என் மலர்
நீங்கள் தேடியது "Vote Theft"
- பிரதமரும் அமித் ஷாவும் அவர்கள் விரும்பிய இடத்திற்குச் செல்லலாம்
- பீகார் மக்கள் விழிப்புடன் இருந்து வாக்குத் திருட்டை நிறுத்த வேண்டும்.
பீகாரில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் நடைபெற்ற நிலையில் கிஷன்கஞ்ச் தொகுதியில் நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.
அவர் கூறியதாவது, "எங்கள் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு மோடி, அமித் ஷா மற்றும் தேர்தல் ஆணையத்திடம் எந்தப் பதிலும் இல்லை. ஏனெனில் உண்மை இப்போது மக்களுக்கு முன்னால் வந்துவிட்டது.
பிரதமரும் அமித் ஷாவும் அவர்கள் விரும்பிய இடத்திற்குச் செல்லலாம். ஆனால் அவர்கள் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதற்காக இறுதியில் பிடிபடுவார்கள்.
பீகாரில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முதல்வா் நிதீஷ் குமாருக்கு விருப்பமில்லை.
பிரதமரும், உள்துறை அமைச்சரும், தேர்தல் ஆணையமும் வாக்குகளைத் திருடுகிறார்கள். பீகார் மக்கள் விழிப்புடன் இருந்து ஒன்றுகூடி வாக்குத் திருட்டை தடுத்து நிறுத்தினால் இந்தியா கூட்டணி 100 சதவீதம் ஆட்சியமைப்பது நிச்சயம்" என்று தெரிவித்தார்.
பீகாரில் வரும் 11 ஆம் தேதி 112 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. . 14 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
- நேற்று பீகாரில் மாநிலத்தில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
- புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டு ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் தேர்தல்களில் மிகப்பெரிய அளவில் வாக்கு திருட்டு நடந்து வருவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
அந்தவகையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவின் மகாதேவ்புரா சட்டசபை தொகுதியில் மட்டும் 1 லட்சத்துக்கு அதிகமான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு இருந்தாக குற்றம் சாட்டினார். அத்துடன் ஆலந்த் தொகுதியில் 6 ஆயிரத்துக்கு அதிகமான வாக்காளர்களை நீக்க முயற்சி நடந்ததாக பகீர் தகவலை வெளியிட்டு இருந்தார்.
மேலும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு வலுவூட்டும் வகையில் பல்வேறு தரவுகளையும் அவர் செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.
தற்போது தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அரியானாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் 25 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்கு திருட்டு நடந்திருப்பதாக நேற்றுமுன் தினம் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நேற்று பீகாரில் மாநிலத்தில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 64.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது, கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக 60 சதவீதத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது.
இதனிடையே, நேற்று நடைபெற்ற பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தலில், பா.ஜ.க. எம்.பி. ராகேஷ் சின்ஹா, பூர்வாஞ்சல் மோர்ச்சா டெல்லி தலைவர் சந்தோஷ் ஓஹா என டெல்லியை சேர்ந்த பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகிகள் பலரும் டெல்லி தேர்தலில் வாக்களித்து இருந்தார்கள். இவர்கள் அனைவரும் தற்பொழுது பீகார் சட்டமன்றத் தேர்தலிலும் வாக்களித்துள்ளனர்.
இது தொடர்பான புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டு ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
அனைவருக்கும் தெரிந்த நிர்வாகிகளே இவ்வளவு தைரியமாக கள்ள ஓட்டு போடுகிறார்கள் என்றால் இன்னும் எத்தனை ஆயிரம் பேர் இப்படி வாக்களித்து இருப்பார்கள் எனவும் ஆம் ஆத்மி கட்சி சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
- ராய் தொகுதியில் ஒரே வீட்டில் 108 வாக்காளர்கள் உள்ளனர்.
- பாஜக நிர்வாகி வீட்டில் 66 வாக்குகள் உள்ளதாக மோசடி
வாக்குத் திருட்டு பற்றிய ஹைட்ரஜன் குண்டை இன்று வெளியிடுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். .
இது தொடர்பாக 'THE H FILES' என்ற தலைப்பில் இன்று பகல் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து ராகுல் காந்தி உரையாற்றி வருகிறார்.
அப்போது பேசிய அவர், "ஹரியானாவில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 3.5 லட்சம் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது . இவர்கள் அனைவரும் முந்தைய நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தவர்கள். ஆனால் பாஜக தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இத்தனை பேரையும் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்.
ஹரியானாவின் ஹோடல் தொகுதியில் ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள் வசிப்பதாகக் கூறி மாபெரும் மோசடி செய்துள்ளனர்.
ராய் தொகுதியில் ஒரே வீட்டில் 108 வாக்காளர்கள், பாஜக நிர்வாகி வீட்டில் 66 வாக்குகள் உள்ளதாக மோசடி செய்துள்ளனர் என்று ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றம் சாட்டியுள்ளார்.
- ஒரு பெண்மணி 223 முறை தனித்தனியாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்
- வாக்குச்சாவடி மையங்களில் இலட்சக்கணக்கான போலி வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
வாக்குத் திருட்டு பற்றிய ஹைட்ரஜன் குண்டை இன்று வெளியிடுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். .
இது தொடர்பாக 'THE H FILES' என்ற தலைப்பில் இன்று பகல் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து ராகுல் காந்தி உரையாற்றி வருகிறார்.
அப்போது பேசிய அவர், "அரியானா தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக முதல்வர் வேட்பாளராக இருந்த நயாப் சிங் சைனி பாஜக கண்டிப்பாக ஆட்சியைப் பிடிக்கும் அதற்கான வேலைகளை செய்து விட்டோம் என சிரித்தபடியே கூறுகிறார் அந்த சிரிப்பின் பின்னால் மிகப்பெரிய சதி இருக்கிறது.
நாட்டின் இளைஞர்கள் குறிப்பாக gen z தலைமுறையினர் நான் சொல்வதை கவனமாக கேளுங்கள் ஏனென்றால் உங்களது எதிர்காலத்தை பற்றி தான் நான் தற்பொழுது பேசுகிறேன். உங்களது வாக்குரிமையை நிலைநாட்டுவதற்காக தான் பேசுகிறேன்
பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் வாக்கு செலுத்தி இருக்கிறார். ஷிமா, ஸ்வீட்டி, சரஸ்வதி, விமலா என வெவ்வேறு பெயர்களில் இந்த பெண்மணி ஹரியானாவின் ஒரு தொகுதியில் 10 வெவ்வேறு வாக்குச்சாவடி மையங்களில் இருந்து 22 வாக்குகளை செலுத்தி இருக்கிறார்.
பெண்மணி ஒருவர் இரண்டு வாக்குப்பதிவு மையங்களில் 223 முறை தனித்தனியாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார். இந்தப் பெண்மணி நினைத்தால் ஒவ்வொரு வாக்குப் பதிவு மையங்களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் வாக்களித்திருக்கலாம் அதனால்தான் வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி காட்சிகளை வெளிவிடாமல் தேர்தல் ஆணையம் அளித்திருக்கிறது.
இதுபோல ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடி மையங்களில் இலட்சக்கணக்கான போலி வாக்குகள் பதிவாகி இருக்கிறது. ஒரே நபர்கள் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு வயதுகளின் வெவ்வேறு அடையாள அட்டைகளை வெவ்வேறு முகவரிகளில் இருந்து வாக்களித்திருக்கிறார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக ராகுல் காந்தி வெளியிட்டார்
- வாக்கு திருட்டில் பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
- 'THE H FILES' என்ற தலைப்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ராகுல் காந்தி
கடந்த செப்டம்பர் மாதம் கர்நாடக மாநிலம் ஆலந்து தொகுதியில் சுமார் 6 ஆயிரம் வாக்குகளை நீக்க முயற்சி செய்யப்பட்டது என்பதை ராகுல் காந்தி ஆதாரங்களுடன் வெளியிட்டார்.
அப்போது, வாக்கு திருட்டு புகாரில் ஆதாரங்கள் உள்ளது. யதார்த்த நிலையை முற்றிலும் அழிக்கப்போகும் ஹைட்ரஜன் குண்டை வெளிப்படுத்த போகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி வாக்குத் திருட்டு பற்றிய ஹைட்ரஜன் குண்டை இன்று வெளியிடுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். .
இது தொடர்பாக 'THE H FILES' என்ற தலைப்பில் இன்று பகல் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து ராகுல் காந்தி உரையாற்றி வருகிறார்.
அப்போது பேசிய அவர், "தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்துக் கணிப்புகளும் ஹரியானாவில் காங்கிரஸ் தான் வெற்றி பெறும் என்று கூறின. ஹரியானாவின் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக, அஞ்சல் வாக்குகள் உண்மையான வாக்குகளிலிருந்து வேறுபட்டிருந்தன என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முன்பு ஹரியானாவில் இது நடந்ததில்லை.
நீங்கள் பார்க்கப் போகும் இந்தத் தகவலை நான் முதன்முதலில் பார்த்தபோது, அதை நம்ப முடியாமல் அதிர்ச்சி அடைந்தேன். இந்த தகவல்களை நான் பலமுறை சரிபார்த்தேன்.
ஹரியானாவின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை இரண்டு கோடி. அதில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்ட வாக்குகள் ஆகும். அதாவது எட்டு வாக்காளர்களில் ஒரு வாக்காளர் போலி வாக்காளராக இருந்திருக்கிறார்
5 லட்சத்து 21 ஆயிரத்து 619 போலி வாக்காளர்கள் 93 ஆயிரத்து 174 வாக்குகள் போலியான முகவரியை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது
பாஜக நிர்வாகியான உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரகலாத் என்பவர் மதுரா தொகுதியில் வாக்களித்திருக்கிறார் பிறகு ஹரியானாவின் நோத்தல் சட்டமன்ற தொகுதியிலும் வாக்களித்திருக்கிறார்
பாஜகவின் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் தலைவர்கள் ஹரியானாவிலும் வாக்களித்திருக்கிறார்கள் உத்தரபிரதேசத்திலும் வாக்களித்திருக்கிறார்கள் எனக் கூறி அதற்கான புகைப்பட ஆதாரங்களையும் ராகுல் காந்தி வெளியிட்டு குற்றம் சாட்டினார்.
- வாக்கு திருட்டில் பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
- 'THE H FILES' என்ற தலைப்பில் இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் ராகுல் காந்தி.
கடந்த செப்டம்பர் மாதம் கர்நாடக மாநிலம் ஆலந்து தொகுதியில் சுமார் 6 ஆயிரம் வாக்குகளை நீக்க முயற்சி செய்யப்பட்டது என்பது குறித்து ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து ஆதாரங்களை வெளியிட்டார்.
அப்போது, வாக்கு திருட்டு புகாரில் ஆதாரங்கள் உள்ளது. யதார்த்த நிலையை முற்றிலும் அழிக்கப்போகும் ஹைட்ரஜன் குண்டை வெளிப்படுத்த போகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி வாக்குத் திருட்டு பற்றிய ஹைட்ரஜன் குண்டை இன்று வெளியிடுவதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக 'THE H FILES' என்ற தலைப்பில் இன்று பகல் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து ராகுல் காந்தி உரையாற்றவுள்ளார்.
- தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
- ஆதாரங்களை கர்நாடக மாநில சிஐடி-யிடம் வழங்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
கர்நாடக மாநில ஆலந்து தொகுதியில் சுமார் 6 ஆயிரம் வாக்குகளை நீக்க முயற்சி நடந்ததாகவும், வாக்காளர்களின் உறவினர்கள் கண்டுபிடித்ததால் அவை தடுத்து நிறுத்தப்பட்டதாவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். மேலும், systematic ஆக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும், இது தொடர்பான ஆதாரங்களை கர்நாடக மாநில சிஐடி-யிடம் வழங்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
இந்நிலையில், கர்நாடகா முழுவதும் பதிவான அனைத்து 'வாக்குத் திருட்டு' புகார்களையும் விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது அம்மாநில காங்கிரஸ் அரசு அமைத்துள்ளது.
ஏற்கனவே ஆலந்த் தொகுதியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் மோசடி வழக்கை விசாரித்து வரும் குற்றப் புலனாய்வுத் துறை ஏடிஜிபி B.K. சிங், குழுவுக்கு தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- யதார்த்த நிலையை முற்றிலுமாக அழிக்கப்போகும் ஹைட்ரஜன் குண்டை நாங்கள் வெளிப்படுத்த இருக்கிறோம்.
- வாக்கு திருட்டு என நாங்கள் சொல்வதற்கான துல்லியமான, தெளிவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.
வாக்கு திருட்டு தொடர்பாக ஹைட்ரஜன் குண்டை வெளிப்படுத்த இருக்கிறோம் என ராகுல் காந்தி ஏற்கனவே தெரிவித்திருந்தார். கடந்த வாரம் கர்நாடக மாநிலம் ஆலந்து தொகுதியில் சுமார் 6 ஆயிரம் வாக்குகளை நீக்க முயற்சி செய்யப்பட்டது என்பதை வீடியோ மூலம் வெளியிட்டிருந்தார். முறையாக (systematic) வாக்கு திருட்டில் பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், வாக்கு திருட்டு புகாரில் ஆதாரங்கள் உள்ளது. யதார்த்த நிலையை முற்றிலும் அழிக்கப்போகும் ஹைட்ரஜன் குண்டை வெளிப்படுத்த போகிறோம் என்று இன்றும் உறுதியாக வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி இன்று கூறியதாவது:-
யதார்த்த நிலையை முற்றிலுமாக அழிக்கப்போகும் ஹைட்ரஜன் குண்டை நாங்கள் வெளிப்படுத்த இருக்கிறோம். வாக்கு திருட்டு என நாங்கள் சொல்வதற்கான துல்லியமான, தெளிவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. ஆதாரங்கள் இல்லாமல் நான் எதையும் சொல்லிக் கொண்டிருக்கவில்லை. நடந்த விசயங்களில் 100 சதவீதம் வெளிவரப் போகின்றன.
ஹைட்ரஜன் குண்டு குறிப்பாக பிரதமர் மோடிக்கான வாரணாசிக்கு பொருந்துமா? என ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் இந்த கேள்வியை ராகுல் காந்தி புறந்தள்ளினார். அது உங்களுடைய யூகம். நான் என்னுடைய வேலையை செய்வேன்.
மகாதேவ்புரா மற்றும் அலந்து தொகுதியில் நடைபெற்றதை நாங்கள் காண்பித்தோம். நரேந்திர மோடி வாக்கு திருட்டு செய்து தேர்தலில் வெற்றி பெற்றார் என்பதை இந்தியாவில் யாரும் சந்தேகிக்காத வகையில் நாங்கள் வெளிக்காட்டப் போகிறோம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் முதல்வாரத்தில் "அரசியலமைப்பை அவர்கள் (பாஜக) கொலை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதனால்தான் நாங்கள் பேரணி மேற்கொண்டோம். எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மக்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு வாக்கு திருட்டு, நாற்காலியில் இருந்து விலகு (ote chor, gaddi chhor) என்ற முழக்கத்தை வெளிப்படுத்தினர்.
வாக்கு திருட்டு முழக்கம் எல்லா இடத்திலும் எதிரொலிக்கிறது. நான் பாஜக மக்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அணுகுண்டை விட பெரியதை பற்றி கேள்வி பட்டுள்ளீர்களா?. அது ஹைட்ரஜன் குண்டு. பாஜகவினரே, ஹைட்ரஜன் குண்டு வந்து கொண்டிருக்கிறது. தயாராக இருங்கள். நான் உத்தரவாதம் அளிக்கிறேன். ஹைட்ரஜன் குண்டுக்குப் பிறகு நரேந்திர மோடி தனது முகத்தைக் காட்ட முடியாது" எனக் கூறியிருந்தார்.






