என் மலர்
நீங்கள் தேடியது "Heavy rains in"
- அனைத்து அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் மற்றும் குறிப்பாக மத்திய அரசு பஞ்சாபிற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
- 37 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் இவ்வளவு பயங்கரமான பேரழிவைச் சந்தித்துள்ளது.
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பஞ்சாப் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
இந்நிலையில் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் மற்றும் குறிப்பாக மத்திய அரசு பஞ்சாபிற்கு உதவுமாறு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், "இன்று பஞ்சாப் எதிர்கொள்ளும் பேரழிவு சாதாரண வெள்ளம் அல்ல, 37 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் இவ்வளவு பயங்கரமான பேரழிவைச் சந்தித்துள்ளது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன, இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட நமது சகோதர சகோதரிகள் ஒரே அடியில் வீடற்றவர்களாகிவிட்டனர். அவர்களின் வாழ்நாள் முழுவதும் சம்பாத்தியமும் கனவுகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
நாட்டிற்கு ஏற்பட்ட எந்தவொரு பேரிடரையும் பஞ்சாப் எப்போதும் எதிர்த்து நிற்கிறது. இன்று, பஞ்சாப் நெருக்கடியில் உள்ளது. இந்த கடினமான நேரத்தில் பஞ்சாப் மக்களுக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவுமாறு எனது நாட்டு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை பஞ்சாப் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்குகிறார்கள். இந்த பயங்கரமான துயரத்திலிருந்து பஞ்சாபைக் காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைவோம்." என்று அழைப்பு விடுத்துள்ளார்.
- ராஜஸ்தான் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.
- கட்டிமுடிக்கப்பட்ட சாலையில் 30 அடியில் பள்ளம் உருவாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் திறப்பு விழாவிற்கு தயாராக இருந்த நெடுஞ்சாலை மழை வெள்ளத்தில் அடித்துசெல்லட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஜுன்ஜுனு மாவட்டத்தின் பாக்வாலி பகுதியில், கடந்தவாரம் பெய்த கனமழை காரணமாக பாக்வாலி - ஜஹாஜை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை கட்லி நதிப் பகுதியில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.
கட்டிமுடிக்கப்பட்ட சாலையில் 30 அடியில் பள்ளம் உருவாகி நதி நீர் பாய்ந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
- ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை கனமழை பொய்யா விட்டாலும் ஆங்காங்கே சாரல் மழை பெய்து வந்தது.
- மாவட்டத்தில் அதிக பட்சமாக பவானிசாகரில் 17.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
ஈரோடு:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை கனமழை பொய்யா விட்டாலும் ஆங்காங்கே சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையின் நேற்று காலை வழக்கம் போல் ஈரோடு மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது.
பின்னர் மாலை திடீரென வானத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. இரவிலும் சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிக பட்சமாக பவானிசாகரில் 17.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
இதேபோல் சத்திய மங்கலம், கோபிசெட்டி பாளையம், வரட்டுப்பள்ளம், குண்டேரிபள்ளம், கொடிவேரி, கொடுமுடி, நம்பியூர், கவுந்தப்பாடி, மொடக்குறிச்சி, தாளவாடி, பவானி போன்ற பகுதி களிலும் பரவலாக மழை பெய்தது.
இதனால் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
பவானிசாகர்-17.40, எலந்த குட்டைமேடு-16.80, சத்தியமங்கலம்-15, கோபி-14.20, குண்டேரி பள்ளம்-8.20, வரட்டுபள்ளம்-8, கொடிவேரி-7, கொடு முடி-6.20, நம்பியூர்-6, கவுந்தபாடி-5.20, மொடக்குறிச்சி-3.40, தளவாடி-1.50, பவானி-1.20.
- இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
- நம்பியூரில் அதிகபட்சமாக 46 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்தது. அனல் காற்றுடன் வெயில் தாக்கத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஈரோடு மாநகர பகுதியில் 45 நிமிடம் சூறாவளி காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதேபோல் கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் நேற்று காலை வணக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. ஆனால் மதியம் 3 மணி பிறகு ஈரோடு புறநகர் பகுதியில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.
குறிப்பாக நம்பியூரில் மதியம் 2 மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதுபோல் கோபிசெட்டிபாளையம் பகுதிகளிலும் 2 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் நம்பியூரில் அதிகபட்சமாக 46 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
இதேபோல் கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, அம்மாபேட்டை, பவானிசாகர், சென்னிமலை, பவானி போன்ற புறநகர் பகுதியில் பரவலாக மழை கொட்டி தீர்த்தது. ஆனால் அதேநேரம் ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று மாலை மழை பெய்யவில்லை.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
நம்பியூர்-46, கோபி-29, பெருந்துறை-16, எலந்தகுட்டை மேடு-13, அம்மாபேட்டை-6, பவானிசாகர்-3.20, சென்னிமலை-3, பவானி-3.30.






