என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெடுஞ்சாலை"

    • மக்களவையில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் நிதின் கட்கரியிடம் கேள்வி எழுப்பினார்.
    • அதனால்தான் எங்களால் மணிக்கு 100 முதல் 130 கி.மீ வேகத்தில் ஓட்ட முடியவில்லை

    டெல்லி-மும்பை விரைவுச் சாலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கார் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோவைக் குறிப்பிட்டு, மக்களவையில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் நிதின் கட்கரியிடம் கேள்வி எழுப்பினார்.

    அதாவது, நிதின் கட்கரியின் கார் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, ஆனால் அசாமில் அத்தகைய சாலைகள் இல்லாதது வருத்தமளிக்கிறது. சுங்க வரி செலுத்தினாலும் அசாம் மக்களுக்கு தரமான சாலைகள் கிடைக்கவில்லை. அதனால்தான் எங்களால் மணிக்கு 100 முதல் 130 கி.மீ வேகத்தில் ஓட்ட முடியவில்லை என்று கோகாய் கூறினார்.

    இதற்கு பதிலளித்த நிதின் கட்கரி, கனமழை காரணமாக தேசிய நெடுஞ்சாலைகள் சேதமடைந்ததை ஒப்புக்கொண்டார். அதாவது, கௌரவ் கோகோய் கூறியது உண்மை என்றும், விசாரணை நடத்தப்பட்டு சாலைகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இப்போது நிலைமை சிறப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

    • சில நேரங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறுகின்றன.
    • சாலையில் தடுப்பு கட்டைகள் இருப்பது போன்று ‘3 டி’ வடிவில் இந்த எச்சரிக்கை குறியீடு வரையப்பட்டு உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் உள்ள பல்வேறு சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகின்றன. அதிலும், குறிப்பாக பாதசாரிகள் சாலைகளை கடந்து செல்லும் போது வாகனங்கள் வேகமாக வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன. இதனால் சில நேரங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறுகின்றன.

    இதனை தவிர்க்கும் வகையில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின் பேரில், தஞ்சாவூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் செந்தில்குமார் மேற்பார்வையில் உதவி கோட்ட பொறியாளர் கீதா, உதவி பொறியாளர்கள் லட்சுமிபிரியா, வீரமுத்து ஆகியோர் தஞ்சாவூர் உட்கோட்ட பகுதிகளில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தவிர்க்க பல்வேறு குறியீடுகளை வரைந்து வருகின்றனர்.

    அதன்படி, தஞ்சாவூர் மேம்பாலத்தில் மண்டைஓடு சின்னம் வரையப்பட்டது. இந்நிலையில், மாநில நெடுஞ்சாலையான நம்பர் 1 வல்லம் சாலை எலிசா நகர் பகுதியில் பாதசாரிகள் சாலையை கடக்கும் இடத்தில் விபத்தை தவிர்க்கும் வகையில் பாதசாரிகள், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் '3 டி' வடிவ (முப்பரிமாண) எச்சரிக்கை குறியீடு வரையப்பட்டு உள்ளது.

    சாலையில் தடுப்பு கட்டைகள் இருப்பது போன்று '3 டி' வடிவில் இந்த எச்சரிக்கை குறியீடு வரையப்பட்டு உள்ளது. இந்த சாலையில் 2 இடங்களில் பரீட் சார்த்த முறையில் இக்குறியீடு வரையப்பட்டு உள்ளது. மேலும், 2 இடங்களில் மண்டை ஓடு சின்னமும் வரையப்பட்டு உள்ளது.

    இந்த குறியீடு பலன்தரும் பட்சத்தில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மாநில நெடுஞ்சாலைகளில் விபத்து நடைபெறும் இடங்களில் இக்குறியீடுகளை வரைய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கட்டமைப்புகள் மக்களின் சொத்துகளாகவே நீடிக்க வேண்டும்.
    • ரூ.45 ஆயிரம் கோடி முக்கியத்துவம் வாய்ந்த சாலையை வெறும் ரூ.2000 கோடிக்கு தனியாருக்கு தாரை வார்ப்பது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.

    அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னையை அடுத்த வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரையிலான 60 கி.மீ நீள சென்னை வெளிவட்டச் சாலையை தனியாருக்கு விற்பனை செய்ய திமுக அரசு முடிவு செய்திருக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட நெடுஞ்சாலையை தனியாருக்கும் விற்பனை செய்து, அதன் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனங்கள் மக்களிடம் சுங்கக்கட்டணம் வசூலித்து சுரண்ட அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது.

    சென்னையைக் கடந்து மற்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் சென்னை மாநகருக்குள் வருவதைத் தவிர்க்கும் வகையில் சென்னை வண்டலூரில் தொடங்கி நெமிலிச்சேரி வழியாக மீஞ்சூர் வரை மொத்தம் 60.15 கிமீ தொலைவுக்கான வெளிவட்டப்பாதை கடந்த ஆட்சியில் ரூ.2156.40 கோடி செலவில் இரு கட்டங்களாக அமைக்கப்பட்டது.

    சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கும் இந்த சாலையை தனியாருக்கு விற்பனை செய்ய திமுக அரசு முடிவு செய்திருக்கிறது. அதன்படி இந்தச் சாலையை ஒப்பந்தப்புள்ளிகள் வாயிலாக ஏலத்தில் எடுக்கும் தனியார் நிறுவனங்களுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்க உரிமம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    வண்டலூர் - மீஞ்சூர் இடையிலான சென்னை வெளிவட்டச் சாலை முழுவதும் மக்கள் வரிப்பணத்தைக் கொண்டு அமைக்கப்பட்டது. அந்த அடிப்படையில் அது மக்களின் சொத்து. அதைப் பயன்படுத்திக் கொள்ள மக்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. அச்சாலையில் மாநில அரசின் நிறுவனமான தமிழ்நாடு மாநில சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் வாயிலாக சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்கே கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. இத்தகைய சூழலில் இந்தச் சாலையை தனியாருக்கு விற்பனை செய்ய துடிப்பது நியாயமற்றது.

    மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துகளை தனியாருக்கு விற்பனை செய்து ரூ.6 லட்சம் கோடி நிதி திரட்டும் திட்டத்தை 2021-ஆம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 03.09.2021-ஆம் நாள் சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நம் நாட்டினுடைய பொதுத்துறை நிறுவனங்கள் நம் அனைவரின் பொதுச் சொத்தாகும். இலாப நோக்கம் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல், மக்கள் நலன் கருதி இயங்கக் கூடிய பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதோ, குத்தகைக்கு விடுவதோ தேச நலனுக்கு உகந்தது அல்ல என்பது நம்முடையக் கருத்து. பொதுச்சொத்துகளை தனியார் மயமாக்குவதற்கு நம்முடையை எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பிரதமருக்கு கடிதம் எழுதவிருக்கிறேன் என்பதை அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

    ஆனால், இப்போது அதற்கு முற்றிலும் மாறாக தமிழ்நாட்டு மக்களுக்கு சொந்தமான சொத்துகளைத் தனியாருக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார். மத்திய அரசின் சொத்துகளை விற்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மு.க.ஸ்டாலின், மாநில சொத்துகளை மட்டும் தனியாருக்கு மலிவு விலையில் விற்பனை செய்வது எந்த வகையில் நியாயம்? சமூகநீதி, மக்கள் நலன் உள்ளிட்ட எந்த சிக்கலாக இருந்தாலும் திமுக சொல்வதும்,, செய்வதும் வெவ்வேறானவை தான்; எந்த சிக்கலாக இருந்தாலும் இரட்டை வேடம் போடுவது தான் திமுகவின் இயல்பு என்பதற்கு இதை விட சிறந்த எடுத்துக்காட்டு எதுவும் இருக்க முடியாது.

    வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் இன்றைய நிலையில் சராசரியாக தினமும் 31 ஆயிரம் வாகனங்கள் பயணிக்கின்றன.

    குறைந்தபட்சமாக மகிழுந்துகளுக்கு ரூ.140 முதல் அதிகபட்சமாக 7 அச்சு சரக்கு வாகனங்களுக்கு ரூ.895 வரை சுங்க்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சராசரியாக ஓரு வாகனத்திற்கு ரூ.300 என வைத்துக் கொண்டாலும் கூட ஆண்டுக்கு சுமார் ரூ.350 கோடி சுங்கக்கட்டணம் வசூலாகும். 25 ஆண்டுகளின் முடிவில் இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை 70 ஆயிரங்களை கடந்து விடும் என்பதால் சுங்கக்கட்டண வசூலும் ஆண்டுக்கு ரூ.3500 என்ற அளவைத் தாண்டி விடும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்த சாலையிலிருந்து 25 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ரூ.45 ஆயிரம் கோடி வரை சுங்கக்கட்டணம் வசூலிக்க முடியும்.

    அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சாலையை வெறும் ரூ.2000 கோடிக்கு தனியாருக்கு தாரை வார்ப்பது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். இதன் பின்னணியில் என்ன பேரம் நடந்திருக்கும்? என்பதைப் புரிந்து கொண்டாலே, மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட வெளிவட்டச் சாலையை தனியாருக்கு தாரை வார்க்க திமுக துடிப்பது ஏன்? என்பதை புரிந்து கொள்ளலாம்.

    மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கட்டமைப்புகள் மக்களின் சொத்துகளாகவே நீடிக்க வேண்டும். எனவே, வண்டலூர் & மீஞ்சூர் இடையிலான வெளிவட்டச் சாலையை தனியாருக்கு விற்பனை செய்யும் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும். இந்த சாலையில் கட்டணம் வசூலிப்பதையும் நிறுத்த வேண்டும்.

    • ராஜஸ்தான் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.
    • கட்டிமுடிக்கப்பட்ட சாலையில் 30 அடியில் பள்ளம் உருவாகியுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் திறப்பு விழாவிற்கு தயாராக இருந்த நெடுஞ்சாலை மழை வெள்ளத்தில் அடித்துசெல்லட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஜுன்ஜுனு மாவட்டத்தின் பாக்வாலி பகுதியில், கடந்தவாரம் பெய்த கனமழை காரணமாக பாக்வாலி - ஜஹாஜை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை கட்லி நதிப் பகுதியில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

    கட்டிமுடிக்கப்பட்ட சாலையில் 30 அடியில் பள்ளம் உருவாகி நதி நீர் பாய்ந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

    • அலுவலகங்களில் சோதனை நடத்தி ரூ.1.18 கோடி பணம் பறிமுதல் செய்து உள்ளனர்.
    • தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஏஜெண்டுகள் என 12 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொது மேலாளராக இருப்பவர் ராம்பிரித் பஸ்வான். இவர் ஒரு தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக காண்டிராக்டை முடித்து கொடுப்பதற்காக ரூ.15 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

    அவர்கள் லஞ்சப் பணம் கைமாற்றுவது தொடர்பாக சி.பி.ஐ. போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்தில் சோதனை நடத்தி, லஞ்சப் பணம் கைமாறிய போதே, ராம்பிரித் பஸ்வான் மற்றும் தனியார் நிறுவன மேலாளரை கையும் களவுமாக பிடித்தனர்.

    இந்த லஞ்ச வழக்கில் நெடுஞ்சாலைத் துறையை சேர்ந்த மேலும் 6 உயர் அதிகாரிகளும், தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஏஜெண்டுகள் என 12 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

    இதையடுத்து ராம்பிரித் பஸ்வான், தனியார் நிறுவன அதிகாரி உள்பட 4 பேரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். இவர்களது காண்டிராக்ட் சம்பந்தப்பட்ட இடங்கள், அலுவலகங்களில் சோதனை நடத்தி ரூ.1.18 கோடி பணம் பறிமுதல் செய்து உள்ளனர்.

    • நாடு முழுவதும் சுங்கக்கட்டண வசூல் அதிகரித்து இருக்கிறது.
    • பிரம்மபுத்ரா நதியில் ஏராளமான பாலங்களை அமைத்து உள்ளோம்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில் நெடுஞ்சாலை சுங்கக்கட்டணம் தொடர்பாக நேற்று உறுப்பினர்கள் பல்வேறு கேள்வி எழுப்பினர். இந்த கேள்விகளுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி பதிலளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாடு முழுவதும் சுங்கக்கட்டண வசூல் அதிகரித்து இருக்கிறது. கடந்த 2023-24-ம் ஆண்டில் ரூ.64,809.86 கோடி வசூலாகி இருக்கிறது. இது முந்தைய ஆண்டை விட 35 சதவீதம் அதிகம். அதேநேரம் 2019-20-ல் இது ரூ.27,503 கோடியாக இருந்தது.

    சாலை உள்கட்டமைப்புக்காக மத்திய அரசு அதிகம் செலவிடுகிறது. எனவே சுங்கக்கட்டணம் அவசியமானது. சிறந்த சாலையை நீங்கள் விரும்பினால், அதற்காக நீங்கள் கட்டணம் செலுத்தியாக வேண்டும் என்பதே கொள்கை ஆகும்.

    நாங்கள் ஏராளமான பெரிய சாலைகள், 4 வழிச்சாலைகள், 6 வழிச்சாலைகளை அமைத்து வருகிறோம். பிரம்மபுத்ரா நதியில் ஏராளமான பாலங்களை அமைத்து உள்ளோம்.

    இதற்காக வெளிச்சந்தையில் இருந்து நிதி பெற்று வருகிறோம். எனவே சுங்கக்கட்டணம் இல்லாமல் இவற்றை செய்ய முடியாது.

    ஆனாலும் நாங்கள் மிகவும் நியாயமான முறையிலேயே இருக்கிறோம். 4 வழிச்சாலைகளில் மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கிறோம். இருவழிச்சாலைகளில் வசூலிக்கவில்லை.

    தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து கட்டண சுங்கச்சாவடிகளும் தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (கட்டண நிர்ணயம் மற்றும் வசூல்) விதிகள்-2008 மற்றும் தொடர்புடைய சலுகை ஒப்பந்தத்தின் விதிகளின்படி நிறுவப்பட்டுள்ளன.

    இந்த சட்டப்படி தேசிய நெடுஞ்சாலையில் ஒரே பிரிவு மற்றும் ஒரே திசையில் 60 கி.மீ.க்குள் கட்டணம் வசூலிக்கக்கூடாது. எனவே உண்மையில் சில விதிவிலக்குகள் உள்ளன.

    இந்த பாராளுமன்ற அமர்வுக்குப்பிறகு சுங்கக்கட்டணம் தொடர்பாக நாங்கள் ஒரு புதிய கொள்கையை அறிவிக்க உள்ளோம். அதன்மூலம் இந்த பிரச்சனை தீர்க்கப்படும்.

    ஏனெனில் அதில் நாங்கள் நுகர்வோருக்கு நியாயமான சலுகைகளை வழங்குவோம். அதன்பிறகு சுங்கக்கட்டணம் தொடர்பாக எந்த விவாதமும் இருக்காது.

    இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.

    • 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.
    • சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடையும்.

    பல்லடம் :

    பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால் பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.

    திருமணம் போன்ற சுபநாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.இதனால் பல்லடம் நகரத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வந்தது. இதனால் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும், புறவழிச்சாலை வேண்டும், மேம்பாலம் கட்ட வேண்டும் என கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பல்லடம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்தநிலையில் பல்லடம் அருகே காரணம்பேட்டை முதல் பல்லடம் அண்ணாநகர் வரை உள்ள சுமார் 9 கி.மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பல்லடம் நகர பகுதியிலும் ரோடு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதையடுத்து பல்லடத்தில் செட்டிபாளையம் ரோடு பிரிவு முதல் பனப்பாளையத்தில் உள்ள தாராபுரம் ரோடு பிரிவு வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் மாத இறுதிக்குள் விரிவாக்கப் பணிகள் முடிவடைந்து, சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடையும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பார்த்திபனூர் புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக நெடுஞ்சாலைத்துறை தணிக்கை குழு அதிகாரிகள் ஆய்வு நடத்தியது.
    • திட்டப்பணிகளை தணிக்கை செய்யும் பணி நடந்து வருகிறது.

    பரமக்குடி

    தமிழக முழுவதும் கடந்த 9-ந்தேதி முதல் நெடுஞ் சாலைத்துறை அலுவல கங்களில் செயல்பட்டு வரும் திட்டப்பணிகளை தணிக்கை செய்யும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பார்த்திபனூர் புறவழிச் சாலை சாலை மேம்பாட்டு பணிகளை மதுரை நெடுஞ் சாலை, திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர் ஜவஹர் முத்துராஜ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

    பாலம் அமைக்கும் பணியையும் மற்றும் சாலை அமைப்பதற்கான மண் நிரப்புதல் பணியையும் அவர்கள் ஆய்வு செய்தனர். இது தொடர்பான ஆய்வ றிக்கை நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த ஆய்வின்போது திட்டங்கள் கோட்ட பொறியாளர் பிரசன்ன வெங்கடேசன், உதவி கோட்ட பொறியாளர் சாருமதி, உதவி பொறியாளர் அருண்பிரகாஷ், ராமநாதபுரம் கோட்ட பொறியாளர் சந்திரன், பரமக்குடி உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் பிரபாகரன், நெடுஞ்சாலை தரக்கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் வெற்றிவேல் ராஜன், உதவி பொறியாளர்கள் அன்பரசு, சதீஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • பாலம் கட்டுவதற்கான கூடுதல் நிதியை நெடுஞ்சாலைத்துறையில் இருந்து ரெயில்வே துறை கோரியது.
    • சென்னையில் இருந்து சித்தூர் வழியாக திருப்பதிக்கு செல்லும் பயண நேரம் 15 முதல் 20 நிமிடங்கள் குறையும்.

    சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை சத்ராஸ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி ஆகிய பகுதிகளுடன் இணைக்கும் புதிய நெடுஞ்சாலை திட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் கொரோனா தொற்று பரவல் காரணமாக சாலை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது.

    சமீபத்தில் சாலை அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இப்போது வரை 94 சதவீத பணிகள் முடிந்து விட்டன. இந்த பணிக்காக நந்தி ஆற்றின் குறுக்கே 100 மீட்டர் நீளமுள்ள புதிய பாலமும், திருத்தணி மற்றும் அரக்கோணம் ரெயில் நிலையங்களில் ரெயில்வே பாலம் கட்டுவதும் இதன் திட்டப் பணியாகும். அதற்காக, 3.2 கி.மீ நீளமுள்ள சாலை கூடுதலாக போடப்பட வேண்டி உள்ளது.

    மேலும் 800 மீட்டர் நீளமுள்ள ரெயில்வே மேம்பாலத்தின் கட்டுமான செலவும் அதிகரித்தது.

    எனவே பாலம் கட்டுவதற்கான கூடுதல் நிதியை நெடுஞ்சாலைத்துறையில் இருந்து ரெயில்வே துறை கோரியது.

    இந்த நிலையில் தமிழக அரசு இதற்காக கூடுதலாக ரூ.5.9 கோடி நிதியை ஒதுக்கி உள்ளது. இதையடுத்து மேம்பாலம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இந்த நெடுஞ்சாலைப் பணியின் முழு திட்டமும் அடுத்த ஆண்டு 21-க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கப்பட உள்ளது.

    இந்த பணிகள் முடிந்தால் போக்குவரத்து தொடர்பாக சென்னையில் இருந்து சித்தூர் வழியாக திருப்பதிக்கு செல்லும் பயண நேரம் 15 முதல் 20 நிமிடங்கள் குறையும். மேலும் கோவில் நகரமான திருத்தணியில் 70 சதவீதம் போக்குவரத்து நெரிசலும் குறையும்.

    • கமுதி நெடுஞ்சாலையில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
    • சாலை ஆய்வாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி-சாயல்குடி நெடுஞ்சாலையில் கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில், கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழாவை தமிழகம் முழுவதும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து, கமுதி நெடுஞ்சாலை பகுதிகளில், நெடுஞ்சாலைதுறை சார்பில் உதவி கோட்ட பொறியாளர் சக்திவேல் ஏற்பாட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் பார்த்திபன், சாலை ஆய்வாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாபநாசம் உட்கோட்டத்தில் 2 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது.
    • மணலூர், வீரமாங்குடி, சோமேஸ்வ ரபுரம் சாலையில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    கபிஸ்தலம்:

    முன்னாள்முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் பாபநாசம் நெடுஞ்சாலை துறை உட்கோட்டத்தில் உயர் அதிகாரிகளின் உத்தரவுபடி பாபநாசம் உட்கோட்டத்தில் 2 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, முதல் கட்டமாக பாபநாசம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட மணலூர், வீரமாங்குடி, சோமேஸ்வ ரபுரம் சாலையில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    விழாவிற்கு ஊராட்சி தலைவர் சாந்தி கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    முன்னதாக நெடுஞ்சா லைத்துறை இளநிலை பொறி யாளர் ரவி அனைவரும் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    இதில் சாலை ஆய்வாளர்கள், நெடுஞ்சாலை துறை பணியாளர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நெடுஞ்சாலைகளில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • மகிழம், வேம்பு, புனியன், நாவல், சாக்குகொன்றை ஆகிய மர வகைகள் நடப்பட்டு வருகின்றன.

    சங்கரன்கோவில்:

    முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி கடந்த 7-ந் தேதி சென்னையில் நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் சார்பில் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது போல கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதன் மூலம் மாநில நெடுஞ்சாலைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளர்க்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.இதில் மகிழம், வேம்பு, புனியன், நாவல், சாக்குகொன்றை ஆகிய மர வகைகள் நடப்பட்டு வருகின்றன.

    முதல்-அமைச்சரின் இந்த உத்தரவினை தொடர்ந்து சங்கரன்கோவில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நெல்லை சாலையில் மரக்கன்று கள் நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு உதவி கோட்ட பொறியாளர் உலகம்மாள் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் பலவேசம், முத்துமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க .செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நெடுஞ்சாலை துறை பணி யாளர்களிடம் மரக்கன்றுகளை பத்திரமாக பாதுகாத்து அதை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

    இதில் தி.மு.க.வைச் சேர்ந்த வீரமணி, வீராசாமி, ஜெயக்கு மார் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×