்டைஆசிரியரின் நார்காலியின் கீழ் வைத்துள்ளனர்.
    • இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக ஆசிரியர் காயமின்றி உயிர் தப்பினார்.

    அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்ந்து தங்களது பெண் அறிவியல் ஆசிரியரின் நாற்காலியின் கீழ் பட்டாசு போன்ற வெடிகுண்டை வைத்து வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த வாரம் மாணவர்களை ஆசிரியர் கண்டித்ததையடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. யூடியூப்பில் உள்ள வீடியோக்களை பார்த்து வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்பதை மாணவர்கள் கற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

    மாணவர்கள் தயாரித்த வெடிகுண்டை ஆசிரியரின் நாற்காலியின் கீழ் வைத்துள்ளனர். ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்தவுடன் வெடிகுண்டை வெடிக்க செய்யும் கருவியை கொண்டு வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக ஆசிரியர் காயமின்றி உயிர் தப்பினார்.

    இந்த சம்பவத்தை அடுத்து 13 மாணவர்களை அரியானா கல்வித் துறை ஒரு வாரத்துக்கு சஸ்பெண்ட் செய்துள்ளது.

    • வேகத்தடையின் மீது ஏறி வாகனங்கள் பறக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.
    • நெட்டிசன்கள் பலரும் சாலை பாதுகாப்பு குறித்து தங்களது கவலைகளை வெளிப்படுத்தினர்.

    அரியானா மாநிலம் குருகிராமில் வேகத்தடையின் மீது ஏறி வாகனங்கள் பறந்து செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

    வேகத்தடைக்கு முன்பாக உரிய எச்சரிக்கை பலகையும் வேகத்தடைக்கான அடையாளமும் இல்லாததால் வேகமாக வரும் வாகனங்கள் வேகத்தடையின் மீது ஏறி பறக்கின்றன.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாக நெட்டிசன்கள் பலரும் சாலை பாதுகாப்பு குறித்து தங்களது கவலைகளை வெளிப்படுத்தினர்.

    ×