என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம் ஆத்மி"

    • பட்டியலின பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்
    • இந்த திட்டத்தை செயல்படுத்த பஞ்சாப் அரசு ரூ.9,300 கோடியை ஒதுக்கியுள்ளது.

    18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசு அறிவித்தது.

    பட்டியலின பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாயும் மற்றப் பெண்களுக்கு 1000 ரூபாயும் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா பட்ஜெட் உரையில் அறிவித்தார். இந்த திட்டத்தை செயல்படுத்த பஞ்சாப் அரசு ரூ.9,300 கோடியை ஒதுக்கியுள்ளது.

    இந்தத் திட்டத்தில் வருமான வரி செலுத்துவோர் மற்றும் தற்போதைய அல்லது முன்னாள் அரசு ஊழியர்கள் மற்றும் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இந்தத் திட்டத்திலிருந்து விலக்கப்படுவார்கள். ஆனாலும் பஞ்சாபில் வசிக்கும் பெண்களில் கிட்டத்தட்ட 97% பேர் இதன்மூலம் பலன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இந்த பட்ஜெட்டில் இருந்து, இலவச பேருந்து சேவை திட்டத்திற்கு ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    • வீட்டு மற்றும் வணிக நுகர்வோருக்கான மின் கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
    • வீட்டு நுகர்வோருக்கு மாதத்திற்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    பஞ்சாபில் முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அரசு ஏற்கனவே மாதத்திற்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குகிறது.

    இந்த நிலையில் வீட்டு மற்றும் வணிக நுகர்வோருக்கான மின் கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அம்மாநில மின்சார துறை மந்திரி சஞ்சய் அரோரா கூறும்போது, வீட்டு நுகர்வோருக்கான கட்டணத்தை யூனிட்டுக்கு ரூ.1.50 குறைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    ஏற்கனவே வீட்டு நுகர்வோருக்கு மாதத்திற்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    மாதத்திற்கு 300 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்திய பிறகு கட்டணம் செலுத்தும் குடியிருப்பு நுகர்வோருக்கு, மின்சார கட்டணம் யூனிட்டுக்கு ரூ.1.50 குறைக்கப்பட்டுள்ளது.

    வணிக நுகர்வோருக்கான கட்டணம் அவர்களின் சுமை திறனைப் பொறுத்து ஒரு யூனிட்டுக்கு 65 பைசாவில் இருந்து 79 பைசாவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த குறைக்கப்பட்ட கட்டணம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்றார்.

    பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மின் கட்டணத்தை அரசு குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கெஜ்ரிவால் 156 நாள்களும், துணை முதல்வராக இருந்த சிசோடியா 530 நாள்களும் சிறையில் இருந்துள்ளனர்.
    • இந்த வழக்கு சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் சதி.

    டெல்லியில் 2021இல் ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோது வகுக்கப்பட்ட புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது.

    இதில் அப்போதைய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மனிஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

    கெஜ்ரிவாலும், சிசோடியாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு நீண்ட மாதம் கழித்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    இடையில் கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்தது. 

    இந்த வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    தீர்ப்பு:

    தீர்ப்பளித்த டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜிதேந்திர சிங், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அரசுத் தரப்பில் எந்த ஆதாரமும் இல்லை. ஆம் ஆத்மி வகுத்த புதிய மதுபான கொள்கையில் சதி திட்டமோ குற்றவியல் நோக்கமோ இல்லை

    ஆதாரங்களே இல்லாமல் சிபிஐயால் ஜோடிக்கப்பட்ட வழக்கு இது. எந்த குற்றமும் செய்யாமல் முதல்வராக இருந்த கெஜ்ரிவால் 156 நாள்களும், துணை முதல்வராக இருந்த சிசோடியா 530 நாள்களும் சிறையில் இருந்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்தார்.

    எனவே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, தெலுங்கானா பிஆர்எஸ் முன்னாள் தலைவர் கே. கவிதா மற்றும் விஜய் நாயர், அபிஷேக் போயின்பள்ளி உள்ளிட்ட மொத்தம் 23 பேரையும் விடுவிக்க அவர் உத்தரவிட்டார்.

    மேலும், வழக்கில் சாட்சியமோ, ஆதாரங்களோ இல்லாமல் நூற்றுக்கணக்கான பக்கங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார்.

     ஆனந்தக் கண்ணீர்:

    தான் குற்றமற்றவர் என தீர்ப்பு வெளியானதும் கெஜ்ரிவால் நீதிமன்றத்திலேயே உணர்ச்சிவசப்பட்டு உடைந்து அழுதார். மணீஷ் சிசோடியா மற்றும் தனது வழக்கறிஞர் ஹரிஹரன் ஆகியோரைக் கட்டிப்பிடித்து தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்.

    தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''இந்த வழக்கு சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் சதி. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை அதிகாரத்திலிருந்து வெளியேற்ற பாஜக திட்டமிட்டது.

    அதிகாரத்திற்காக யாரும் நாட்டுடனும் அரசியலமைப்புடனும் இந்த வழியில் விளையாடக்கூடாது. உண்மை வெல்லும் என்று நாங்கள் எப்போதும் கூறி வந்தோம். உண்மை வென்றது.

    இந்தத் தீர்ப்பு சத்தியத்திற்கு கிடைத்த வெற்றி. என் மீதான அனைத்துப் பொய்க் குற்றச்சாட்டுகளும் இன்று தகர்ந்துவிட்டன" என்று தெரிவித்தார்.

    தீர்ப்பு வெளியானவுடன் ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். சமூக வலைதளங்களில் இது நீதிக்குக் கிடைத்த வெற்றி என்று பலர் பதிவிட்டு வருகின்றனர்.

    கெஜ்ரிவாலின் இந்த விடுதலை, டெல்லி அரசியலில் ஒரு பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் கெஜ்ரிவால் மீதான இந்த ஊழல் வழக்கை முன்வைத்தே மேடை தோறும் பிரசாரம் செய்து பாஜக ஆட்சியை பிடித்தது.

    இந்த தீர்ப்பு மூலம் கெஜ்ரிவால் மீண்டும் முழு வீச்சில் அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தத் தீர்ப்பு கெஜ்ரிவாலின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. 

    • ஆதாரங்களே இல்லாமல் சிபிஐயால் ஜோடிக்கப்பட்ட வழக்கு இது.
    • மொத்தம் 23 பேரையும் விடுவிக்க உத்தரவிட்டார்.

    டெல்லி மதுபான ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

    டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோது கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது.

    புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக 2022 இல் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மதுபான கொள்கையில் லாபி செய்து ரூ.100 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது.

    முதல்வராக இருந்த அரவிந்த் கேஜ்ரிவாலும் , துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியாவையும் சிபிஐ கைது செய்தது. வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜிதேந்திர சிங், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அரசுத் தரப்பில் எந்த ஆதாரமும் இல்லை. ஆம் ஆத்மி வகுத்த புதிய மதுபான கொள்கையில் சதி திட்டமோ குற்றவியல் நோக்கமோ இல்லை

    ஆதாரங்களே இல்லாமல் சிபிஐயால் ஜோடிக்கப்பட்ட வழக்கு இது. எந்த குற்றமும் செய்யாமல் முதல்வராக இருந்த கெஜ்ரிவால் 156 நாள்களும், துணை முதல்வராக இருந்த சிசோடியா 530 நாள்களும் சிறையில் இருந்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்தார்.

    எனவே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, தெலுங்கானா பிஆர்எஸ் முன்னாள் தலைவர் கே. கவிதா மற்றும் விஜய் நாயர், அபிஷேக் போயின்பள்ளி உள்ளிட்ட மொத்தம் 23 பேரையும் விடுவிக்க அவர் உத்தரவிட்டார்.

    மேலும், வழக்கில் சாட்சியமோ, ஆதாரங்களோ இல்லாமல் நூற்றுக்கணக்கான பக்கங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார்.

    நீதிமன்றம் அனைவரையும் விடுவித்துள்ள நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 

    • எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.-க்களின் பொறுப்புக்கூறல் மற்றும் செயல்திறனை மதிப்பீடு செய்வதில் குறைபாடு உள்ளது.
    • தேர்தலுக்கு முன் தலைவர்கள் மக்களை பின்தொடர்கிறார்கள். தேர்தலுக்கு பின், மக்கள் தலைவர்களை பின்தொடர்கிறார்கள்.

    ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ராகவ் சதா, அவையில் பேசும்போது தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்களை திரும்பப் பெறும் நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இது குறித்து பூஜ்ஜியம் நேரத்தில் பேசும்போது ராகவ் சதா பேசியதாவது:-

    தற்போதைய நடைமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.-க்களின் பொறுப்புக்கூறல் மற்றும் செயல்திறனை மதிப்பீடு செய்வதில் குறைபாடு உள்ளது. தேர்தலுக்கு முன்னதாக தலைவர்கள் மக்களை பின்தொடர்கிறார்கள். தேர்தலுக்கு பின், மக்கள் தலைவர்களை பின்தொடர்கிறார்கள்.

    உலகம் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது 5 வருடம் என்பது மிகவும் அதிகமான காலமாகும். தவறான தலைவர் லட்சக்கணக்கான மக்களையும் முழு பிராந்தியங்களையும் இருளிலும் பின்தங்கிய நிலையிலும் ஆழ்த்த முடியும். செய்த தவறுகளை திருத்துவதற்கான அதிகாரத்திற்கு வாக்காளர்கள் தகுதியானர்கள். திரும்பப் பெறும் உரிமை அரசியல்வாதிகளுக்கு எதிரான ஆயுதம் அல்ல. ஜனநாயகத்திற்கான காப்பீடு.

    தற்போது ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, நீதிபதிகள், அரசாங்கத்தை தகுதி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளது. இதேபோன்ற வாய்ப்பை சரியாக செய்யாத எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.-க்களுக்கு எதிராக வாக்காளர்களுக்கு ஏன் வழங்கக் கூடாது.

    இவ்வாறு ராகவ் சதா தெரிவித்தார்.

    • பஞ்சாப் மாநில முதல்வர் இங்கிலாந்து, இஸ்ரேல் செல்ல திட்டமிட்டுள்ளார்.
    • மத்திய வெளியுறவுத்துற அமைச்சகம் அனுமதி கொடுக்கவில்லை எனத் தகவல்.

    முதலீட்டை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் செல்ல பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் மற்றும் தொழில்துறை அமைச்சர் சஞ்சீவ் அரோரா ஆகியோருக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி வழங்க மறுத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    மேலும், இதுபோன்ற அனுமதி மறுப்பு இது முதல்தடவை அல்ல எனவும் தெரிவித்துள்ளது.

    பிப்ரவரி மாதம் முதலமைச்சர் பகவத் மான் மற்றும் தொழில்துறை அமைச்சர் இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் செல்ல உள்ளனர். அவர்களுடன் சில அரசு அதிகாரிகளும் செல்ல உள்ளனர். அனுமதி கொடுக்கப்பட்டால் சரியான தேதி இறுதி செய்யப்படும். எனினும் மத்திய அரசு அரசியல் அனுமதி கொடுக்க மறுத்துள்ளது. காரணம் தெரிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.

    வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள சீனியர் தலைவர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் இருந்து அரசியல் அனுமதி பெறுவது அவசியமாகும்.

    • பாஜக அமைச்சர் கபில் மிஸ்ரா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலானது.
    • மத உணர்வுகளைத் தூண்டிவிடுதல் மற்றும் போலித் தகவல்களைப் பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    டெல்லி சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் அதிஷி ஆற்றிய உரையின் ஒரு பகுதியை டெல்லி பாஜக அமைச்சர் கபில் மிஸ்ரா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலானது.

    அதில் அதிஷி சீக்கிய குரு தேக் பகதூரை அவமதித்ததாகக் கூறி கண்டனம் வலுத்தது. டெல்லி மற்றும் பஞ்சாப் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

    இதற்கிடையே அதிஷியின் உரையை எடிட் செய்து அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அந்த வீடியோ பரப்பப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி புகார் அளித்தது.

    பஞ்சாபில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மத உணர்வுகளைத் தூண்டிவிடுதல் மற்றும் போலித் தகவல்களைப் பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் டெல்லி பாஜக அமைச்சர் கபில் சர்மா மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வீடியோவின் உண்மைத்தன்மையைக் கண்டறிய தடயவியல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.   

    • 12 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு 10 மையங்களில் தொடங்கியது.
    • பாஜக வேட்பாளர்கள் சுமன்குமார் குப்தா, தனிகா ஜெயின் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    டெல்லி சட்டசபைக்கு கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆம்ஆத்மியிடம் இருந்து ஆட்சியை கைப் பற்றியது.

    டெல்லி மாநகராட்சியில் உள்ள 12 வார்டுகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 3-ந்தேதி நடைபெற்றது. இதில் 9 வார்டு பாஜக வசமும், எஞ்சிய 3 வார்டுகள் ஆம்ஆத்மி வசமும் இருந்தன.

    12 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு 10 மையங்களில் தொடங்கியது.

    இதில் பா.ஜனதா, ஆம் ஆத்மி ஆகியவை தலா 2 வார்டுகளில் வெற்றி பெற்றன. காங்கிரஸ், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிகள் தலா 1 வார்டுகளை கைப் பற்றியது. மற்ற சில வார்டு களில் பா.ஜனதா முன்னி லையில் உள்ளன.

    பாஜக வேட்பாளர்கள் சுமன்குமார் குப்தா, தனிகா ஜெயின் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    • அடுத்த கூட்டத்தொடரில் புதிய மசோதா கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
    • பஞ்சாப் அரியானா மாநிலங்களின் தலைநகராக சண்டிகர் உள்ளது.

    பஞ்சாப் அரியானா மாநிலங்களின் தலைநகராக  சண்டிகர் யூனியன் பிரதேசம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சண்டிகருக்கு தனியாக துணைநிலை ஆளுநரை நியமிக்கும் வகையில் டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில்  131வது அரசியலமைப்பு திருத்தம் மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

    அரியானாவில் பாஜக ஆட்சியில் உள்ள நிலையில் பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது. இரு மாநிலங்களுக்கும் தனித்தனியே ஆளுநர்கள் உள்ளனர். தற்போது சண்டிகர் யூனியன் பிரதேசம் பஞ்சாப் ஆளுநரால் நிர்வகிக்கப்படுகிறது.

    இந்நிலையில் பஞ்சாப் ஆளுநாரால் நிர்வகிக்கப்பட்டுவரும் சண்டிகருக்கு, துணைநிலை ஆளுநர் நியமிக்கப்பட்டால், தலைநகர் மீதான உரிமைகள் நீர்த்துப்போகச் செய்யும் என ஆம் ஆத்மி, காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக சண்டிகருக்கு தனியே துணை நிலை ஆளுநரை பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் மான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது ஒரு கடுமையான அநீதி என்றும், பஞ்சாபின் தலைநகரைப் அபகரிக்க பாஜக சதி செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.

    ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், இது பஞ்சாபின் அடையாளம் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளைத் தாக்குகிறது என்றும் கூட்டாட்சி கட்டமைப்பைப் பிளவுபடுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார். சண்டிகர் பஞ்சாபிற்குச் சொந்தமானது, அது பஞ்சாபுடனேயே இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    • போலீசார் மீது அவரது ஆதரவாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
    • ஆஸ்திரேலியாவில் இயங்கி வரும் பஞ்சாபி இணைய சேனலுக்கு அவர் அளித்த பேட்டி மூலம் இது தெரியவந்துள்ளது.

    பஞ்சாபில் ஆளும் ஆம்ஆத்மி எம்எல்ஏ ஹர்மித் சிங் பதன்மர்ஜா பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதைத் தொடர்ந்து ஆஸிதிரேலியா நாட்டிற்கு தப்பி சென்றுள்ளார்.

    பஞ்சாப் மாநிலம் ஜிராக்பூரைச் சேர்ந்த பெண் கொடுத்த புகார்படி கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி சனூர் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தனர்.

    செப்டம்பர் 2 அன்று அரியானாவில் உறவினர் உறவினர் வீட்டில் இருந்த ஹர்மீத் சிங்கை கைது செய்ய சென்ற போலீசார் மீது அவரது ஆதரவாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அங்கிருந்து காரில் தப்பிச் சென்ற ஹர்மீத் சிங்கை போலீசார் தேடி வந்தனர்.

    பாலியல் வன்கொடுமை வழக்கில் நேரில் ஆஜராகாத காரணத்தினால் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பாட்டியாலா நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

    இதற்கிடையே அவருக்கு போலீஸ் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது. இந்நிலையில் ஹர்மீத் சிங் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.

    ஆஸ்திரேலியாவில் இயங்கி வரும் பஞ்சாபி இணைய சேனலுக்கு அவர் அளித்த பேட்டி மூலம் இது தெரியவந்துள்ளது.

    அந்த பேட்டியில், தன் மீதான குற்றச்சாட்டு அரசியல் சதி என்றும் தனக்கு ஜாமீன் கிடைத்ததும் நாடு திரும்புவேன் என்றும் பேசியுள்ளார். மேலும் தனது சொந்த கட்சியினர் குறித்தும் அந்த பேட்டியில் அவர் குறை கூறியுள்ளார். 

    • நேற்று பீகாரில் மாநிலத்தில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
    • புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டு ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

    இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் தேர்தல்களில் மிகப்பெரிய அளவில் வாக்கு திருட்டு நடந்து வருவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

    அந்தவகையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவின் மகாதேவ்புரா சட்டசபை தொகுதியில் மட்டும் 1 லட்சத்துக்கு அதிகமான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு இருந்தாக குற்றம் சாட்டினார். அத்துடன் ஆலந்த் தொகுதியில் 6 ஆயிரத்துக்கு அதிகமான வாக்காளர்களை நீக்க முயற்சி நடந்ததாக பகீர் தகவலை வெளியிட்டு இருந்தார்.

    மேலும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு வலுவூட்டும் வகையில் பல்வேறு தரவுகளையும் அவர் செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.

    தற்போது தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அரியானாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் 25 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்கு திருட்டு நடந்திருப்பதாக நேற்றுமுன் தினம் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து நேற்று பீகாரில் மாநிலத்தில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 64.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது, கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக 60 சதவீதத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது.

    இதனிடையே, நேற்று நடைபெற்ற பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தலில், பா.ஜ.க. எம்.பி. ராகேஷ் சின்ஹா, பூர்வாஞ்சல் மோர்ச்சா டெல்லி தலைவர் சந்தோஷ் ஓஹா என டெல்லியை சேர்ந்த பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகிகள் பலரும் டெல்லி தேர்தலில் வாக்களித்து இருந்தார்கள். இவர்கள் அனைவரும் தற்பொழுது பீகார் சட்டமன்றத் தேர்தலிலும் வாக்களித்துள்ளனர்.

    இது தொடர்பான புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டு ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

    அனைவருக்கும் தெரிந்த நிர்வாகிகளே இவ்வளவு தைரியமாக கள்ள ஓட்டு போடுகிறார்கள் என்றால் இன்னும் எத்தனை ஆயிரம் பேர் இப்படி வாக்களித்து இருப்பார்கள் எனவும் ஆம் ஆத்மி கட்சி சந்தேகத்தை எழுப்பி உள்ளது. 

    • மாயாவதி காலி செய்த பங்களாவை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
    • அந்த பங்களா மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரிக்கு ஒதுக்கப்பட்டது.

    ஓராண்டு காத்திருப்புக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மத்திய அரசு இறுதியாக அதிகாரப்பூர்வ பங்களாவை ஒதுக்கியுள்ளது.

    கெஜ்ரிவால், கடந்த 2024 செப்டம்பர் 17 அன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபின், தனது கட்சி எம்.பி.யான அசோக் மிட்டலின் வீட்டில் தற்காலிகமாக வசித்து வருகிறார்.

    தேசிய அங்கீகாரம் பெற்ற கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கு மத்திய அரசு பங்களா ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் அரசு பங்களா ஒதுக்கீட்டில் ஏற்பட்ட தாமதம் குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி மனு தாக்கல் செய்தது.

    இதனையடுத்து, செப்டம்பர் 25 அன்று, 10 நாட்களுக்குள் தகுந்த பங்களாவை ஒதுக்குவதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் உறுதியளித்தது.

    அந்த வகையில் கெஜ்ரிவாலுக்கு டெல்லியில் லோதி எஸ்டேட்டில் உள்ள டைப்-7 பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த பங்களாவில் இதற்கு முன்னர், பாஜக தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான இக்பால் சிங் லால்புரா வசித்து வந்தார்.

    முன்னதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி காலி செய்த பங்களாவை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அந்த பங்களா மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரிக்கு ஒதுக்கப்பட்டது.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லி தேர்தலின்போது கெஜ்ரிவாலின் அதிகாரபூர்வ அரசு இல்லத்தில் ஆடம்பர வசதிகள் இருப்பதாக பாஜக தீவிர பிரசாரம் மேற்கொண்டு ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.  

    ×